சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK family face eviction as collective punishment

ஒரு கூட்டுத் தண்டனையாக இங்கிலாந்துக் குடும்பம் வீட்டில் இருந்து அகற்றப்படுவதை எதிர்கொள்கிறது

By Trevor Johnson
13 December 2011

use this version to print | Send feedback

ஒரு கைக்குழந்தை, எட்டு வயதுக் குழந்தை இரண்டும் உட்பட ஒரு முழுக்குடும்பமும் ஜனநாயக விரோதச் சட்டம் ஒன்றின்கீழ் இங்கிலாந்தில் மான்செஸ்டரில் அவர்களுடைய குடும்ப வீட்டில் இருந்து வெளியற்றப்படுவதை எதிர்கொள்கிறது.

முனிர் பரூக் என்பவர் குடும்பத்தில் உள்ள ஏழு உறுப்பினர்களும், செப்டம்பர் மாதம் அவர் பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டதை அடுத்து கூட்டுத் தண்டனை என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

பரூக் தண்டனைக்கு உட்பட்ட சில குற்றங்களை நடத்திய இடம் என்று நகரத்தின் Longsight பகுதியில் இந்த வீடு இருந்ததுதான், இத்தகைய வெளியேற்றத்திற்கு அடிப்படை ஆகும். 2008ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்படி, இந்த வீடு சொத்து என்னும் முறையில் பறிமுதல் செய்யப்படலாம்; ஏனெனில்பயங்கரவாதச் செயல்களுக்காக அது பயன்படுத்தப்பட்தாக கருதப்படுகிறது. வீட்டைப் பறிமுதல் செய்தல் மூன்று தலைமுறை இருக்கும் குடும்பம் ஒன்றை அகற்றுவது என்பது, சட்டத்தில் உள்ள பறிமுதல் பற்றிய விதி, அது இயற்றப்பட்டபின் முதல் தடவையாகப் பயன்படுத்தப்படுகிறது.

CPS என்னும் அரசாங்க விசாரணைத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: “இச்சூழ்நிலையில் வசிக்கும் இடத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் என்பது 2008 பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஒரு புதிய அதிகாரம் ஆகும். முடிவு எடுக்கப்படுவதற்கு முன், பறிமுதல் பற்றிய விண்ணப்ப மனு நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்படும் குடும்பத்திற்கும் தன் கருத்தைக் கூற வாய்ப்பு ஒன்றும் அளிக்கப்படும்.”

இத்தீர்ப்பு அளிக்கப்பட்டால், சொத்து விற்கப்பட்டு கிடைக்கும் தொகை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வீடு முனிர் பரூக்கிற்குச் சொந்தமானது இல்லை என்றாலும் அரசாங்கம் வீட்டைப் பறிமுதல் செய்ய முயல்கிறது. சொத்துக்களைப் பற்றிய ஆவணங்கள் அவருடைய மனைவியான ஜீனத் பரூக்கின் பெயரில் உள்ளன.

பயங்கரவாதச் செயல் ஒன்றைத் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட முனிருடைய மகன் ஹாரிஸ் பரூக் இவ்வீட்டில் வசிக்கிறார். அவர் கூறினார்: “இது எங்கள் குடும்ப இல்லம். ஒரு ஜனநாயக சமூகத்தில் எதற்காகக் கூட்டுத் தண்டனை? பிரிட்டிஷ் குடிமக்கள் என்னும் முறையில் எங்கள் வாழ்நாட்கள் முழுவதும் இங்கு உழைக்கிறோம், அதன் பின் நாங்கள் தெருவிற்கு துரத்தப்படுகின்றோம்.

பயங்கரவாதச் செயல்களுக்கான தயாரிப்பில் ஈடுபட்டது, கொலை செய்யத் தூண்டுதல், பயங்கரவாத வெளியீடுகளை பரப்புதல் ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற முறையில் பரூக் ஆயுட்கால தண்டனை பெற்றுள்ளார். மாத்யூ நியூடன் மற்றும் ஹுசைன் மாலிக் என்ற இருவரும் பொலிசார் NWCTY வடமேற்குப் பகுதி பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுப் பொலிசாரின் இரகசியச் செயற்பாட்டை ஒட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஓராண்டிற்கும் மேல் நீடித்த செயற்பாட்டின் ஒரு பகுதியாக  இரகசியப் பொலிசார் பரூக்கை அவருடைய வீட்டில் சந்தித்தனர், உரையாடல்களை இரகசியமாகப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் பரூக்கும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களும் தங்களுக்கு எதிரான அனைத்துக் குற்றச் சாட்டுக்களையும் மறுத்தனர். அவர் இந்தத் தண்டனையை எதிர்த்து முறையீடு செய்கிறார்.

ஒரு குற்றத்தை உண்மையில் தயாரிக்கின்றனர் என்பதற்கு பொலிசாரிடம் சாட்சிகள்  இல்லை என்றாலும் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மாறாக அவர்கள், அவர்களுடையசித்தாந்தத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். NWCTU உடைய தலைவரும் துப்பறியும் தலைமைக் கண்காணிப்பாளர் ரோனி போர்ட்டர், “இதை விசாரிப்பதும், நீதிமன்றத்தில் வெற்றிகரமாக செயல்படவுமே இது மிகவும் சவால்மிக்க வழக்காகும். ஏனெனில் நாங்கள் எந்தவித தயாரிப்பினையோ, திட்டத்தையோ, இவர்கள் இறுதியாகச் செய்தது என்ன என்பது பற்றியோ எதையும் மீட்கவில்லை என்று ஒப்புக் கொண்டார்.

அவர் மேலும் கூறினார்: “ஆனால் இவர்களுடைய சித்தாந்தத்தினை நாங்கள் நிரூபிக்க முடிந்தது. ஆப்கானிஸ்தானில் அல்லது பாக்கிஸ்தானில் போராட, கொலை செய்ய அல்லது இறந்துபோவதற்கு மான்செஸ்டரில் சிலரைத் அணிதிரட்டுவதில் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்ந்தெடுக்கப்படுவோரிடம் அது அவர்களுடைய சமயக் கடமை என்று நம்பவைக்க முற்பட்டனர்.”

இது மத சுதந்திரம் என்பதின் வெளிப்பாடு அல்ல. வெளிநாட்டில் இருக்கும் நம்முடைய படைகளுக்கு எதிராக போரிட மக்களைத் தயாரிக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியாகும். சட்டத்தின் பார்வையில் இது பயங்கரவாதம் ஆகும்.”

துணைத் தலைமைப் போலிஸ் அதிகாரி டான் கோப்லி பரூக் குடும்ப வீட்டில்தான் பெரும்பாலான செயல்கள் நடந்தன என்று கூறினார். “முனிர் பரூக் பயங்கரவாத நோக்கத்திற்குப் பயன்படுத்துவதற்காக ஒரு சொத்தை வைத்திருந்தார் அல்லது அதன்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பதை ஒரு நீதிமன்றத்திடம் காட்டினால், நீதிமன்றம் அச்சொத்தைப் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடமுடியும் என்றார் அவர்.

பொலிஸும் அரசாங்க விசாரணைத் துறையும் பரூக் குடும்பத்திற்குச் சொந்தமான மற்ற இரு சொத்துக்களையும் பறிமுதல் செய்ய முயல்கின்றனர். தற்பொழுது அந்த இடங்கள் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சொத்துக்களில் இருந்து வாடகை மூலம் வரும் வருமானங்கள்தான் வழக்கின் சட்டச்செலவுகள் மற்றும் அபகரிப்பு நடவடிக்கைகளை ஒட்டி கொடுக்கத் தேவைப்படுகிறது. மேலும் வாழ்க்கை நடத்துவதற்கும் தேவைப்படுகிறது என்று குடும்பம் வலியுறுத்திக் கூறுகிறது.

குடும்ப வீட்டைக் காப்பாற்றவும் என்ற தலைப்பில் இக்குடும்பம் ஒரு பிரச்சாரத்தை நடத்துகிறது. இது கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது. 13,000 பேர் கிட்டத்தட்ட கையெழுத்திட்ட ஒரு மனு ஒன்று அரசாங்க விசாரணைத் துறையிடம் நவம்பர் 8ம் திகதி கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பெப்ருவரிக்குள் குடும்பம் 10,000 கையெழுத்தக்களைச் சேகரிக்க முயல்கிறது. மார்ச் மாதம்தான் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க உள்ளது.

முனிர் பரூக்கின் 28வயது மகள் ஜுலைக்கா கூறினார்: “மூன்றுதலை முறை உறுப்பினர்கள் உள்ள குடும்பத்தை வீடற்றவர்களாக்கி, அதிலும் ஒரு எட்டமாதக் குழந்தையும் அடங்கியுள்ள நிலையில் என்பது, வெறுக்கத்தக்கது. இது ஒன்றும் பிரிட்டிஷ் சட்டம் அல்ல. இதற்கு எதிராக, முஸ்லிம் சமூகத்திடம் மட்டும் என்று இல்லாமல், முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்தும் எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு உள்ளது.”

அக்டோபர் 18 அன்று குடும்பத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் நடத்தும் உள்ளூர்வாசிகள், லாங்சைட் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே குழுமி, குடும்பத்தினரை அகற்றும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று கோரினர். அக்டோபர் 31ம் திகதி அப்பகுதியில் இந்த விவகாரத்தை எடுத்துக் காட்டுவதற்கு ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

பயங்கரவாதத்திற்காகப் பயன்படுத்தப்படும் சொத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம்  முந்தைய கோர்டன் பிரௌனின் தொழிற்கட்சி அரசாங்கத்தினால், சட்டத்தில் 2009ல் சேர்க்கப்பட்டது. இதன் விதிகள் அனைத்தையும் அடக்கி, ஆனால் தெளிவற்ற முறையில் இருந்ததால், பாராளுமன்றத்தில் பழைமைவாத கட்சி உறுப்பினரான டொமினிக் கிரீவ் இந்த அதிகாரம்நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் விதிமுறையில் பெரிதும் எடுத்துக்காட்டும் கடுமையான தடையைக் கொடுக்கும் சட்டமாக மாறும் திறனைக் கொண்டுள்ளது என்றார்.

கிரீவ்தான் இப்பொழுது கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் அரசாங்கத்தின் தலைமை அரசாங்க வக்கீல் ஆவார்.

பரூக் குடும்பத்தின் இல்லத்தைப் பறிக்கும் நடவடிக்கை லண்டன் மற்றும் பிற முக்கிய நகரங்கள், சிறுநகரங்களில் கோடைக்காலக் கலகங்களுக்குப் பின் பரந்த கூட்டுத் தண்டனை என்பதைக் கொடுக்க வந்த முயற்சிகளைத்தான் பிரதிபலிக்கிறது. குழப்பங்களில் ஈடுபட்ட குடும்பங்கள் அரசவீடுகளில் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என்று பிரதம மந்திரி டேவிட் காமெரோன் தலைமையில் கூறப்ட்டது. அதனால் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வோர்த் நகரசபை டேனியல் சர்டைன் கிளார்க் குடும்பத்தின் மீது வெளியேற வேண்டிய உத்தரவைக் கொடுத்தது. சர்டைன் கிளார்க் தன்னுடைய தாயுடனும் எட்டுவயது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். கன்சர்வேடிவ் மற்றும் தொழிற்கட்சியின்கீழ் உள்ள மற்ற நகரசபைகளும் இதேபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தன

கலகங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மக்களின் சமூகநல உதவிகளை பறிப்பதற்கான திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. அவர்கள் எந்த குற்றத்திற்கான தண்டனை கொடுக்கப்படாவிட்டாலும்கூட.

பரூக்கின் குடும்ப இல்லத்தை பறிக்கும் முயற்சி பற்றிக் கருத்துத் தெரிவித்த ஒரு BBC செய்தி வலைத் தளம், “லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸ் இந்த வழக்கின் முடிவை ஆர்வத்துடன் கண்காணித்துவரும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளது.