World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Dominique Strauss-Kahn accuser goes public

டொமினிக் ஸ்ட்ராஸ் மீது குற்றம் சாட்டியவர் பகிரங்கமாக வருகிறார்

By David Walsh 
30 July 2011


Back to screen version

32 வயது கினியாவில் பிறந்த ஹொட்டல் அறைப் பணிப்பெண், பிரெஞ்சு அரசியல்வாதியான டொமினிக் ஸ்ட்ராஸ் கான் மீது ஒரு நியூ யோர்க் நகர ஹொட்டலில் பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியவர், கடந்த வாரம் அக்குற்றங்கள் பற்றிய பகிரங்க உரையாடலை, அதாவது தன்னுடைய பக்கமுள்ள சம்பவ நிகழ்வை ABC News மற்றும் News Week ஏடு ஆகியவற்றிற்கு பரந்த முறையில் பரவும்வகையில் பேட்டிகளைக் கொடுத்துள்ளார்.

 

இதைத்தவிர, நபிசாடௌ டியல்லோ மன்ஹட்டன் மாவட்ட அரசாங்க வக்கீலின் அலுவலகத்திற்குள் ஜூலை 27ம் திகதி நுழைந்த போதுஅவர் வருகிறார் என்று கூறப்பட்டு புகைப்படக்காரர்களால் படம் எடுக்கப்பட்டது.” (New York Times, July 28). அதன்பின் செவ்வாயன்று  டியல்லோ ப்ரூக்லினில் ஒரு தேவாலயத்தில் சுருக்கமாகப் பேசினார்; முக்கியமான ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகள், மதப் போதகர்கள் மற்றும் உயர்கல்வியாளர்கள் இதற்கு ஆதரவைக் கொடுத்திருந்தனர்.

டியல்லோவின் வக்கீல்களின் கருத்துப்படி அவருடைய பகிரங்க வரவுகள் அவருடைய வழக்கைப் பற்றிப் பேச வாய்ப்புக்கள் என்றும் ஸ்ட்ராஸ் கானிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களைத் தொடர வக்கீல்கள் மீது அழுத்தம் கொடுக்கும் என்றும் கூறுகின்றனர்.

இந்த வழக்கின் தற்காலிக நிலைப்பாடு பற்றிய விசாரணை ஆகஸ்ட் 1ம் திகதி வர உள்ளது; ஆனால் அது ஆகஸ்ட் 23க்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராஸ் கானின் வக்கீல்கள், “ஆகஸ்ட் 23க்கும் அவர் [மன்ஹட்டன் மாவட்ட அரசாங்க வக்கீல் சைரஸ் ஆர் வான்ஸ் ஜூனியர்] வழக்கைத் தள்ளுபடி செய்யும் முடிவை எடுப்பார் என நம்புகிறோம்என்றனர். ஆனால் வான்ஸின் அலுவலகம்இந்த நிறுத்திவைக்கப்பட்டுள்ள குற்ற வழக்கு பற்றிய விசாரணை தொடர்கிறதுஎன்று கூறியுள்ளது.

அமெரிக்கச் செய்தி ஊடகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் விவகாரம் பற்றிப் பரபரப்பாகப் பேசியது. “வசதியற்ற”, “பெருமிதம் நிறைந்தஅறைப் பணிப்பெண் பற்றி நிறைய மை செலவழிக்கப்பட்டு செய்தி ஊடக நபர்கள் எழுதியுள்ளனர்; வாடிக்கையாக அத்தகைய பணியாளர்களைச் சிறிதும் பொருட்படுத்தாதவர்கள்தான் இவ்வளவும் எழுதுகின்றனர். இதில் மிகப் பெரிய அவநம்பிக்கைத்தனம் செய்தி ஊடகத்தின் தற்பொழுதைய பார்வையைப் பற்றிக் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அமெரிக்கச் செய்தி ஊடகத்திலும் தொலைக்காட்சிகளிலும் எப்பொழுதேனும் இத்தகைய பிரச்சாரங்கள் கீழ்த்தர நோக்கங்கள் இல்லாமல் நடந்துள்ளனவா?

முதலில் ஸ்ட்ராஸ் கான் மீதான வழக்கு வாஷிங்டனில் திட்டமிடப்படும் மிருகத்தன வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள், ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றில் நடைபெறும் போர்கள் மற்றும் பொதுவாகச் சரிந்து கொண்டிருக்கும் சமூக நிலைமைகள் ஆகியவற்றிலிருந்து திசைதிருப்பும் முயற்சியாகும். மேலும் குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் பிரச்சினைகளும் இதில் பங்கு கொண்டுள்ளன. ஸ்ட்ராஸ் கான் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனராக மே மாதம் இந்நிகழ்வு நடந்தபோது இருந்தார்; பின்னர் இராஜிநாமா செய்யுமாறு கட்டாயத்திற்கு உள்ளானார். அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வருவதற்கு வாய்ப்புப் பெற்றிருந்த முன்னணி அரசியல்வாதியும் ஆவார்.

இந்த அசாதாரண சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்தல் என்பது ஒன்றும் தெரியாத தன்மை அல்லது வேண்டும் என்றே தவறாகக் கூறுவது ஆகியவற்றிற்கு ஒப்பாகும். அமெரிக்கச்செய்தி ஊடகத்தின் பரபரப்பு மற்றும் மேம்போக்குத் தன்மையைப் பொறுத்தவரை, இரண்டுமே நடைமுறையில் உள்ளன. தாராளவாத இடது மற்றும்தீவிர இடதுசெய்தி ஊடகம், அதன் வாடிக்கைப்படி, பெரும் அமைப்புக்களின் செயற்பாடுகளைப் பின்பற்றுகிறது.

இதைத்தவிர, தற்பொழுதைய செய்தி ஊடகப் பிரச்சாரம் மன்ஹட்டன் மாவட்ட அரசாங்க வக்கீல் அலுவலகத்தின் செயல்களை மூடிமறைக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளதுஅந்த அலுவலகம் இவ்வழக்கு பற்றிச் செயல்பட்ட முறையோ பெரும் சீற்றத்தைக் கொடுப்பது ஆகும். இகழ்வானஅடையாளம் காட்டும் அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டஸ்ட்ராஸ் கானை அந்த அலுவலகம் நடத்திய விதம், பிடி ஆணை இல்லாமல் சிறையில் தள்ளியது, ஆகியவை அன்றாட அமெரிக்க வாழ்வில் நீதித்துறையின் செயற்பாடுகள் எவ்வளவு மிருகத்தனமாக உள்ளன என்பதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

வான்ஸையும் அவருடைய சக ஊழியர்களையும்நான்சி கிரேஸ் குற்ற விசாரணை நடத்துபவர்கள்என்று பிரபல வக்கீல் ஆலன் டெர்ஷோவிட்ஸ் அத்தீய கேபிள் தொலைக்காட்சி பேச்சு நிகழ்வு நடத்துபவரின் பெயரை ஒட்டி அடைமொழி கொடுத்துள்ளார். அரசியலில் முற்போக்கு தன்மை ஏதும் இல்லாத டெர்ஷோவிட்ஸ் தொடர்ந்து கூறுவது: “ஏதோ பாதிக்கப்பட்ட நபரின் நம்பகத்தன்மை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் முழுக் குற்றத்திலும் ஐயத்திற்கு இடம் இல்லை என்பது போல் அரசாங்க வக்கீல் அலுவலகம் அதன் வழக்கைப் பகிரங்கமாக அளித்தது…. இந்த வழக்கு நடத்தப்பட்ட முழுமுறையும் குற்றம் சாட்டப்பட்டவர் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.”

அறைப் பணிப் பெண்ணின் நம்பகத்தன்மை ஜூன் இறுதியில் வினாவிற்கு உட்படுத்தப்பட்டது; அப்பொழுது அவருடைய பின்னணியில் இருந்த பல உண்மைகள் வெளிப்பட்டன; அவை பல முந்தைய சம்பவங்களிலும் கூட்டமாகப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டது பற்றிய நிகழ்விலும் பொய்கூறியுள்ளார் எனச் சுட்டிக்காட்டின; அதேபோல் அவர் இந்த வழக்கு பற்றி தொலைபேசியில் பண விவகாரம் குறித்தும் விவாதித்தார், மற்றும் தாக்குதல் என்பது பற்றியது தொடர்பாக அவருடைய நடவடிக்கைகளும் முரண்பாட்டைக் கொண்டிருந்தன என்பது காட்டப்பட்டது.

 

பிரத்தியேகமான சோபிடெல் ஹொட்டல் அறையில் அது காலியாக இருந்தது என்று நினைத்து அதில் அவர் நுழைந்தபோது, ஸ்ட்ராஸ் கானால் தாக்குதலுக்கு உட்பட்டார் என்று டியல்லோ பலமுறை கூறியுள்ளார். “அவரைப் பார்த்தால் கிறுக்குப் பிடித்தவர் போல் எனக்குத் தோன்றியதுஎன அவர் வலியுறுத்தியுள்ளார்; இவரை அவர் வாய்வழிப் பாலியல் தொடர்பு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். டியல்லோ 5’ 10” உயரமுடையவர், ஸ்ட்ராஸ் கானை விட நல்ல உயரம்….நல்ல உடற்கட்டு உடையவர் என்று நியூஸ் வீக்  குறிப்பிட்டுள்ளது.

 

டியல்லோவின் கதை பற்றித் தகவல் கொடுக்கையில் நியூஸ் வீக் அவருடைய கதைக்கு நம்பகத்தன்மை கொடுக்கப் பெரிதும் முயல்கிறது. ஆனால் அதன் நிருபர் ஜோன் சோலோமன் இவ்வாறு கூறும் கட்டாயத்திலும் உள்ளார்: “டியல்லோ பேசும்போது சில நேரம் அவர் அழுதார், ஆனால் கண்ணீர் கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டது போல் தோன்றியது. மேற்கு ஆபிரிக்காவில் அவருடைய கடந்தகாலம் பற்றி கேள்விகள் அனைத்துமே கிட்டத்தட்ட தெளிவற்ற விடைகளைத்தான் ஈர்த்தன.”

உண்மையில் இப்பொழுது நமக்குத் தெரியவந்துள்ளதின்படி, டியல்லோ அமெரிக்காவில் தஞ்சம் அடைவதற்கு அவர் கொடுத்த 2004ம் ஆண்டு விண்ணப்பத்தில் தான் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக பொய் கூறியிருந்தார். அவர் தான் கட்டிய வருமான வரிகளில் ஒரு பகுதியைத் திரும்ப வாங்குவதற்கு தன் நண்பர் குழந்தை ஒன்றைத் தன்னை நம்பியுள்ள குழந்தை எனக் கூறியிருந்தார். மேலும் அவர் நியூ யோர்க் நகரத்தில் பொது வீடு பெறத் தகுதி பெறுவதற்காகத் தவறான தகவலையும் கொடுத்திருந்தார்.

பின் மிகவும் முக்கியமான உண்மையான 400 பவுண்டுகள் மாரியுவானா வைத்திருந்த தற்பொழுது சிறையில் இருக்கும் ஒரு நபரிடம் இவர் கொண்ட தொடர்பும் உள்ளது. தகவல்களின்படி அவர் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் மறுநாள் அவருடன் தொலைப்பேசித் தொடர்பு கொண்டு ஸ்ட்ராஸ் கானின் செல்வம் மற்றும் பிரபலம் குறித்து விவாதித்து, அந்நபரிடம்கவலைப்படாதீர்கள்…. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்என்றும் கூறியுள்ளார்.

அரிசோனா, ஜோர்ஜியா, நியூ யோர்க், பென்சில்வானியா போன்ற இடங்களிலுள்ள வங்கிகளில் பல ஆயிரக்கணக்கான டாலர்கள் சேமிப்புள்ள கணக்குகள் டியல்லோ பேரில் இருப்பதையும் விசாரணையாளர்கள்  அறிந்துள்ளனர். உண்மையில் இந்தச் சேமிப்புக்கள் கிட்டத்தட்ட 100,000 டொலர் என்ற அளவிற்கு உள்ளன.

 

ஜூலை 2ம் திகதி நியூ யோர்க் டைம்ஸ் தகவல்படி, டியல்லோ, அவருடைய வக்கீல் மற்றும் அரசாங்க வக்கீல்கள் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வாதங்களில், “இப்பெண் பலமுறையும் சோபிடெல் ஒன்றுதான் அவருடைய வருமானத்திற்கு ஒரே ஆதாரம்என்று கூறியிருந்தார். இப்பொழுது விசாரணையாளர்கள் வங்கிக் கணக்குகளை அவரிடம் காட்டி வினவியபோது, அப்பெண்மணி இதற்கு எப்படி விடையிறுப்பது என்பதைக் கேட்பது போல் தன் வக்கீலான (திரு.கென்னத்) தோம்சனைப் பார்த்தார். அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது. “பேசும் சக்தி இழந்து நின்றார் என்று உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

 

இதைத்தவிர ஒவ்வொரு மாதமும் தொலைபேசிக் கட்டணங்களுக்காகவே ஐந்து நிறுவனங்களுக்கு அவர் நூற்றுக்கணக்கான டாலர்கள் கட்டி வந்தார் என்பதும் வெளிப்பட்டுள்ளது. (New York Times, June 30.)

அவை அனைத்திற்கும் தோம்சனின் விடை, “ஒரு குற்றத்தில் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதற்கு நீங்கள் ஒன்றும் தெரேசா அன்னையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை”. உண்மைதான், ஆனால் மே 14ம் திகதி ஹோட்டலில் என்ன நடந்தது என்பது பற்றி அறிய வழியில்லை. ஆனால் முறையான பொய்கூறல் என்ற வடிவமைப்பு வெளிப்பட்டுள்ள நிலையில், ஒரு முந்தைய கற்பழிப்பு பற்றியும் கூட என்னும் நிலையில், அத்தகைய நபர் எப்படி நம்பப்பட முடியும்?

அரசியல் முக்கியத்துவம் கொண்டிருக்கக்கூடிய இந்த குறிப்பிடத்தக்க உண்மைதான் மன்ஹட்டன் அரசாங்க வக்கீல் ஸ்ட்ராஸ் கானிற்கு எதிரான வழக்கைக் கைவிடும் முடிவிற்குத் தள்ளியிருக்க வேண்டும்; அமெரிக்க செய்தி ஊடகம் வருத்தத்துடன் போனமாதம் இவ்வழக்குசரிந்து கொண்டிருக்கிறது என ஒப்புக் கொண்டது.

 

பிரான்ஸில் ஸ்ட்ராஸ் கானின் முக்கிய அந்தஸ்து நிலை அல்லது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில் இவை எதுவுமே நடைபெறாது என்பதுதான் குறைந்தபட்சம் நடக்கக்கூடிய செயல் ஆகும். ஒரு பொதுநிலை நோக்கருக்கு ஏதோ ஒரு கட்சி அல்லது கட்சிக் குழுக்கள் அவருடைய வேட்புத்தன்மை வெளிவரக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளன என்ற முடிவிற்குத்தான் வரும் நிலை உள்ளது.

ஸ்ட்ராஸ் கான் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி, IMF மற்றும் நாட்டின் இரு முக்கிய வணிகக் கட்சிகளில் ஒன்றானபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் அவருடைய பங்கு உள்ளது என்னும் உண்மை தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமாக அவர் முற்றிலும் உள்ளார் என்னும் உண்மை, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் செய்தி ஊடகம் அவருக்கு எதிராக நடத்தும் பிற்போக்குத்தன பிரச்சாரத் தன்மையை குறைத்துவிடாது. இன்று ஸ்ட்ராஸ் கானுக்குக் கொடுக்கப்படும் தொந்தரவு நாளை இன்னும் பரிவுணர்வுடைய மற்றய நபர்களுக்கு அளிக்கப்படலாம்.

உண்மையில் நாம் ஒன்றும் அவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சே மீண்டும் தாராளவாத இடதின் ஆதரவுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் தவறான அரசியல் நோக்கங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதற்குச் சில குறிப்புக்களைக் காட்டுகிறது.

பல சட்ட வல்லுனர்கள் டியல்லோவின் தற்பொழுதைய விளம்பரப் பிரச்சாரம் அரசாங்க வக்கீல்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடைசி நேர முயற்சி என்கின்றனர்; இது அவருடைய சட்ட ஆலோசனைக் குழு வழக்கு கைவிடப்படக்கூடும் என நம்புவதைக் குறிக்கிறது என்றும் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்படவேண்டும் என்று பகிரங்கமாக பாதிக்கப்பட்டவர்கள் வாதிடுவது மிகவும் அபூர்வம் ஆகும்; நடந்ததாகக் கூறப்படும் குற்றம் பற்றி விவரங்கள் கொடுப்பதும் அபூர்வம்.

Pace Law School பேராசிரியரும் முன்னாள் அரசாங்க வக்கீலுமான பென்னட் எல். கெர்ஷ்மனுடைய கருத்துக்களை AP அசோசியேட்டட் பிரஸ் மேற்கோளிட்டுள்ளது: “அப்பெண்மணி இவ்வகையில் செல்வாக்குத் தேட முற்பட்டுள்ளது, தன்னுடைய வழக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று பொது உறவுப் பிரச்சாரம் நடத்துவது, மிகவும் அசாதாரண திருப்பம் ஆகும் என்று நான் கூறுவேன்.”

AP தொடர்ந்து கூறுகிறது: “அரசாங்க வக்கீல்கள் பொதுவாக குற்ற வழக்குகளில் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது பேசுவதை விரும்ப மாட்டார்கள்; மிகச் சிறிய வேறுபாடு ஏற்பட்டாலும், சில நேரங்களில் ஒரு நிகழ்வு பற்றி வெவ்வேறு விளக்கங்கள் கூறப்படலாம்.”

மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள வழக்கு ஒன்றில், பாலியல் தாக்குதல் நடந்தது எனக் கூறப்படுபவதில், வெளிவந்த செய்தி ஊடகத்தில் அரசாங்க வக்கீல்கள் விசாரணை நடத்தும்போது ஒருவர் பகிரங்கமாகப் பேசுவது என்பது கேட்டிராத விடயம் எனக் கூறியுள்ளனர்என்று இவ்வழக்குடன் தொடர்பு இல்லாத வக்கீல்கள் கூறியுள்ளதாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ட்ராஸ் கானின் வக்கீல்கள் வில்லியம் ஆர். தேலர் மற்றும் பெஞ்சமின் பிராப்மன் ஜூலை 24ம் திகிதி வெளியிட்ட அறிக்கையில், “திருமதி டியல்லோ வரலாற்றில் முதல் தடவையாக ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் செய்தி ஊடகப் பிரச்சாரம் நடத்தி அரசாங்க வக்கீல் தான் பணம் பெற விரும்புபவருக்கு எதிராக வழக்குகளைத் தொடர வேண்டும் என்று கூறுபவர் ஆவார். அவருடைய வக்கீல்களுக்கு அவருடைய பணத்திற்கான கூற்று, குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் பெரிய அடி பெறும் என்பதை அறிவர்; அக்குற்றச்சாட்டுக்களும் தள்ளுபடி செய்யப்படும்.” பின்னர், “இந்த முறையற்ற கோமாளித்தனம் நிறுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதுஎன்று அவர்கள் முடிவுரையாகக் கூறியுள்ளனர்.

கூலித்தன அக்கறைகள்தான் தொடர்பு கொண்டுள்ளன என்பதில் ஐயம் ஏதும் இல்லை. டியல்லோ சிவில் வழக்கு ஒன்றைத் தொடரத் திட்டமிட்டுள்ளார் என்பதையும் தோம்சன் தெளிவாக்கியுள்ளார்.

நியூ யோர்க் டைம்ஸ்  கருத்துப்படி, ஸ்ட்ராஸ் கான் மற்றும் டியல்லோவின் வக்கீல்கள் ஜூன் மாத நடுவேதீர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு பற்றி விவாதித்தனர். “இது பற்றி அறிந்த ஒரு தனிநபர் திரு தோம்சன் பணம் மூலம் தீர்வு ஒன்றை நாடியதாகக் கூறினார்என்று டைம்ஸ் தெரிவிக்கிறது. இக்குற்றச் சாட்டை தோம்சன் மறுத்து, “எந்த நேரத்திலும் டொமினிக் ஸ்ட்ராஸ் கானின் வக்கீல்களிடம் ஒரு பணம் மூலம் தீர்வை நான் நாடவில்லை என்று கூறினார். பின் டேலர் தோம்சனின் அறிக்கையைஅசாதாரணமாக திரித்துக்கூறுவது என்று விவரித்தார்.

முறையற்ற கோமாளித்தனம் மன்ஹட்டன் மாவட்ட அராசாங்க வக்கீலின் அதிகார வரம்புடன் நின்றுவிடவில்லை; பாரிஸ் வரை சென்றுள்ளது. டியல்லோ மற்றும் 32 வயது பிரெஞ்சு எழுத்தாளர் டிரிஸ்டேன் பானன், ஸ்ட்ராஸ் கான் அவரை 2003ல் கற்பழிக்க முயன்றார் எனக் கூறுபவர் இருவரும் ஜூலை 19 அன்று வான்ஸின் அலுவலகத்தில் சந்தித்தனர். பானனுடைய வக்கீல் டேவிட் கௌப்பி முன்னதாக இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்ததைக் கடுமையாக எதிர்த்தார். கார்டியன் குறிப்பிட்டுள்ளபடி, “அமெரிக்க வழக்கு சரிந்துவிடும் எனத் தோன்றியதற்குப் பின்தான் பானன் தன்னுடைய ஸ்ட்ராஸ்கானுக்கு எதிரான வழக்கைத் தொடங்கினார்.” இவருடைய தாயார் Anne Mansouret, பிரச்சினையைத் தொடருமாறு அவரை வலியுறுத்தியவர், “அவரின் போக்கானது ஒரு நோக்கமுடைய அரசியல்வாதி, பல நேரமும் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் ஸ்ட்ராஸ் கானின் போட்டியாளர்களுடன் அடையாளம் காணப்பட்டவர்என்று நியூஸ் வீக் சுட்டிக் காட்டியுள்ளது.