சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government under renewed pressure for pro-market reforms

சந்தைச் சார்புடைய சீர்திருத்தங்களுக்கான புதுப்பிக்கப்படும் அழுத்தங்களின் கீழ் இந்திய அரசாங்கம்

By Sarath Kumara 
13 August 2011

use this version to print | Send feedback

உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகளைப் போலவே, இந்தியப் பங்குச் சந்தையும் கடந்தவாரம் கொந்தளிப்பான சூழ்நிலையில் இருந்தது. திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் பரபரப்பாக பங்குகள் விற்கப்பட்ட நிலையில், பங்குகளின் விலைகள் 14 மாதங்களில் இல்லாத அளவிற்குப் பெரும் சரிவுற்றனஆறு நாட்கள் தொடர்ச்சியாக 8% குறைந்துவிட்டன. இதன் பின் புதன் கிழமை அவை ஓரளவிற்கு மீண்டாலும், வியாழன், வெள்ளியன்று பழையபடி சரிந்தன.

அமெரிக்காவிற்கு அதிக ஏற்றுமதி செய்யும் TCS, Wipro, Infosys போன்ற மென்பொருள் நிறுவனங்களும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டவற்றில் இருந்தன. தொலைத்தொடர்பு, உலோகங்கள், எஃகுப் பங்குகளும் தாக்குதலுக்கு உட்பட்டன. இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைதல், வட்டிவிகிதங்கள் உயர்தல் மற்றும் உயர் பணவீக்கம் ஆகியவை பற்றிய கவலைகளை இது பிரதிபலித்தது.

சர்வதேச நிதியக் கொந்தளிப்பும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மீண்டும் மந்தநிலை வரும் வாய்ப்பு உள்ள நிலை இந்திய வணிக வட்டங்களிடையே பதட்டங்களை தூண்டி, அரசாங்கம் சந்தைச் சார்புடைய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்ற அழைப்புக்கள் புதுப்பிக்கப்பட்டன.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திங்கன்று பங்குச் சந்தை திறப்பதற்கு முன் அதை அமைதிப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்தியப் பொருளாதாரத்தை உலகப் போக்குகள் பாதிக்கும் என்றாலும், “உள்நாட்டுக் காரணிகளில் இருந்து வெளிப்படும் சமாளித்துக் கொள்ளும் தன்மையினால் அவை குறைந்த பாதிப்பைத்தான் கொண்டிருக்கும்என்று அறிக்கை கூறியது.

அன்று பின்னர் நிதி மந்திரி பிரணாப் முக்கர்ஜி இதேபோன்ற செய்தியை அளித்து செய்தி நிருபர்களிடம் கூறினார்: “நம் நிறுவனங்கள் வலிமையுடன் உள்ளன, தற்பொழுதுள்ள நிலைமையின் காரணமாக எழும் எந்தக் கவலையையும் தீர்ப்பதற்கு [நாம்] தயாராக உள்ளோம்.”

ஆனால் இந்த ஆறுதல் கொடுக்கும் உத்தரவாதங்களைச் சந்தை கருத்திற்கொள்ளவில்லை. அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதன் குறைந்த வட்டிவிகிதக் கொள்கை தொடரும் என்று அறிவித்த பின்னர்தான் இந்தியா உட்பட சர்வதேசச் சந்தைகள் புதன் அன்று தற்காலிகமாக புது எழுச்சி பெற்றன. ஆனால் பிரெஞ்சுக் கடன்தரம் குறைக்கப்படலாம் என்ற புதிய வதந்திகள் வந்தபின் அதற்கு சந்தை அடிபணிந்து நின்றது.

உலகக் கொந்தளிப்பில் இருந்து இந்தியா பாதுகாப்பாக தனிமைப் படுத்தப்பட்டுள்ளது என்ற கூற்றுக்கள் இருந்தபோதிலும்கூட, கடந்த வாரம் இந்தியப் பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் இந்நாட்டுப் பொருளாதாரமும் ஆழ்ந்து வரும் சர்வதேச நெருக்கடிக்கு மிக அதிகம் முகங்கொடுக்கிறது என்பதைத் தெளிவாக்கின.

இந்தியா ஏற்றுமதிகளைப் பெரிதும் நம்பியுள்ளது. மாதாந்த மொத்த வருவாய் இப்பிரிவில் ஆண்டுக் கணக்கில் ஜூலை மாதத்தை ஒட்டி 82%  29.3 பில்லியன் டாலர் உயர்ந்தது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் இன்னமும் இந்திய ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. முக்கிய தொழில்துறைத்தளப் பொருளாதாரங்களின் பங்கு சரிந்து கொண்டிருக்கிறது என்றாலும்கூட இந்நிலை தொடர்கிறது. அமெரிக்கா மட்டுமே இந்தியப் பொருட்கள் ஏற்றுமதியில் 13%ஐக் கொண்டுள்ளது. அதேபோல் 2010-2011ல் மென்பொருள் ஏற்றுமதியில் 60%ஐக் கொண்டுள்ளது.

வியாழன் அன்று நிதி மந்திரி பிரணாப் முக்கர்ஜி, இந்தியாவில் மிக அதிக இலாபம் தரும் தகவல், தொழில்நுட்பத் துறைத் தொழில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் சரிவு ஏற்பட்டால் பாதிப்பிற்கு உட்படும் என்று நிதானமாக எச்சரிக்கை விடுத்தார். “முன்கூட்டியே தீர்ப்புக் கூறுவது முறையல்ல என்றாலும், நம் தகவல் தொழில்நுட்பத்துறை பாதிப்பிற்கு உட்படலாம்என்று அவர் கூறினார்.

இந்தியாவின் உயர்மட்ட வணிகப் பங்காளி இப்பொழுது வளைகுடா ஒத்துழைப்புக் குழு (Gulf Cooperation Council). 2009-2010ல் இதன் மொத்த வணிகம் 100 பில்லியன் டாலர் என்று இருந்தது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள எழுச்சிகள் ஐயத்திற்கு இடமின்றி, இச் சந்தையில் பாதிப்பைத் தொடங்கியுள்ளன. வணிகத்தின் பொதுவான சரிவு என்பது இந்தியப் பொருளாதாரம் இன்னும் குறைந்த செயல்பாட்டைக் கொண்டிருக்க வழி செய்துவிடும்வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 8.2 சதவிகிதம் இருக்கலாம் என்றும், அடுத்த ஆண்டு 7.8 சதவிகிதம் இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2010ல் இருந்த 10.3%ஐவிடக் குறைவு ஆகும்.

மேலும் இந்தியா வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் உட்பாய்வை அதிகம் நம்பியுள்ளது. இது 2009-2010 நிதியாண்டில் 25% குறைந்துவிட்டது. பணவரத்து இப்பொழுது தீவிரமாக உயர்ந்து வருகிறது, ஆனால் உலக நிதியச் சந்தைகளின் உறுதியற்ற தன்மைக்கு கூருணர்ச்சியைக் காட்டுகிறது.

ஹிந்து  நாளேட்டில் இவ்வாரம் பொருளாதார விமர்சகர் சி.பி. சந்திரசேகர் எழுதிய கட்டுரை இந்தியாவின் மொத்தப் பொதுக்கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆகியவை பற்றி உயர்த்திக் காட்டுகிறது. மொத்தப் பொதுக்கடன் 66% என்று இருக்கையில் இது ஆசியாவில் மிக அதிகமானவற்றுள் ஒன்றாகும். கடன்தர நிர்ணய நிறுவனமான Standard and Poor’s இந்தியக் கடன் நிலையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சத்தை எழுப்பியுள்ளது.எனவே S&P ஆசிய-பசிபிக் பகுதியில் சில அரசாங்கங்கள் மிக அதிகமாகக் கடன்பட்டுள்ளன என்ற அறிவிப்பை இலக்கு கொண்டால், இந்தியாவும் தாக்குதலை எதிர்நோக்கி நிற்கும்என்று அவர் எச்சரித்துள்ளார்.

பெருவணிகத்திடம் இருந்து பெருகிய குறைகூறலுக்கு முகங்கொடுக்கும் இந்திய அரசாங்கம் மறுகட்டமைப்பு மற்றும் தனியார்மயமாக்கும் செயற்பட்டியலை தீவிரமாகச் செயல்படுத்த இருப்பதாக உறுதியளித்துள்ளது. அதுதான் பொருளாதாரத்தை வெளி மூலதனத்திற்குத் திறந்துவிடும். இச் செய்திதான் கடந்த வார இறுதியில் CII எனப்படும் இந்தித் தொழில்துறைக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் முக்கர்ஜியால் கொடுக்கப்பட்டது; அம்மாநாட்டின் தலையங்கம்இரு தசாப்த சீர்திருத்தங்கள் மற்றும் இன்றைய பொருளாதாரம்என்று இருந்தது.

பரிசீலிக்கப்படுபவை அல்லது செயல்படுத்தப்படுபவை என்றுள்ள ஏராளமான நடவடிக்கைகளில் கீழ்க்கண்டவையும் அடங்கியுள்ளன காப்பீட்டித்துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதித்து அவர்களுடைய உரிமையாளர் பங்கை 26ல் இருந்து 29%  என அதிகரித்தல்; தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்திருத்துதல்; பலதொழில் முத்திரைச் சில்லறை விற்பனைத் துறையில் 51% வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தல். அரசாங்கம் இதுவரை சில்லறை விற்பனைப் பகுதியில் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்துவந்துள்ளது. ஏனெனில் நாட்டின் மில்லியன் கணக்கான சிறு வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றி அது அச்சம் அடைந்துள்ளது.

அரசாங்கம் நில உடைமை மற்றும் காடுகளை அழித்தல் ஆகியவற்றிற்கான சட்டங்களை திட்டமிட்டு வருகிறது. இது தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான நிலங்கள் கிடைக்க வசதியளிக்கும். பல பெரிய முதலீடுகள் திட்டமிடப்படும் திட்டங்களுக்கு உறுதியான உள்ளூர் எதிர்ப்புக்களை எதிர்கொள்கின்றன.

அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், பெருவணிகம் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிடம் பெருகிய முறையில் தன் திகைப்பை வெளிப்படுத்தியுள்ளது. பெருநிறுவன உயரடுக்கு 1991ல் நிதி மந்திரியாக இருந்து சந்தைச் சார்பு சீர்திருத்தங்களைத் ஆரம்பித்து வைத்த தற்போதைய பிரதம மந்திரி மன்மோகன்சிங் 2009 தேர்தல்களில் வெற்றிபெற்றபின் தன் கோரிக்கைகளைச் செயல்படுத்துவார் என எதிர்பார்த்தது. ஏனெனில் பாராளுமன்றத்தில் ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணியை அது இனி நம்பியிருக்க வேண்டிய தேவையில்லை என்பது காரணமாகும்.

இந்திய செய்தி ஊடகங்கள் இப்பொழுது வாடிக்கையாக சிங்கைஒரு நொண்டி வாத்துப் பிரதம மந்திரி, “ஒளிந்து கொண்டிருப்பவர்என்று குறிப்பிடுகின்றன. CII தலைவர் பி.முத்துராமன் சமீபத்தில் அறிவித்தார்: “இந்த அரையிருள் மனச்சோர்வை அகற்றுவதற்கு நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து பெரு வெடிப்பு அறிவிப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.”

கடந்த மாதக் கடைசியில் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒன்று இந்திய வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை எதிர்பார்க்கப்படும் கணிப்புக்களை விட கிட்டத்தட்ட ஒரு சதவிகிதப் புள்ளி அதிகரிக்கும் என்ற கவலைகளை சுட்டிக்காட்டியுள்ளது. “தளர்ந்த நிதியக் கொள்கை பற்றிப் பொருளாதார வல்லுனர்கள் பதட்டப்படுகையில் தொழில்துறைத் தலைவர்கள் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் அரசாங்கம், ஊழல் அம்பலங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் நிலையில், முடிவுகள் எடுப்பதில்லை. இதையொட்டி திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்குக் காத்துக் கிடக்கும் கால அவகாசம், மற்றும் புதிய முதலீடுகள் பற்றி சிக்கல் நிறைந்த சரிபார்த்தலுக்கான கால அவகாசம் ஆகியவை 1970 களில் இருந்து இந்தியாவின் தன்மையைக் காட்டியலைசன்ஸ் அரசாங்கம்”, “கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் ஆட்சிஆகியவற்றின் அடையாளங்களுக்குத்தான் மீண்டும் செல்கிறோம் என்பதை கூடுதலாக எடுத்துக்காட்டுகின்றன எனக்குறிப்பிட்டது.

பெரும் ஊழல்களே ஆளும் வட்டங்கள் சிங் அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அதிருப்தியைப் பிரதிபலிக்கின்றன. இந்த அரசாங்கம் 2G தொலைத்தொடர்பு உரிமங்களை ஒதுக்குவதில் இருந்து ஊழல் விவகாரங்கள் பற்றிய பெரும் எதிர்ப்பினால் வலுவிழந்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுக்கள் ஒட்டி எழுந்த ஒப்பந்தங்கள் பற்றிய ஊழல்களாலும் நலிவடைந்துள்ளது.

இந்த அரசியல் புயல்களைச் சமாளிக்க காங்கிரசால் முடிந்ததற்கு முக்கிய காரணமே, ஆளும் வர்க்கம், முக்கிய எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) இடம் அதிகம் நம்பிக்கை கொள்ளாததுதான். 2004க்கு முன் அதன் மறுகட்டுமானக் கொள்கைகளால் ஏற்பட்ட வெகுஜன அதிருப்தியால் இன்னமும் எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி சமீபத்திய மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் 400 இடங்களில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

புது டெல்லியில் உள்ள அரசியல் பாரிசவாதம் சரிந்து கொண்டுவரும் வாழ்க்கைத் தரங்களாலும் அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளாலும் ஏற்பட்டுள்ள பெருகிய சமூக அதிருப்தியால் அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வங்கித் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 5ம் திகதி இத்துறையை இன்னும் தனியார் வங்கிகளுக்கும் பணிகளுக்கும் திறந்துவிடுவதற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர். கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில், வேலைநிறுத்தங்களில் ஊதியங்கள், பணிநிலைமைகள் குறித்து, ஈடுபட்டுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி கடன் கொடுத்தலை இறுக்கிப்பிடித்தாலும்கூட, பணவீக்கம் உயர்ந்துதான் காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட இரட்டை இலக்கங்களை எய்திவிட்டது. உணவு விலைகள் இன்னும் அதிகமாகப் போய்விட்டன. இது நாள் ஒன்றிற்கு 2 டாலரையும் விடக் குறைந்த வருவாயில் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ள இந்திய மக்களில் முக்கால்வாசிப் பேரைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

எதிர்ப்புக்கள் கிராமப்புறங்களிலும் பரவி வருகிறது. கடந்த மாதம் ஒரு பெரிய தொழில்துறைத் திட்டத்திற்காக 1,600 ஹெக்டேர் நிலத்தை கையேற்றுக்கொள்வதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. இதற்குக் காரணம் உள்ளூர் கிராமவாசிகளின் எதிர்ப்புக்கள்தான். தென் கொரியாவின் POSCO நிறுவம் கிழக்கு இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் கட்ட உள்ள 12 பில்லியன் டாலர் மதிப்புடைய எஃகு ஆலை பற்றிய இந்த மோதல் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பெருவணிகக் கோரிக்கைகளான கூடுதல் சந்தை மறுகட்டமைப்பு, சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அது அடிபணிந்து நடந்தால், அது ஒரு சமூக வெடிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி அரசாங்கம் நன்கு அறியும். இந்தியாவில் அத்தகைய ஒரு வெடிப்பு மத்திய கிழக்கில் நடைபெற்றுள்ள அனைத்தையும் மிகச் சிறியவை ஆக்கிவிடும்.