World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One hundred and fifty years since the US Civil War

அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின் 150 ஆண்டுகள்

Tom Eley and David North
13 April 2011

Back to screen version

இந்தவாரம் தெற்கு கரோலினாவில் சார்ல்ஸ்டன் துறைமுகத்தில் (Charleston Harbor) உள்ள போர்ட் சம்டர் (Fort Sumter) மீது கூட்டாட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கிறது. இது வட மாநிலங்களின் ஒன்றியத்திற்கும் கூட்டிணைப்பிற்கும் இடையே உள்நாட்டுப் போரைத் தொடக்கிய அமெரிக்க மற்றும் உலக வரலாற்றில் இது சகாப்தம் படைத்த நிகழ்வு ஆகும்.

ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று 6 மாதங்களுக்குப் பின்னர் 11 அடிமை உரிமை கொண்ட மாநிலங்களால் அமைக்கப்பட்ட கூட்டிணைப்பு அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஆயுத எழுச்சியைத் தொடக்கியது.

ஒன்றியத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி கென்டக்கியைச் சேர்ந்த மேஜர் ரோபர்ட் ஆண்டர்சன் கூட்டிணைவிற்கு தளத்தை ஒப்படைக்க மறுத்ததை தொடர்ந்து போர்ட் சம்டர் (Fort Sumter) ஒரு புயலின் மையமாயிற்று, தென் மாநிலங்கள் இச்சிறிய ஒன்றியப் படைகளை முற்றுகையிட்டு அதற்கு வந்த பொருட்களை உள்ளே அனுமதிக்க மறுத்தன.

வட மாநிலங்களில் இதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி அனலான விவாதங்கள் எழுந்தன. முந்தைய இரு நிர்வாகங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிராங்க்ளின் சீர்ஸ் (1853-1857) மற்றும் ஜேம்ஸ் புஹ்கானன் (1857-1961) ஆகியோர் பலமுறையும் தென் மாநில அடிமை உரிமையாளர்களின் பிடிவாதப் போக்கை எதிர்க்க முடியாமல் பின்வாங்கியிருந்தனர். ஆனால் 186-61 குளிர்காலத்தில், வடக்கே இன்னும் கூடுதல் சலுகைகள் கொடுப்பதற்கு எதிரான உணர்வுகள் பெருகியிருந்தன.

ஜனாதிபதியாக நவம்பர் 1860ல் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டதும், நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவர் பதவியேற்பிற்கும் இடையே  வடக்கே உள்ள சுதந்திர மாநிலங்களின் மில்லியன் கணக்கான மக்கள் அடிமை உரிமையாளர்களை எதிர்த்தல் என்பது தேவை என்ற முடிவிற்கு வந்தனர். சமீபத்தில் ஒரு வரலாற்றாளர் எழுதியுள்ளபடி, “இந்த நெருக்கடியின்போது சுதந்திர மாநிலங்களின் குடிமக்கள் இறுதியாக அமெரிக்க ஒன்றியத்தின் அடிப்படைத் தன்மையை வரையறுத்தனர்-இப்பணியை அவர்களுடைய புரட்சிகர முன்னோர்கள் வேண்டுமென்றே, சோகம் ததும்பிய முறையில் தவிர்த்திருந்தனர்” [Lincoln and the Decision for War, by Russell McClintock (Chapel Hill, 2008)]

போர்ட் சம்டர் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானமை ஏப்ரல் 12 அதிகாலையில் தொடங்கியது. ஒரே நாளைக்குள் தரைப்படத்தள பீரங்கித் தாக்குதலைச் சமாளிப்பதற்காகக் கட்டப்படாத கோட்டை தென் மாநில  பீரங்கிகளுக்கு வீழ்ச்சியுற்றது.

நெருக்கடி நீண்ட காலமாக உருவாகி வந்தது என்றாலும்கூட, போர்ட் சம்டர் மீது உண்மையான தாக்குதல் நடத்தப்பட்டமை வடக்கில் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது. ஏப்ரல் 15, 1861ல் அடிமை உரிமையாளர்களின் எழுச்சியை அடக்குவதற்கு 75,000 தன்னார்வல வீரர்கள் தேவை என்னும் லிங்கனின் முறையீட்டிற்கு பெரும் ஆதரவு கிட்டியது. இதைத் தொடர்ந்து போர் மூண்டு, அடுத்த நான்கு ஆண்டுகளில் 625,000க்கும் மேலானவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டது; இது 1860ல் அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 2% ஆகும்.

போருக்கு மைய, மிக முக்கியமான காரணம் அடிமை முறையாகும். இது 1775-1783 புரட்சியால் தீர்க்கப்படாமல் அமெரிக்க சமூகத்திற்கு விட்டுவைக்கப்பட்ட பெரும் அரசியல், அறநெறிப் பிரச்சினை ஆகும். சுதந்திரப் பிரகடன அறிவிப்பு, மற்றும் அதன் உயர்கருத்தானஅனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சில மாற்ற முடியாத உரிமைகள் உண்டு, அவற்றுள் வாழ்வதற்கு, உரிமைகளுக்கு மற்றும் மகிழ்ச்சியைத் தொடர்வதற்கு ஆகியவையும் அடங்கும்என்பதை அடிமை முறை இருந்தது கேலிக்கூத்தாகச் செய்திருந்தது.

நிறுவனத் தந்தைகள் இப்பிரச்சினையை தவிர்த்து, தங்கள் சிறந்த தீர்ப்பையும் மீறி அடிமைமுறை காலப்போக்கில் தானகவே அழிந்துவிடும் என்று தங்களையே நம்ப வைத்துக் கொண்டனர். ஆனால் முற்றிலும் எதிரிடையானதுதான் நடந்தது. 1793 பருத்தியகற்றும் இயந்திரம் ( cotton gin) கண்டுபிடிக்கப்பட்டது மிக அதிக உற்பத்தித் திறனையும் இலாபத்தையும் அளித்தது. வடக்கே கூடஅடிமைச் சக்திமாபெரும் செல்வாக்கைப் படர  விட்டது, குறிப்பாக ஜவுளி, வங்கித் துறைகளில்.

ஆனால் அதன் அரசியல் சக்தி மற்றும் ஆக்கிரோஷத் தன்மை இருந்தபோதிலும், அடிமை முறையும் அதை நிலைநிறுத்தி வந்த சமூகமும் சமுதாய, அறிவார்ந்த அளவில் பொருளாதாரத் தன்மையில் இருந்தது போலவே பிற்போக்குத்தனமாகத்தான் இருந்தது. பிந்தைய கட்டுக்கதைகளானபழைய தெற்கு ஆகியவை வெறும் கற்பனைகள்தான்.

அறிவியல் மற்றும் முற்போக்கான சிந்தனையின் ஒவ்வொரு வடிவமைப்பும் மனிதனை அடிமைப்படுத்தும் முறை என்னும் கொடூர உண்மையால் கெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டில் முன்னேற வழியில்லை. வடக்கே உள்ள மாநிலங்களின் முகம், அதன் முதலாளித்துவப் பொருளாதார எழுச்சியை ஒட்டி ஒன்றும் சுவர்க்கம் போல் திகழ்ந்துவிடவில்லை. ஆனால்சுதந்திரத் தொழிலாளர்என்னும் வடக்கே இருந்த தொழில்துறை முதலாளித்துவம், தெற்கே இருந்தவிந்தையான நிறுவன அமைப்பிற்குமுற்றிலும் எதிராக இயக்கத்துடனும், வரலாற்று உணர்வின் அடிப்படையில் முற்போக்கானதாகவும் இருந்தது.

வட மாநிலங்களில் உள்ள தொழில்துறை 19ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இன்னும் வெளிப்படையாயிற்று. தென்புற உயரடுக்குக்குள் தங்கள் பிராந்தியத்தின் பொருளாதார வலுவற்ற தன்மைக்கு இழப்பீடு பெறுவதற்கு முயன்று, அரசியல் அதிகாரத்தில் அச்சுறுத்தப்படும் சரிவிற்கு ஈடு கட்டும் வகையில் அடிமைத்தனத்தை புதிய பகுதிகளிலும் விரிவாக்க முற்பட்டனர். வடக்கே இருந்த தொழில்துறையுடன் பொருளாதார அளவில் அடிமைகளின் உரிமையாளர்கள் போட்டி போட முடியவில்லை என்றாலும், அவர்கள் அமெரிக்கா மீது தங்கள் அரசியல் சக்தியைத் தக்க வைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தனர்.

1840 களில் மெக்சிகோவுடன் நடந்த போருக்கு தென் பகுதி பரபரப்புடன் ஈடுபட்டு அடிமைத்தனத்திற்காகப் புதிய நிலப்பகுதிகளை திறக்க முற்பட்டது. ஒன்றிய அரசாங்கம் வடக்கிலும்கூட இந்தவிந்தையான நிறுவனத்தைஅறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியது; இக்கோட்பாடு Fugitive Slave Act of 1850 யிலும் தலைமை நீதிமன்றத்தின் ட்ரெட் ஸ்காட் வழக்கு 1857 தீர்ப்பிலும் உறைந்திருந்தது; இவை ஆபிரிக்கப் பின்னணி மக்கள் அமெரிக்காவில் எந்த இடத்திலும் குடிமக்கள் அல்லது மக்கள் என்ற வகையில் உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை எனக்கூறின.

1854ம் ஆண்டு கன்சாஸ்-நெப்ரஸ்கா சட்டம் வட பகுதிகளிலும் அடிமை முறை விரிவாக்க அனுமதித்து, இப்பகுதிகள்மக்கள் இறைமையைக் கொண்டவை என்ற இழிந்த கோட்பாட்டைத் தளமாகக் காட்டியது. இதற்காக வாதிட்டவர்கள்-முக்கியமாக அடிமை முறைக்கு ஆதரவு கொடுத்த ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள்-ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருக்கும் மக்கள் புதிய மாநிலம் அடிமை முறையைக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டுமா என தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றனர். இச்சூத்திரம் அடிமைகளின் உரிமையாளர்களை வன்முறை மூலம் அடிமை முறைக்கு சார்புடைய பெரும்பான்மையைத் தோற்றுவிக்க அழைப்ப விடுத்தது போல் இருந்தது. மிசௌரியில் இருந்து எல்லை கடந்து வந்த குண்டர்கள் கன்சாசிற்குள் ஏராளமாகப் புகுந்து மாநிலத்தில் அடிமை முறைக்கு வெற்றி காண முயன்றனர். மாநிலத்தின் அடிமை முறை எதிர்ப்புப் பெரும்பான்மை, அடிமை முறை அகற்றப்பட வேண்டும் என்று கூறியவர்கள் வன்முறைக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர்

கன்சாஸ்-நெப்ரஸ்கா வடக்கில் அடிமை முறைக்கான எதிர்ப்பை இறுக்கமாக்கியது. மெக்சிகோவிற்கு எதிரான போரில் வெறுப்புடன் காங்கிரசை விட்டு ஒரு வரைகாலத்திற்குப் பின் விலகியிருந்த லிங்கன் மீண்டும் 1854ல் அரசியலில் நுழைந்து விரைவில் புதிய குடியரசுக் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவராக வெளிப்பட்டார்; இக்கட்சி எந்தப் புதிய பகுதியிலும் அடிமை முறை விரிவாக்கப்படுவதை நிராகரித்தது. அப்பொழுது முதல் லிங்கனின் வாழ்க்கைப் போக்கு அடிமை முறைக்கு மக்கள் எதிர்ப்புடனும், தென்புல அடிமை உரிமையாளர்களின் தூண்டுதலுடன் இணைந்து நின்றது.

நவம்பர் 1860 தேர்தலில் லிங்கன் வெற்றி பெற்றார். நியூஜேர்சி தவிர ஒவ்வொரு வடக்கு மாநிலத்திலும் பெரும் வெற்றி அடைந்தார். இதைத் தொடர்ந்த மாதங்களில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கவனத்துடன் தெற்கைத் தூண்டும் வகையிலான அறிக்கை கொடுப்பதைத் தவிர்த்தார்.

ஆயினும்கூட அடிமை உரிமையாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத ஜனாதிபதிப் பதவியை ஏற்கத்தயாராக இல்லை. காங்கிரஸ் தேக்க நிலையில் இருந்தபோதும், தலைமை நீதிமன்றம் ஒரு அடிமை முறைக்கு ஆதரவு கொடுத்த தலைமை நீதிபதி ரோஜர் டானி என்று ட்ரெட் ஸ்காட் தீர்ப்பைக் கொடுத்தவரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தபோதிலும் இந்நிலை தொடர்ந்தது. இதற்கிடையில் வட மாநிலங்கள் முழுவதும் புஹ்கானன் காலத்தில் நிர்வாகத்தை இழிவுபடுத்தியிருந்த சமரசக் கொள்கை தொடரப்படுமா எனக் காத்திருந்து பார்க்க விரும்பினர். இறுதியில் அடிமை உரிமையாளர்களும் ஒரு மோதலுக்குத் தயாரானார்கள்.

அடிமை உரிமையாளர்கள் எழுச்சியை எதிர்கொண்ட லிங்கன் ஆரம்பத்தில் இம்மோதலை ஒன்றியத்தின் பாதுகாப்பு என்று மட்டுமே வரையறுத்தார். ஆயினும் கூட மோதல் அடுத்த ஆண்டில் தொடர்ந்து தீவிரமான நிலையில், கொடூரமான போர்களில் பெரும் குருதி கொட்டிய நிலையில், அரசியல் உண்மையின் தளத்தின் கீழ் இருந்த உண்மை இனி தவிர்க்கப்பட முடியாது என்று ஆயிற்று. போரில் வெற்றி பெற்று ஒன்றியம் நல்ல முடிவு காணவேண்டும் என்பதற்கு கூட்டிணைவின் பொருளாதாரத் தளம் அழிக்கப்பட வேண்டும் என்ற பொருளாயிற்று-அதாவது அடிமை முறையை அழிக்க வேண்டும் என. ஒரு இராணுவ மோதலாக தோன்றியது ஒரு சமூகப் புரட்சியாக மாறியது.

ஒரே நாள் போரில் 23,000 படையினர்கள் கொலைசெய்யப்பட்டனர் அல்லது காயமுற்றனர் என்று இருந்த செப்டம்பர் 1862ல் ஆன்டியடம் போரை உடனடியாகத் தொடர்ந்து, லிங்கன் 1863 ஜனவரி 1ம் தேதி அடிமைத்தள நீக்கம் பற்றிய பிரகடனத்தை வெளியிடப்போவதாக அறிவித்தார். லிங்கன் எப்பொழுதும் செய்வது போல், அவருடைய மிக முற்போக்குத்தன நடவடிக்கைகள்கூட பெரும் எச்சரிக்கையுடன் செயல்படுத்தப்பட்டன. இந்தப் பிரகடனம் அடிமைகளை அப்பொழுது எழுச்சியில் இருந்து மாநிலங்களில் மட்டும் விடுவித்தது.

ஆனால் இப்பிரகடனம் தவிர்க்க முடியாமல் அடிமை முறையை அழிப்பதற்குக் கட்டியம் கூறியது. பிரகடனத்திற்கு இரு ஆண்டுகளுக்குச் சற்று பின்னர், 1865ன் தொடக்கத்தில் இயற்றப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தம் அமெரிக்காவில் அடிமை முறையை அகற்றியது.

அடிமை முறைமீது லிங்கன் நடத்திய தாக்குதல் வடக்கின் இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்தியது: தெற்கே அடிமைகள் எதிர்ப்பிற்கு ஊக்கம் கொடுத்ததால் இது விளைந்தது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இது வட அமெரிக்காவின் உள்நாட்டுப் போரை மனித விடுதலைக்கான உலக வரலாற்றுத் தன்மை நிறைந்த புரட்சிகர போராட்டத்தின் தரத்திற்கு உயர்த்தியது. அப்படித்தான் உலகம் முழுவதும் இப்போர் பார்க்கப்பட்டது.

இங்கிலாந்தில் இது வர்க்க முழு உணர்வுடைய தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டியது. கூட்டிணைவின் முற்றுகை ஒன்றியத்தால் நடத்தப்பட்டது பிரிட்டிஷ் ஆலைகளுக்குப் பருத்தி கொடுக்காமல் செய்தாலும் இந்த ஆதரவு இருந்தது. ஒன்றியம் அடிமை முறைக்கு எதிராக நடத்தும் போருக்கு தொழிலாள வர்க்கம் கொடுத்த ஆதரவு தெற்கு மாநிலங்களின் சார்பில் பிரிட்டிஷ், பிரெஞ்சுக் குறுக்கீடு வரும் வாயப்பிற்கு திறமையுடன் முற்றுப்புள்ளி வைத்தது.

ஒன்றியத்தின் நியாயத்திற்காக பிரிட்டனில் பெரும் தொலை நோக்கு உடைய வாதிடுபவர்களாக இருந்தவர்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடரிக் ஏங்கல்ஸ் ஆவர். மோதலின் மிக ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் தெற்குடன் எந்தச் சமரசத்திற்கும் இடமில்லை என்பதை உணர்ந்திருந்தனர்.

1861 அக்டோபர் மாதம் மார்க்ஸ் அறிவித்தார்: “எனவே தற்போதைய தெற்கு வடக்கிற்கு இடையே நடக்கும் போராட்டம், இரு சமுதாய முறைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; அடிமை முறைக்கும், சுதந்திரமான தொழிலாளர் முறைக்கும் இடையே. இப்போராட்டம் வெடித்ததற்கு காரணம் இரு முறைகளும் இனி வட அமெரிக்கக் கண்டத்தில் அருகருகே சமாதானமாக வாழமுடியாமல் போய்விட்டதுதான். இது ஒரு முறை மற்றொன்றின்மீது வெற்ற கண்டபின்தான் முடிவடையும்.”

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நவம்பர் 1864ல் மார்க்ஸ், லிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதி அவர் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அமெரிக்க மக்களைப் பாராட்டியும் இருந்தார். வெளிப்படையான உணர்ச்சியுடன் மார்க்ஸ், லிங்கனின் மறு தேர்வின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாக, உண்மையில் வரலாற்றுத்தன்மை வாய்ந்த ஜனாதிபதிக் காலத்தைப் பற்றிக் கூறினார்: “அடிமைச் சக்திக்கு எதிர்ப்பு என்பது உங்கள் முதல் தேர்தலின் போது கவனச் சொல்லாக இருந்தது என்றால், உங்கள் மறு தேர்வின் வெற்றிகரமான போர் முழக்கம் அடிமை முறைக்கு இறப்பைக் கொடுத்துவிட்டது.”

ஏப்ரல் 9, 1865ல் உள்நாட்டுப் போர் அப்போமட்டோக்சில் ரோபர்ட் இ. லீயின் இராணுவம் சரணடைந்த நிலையில் முடிவிற்கு வந்தது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் பெரிய வெள்ளியன்று லிங்கன் படுகொலை செய்ய்பட்டார். உழைக்கும் மக்களின் சர்வதேச அமைப்பின் (Working Men’s International Association) சார்பாக எழுதிய மார்க்ஸ், “நல்லவர் என்பதைக் கைவிடாமல் மாபெரும் மனிதனாக வருவதிலும் வெற்றி அடைந்த அபூர்வ மனிதர்களில் ஒருவரின்இறப்பு பற்றி மார்க்ஸ் துயரமடைந்தார்.

உள்நாட்டுப் போருக்குச் சற்று முன்னதாக, இந்த மோதல் கொண்டுவர இருக்கும் சமூக மாற்றத்தின் அளவு பற்றி வெகு சிலரே கற்பனை செய்திருக்க முடியும். 1858ல் ஒன்றியம்பாதி அடிமையாகவும்” “பாதி சுதந்திரமாகவும்தொடர முடியாது எனத் தீர்க்கதரிசனத்துடன் கூறிய ஆபிரகாம் லிங்கன் அடுத்து சில குறுகிய ஆண்டுகளில் பிடிவாதம் மிகுந்த, தீமை பயத்தஅடிமை சக்திஅழிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அதுதான் நடந்தது. அத்தகைய அசாதாரண முன்னேற்றமான போக்கு ஒரு பெரும் ஊக்கத்திற்கு ஆதரமாக இன்னமும் உள்ளது.

150 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உள்நாட்டுப் போர் மனித குலத்தின் முழு உணர்வில் அடக்குமுறை மற்றும் சமூக சமத்துவம் மற்றும் மனித குல விடுதலைக்கான மிகப் பெரிய போராட்ட அத்தியாயங்களில் ஒன்றாகவும் வாழ்ந்து வருகிறது.