சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Britain and France escalate war in Libya

பிரிட்டனும் பிரான்ஸும் லிபியப் போரை விரிவாக்குகின்றன

By Patrick Martin 
20 April 2011
Use this version to print | Send feedback

லிபியாவிற்கு எதிரான போரை வழிநடத்தும் இரு ஐரோப்பிய சக்திகளான பெரிய பிரிட்டனும் பிரான்ஸும் இப்பொழுது இராணுவத் தலையீட்டை விரிவாக்கப் புதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் செவ்வாயன்று 20 பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள் லிபிய ஆட்சியாளர் முயம்மர் கடாபிக்கு எதிராகப் போரிடும் படைகளை இயக்குவதற்கு பெங்காசிக்குச் சென்று கொண்டிருப்பதாக அறிவித்தார். பிரான்ஸ் கூடுதலான விமானங்களை ஈடுபடுத்தியுள்ளது. அதில் சார்ல்ஸ் டு கோல் விமானத்தளக் கப்பலும் அடங்கியுள்ளது.

இந்த பிரிட்டனின் முடிவு ஆபத்தானது. ஏனெனில் அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ சக்திகளும் இறுதியில் வான் தாக்குதல்கள் மற்றும் அதிக சீரான அமைக்கப்படாத எதிர்ப்பாளர்களின் தாக்குதல் கடாபியை அகற்றத் தோல்வியுற்றால், தரைப்படைத் துருப்புக்களை அனுப்பும் கட்டாயத்திற்கு உந்தப்படுவர் என்பதற்கு இது ஒரு தெளிவான அடையாளம் ஆகும்.

ஆலோசனையாளர்கள் பற்றி முரண்பாடான தகவல்கள் வந்துள்ளன. பிரிட்டிஷ் செய்தித்தாள் கார்டியன் இதைஒரு கூட்டு பிரிட்டிஷ்-பிரெஞ்சு இராணுவக் குழுஎன விவரித்துள்ளபோது, பிற செய்தி நிறுவனங்கள் இது பிரிட்டிஷ் குழு மட்டுமே எனக் கூறியுள்ளன. “பிரிட்டிஷ்-பிரெஞ்சுக் குழு எழுச்சியாளர்களுக்கு உளவுத் தகவல்கள் சேகரித்தல், தளவாடப் போக்குவரத்துக்கள் மற்றும் தொடர்புத்துறை பற்றி ஆலோசனைகளைக் கொடுப்பர். நடவடிக்கையின் தீவிரத் தன்மையின் அடையாளமாக முன்னாள் CIA யின் எஞ்சியோர் அல்லது முன்னாள் கடாபி அல்லது முன்னாள் அல் கெய்டா நடவடிக்கையாளர்கள் என்று இல்லாமல் நேட்டோ அதிகாரிகள்தான் உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டுஎழுச்சியாளர்கள்என அழைக்கப்படுவோரின் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருப்பர்என்று கார்டியன் எழுதியுள்ளது.

வெளியுறவு மந்திரி ஹேக் வெளிப்படையாக உள்ள இந்நிலைப்பாட்டை மறுப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தார்அதாவது நேட்டோ அதிகாரிகளை அனுப்புதல் என்பது தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்திய சக்திகள் லிபியா மீது படையெடுப்பதற்கு தர்க்கரீதியான சாலையில் முக்கிய நடவடிக்கை என்பது குறித்து.

புதிய பிரிட்டிஷ் நோக்கம் பற்றிக் குறிப்பிட்டு, “அவர்கள் தேசிய இடைக்கால சபைக்கு அவர்களுடைய இராணுவ அமைப்புமுறைக் கட்டுமானங்கள், தொடர்புகள், தளவாடப் போக்குவரத்து போன்றவற்றை எப்படி முன்னேற்றுவிப்பது என்று ஆலோசனை கூறுவர். இதில் எச்சிறப்பான முறையில் மனிதாபிமான உதவி இன்னும் பிற மருத்துவ உதவிகள் வழங்கப்படலாம் என்பதும் அடங்கும் என்று அவர் கூறினார்.

போருக்குப் புறம்பான நடவடிக்கைகள் குறித்து குறிப்புக்கள் இருந்தாலும்கூட, பிரிட்டிஷ் அதிகாரிகளின் வரவானது உத்தியோகபூர்வமாகஎழுச்சிசக்தியை ஒரு ஏகாதிபத்திய தலைமையிலான இராணுவ நடவடிக்கை என்று மாற்றுவதைக் குறிக்கிறது. மேலும் பெங்காசியை தளமாகக் கொண்ட குழு கடாபி ஆட்சிக்கு உள்நாட்டில் எதிர்ப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு என்ற பாசாங்குத்தனத்தை கைவிடும் நோக்கத்தையும் தெரிவிக்கிறது.

எழுச்சியாளர்கள்ஒன்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள வடக்கு கூட்டைவிட ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து சுயாதீனம் பெற்றவர்கள் அல்லர். புஷ் நிர்வாகம் 2001ல் வடக்குக் கூட்டைப் பயன்படுத்தி, தாலிபனை அகற்றி அமெரிக்கா நியமித்த ஜனாதிபதி ஹமித் கர்சாயியின் தலைமையிலுள்ள கைப்பாவை அரசாங்கம் நிறுவப்பட பயன்படுத்தியது.

உளவு சேகரிப்பு பொறுப்புக்கள் இவை தரைப்படையை இயக்குவதுடன் தொடர்பு கொண்டிருப்பதும் நேட்டோ வான்தாக்குதல் மேற்கொள்ள வேண்டிய இலக்குகளுக்கும் தேவையாகும்பணி முற்றிலும் மனிதாபிமானது என்று அவர் கூறுவதுடன் எப்படி பொருந்தும் என்பதை ஹேக் விளக்கவில்லை.

இப்படிப் படைகளை நிலைநிறுத்துவது, UNSCR 1973ன் கீழ் என்பது, குடிமக்கள் பாதுகாப்பிற்காகவும் லிபிய மண்ணில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புச் சக்திகள் நிறுத்தப்படக்கூடாது என்ற இரண்டுடனும் முற்றிலும் பொருந்தும். அத்தீர்மானத்திற்கு நம் கடமை என்பதுடன் இணைந்த வகையில் நம் அதிகாரிகள் எதிர்ப்பு படைகளுக்குப் பயிற்சி அளித்தல், ஆயுதம் கொடுத்தல் ஆகியவற்றில் தொடர்பை கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல் NTC யின் இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டுச் செயல்படுத்துவதிலும் தொடர்பைக் கொண்டிருக்க மாட்டார்கள். எந்தவித இராணுவச் செயற்பாட்டு ஆலோசனை வழங்குதலிலும் ஈடுபடமாட்டார்கள்என்றார் அவர்.

சிறிதும் மூளையை பயன்படுத்தாதவர்கள் அல்லது வேண்டுமென்றே எதையும் காணாமல் இருப்பவர்கள்தான் இத்தகைய வெளிப்படையான குப்பைக் கருத்தை நம்புவர். பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள் ஒன்றும் குப்பை அகற்றும் இராணுவத்தினர் அல்ல. அவர்களுடைய தொழில் போர் நடவடிக்கைகளை திட்டமிட்டுச் செயல்படுத்துவது ஆகும். அந்த நகரத்தில் உணவும் மருத்துவ வசதிகளும் நிறைந்த நிலையில், இராணுவத் தாக்குதலுக்கு உட்படாத நிலையில் இவர்கள் ஒன்றும் மனிதாபிமான நெருக்கடியை தீர்க்க (பெங்காசிக்கு) செல்லவில்லை, தொழில்நுட்பத் திறனோ போர்க்கட்டுப்பாடோ அறியாத கடாபி எதிர்ப்புச் சக்திகளின் வெளிப்படையான இராணுவ இயலாமையை தீர்க்கத்தான் செல்கின்றனர்.

ஹேகின் அறிக்கையை கடாபி ஆட்சி இழிவுடன் உதறித்தள்ளியது. துணை வெளியுறவு மந்திரி கலேட் கைம் திரிப்போலியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “லிபிய மண்ணில் எந்த ஆயுதமேந்திய இராணுவப்படை வந்தாலும் உடனடியாகப் போர் மூளும். லிபிய அரசாங்கம் அதை ஒரு மனிதாபிமானப் பணியாக எடுத்துக் கொள்ளாது. அது ஒரு இராணுவ நடவடிக்கையாத்தான் கருதப்படும்என்றார்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் பெங்காசிக்கு அனுப்புதல் குறித்த ஹேகின் அறிவிப்பு பிரிட்டிஷ் முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் போர் விரிவாக்கத்தின் தர்க்கம் பற்றி ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. முன்னாள் வெளியுறவு மந்திரி டேவிட் ஓவன், இப்பொழுது ஒரு லிபரல் பிரபுவாக இருப்பவர், டைம்ஸ் ஆப் லண்டனில் எழுதுகையில் பகிரங்கமாக பொஸ்னிய மற்றும் ஈராக்கில் குர்திஸ்தான் மாதிரிகளைப் போல்பாதுகாப்பான உறைவிடங்கள்தோற்றுவிக்கப்பட வேண்டும், மிஸ்ரடாவைச் சுற்றி ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து அது தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார். “சில மணி நேரத்திற்குள் பெங்காசி காப்பாற்றப்பட்டது போல், மிஸ்ரடாவும் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு சில நாட்கள்தான் நமக்கு உள்ளதுஎன்று கூறுகிறார்.

கார்டியனில் எழுதிய கட்டுரையாளர் சைமன் டிஸ்டால், “கடந்த மாதம் கடாபியின் படைகளால் அழிவை எதிர்கொண்ட பெங்காசிக்கு தலையீடு இல்லாமல் இருந்தால் ஒரு புதிய Srebrenica வாக ஆகியிருக்கும் என்று கூறும்போது, கூட்டு நாடுகள் இப்பொழுது அதே தரைப் பாதுகாப்பை மிஸ்ரடாவிற்கும் மற்ற பெரும் திகைப்பில் உள்ள நகரங்களுக்கும் கொடுக்கவேண்டும். இது தரைப்படைத் தளத்தை கொண்ட தலையீட்டின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும்என்று கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் ஊடகத்தில் மேற்கோளிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், பிரிட்டிஷ் இராணுவத்தின் முன்னாள் தலைவர் டானட் பிரபு இராணுவ ஆலோசகர்களை அனுப்புவது என்பதுநெறியான நோக்கங்களை அடைவதற்கான முற்றிலும் தர்க்கரீதியான அடுத்த நடவடிக்கை ஆகும்என்றார். சில பிரிட்டிஷ் எம்.பி.க்கள் இது பற்றி குறைகூறுவதை எதிர்க்கும் வகையில் அவர், “எப்பொழுதும் சிலர்மட்டமான குறிக்கோள்என்பர், ஆனால் [பிரிட்டன்] .நா. உத்தரவைப் பரந்த முறையில் விளக்கம் கண்டு அத்தகைய குறிக்கோள்கள் சரியாமல் காக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.

குறிக்கோள் சரிவை தடுப்பது என்பது லிபியமீது குண்டுத் தாக்குதலை அதிகரிப்பதின் முக்கிய நோக்கம்இது நேட்டோ வெளியுறவு மந்திரிகளின் கடந்த வெள்ளிக் கூட்டத்தில் பேர்லினில் முடிவு செய்யப்பட்டுவிட்டது. செய்தி ஊடகத் தகவல்களின்படி, நேட்டோ தளபதிகள் குண்டுத் தாக்குதல் நேரடியான டாங்குகள், பீரங்கிகள் மீதான தாக்குதல் இலக்குகள் என்பதில் இருந்து, தொலைத்தொடர்புமுறை மீதான தாக்குதல்கள், தொலைபேசி இணைப்பகங்கள் மீதான தாங்குதல்கள் என்றும், “கட்டுப்பாட்டுகட்டுமானங்களைத் தகர்த்தல் என்னும் பெயரில் விரிவாக நடத்தப்படலாம்.

இத்தர்க்கப்படி, திரிபோலியிலுள்ள லிபிய அரசாங்கத்திற்கும் நாட்டின் எப்பகுதியிலுமுள்ள அதன் இராணுவப் படைகளுக்கும் இடையேயான எவ்வித தொடர்பு முறையும் குண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றின் தாக்குதல் இலக்குகள் ஆகிவிடும்.

நேட்டோ வெளியுறவு மந்திரிகள் பிரான்ஸ், பிரிட்டன், கனடா, டென்மார்க், நோர்வே, பெல்ஜியம் என்று லிபியாவில் உண்மையில் வான் போர் நடத்திக் கொண்டிருக்கும் நாடுகளைத் தவிர கூடுதல் தாக்குதல் விமானங்களுக்கான கோரிக்கையைக் கேட்டனர். செய்தி ஊடகத்திடம் நேட்டோ அதிகாரிகள் பிரான்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூடுதல் ஜெட்டுகளை வழங்கி, விமானத் தளமுடைய போர்க் கப்பலான சார்ல்ஸ் டு கோலையும் லிபிய கடலோரப் பகுதிக்கு அருகே இருத்தி அதனை விமானங்களை நேட்டோ கட்டுப்பாட்டின் கீழ் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனும் வான் போரில் தன் பங்கை அதிகப்படுத்தியுள்ளது. HMS Triumph நீர்மூழ்கிக் கப்பல் லிபிய இலக்குகள் மீது திங்கள் செவ்வாயன்று க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது. பிரிட்டன் கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு போர்த் தளவாடங்களையும் கொடுத்துள்ளது. அதில் உடல் கவசங்கள் 1000 மும் 100 செய்மதிவழித் தொலைபேசிகளும் அடங்கும்.

இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டினி நேட்டோ தொழில்நுட்பக் கருவிகளான ராடர்கள், தொடர்புத் தடைக் கருவிகள் ஆகியவற்றை அனுப்புவது பற்றியும் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

அல் ஜசீரா ஆங்கிலப் பதிப்பிற்கு செவ்வாயன்று கொடுத்த பேட்டி ஒன்றில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் Catherine Ashton ஐரோப்பிய ஒன்றியம் முறையாக லிபியாவின் மூன்றாவது பெரிய நகரமான மிஸ்ரடாவில் 1,000 படையினர்களை நிறுத்த முன்வந்துள்ளதாகக் கூறினார். இந்நகரம் இப்பொழுது எதிர்ப்பாளர்களிடம் இருந்தாலும் கடாபி துருப்புக்களால் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது. அவர், மிஸ்ரடாவில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் மேற்கோண்டு வரும் ஐ.நா. அதிகாரிகளின் வேண்டுகோள்தான் தேவையானது அனைத்தும் என்றார்.

.நா. பாதுகாப்புச் சபையின் புதிய கட்டளையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இதை ரஷ்யாவும் சீனாவும் லிபியாவில் நேட்டோ தரைத் துருப்புக்கள் நிலைநிறுத்துவதற்கான இசைவை எதிர்க்கக்கூடும். ரஷ்ய அரசாங்க ஆலோசகர் ஒருவரான Institute of Strategic Studies ஐச் சேர்ந்த Azhdasr Kurtov பிரான்ஸ் போரை விரிவாக்கியுள்ளதற்குக் குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில் அது கடாபியை அகற்றுவதில் தோல்வியுற்றுள்ளது.

கடாபி உறுதியாக அதிகாரத்தில் உள்ளார். ஒவ்வொரு நாள் கடக்கையிலும், போர் நடவடிக்கைச் செலவுகள் அதிகரிக்கின்றன, இது பாரிஸை இன்னும் பிற வழியைப் பயன்படுத்திக் கடாபி எதிர்ப்பு போரை நடத்த ஊக்கம் கொடுக்கிறதுஎன்றார் அவர்.

பிரிகேடியர் ஜெனரல் Mark van Uhm, நேட்டோ கூட்டு நடவடிக்கைகளின் தலைவர், வான் தாக்குதல்கள் 40 டாங்குகள் மற்றும் கணக்கிலடங்காத கவச வாகனங்கள் என கடாபி சார்பு சக்திகள் திரட்டியவற்றை அழித்து விட்டன என்றார். கடாபியின் படைகளில் 30 சதவிகிதத்திற்கும் மேலாக அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் கூறினார். இந்த மதிப்பீடுகள் குண்டுவீச்சுக்கள் பல்லாயிரக்கணக்கான என்று இல்லாவிடினும் ஆயிரக்கணக்கான லிபிய துருப்புக்கள் மற்றும் போராளிக் குழுவினர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனஇந்த இறப்பு எண்ணிக்கை உள்நாட்டுப் போரில் குடிமக்கள் ஏராளமாகக் கொலை செய்யப்பட்டனர் என்று நம்ப முடியாத எண்ணிக்கையை மிக அற்பமாக்கிவிடுகிறது.