சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Evidence mounts of atrocities by Libyan

லிபிய எழுச்சியாளர்கள் செய்யும் கொடுமைகளைப் பற்றிய சான்றுகள் அதிகரிக்கின்றன

Patrick Martin
29 August 2011

use this version to print | Send feedback

திரிப்போலி நகரத்தில் உள்ள செய்தியாளர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் தகவல்கள் லிபிய உள்நாட்டுப்போரில் நேட்டோ ஆதரவு பெற்ற படைகள் பரந்த படுகொலைகளில் ஈடுபட்டதற்கான சாட்சிகளை அளிக்கின்றன. முயம்மர் கடாபியின் ஆட்சியை அகற்றுவதற்கு அமெரிக்க நேட்டோ தலையீட்டிற்குப் பெரிதும் ஆதரவு கொடுத்த வெளியீடுகளில் இருந்து வந்துள்ள இந்த அறிக்கைகள் இன்னும் கூடுதலான வகையில் லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் மனிதாபிமான நோக்கங்கள் மற்றும் குடிமக்கள் உரிமைகளைக் பாதுகாக்கும் உந்துதலைக் கொண்டிருந்தது என்ற மோசடித்தனக் கூற்றை அம்பலப்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை அன்று லிபியாவில் பழிவாங்கும் கொலைகள் அதிகமாகின்றன, நீதிக்குப் புறம்பான தாக்குதல்கள் எழுச்சியாளர்களால் நடத்தப்படுவதால் புதிய சுதந்திரம் மீது இருள் விழச்செய்கின்றது என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட் முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. இத்தலைப்பு தேசிய இடைக்காலக் குழு (NTC), புதிய நேட்டோ ஆதரவு பெற்றுள்ள லிபிய ஆட்சி மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையே லிபியாவில் புதிய சுதந்திரம் வந்தபின் என்ன நடக்கிறது என்பது பற்றிய முரண்பாடான கூற்றுக்களைக் குறிப்பதுடன் அரசியல்ரீதியாக இயக்கப்படும், சில விடயங்களில் இனரீதியாக நடக்கும் படுகொலைகளைப் பற்றிய உண்மையையும் கூறுகிறது.

போஸ்ட்டின் நிருபர் சைமன் டென்யெர் கடாபியின் துருப்புக்கள் ஏராளமானவர்களை, ஏன் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை இந்த வாரம் தூக்கிலிட்டனர். அதே நேரத்தில் வெற்றிபெற்றுள்ள எழுச்சிப் போராளிகளும் பெரும் தவறுகளைச் செய்துள்ளதாகத் தோன்றுகிறதுஎன்று வலியுறுத்தியுள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபைக்கான-Amnesty International- லிபிய ஆராய்ச்சியாளர் டயனா எல்டஹாவியின் சாட்சியத்தை, இந்த ஆய்வாளர் சான்றுகளுடன் கைப்பற்றப்பட்ட கடாபி ஆதரவாளர்கள் நீதிமுறையில்லாமல் தவறாக நடத்தப்பட்டது, சித்திரவதைக்குள்ளானது, கொலைசெய்யப்பட்டது ஆகியவற்றை தொடர்ந்து கிழக்கில் இருந்து மேற்கு வரை நாட்டை கைப்பற்றிக்கொள்ளும் எழுச்சியாளர்கள் செய்துள்ள கொடூரங்களைப் பற்றியும் விவரித்துள்ளார்என மேற்கோளிட்டுள்ளார்.

நிருபரே கடாபியின் ஐந்து படையினர் காயமுற்று தளத்தில் இருந்த எழுச்சியாளர்களின்ரோந்திற்கு உட்பட்ட மருத்துவனை ஒன்றில் உணவு, குடிநீர், மருத்துவ சிகிச்சை ஆகியவை கொடுக்கப்படாத நிலையில் இறந்ததையும், கடாபி ஆதரவாளர்கள் பலர் என்று சந்தேகப்படும் கறுப்பின ஆபிரிக்கர்களின் சடலங்கள் 15 கடாபியின் குடும்பத்தினர் பலர் வசித்து வந்த Bab al-Azziziyah வளாகத்திற்கு வெளியே வெய்யிலில் அழுகும் வகையில் வைத்திருப்பதையும் பார்த்துள்ளார். டென்யெர் கருத்துப்படி, அவர்கள் அனைவரும் சாதாரண போர்க்களத்தில் இறந்தவர்களாகத் தோன்றவில்லை. இரு சடலங்கள் புல்லில் முகம்புதைக்கவைக்கப்பட்டு, கைகள் பின்புறம் பிளாஸ்டிக் பட்டைகளால் கட்டப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டன.

இதே கொடூரக் காட்சியை பற்றி McClatchy செய்தி அமைப்பும் பின்வருமாறு கூறியுள்ளது: இறந்தவர்கள் கடாபிக்கு ஆதரவு கொடுத்த படையினராக இருந்திருக்க வேண்டும்; ஆனால் அவர்கள் போரில் இறக்கவில்லை. சிலர் அவர்களுடைய கூடாரங்களில், ஒருவேளை தூங்கிக் கொண்டிருக்கும்போது சுடப்பட்டிருக்க வேண்டும்; கால்களில் பூட்ஸ்கள் இல்லை. ஒருவர் அம்புலன்ஸிற்குள் சுடப்பட்டிருக்க வேண்டும்; மற்றொருவர் தள மருத்துவமனைக்குள் அவருக்கு குழாய் மூலம் மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களின் தலைகளின் பின்புறத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன, எழுச்சிப் போராளிகள் படுகொலை செய்திருக்க வேண்டும் என்ற ஊகம் விளைகிறது.

பிரிட்டனின் இண்டிபென்டென்ட் ஏட்டின் பற்ட்ரிக் காக்பேர்ன் இதே காட்சியை ஞாயிறன்று எழுச்சியாளர்கள் சர்வாதிகாரியின் நபர்கள்மீது பழிதீர்த்துக் கொள்கின்றனர்என்ற தலைப்பில் விவரித்துள்ளார். அவர் எழுதுகிறார்: 30 பேரின் அழுகிய சடலங்கள், அநேகமாக அனைவரும் கறுப்பினத்தவர்கள், அனைவரும் கைவிலங்கிடப்பட்டு, உடல்காவிகளில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும், ஏன் மத்திய திரிப்போலியின் அம்புலன்ஸில்கூட கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. லிபியாவின் வருங்காலம் எப்படி இருக்கக்கூடும் என்று தீய முறையில் ஒரு முன்னோடியாக இது உள்ளது. பதவிக்குவரவுள்ள அரசாங்கம் கடாபிக்கு சார்பான படையினர் மீது பழிவாங்கப்படாது என நம்பிக்கையான அறிக்கைகளை விட்டுள்ளபோதும், கூலிப்படைகளாக பெயரிடப்படக்கூடியவர்கள் எவரையும் பாதுகாப்பது பற்றி எதுவும் கூறாமல் விட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத்திற்காக போராடினார்கள் என குற்றம்சாட்டப்படும் கறுத்தநிற தோலைக்கொண்ட எந்தவொரு லிபியரும்  தப்பிப்பிழைப்பதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கும்.

துணை சகாரா ஆபிரிக்கப் பகுதிகளில் இருந்து வந்துள்ள நூறாயிரக்கணக்கான குடியேறிய தொழிலாளர்கள் பலரும் தேசிய இடைக்கால குழுவின் படைகளால் அவர்கள் தோல் நிறத்தை ஒட்டி, கூலிப்படைகள்என்று முத்திரையிடப்பட்டு, சிறைவாசம், சித்திரவதை, விசாரணையின்றிக் கொலை ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை சர்வதேச மன்னிப்புசபை உறுதி செய்துள்ளது.

எழுச்சியாளர்கள்பெரும் ஆர்வத்துடன் ஆதரவு கொடுத்திருந்த ரூபர்ட் மேர்டோக்கிற்குச் சொந்தமான ஒரு பிரிட்டிஷ் ஒளிபரப்பு வலைப்பின்னலான Sky News ன் அலெக்ஸ் கிராபோர்ட் ஒரு குறிப்புத் தகவலை அளித்துள்ளார். இந் நிருபர் கடாபி எதிர்ப்புச் சக்திகளுடனேயே இணைந்திருந்து, ஜவியாவில் இருந்து திரிப்போலிக்குச் சென்ற ஒரு பிரிவுடன் சேர்ந்து சென்றார். நாம் கண்டதைக் கூறுகிறோம், கடாபியின் படையினர் கட்டிவைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். இது போர். இதுதான் நடக்கிறது. எழுச்சியாளர்களின் பதிலடிகள் உண்மையில் கலக்கம் கொடுக்கின்றன.

பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் திரிப்போலியின் பலர் புதைக்கப்பட்டிருந்த சவக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளது. இவை பரந்த அளவில் உடனடிக் கொலைகள் லிபியத் தலைநகருக்காக நடந்த போரையொட்டிய விளைவு ஆகும்.ஒற்றை மிக மோசமான படுகொலையில் 53 கடாபிப் படையினரின் சடலங்கள் தீயிடப்பட்டிருந்த ஒரு கிடங்கில் காணப்பட்டன. ராய்ட்டர்ஸ் தொடர்கிறது: இரு பிரிவினரும் இரக்கிமின்றிச் செய்த கொலைகள் கடந்த சில நாட்களில் வெளிப்பட்டுள்ளன. கடாபியின் வீழ்ச்சியைக் களிப்புடன் வரவேற்ற பல நகரவாழ் மக்களிடையே இது இருண்ட சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறன்று எழுச்சிப் படையாளர்களின் இழிந்த வன்முறை கடாபி ஆதரவாளர்களின் பலமான கோட்டை என அறியப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளைத் தாக்குகிறது. அபு சலிம், ஹட்பா, சலஹடின் உட்பட்ட அத்தகைய பகுதிகளில் எழுச்சிப் போராளிகள் பீரங்கி, விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த வாரம் ஒரு கட்டத்தில் எழுச்சியாளர்கள் தாக்கும் துப்பாக்கிகளை அபு சலிமிலுள்ள குடியருப்புப் பகுதிகளை நோக்கி இயக்கினர். அங்கு ஒரு குறிபார்த்து சுடுபவர் பதுங்கியிருந்ததாக அவர்கள் சந்தேகப்பட்டனர்என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் எழுதியுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், நேட்டோ குறுக்கீட்டிற்கு ஆரம்ப போலிக்காரணமான பெரிய ஆயுதங்கள் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்த கடாபி தன் படைகளுக்கு உத்தரவிட்ட அதேமாதிரியான கண்மூடித்தனமான சுடுதல் செயலில்தான் நேட்டோ ஆதரவுடைய சக்திகள் ஈடுபட்டுள்ளன.

டைம்ஸின் தகவல் ஒரு திரிப்போலி டாக்சி டிரைவரை மேற்கோளிட்டு முடிகிறது; அவர் செய்தித்தாளிடம் கூறியது: ஒரு நாள் நாமும் முயம்மர் கடாபியின் நாட்களே விரும்பத்தக்கது என நினைக்கும் அளவிற்கு ஈராக்கியர் போல் ஆகிவிடுவோம் என அஞ்சுகிறோம்.

ஞாயிறன்று ஒரு முக்கிய கட்டுரையில் திரிப்போலித் தெருக்களில் இடைக்கால தேசிய குழு நடத்தும் காட்டுமிராண்டித்தன செயல்களுக்கு அரசியல்ரீதியான பதிலடி கிடைக்கும் என்று இண்டிபென்டென்ட் எச்சரித்துள்ளது. இந்த ஏட்டின் தலையைங்க பக்கம் போல் கடாபி குடிமக்களைப் படுகொலை செய்ததுதான் குறுக்கீட்டிற்குக் காரணம் என்று ஆதரவு தெரிவித்தவர்களுக்கு அதிகார பலத்தில் மாற்றம் பரந்த படுகொலைகள் என்பதைச் செயல்படுத்தினால் சமச்சீர் நிலை வருவது மிகவும் கடினம்என்று கூறும் நிலை வந்துள்ளது.

பிரிட்டிஷ் செய்தித்தாள் திரிப்போலி இராணுவக்குழுவின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி அப்டெல்ஹகிம் பெல்ஹட்ஜ்ஜையும் அடையாளம் கண்டுள்ளது. இவர் ஒரு முன்னாள் முஜய்ஹெடின், ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் போராடியவர், CIA யினால் ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டவர்என்று கூறியுள்ளது. இவர் லிபியாவின் இஸ்லாமியப் போராளிக்குழுவை நிறுவியவர். இதுதான் 9/11  தாக்குதல்களுக்குப் பின் லிபியாவில் அல்குவைதாவுடன் இணைந்த பிரிவாக இருந்தது.

திரிப்போலியில் புதிய ஆட்சி நிறுவப்படுவது உள்ளத்தை உறையவைக்கும் சித்திரத்தை வெளிப்படுத்துகிறது. கடாபிக்கு ஆதரவு கொடுத்த குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் குடிமக்களைப் படுகொலை செய்தல், ஆபிரிக்காவில் இருந்து குடியேறிய தொழிலாளர்களைப் இனப்படுகொலை செய்தல், ஆகிய குருதிபடிந்த செயல்கள் மூலம் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள பார்க்கிறது. இதற்கு இயக்கம் கொடுப்பது ஒரு அல்குவைதாவின் நட்பு அமைப்புத் தலைவர். அவர் இப்பொழுது வெள்ளை மாளிகையில் இருந்தும் நேட்டோ தலைமையகத்தில் இருந்தும் உத்தரவுகளைப் பெறுகிறார்.

நேட்டோ ஆதரவுடைய தேசிய இடைக்கால குழு சக்திகள் புரியும் குற்றங்கள் ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் பிரிட்டிஷ் மற்றும்  பிரான்ஸ் உடந்தையாளர்கள் ஒரு குருதி கொடுத்துலைத் தடுப்பதற்காகவும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும்எண்ணெய் வளம் உடைய லிபியாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதல் தேவை என நியாயப்படுத்தித் தலைமை தாங்கிய பிரச்சார நடவடிக்கைகளின் பாசாங்குத்தனத்தைத்தான் நிரூபணம் செய்கின்றன.

திரிப்போலியில் இருந்து எழுதும் செய்தியாளர்கள் சிலர் அங்கு நடக்கும் பழிதீர்க்கும் செயல்களைப் பார்த்துத் தம் கண்களை மூட இயலாதவர்களாள உள்ளனர். இது அவர்களுடைய உள்ளத்தைக் காட்டுகிறது, மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இடதுவிமர்சகர்கள் எடுத்திருந்த இழிந்த, பிற்போக்குத்தன நிலைப்பாட்டையும் நிரூபிக்கிறது; இவர்கள் இன்னமும் லிபியாவிற்கு எதிராக ஏகாதிபத்திய் போரை தொடர்ந்து நியாயப்படுத்துவதுடன் அதன் கொள்ளைக்காரத் தன்மையையும் மூடி மறைக்கின்றனர்.

லிபியாவில் வெளிப்பட்டுள்ள நிகழ்வுகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கண்ணுக்கு புலப்படும் படிப்பினை ஆகும். ஏகாதிபத்திய சக்திகள் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முற்போக்கானதலையீட்டை செய்யும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் இப்பொழுது அரசியல்ரீதியாக கூறத்தகாத அளவிற்கு உள்ள குற்றங்களில் உட்தொடர்பு உடையவர்கள் ஆவர். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரே உண்மையான, தொடர்ந்த எதிர்ப்பு, புரட்சிகர சோசலிச இயக்கத்தின் வரலாற்றுத்தன்மையுடைய கொள்கைகளின் அடித்தளத்தில், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால் முன்வைக்கப்படுவது மட்டும்தான்.