சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No letup in US aggression following military withdrawal from Iraq

ஈராக்கில் இருந்து இராணுவப் படைகள் திரும்பப் பெறுவதைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பில் குறைப்பு ஏதும் இல்லை

Patrick Martin
5 December 2011

use this version to print | Send feedback

வியாழன் அன்று ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு உத்தியோகபூர்வமாக முடிவடைதல் மற்றும் ஒரு நாள் கழித்து பாக்தாத்தில் அமெரிக்கத் தலைமையகமான காம்ப் விக்டரியை மாற்றியது ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வுகள் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி என்பதைப் பிரதிபலிக்கவில்லை. வடிவமைப்பு மாறுகிறது, ஆனால் உள்ளடக்கம் மாறவில்லை.

ஈராக்கிற்கு எதிராக அதன் ஆக்கிரோஷப் போரை வாஷிங்டன் மார்ச் 20, 2003ல் இரு போலிக் காரணங்களைக் கூறித் தொடக்கியது: அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3,000 பேரைக் கொன்ற செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை நடத்திய அல்குவேடா பயங்கரவாதிகளுடன் ஈராக்கியத் தலைவர் சதாம் ஹுசைன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும், ஈராக் இன்னும் தாக்குதல்களுக்கு கொடுப்பதற்காக பேரழிவுகரமான ஆயுதங்கள் ஏராளமாக வைத்திருந்தது என்பவையே அவை.

இக்கூற்றுக்கள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட பொய்களாகும். இந்த உலகில் பெரிய மூலோபாய வெகுமதிமிக்க இடங்களில் ஒன்றின்மீது இராணுவ வெற்றி மற்றும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான காங்கிரஸில் இருந்த ஜனநாயகக் கட்சியினரின் உடந்தையுடன் புஷ் நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்டவை. ஈராக் உலகின் மூன்றாம் மிகப் பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ள மற்றும் பாரசீக வளைகுடாவின் முன்னணியில் இருக்கும் நாடு இப்பிராந்தியம் முழுவதும் வருங்கால அமெரிக்க இராணுவ நடவடிக்கையை தொடக்கும் உந்துதளத்தை வழங்கக் கூடியது.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கப் படையினர் 4,483 பேர் உயிரிழப்பு மற்றும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்ற மதிப்பீடு ஆகியவற்றிற்குப் பின்னரும், அமெரிக்கப் போர்த் திட்டம், வெளியுறவுக் கொள்கை மூலோபாயம் இயற்றுபவர்களின் பேராவலுடைய இலக்குகள் அடையப்படவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கிய மக்கள் காட்டிய விரோதப் போக்கு, நாட்டின் பெரும் எண்ணெய் இருப்புக்களைச் சுரண்டும் முயற்சிகளைத் தகர்த்து, இறுதியில் ஒரு காலனித்துவவகை கைப்பாவை அரசாங்கத்தைத் தக்க வைப்பதையும் இயலாததாக ஆக்கிவிட்டது.

அமெரிக்கப்  படையெடுப்பு அதிகாரத்திற்குக் கொண்டுவந்த ஷியைட் மற்றும் சுன்னி முதலாளித்துவ அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இருந்தாலும், ஒபாமா நிர்வாகம் 2008ல் புஷ் நிர்வாகம் பேச்சுவாரத்தைகள் நடத்திக் கொண்டு வந்த, படைகள் உடன்பாடுகள் அந்தஸ்து என்பதைத் திருத்துவதற்கு ஒபாமா நிர்வாகத்தால் முடியவில்லை. அமெரிக்க தூதரகத்தை பாதுகாத்து நிற்கும் பெயரளவு மரைன்கள் படையைத்தவிர, எஞ்சியுள்ள அமெரிக்கப் படையினர் கிறிஸ்துமஸிற்கு முன் ஈராக்கை விட்டு நீங்குவர்; அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களும் கைவிடப்படும்.

நிகழ்வுகளில் அமெரிக்காவின் சார்பாகக் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் பங்குபற்றி காம்ப் விக்டரியில் அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் இராணுவ ஒப்பந்தக்காரர்களிடம் அவர் ஆற்றிய உரையில் அவர்களுடைய தியாகங்கள் அமெரிக்காவை போரில் வெற்றிபெற உதவியது என்ற கூற்று வெற்றித்தன்மையை காட்டுவதைவிடக் குறைவான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தது.

பிடென் மற்றும் ஈராக்கிய அதிகாரிகளுக்கு இடையே நடந்த விவாதங்கள் ஈராக்கிய படைகளுக்கு பயிற்சியளிப்பது என்பதன் கீழ் ஈராக்கில் அமெரிக்க இராணுவம் ஒரு முக்கிய பங்கைத் தக்க வைத்துக்கொள்ளுவதற்கான வழிவகை நடவடிக்கைகள்மீது குவிப்புக் காட்டின. இது அமெரிக்கப் பயிற்சியாளர்கள் நாட்டிற்குச் சுழற்சி முறையில் வருவார்களா அல்லது அமெரிக்கப் படை நிலைப்பாடு அதிகரிக்கப்பட உள்ள அண்டை நாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளில் இருந்து ஈராக்கியப் படைகள் பயிற்சி பெறுமா என்பது தீர்க்கப்படவில்லை போல் தோன்றுகிறது.

காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சியினரின் வலதுசாரி, போர்ச் சார்பு நிலைப்பாட்டின் உருவகமாகத்தான் பிடனே திகழ்கிறார். அக்டோபர் 2002ல் அவர் செனட் வெளியுறவுக் குழுவில் முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர் என்னும் முறையில் போர்த் தீர்மாத்திற்கு ஆதரவாக வாக்களித்தார், போருக்கு ஆதரவு கொடுத்தார், மற்றும் அவருடைய சொந்த மூலோபாய ஆலோசனையையும் கொடுத்தார்அதில் ஈராக்கை இனவழி, குறுங்குழுவாத வழியில் நடைமுறைப்படுத்திய வகையில் பிரிவினை செய்தல் என்னும் இழிந்த திட்டம் உள்நாட்டுப் போரை அமெரிக்க இராணுவம் தூண்டியதின் பின்னணியில் இருந்த கொள்கையை முன்னெடுத்துக் காட்டியது.

காங்கிரசில் இருந்த ஜனநாயகக் கட்சியினர் போர் எதிர்ப்பு எனக்கூறப்படும் நிலைப்பாட்டிற்கு மாறியது போருக்கு மக்கள் காட்டிய வெகுஜன எதிர்ப்புடன் சேர்ந்து கொண்டு, அதைச் செயலற்றாக்குவதற்குத்தான். இதனால் அவர்கள் 2006ல் காங்கிரசில் பெரும்பான்மை பெற முடிந்ததுடன் 2008ல் ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவிற்கு இது வெற்றியைக் கொடுத்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்தபின், ஒபாமா ஈராக்கில் புஷ்ஷின் கொள்கையைத் தொடர்ந்தார், புஷ்ஷின் பாதுகாப்பு மந்திரியான ரோபர்ட் கேட்ஸைப் பென்டகனில் தொடர்ந்து இருத்தினார், ஆப்கானிஸ்தானில் புஷ் நடத்திய மற்றொரு போரைத் தீவிரமாக்கினார்.

காம்ப் விக்டரியில் தன் கருத்துக்களைக் கூறுகையில், பிடென், போர் அலை பின்னோக்கிச் செல்கிறது என்று அறிவித்தார். உண்மையில் இருந்து இதைவிட எதுவும் தொலைவில் இருக்க முடியாது. அமெரிக்க இராணுவம், ஈராக்கில் குருதி கொட்டிய மூக்கைக் கொண்டதுடன், ஆப்கானிஸ்தானத்திலும் தேக்கத்தைக் கண்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை மூலோபாயத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அது தனது எஞ்சிய இராணுவ வலிமையை அதன் நீண்டகால பொருளாதாரச் சரிவில் இருந்து ஈடு செய்வதற்குத்  பயன்படுத்துகிறது.

ஈராக்கில் இருந்து முறையாக அமெரிக்க வெளியேற்றம் என்பது இன்னும் பரந்த பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளை மறுநிலைப்பாடு செய்யும் முறையில் ஒரு பகுதியாகும். மேலும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் குவிப்பு தென்மேற்கு ஆசியாவில் இருந்து தூரகிழக்கிற்கு மாற்றப்பட்டதின் விளைவு மற்றும் சீனாவின் எழுச்சி கொண்ட சவாலுக்கு விடையும் ஆகும்.

இதில் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள 100,000 துருப்புக்கள் மட்டும் இல்லைஇதுவே புஷ் அனுப்பியிருந்ததை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்துருக்கி, குவைத், கட்டார், பஹ்ரைன், ஓமன், டிஜிபுட்டில் அமெரிக்கத் தளங்கள், யேமனில் இருந்து செங்கடல் நெடுக மற்றும் பாரசீக  வளைகுடாவிலுள்ள கடற்படைக் கப்பல்கள், அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றிலுள்ள கப்பற்படை, இவற்றில் எல்லாம் உள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களும் அடங்கும். செயற்பாடுகளின் மண்டலத்தில் வடக்கு, கிழக்கு ஆபிரிக்காவின் பெரும்பகுதிகளும் உள்ளன; இங்கு அமெரிக்க-நேட்டோப் படைகள் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை கொன்றனர், அமெரிக்கச் சிறப்புப் படைகள் உகண்டா மற்றும் சோமாலியாவில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரோஷத்தின் மிக உடனடியான இலக்கு ஈரான் ஆகும். பிடென் தன் எட்டு நாட்களுக்குள் மத்தியக் கிழக்கு பயணம் முழுவதிலும் நடத்திய விவாதங்கள் ஈரானைப் பொருளாதார, அரசியல் அளவில் தனிமைப்படுத்தும் முயற்சிகளை முடுக்கிவிடுவதில் குவிப்புக் காட்டினார். ஈராக்கை விட்டு நீங்கியபின், பிடென் துருக்கிக்கு பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகனுடன் அண்டை நாடான சிரியாவில் உள்ள நெருக்கடி பற்றிப் பேசுவதற்குச் சென்றார்; அப்பேச்சுக்களில் ஆக்கிரமிப்பிற்கு பிந்தைய ஈராக், இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளுக்கு அமெரிக்க அழுத்தங்களை எதிர்க்கும் துருக்கி ஆகியவை பற்றிய பொதுக் கொள்கையை வகுப்பதற்கான கவனம் இருந்தது.

ஈரானிடம் அமெரிக்கா கொண்டுள்ள அச்சுறுத்தும் போக்கு ஞாயிறன்று ஆளில்லாத அமெரிக்க ஒற்று விமானம் சுட்டுக் கொல்லப்பட்டதில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. இது ஒரு தொலைவில் இருந்து இயக்கப்படும் ஆர்.க்யூ.170 டிரோன் ஆகும்; ஈரானிய ஆப்கானிய எல்லைக்கு அருகே கிழக்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. மறைமுகச் செயல்கள் தொழில்நுட்பம் நிறைந்த கருவிகளைக் கொண்ட ஒற்று விமானம் இப்பொழுது ஈரானிய இராணுவத்தால் ஆய்வு செய்யப்படுகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் ட்ரோன் இழப்பை உறுதி செய்தனர். ஆனால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்குப் பதிலாக சரியாகச் செயல்படாததால் விழுந்துவிட்டது என்று கூறினர்.

வாஷிங்டனில் அமெரிக்க செனட் 100-0 என்ற வாக்களிப்பில் ஒரு பாதுகாப்புச் செலவு அங்கீகாரச் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஈரானுக்கு எதிராக நிதியத் தடைகளைப் பெரிதும் விரிவாக்குகிறது. மேலும் அமெரிக்காவில் வணிகம் செய்யும் சீன, ஷ், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகளை தடைசெய்யும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது. ஏனெனில் அவை ஈரானின் மத்திய வங்கியுடன் வணிகம் செய்பவை என்பதால்.

இந்த ஒருமித்த வாக்கு அத்தகைய செயல் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இறுக்குவதற்கான அதன் முயற்சிகளைத் தடைக்குட்படுத்தும் என்று ஒபாமா நிர்வாகம் கேட்டுக் கொண்ட பின்னரும்கூட வந்துள்ளதுமேலும் இது ஐரோப்பாவிலும் நிதிய நெருக்கடியை அதிகரிக்கக் கூடும்.

செனட்டில் இருகட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டிருப்பது ஜனநாயகக் கட்சியின் உண்மை நிலையை நிரூபிக்கிறது. குடியரசுக் கட்சியினரைப் போலவே ஜனநாயகக் கட்சியும் அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்துடன் உடைக்க முடியாத அளவிற்குப் பிணைந்துள்ளது. அவ்வப்பொழுது போர் எதிர்ப்புக் குரல்கள் அதன் இடதுசாரி மற்றும் வார்த்தைஜால காங்கிரஸ் உறுப்பினர் டெனிஸ் குசிநிச் போன்றோரிடம் இருந்து வெளிப்பட்டபோதிலும்கூட, ஜனநாயகக் கட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு கட்சிகளில் ஒன்றாகும்.

போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முதலிலும் முக்கியமானதுமாக ஜனநாயகக் கட்சியில் இருந்து முறித்துக் கொண்டு, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்திற்காக அமெரிக்கத் தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிதிரட்டப்படுவது தேவையாகும்.