சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The rise and fall of Herman Cain

ஹெர்மன் கைனின் ஏற்றமும், வீழ்ச்சியும்

By Patrick Martin
8 December 2011

use this version to print | Send feedback

வணிகரும், அரசியல் செல்வாக்கு குழுவினருமான ஹெர்மன் கைன் தேசிய அளவிலும், முதன்முதலில் போட்டி நடைபெற்ற அயோவாவிலும் கருத்துக்கணிப்புக்களில் உச்சநிலையில்  இருந்தபின் சில வாரங்களுக்குள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகியுள்ளது அமெரிக்க ஆளும் உயரடுக்கு போலியாக தயாரிக்கப்பட்ட, குறிப்பாகப் பாலியல் தொடர்புடைய அவதூறுகளை தன் அரசியல் விவகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தயாரிப்புக்களை நடத்துகிறது என்பதின் அப்பட்டமான நிரூபணம் ஆகும்.

டிசம்பர் 3ம் திகதி, ஒரு அட்லான்டாவை சேர்ந்த பெண்மணி பகிரங்கமாக இந்த ஆண்டு முன்னதாக முடிவுற்ற 13 ஆண்டுகளாக அவருடன் இருந்த  தொடர்புக் காலம் முழுவதும் நிதிய முறையில் கைன் தனக்கு ஆதரவு கொடுத்து வந்தார் என்பதைப் பகிரங்கமாக உறுதிப்படுத்திய ஐந்து நாட்களுக்குப் பின்னர், கைன் தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். செய்தி ஊடகங்கள் கைன் ஒரு வாஷிங்டன் செல்வாக்குச் செலுத்தும் குழுவான தேசிய உணவகங்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் நான்கு பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் அல்லது தாக்கினார் என்ற குற்றச்சாட்டுக்களைப் பரபரப்புடன் முன்வைத்ததற்குப் பின் இது வந்தது.

கைனின் ஏற்றமும் வீழ்ச்சியும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செய்தி ஊடகம் மற்றும் நிதிய நலன்களின் குடியரசு வேட்பாளர் நியமனப் பிரச்சாரத்தில் சூழ்ச்சிகள் செய்துள்ளதின் விளைவு ஆகும். அமெரிக்கப் பெருநிறுவனங்களில் தலைமை நிர்வாகி அதிகாரி நியமிக்கப்படுவதில் தொழிலாளர்களுக்கு எப்படி விருப்பத் தேர்வு இல்லையோ, அப்படியே அடுத்த அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வழிவகையிலும் அமெரிக்க மக்களுக்கு உண்மையான செல்வாக்கு கிடையாது.

பில்லியனர் டோனால்ட் டிராம்ப், முன்னாள் மாசச்சுசட்ஸ் ஆளுனர் மிற்  ரோம்னி மற்றும் டெக்சாஸ் ஆளுனர் ரிக் பெரி ஆகியோரைத் தொடர்ந்து குடியரசுக் கட்சியின்முன்னணியில் இருக்கும் வேட்பாளர் என்று நான்காவதாக ஆபிரிக்க-அமெரிக்கரான கைன் குறிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் மன்றத் தலைவர் நியுட் கிங்ரிச் ஐந்தாவதாக உள்ளார். இந்தவழிவகைகள் அனைத்தும் ஒரு வாக்காளர்கூட வாக்குப்பதியாமல் நடந்துள்ளன; செய்தி ஊடகம் நடத்தும் கருத்துக் கணிப்புக்கள், பிரச்சார நன்கொடைகளுக்கான செல்வந்தரான கொடையாளிகளிடம் இருந்து பண உதவிகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டது.

கைனின் அரசியல் போக்கு குறிப்பிட்ட வலதுசாரிப் போக்குடன் தொடர்பு கொண்டுள்ளது. கொக்  சகோதரர்களான சார்ல்ஸ் மற்றும் டேவிட் என்று  கன்சாசில் விசிட்டாவைத் தளம் கொண்ட பில்லியன் மதிப்புடைய கொச் தொழிற்துறை உரிமையாளர்கள் அவருக்கு நிதியளித்துள்ளனர். அமெரிக்காவில் இரண்டாம் மிகப் பெரிய தனியார் உடைமை நிறுவனமான கொக் தொழிற்துறை ஒரு பொதுச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்தால், Fortune 500 (Fortune இதழால் சொத்துக்களை அடிப்படையாக கொண்டு வெளிவிடப்படும் பட்டியல்) இல் 16வது இடத்தைப் பெற்றிருக்கும். இதன் ஆண்டு விற்பனை மூலம் வரும் வருவாய் $100 பில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சகோதரரும் $25 பில்லியன் செல்வத்தைக் கொண்டவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலில் மிகத் தீவிரமாக இருக்கும் பெரும் செல்வந்தர்களில் கொக்  சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் சிந்தனைக்குழுவான காட்டோ கல்விக்கூடத்தில் இருந்து வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டுள்ள Citizens for a Sound Economy வரை பல பெருகிய வலதுசாரி அமைப்புக்களுக்கு நிதி அளிக்கின்றனர். பிந்தையது FreedomWorks, Americans for Prosperity  என்னும் போலி இடது ஜனரஞ்சன Tea Party குழுக்களுக்கு முக்கிய புரவலர் ஆகும்.

Godfather’s Pizza  (ஒமஹாவை தளமாக கொண்ட பில்ஸ்பரி நிறுவனத்தின் துணை நிறுவனம் 1986-1989) என்பதின் தலைமை நிர்வாகியாக கைன் இருக்கும் காலத்தில் கொக் சகோதரர்களின் செல்வாக்கு சுற்றுவட்டத்திற்குள் வந்தார் அப்பொழுது அவர் மரபார்ந்த வணிகப் போக்கைப் பெருநிறுவன பில்ஸ்பரி அதிகார்கள் மூலம் தொடர்ந்திருந்தார். அதைத்தவிர, கன்சாஸ் நகரத்தின் மத்திய வங்கியின் இயக்குனர் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் கன்சாஸ் நகர மத்திய வங்கியின் தலைவராகவும் இருந்தார்.

1994ம் ஆண்டு அவர் கிளின்டனுடைய சுகாதாரப் பாதுகாப்புச் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்ப்பவர் என்ற முறையில் வலதுசாரி அரசியல் வட்டங்களின் பார்வையில் வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் தேசிய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வருமாறு கோரப்பட்டார். இதையொட்டி அவர் குடியரசுக் கட்சியின் தன் தோற்றத்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. 2000ம் ஆண்டில் ஒரு குறுகிய காலத்திற்கு அவர் குடியரசுக் கட்சியின் ஜனதிபதி வேட்பாளர் மனுப் போட்டியில் இருந்தார், அதன் பின் 2004ல் ஜனாதிபதி வேட்பாளர் துவக்கத் தேர்தல்களில் அமெரிக்க செனட் உறுப்பினராக ஜோர்ஜியாவில் நடந்த  பிரச்சாரத்தில் தோற்றார்.

இன்னும் சமீபத்திய கைனின் முக்கியத்துவம் கொக் சகோதரர்கள் மற்றும் மேர்டோக் செய்தி ஊடகப் பேரரசு ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த உறவுகளின் நேரடி விளைவு ஆகும். Americans for Prosperity க்கு முக்கிய பேச்சாளராகவும் Tea Party ஆர்ப்பாட்டங்களில் வழமையாக கலந்துகொள்பவராகவும் ஆனார். அதைத்தவிர, வலதுசாரி வானொலி உரை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். அவற்றில் அவர் தன்னை அனைத்துச் சமூகப் பிரச்சினைகளிலும் சந்தைத் தளமுடைய அணுகுமுறையின் செய்தித்தொடர்பாளராக வளர்த்துக் கொண்டார். 2011 ல் அவர் பாக்ஸ் நியூஸில் வேறுஎவரையும் விடவும் ஜனாதிபதியாகும் வேட்பாளர்  தகுதியைக் கொண்டவராக அதிகமாகத் தோன்றினார்.

கைனின் இரண்டாம் ஜனாதிபதி வேட்பாளருக்கான பிரச்சாரம் முதல் தடவையைப் போலவே உதறித்தள்ளப்பட்டது. ஒரு ஆடம்பர முயற்சி, தன்னுடைய முகத்தை வலதுசாரி வட்டங்களில் உயர்த்திக் கொள்ளும் நோக்கம் உடையது, தன்னுடைய வானொலி நிகழ்வுகள், புத்தகங்களுக்கு விற்பனையை அதிகரிக்கும் நோக்கம் உடையது என்று தள்ளப்பட்டது. வேட்பாளரே பிரச்சாரத்தை அந்த நோக்கில் கருதியிருக்க வேண்டும். ஆரம்பத்தேர்தல் வழிவகையில் அதிக முக்கியத்துவம் இல்லாத வகையில் மாநிலங்களில் புத்தக விற்பனைப் பயணங்களில் குவிப்புக் காட்டினார். முதல் மாநிலங்களான அயோவா, நியூ ஹாம்ப்ஷைர், தென் கரோலினா, நெவடா மற்றும் பிளோரிடாவைத் தவிர்த்தார். உண்மையாக ஜனாதிபதியாகும் விருப்புகளை உடையவர்கள் இம்மாநிலங்களில்தான் தங்கள் முயற்சிகளில் கவனத்தை காட்டுவர்.

கோடைகால முடிவு வரை இப்படித்தான் நிலைமை இருந்தது. ஒருக்கால் ரோம்னி நியமிக்கப்படலாம் என்பது குறித்துத் தீவிர வலதுசாரியில் அதிருப்தி பெருகத் தொடங்கியது. அந்த பல மில்லியனர் மதிப்புடைய முதலீட்டு வங்கியாளர் மிக நிதானமானவர் என்று கருதப்பட்டார். இதற்குக் காரணம் மாசச்சூசட்ஸ் மாநில அரசியலில் அவர் கொண்டிருந்த போக்கு ஆகும். அங்கு அவர் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவு கொடுத்து, உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் முயற்சிகளுக்கும் ஆதரவளித்து, ஒபாமா நிர்வாத்தின் சுகாதாரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு முன்மாதிரியாக இருக்கும் மாநிலச் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த திட்டத்தை உடன் இயற்றியவராக இருந்தார். இப்பிரச்சினைகளில் பின்னர் இவர் வலதிற்கு மாறியது மிகத்தீவிர பழைமைவாத போக்குகளுக்கு அவருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தப் போதுமானவையாக இல்லை என்று கருதப்பட்டுவிட்டது.

கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் காங்கிரஸ் பெண்மணி மிச்சாலே பஹ்மானை அயாவோ வாக்கெடுப்பில் ஆகஸ்ட் மாதம் வெற்றிக்கு உயர்த்தும் உந்துதலைக் கொடுத்தனர். ஆனால் அவர் பிரச்சாரம் நீடிக்கவில்லை; அதற்கு ஓரளவு காரணம் விவிலியத்தில் கூறப்படாத அரசியல் விடயங்களை அவர் தெளிவாக அறியாமற்போனதுதான். ஓரினச் சேர்க்கைக்கு அவர் காட்டிய பெரும் விரோதப் போக்கு, மற்றும் அவருடைய கணவரின்பிரார்த்தனை மூலம் ஓரினச் சேர்க்கையை அகற்றுதல் என்னும் சமயச் சார்புடைய ஆலோசனை கூறுதலும்  புருவங்களை உயர்த்த வைத்தன.

அடுத்து, டெக்சாசின்  ஆளுனர் பெரி உகந்தவராக இருந்தார். அவர் ஹூஸ்டன் அரங்கில் 20,000 பேர் கொண்ட புதுப்பித்தல் வழியிலான(revival-style) பிரார்த்தனைக்கு ஆதரவு கொடுத்திருந்தார். குடியரசுக் கட்சியின் ஆரம்ப  வாக்காளர்களிடையே விரைவில் அவர் உயரிடத்தைப் பிடித்தார். ஆனால் விவாதங்களில் தொடர்ந்த மோசமான நிலைப்பாடுகள் கருத்துக் கணிப்புக்களில் அவர் செவாக்கைக் குறைத்துவிட்டன; சில பெரும் செல்வம் படைத்த டெக்சாஸ் உகந்த நண்பர்களைத் தவிர பிரச்சார நிதிக்கு நன்கொடை கொடுப்பவர்கள் குறைந்துபோயினர்.

பிளோரிடா மாநில குடியரசுக் கட்சி கூட்டத்தில் செப்டம்பர் நடுப்பகுதியல் ஒரு வாக்களிப்பில் வெற்றிபெற்ற அளவில், வேட்பாளர்கள் தட்டின் உயர்ந்த இடத்திற்கு கைன் நகர்ந்தார். அங்கு அவரும் பெர்ரியும் அரங்கில் பேசினர், கைன் பெர்ரியை விட அதிகம் ஆதரவு கொண்டிருப்பதாக  காணப்பட்டது, குறிப்பாக அவருடைய புதுப்பித்தல் வகை உரைகளைப் போல் இருந்த “9-9-9” செல்வந்தர்கள்மீதான மற்றும் மத்தியதர உயர்வகுப்பினரின் வரிகளைக் குறைக்கும் திட்டம் போன்றவற்றினால். கருத்துக் கணிப்புக்களில் அவருடைய நிலைப்பாடு 3%த்தில் இருந்து ஆகஸ்ட் கடைசியில் 25% என உயர்ந்து, இவை ரொம்னிக்குச் சற்றே கூடுதலான நிலையில் இருந்தன.

ஆனால் இன்னும் கூடுதலான செய்தி ஊடக, மக்கள் கவனத்தை அவர் ஈர்க்கத் தொடங்கியவுடன், கைனின் சொந்தக் குறைபாடுகள் வெளிப்படையாயின. வரிகளைக் குறைத்தல், வணிகக் கட்டுப்பாடுகளை அகற்றல் இவற்றைத் தவிர உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் பலவற்றைப் பற்றி அவர் ஏதும் தெரிந்திருக்கவில்லை; சர்வதேசப் பிரச்சினைகள் எதையுமே அறிந்திருக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அவர் சீனா அணுசக்தி ஆயுதம் பெறும் நோக்கத்தை குறித்து எச்சரித்தார் (பெய்ஜிங் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இதைக் கொண்டுள்ளது.) மற்றொரு நேரத்தில் ஒரு செய்தித்தாளின்ஆசிரியர் குழுத் தலைவர் லிபியாவில் ஒபாமா நடத்தும் போர் குறித்துக் கேட்டதற்கு அவர் தனக்குத்தானே பேசிக்கொண்டு மூளையை பிசைந்து தேவையான பொருத்தமான புள்ளிகளை தேடியபோது வெறுமைதான் வெளிப்பட்டது.

அக்டோபர் 30 அன்று வாஷிங்டன் பதிப்பான Politico கைனுக்கு எதிரான பாலியல் புகார்கள் தேசிய உணவக சங்கத்தின் இரு பெண் ஊழியர்கள் கொண்டுவந்ததை அம்பலப்படுத்தியது. வேட்பாளர் முதலில் குற்றச்சாட்டுக்களை மறுத்தார், ஆனால் இன்னும் பல சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் இரு தொடர்புடைய பெண்கள் பகிரங்கமாகத் தங்கள் அனுபவங்களை விளக்க முன்வந்தனர்.

கீழ்நிலையில் இருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்களுக்கு எதிராக தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது என்ற இந்நிகழ்வுகள் கைன் பிரச்சாரத்தை தகர்த்துவிடவில்லை. மாறாக பிரச்சார நன்கொடைகள் நிறைந்தன, வலதுசாரிப் பண்டிதர்கள் அவரைதாராளவாத செய்தி ஊடகம் நடத்தும் நற்குண படுகொலையினால் பாதிக்கப்பட்டவர் என்று அறிவித்தனர். குடியரசு வாக்காளர்கள் அவரை தேசிய அளவிலும் அயோவாவிலும் உயர்ந்த இடத்தில் இருத்தினர்.

நவம்பர் 21ம் திகித வெளிவந்த செய்திகள் மாறுபட்ட தன்மையை கொண்டிருந்தன. அட்லான்டாவில் வேலைகிடைக்காத தனித்துவாழும்  தாயான ஜின்ஞர் வயிட் உள்ளூர் பாக்ஸ் தொலைக்காட்சி நிலையத்தால் பேட்டிக் காண்பட்டார். அவர் கைனுடன் தனது 13 ஆண்டு உறவை விவரித்தார். இதில் மிக அதிகமாகப் பணம் உதவிகளும் அடங்கியிருந்தது.

இந்த உறவில் எதுவும் கைனை மதிப்பிழக்க செய்யவில்லை. சொல்லப்போனால், வயிட்டின் குறிப்பு ஒரு வலதுசாரி வானொலி தொகுப்பாளர் அல்லது இரக்கமற்ற செலவுகளை குறைக்கும் பெருநிறுவன அதிகாரி என்பதைக் கூறும் வகையிலான சித்திரங்களுக்கு மாறாக, கூடுதல் மனிதாபிமானம் படைத்த நபரைத்தான் காட்டியது.

ஆனால் தீவிர வலதுசாரி பார்வையாளருக்கு பாலியல் துன்புறுத்தலை விட திருமணத்தில் பற்றின்மை தகுதியின்மையில் மிகவும் அதிகமானது. ஷூன் ஹெனிட்டி, லவ்ரா இங்கிரஹாம் உட்பட பல பாக்ஸ் செய்தி நபர்கள் இத்தாக்குதலில் முன்னணியிலிருந்தனர். முன்னாள் அர்கன்சாஸ் ஆளுனரும் 2008 அர்கன்சாஸ் ஜனாதிபதிப் போட்டியாளர் மைக் ஹக்கபீயும் இதில் அடங்குவர். கருத்துக் கணிப்புக்களில் கைனுக்கான ஆதரவு சரியத் தொடங்கியது, நிதிய நன்கொடைகள் வரண்டுபோயின.

ஆரம்பத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களுக்காக வக்கீலாக அமர்த்தப்பட்ட கைனின் வக்கீலான லின் வூட் வயிட்டின் நீண்டகால விவகாரத்தில் இருந்து கவனத்துடன் இவற்றை பிரித்துக் காட்டும் வகையில் கூறினார்இது தனிப்பட்ட, இரு வயதிற்கு வந்தவர்களிடையே உடன்பட்டு நடந்த நிகழ்வுகள் நடந்ததாகக் கூறப்படுபவற்றில் இருந்து வரும் குற்றச்சாட்டு போல் உள்ளது. இது செய்தி ஊடகம் அல்லது பொதுமக்கள் விசாரிப்பதற்கு உகந்த விடயம் அல்ல. எந்தத் தனிநபரும், தனிக்குடிமகனாயினும், பொதுப் பதவிக்கான வேட்பளாராயினும், அவருடைய தனி பாலியல் வாழ்க்கை குறித்து வினாவிற்கு உட்படுத்தப்படக்கூடாது

இந்த நிலைப்பாடு முற்றிலும் நியாயமானதுதான். ஆனால் வலதுசாரி வட்டங்களில் இது ஒரு புண்பட்ட இடத்தினை தொடுகிறது. அயோவா வானொலி பேச்சு தொகுப்பாளர் ஸ்டீவ் டீஸ், Politicoவிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் வூட் கொடுத்த அறிக்கைபிரச்சாரத்திற்கு மரணஅடிபோல் உள்ளது என்றார். தன்னைப் போன்ற செய்தி ஊடகப் பண்டிதர்கள் அதற்கு சாதகமாகத்தான் விடையிறுப்பர் என்ற அவர், “அப்படிப்பட்டவர்கள் பலரும் பில் கிளின்டனின் சோகம் நிறைந்த தனிப்பட்ட வாழ்வு பற்றிக் கருத்துக்கூறி முக்கியத்துவம் பெற்றனர் என்றார்.

கைன் பிரச்சாரம் விரைவில் மடிந்துவிட்டமை மற்றொரு வலதுசாரிமுன்னணியில் இருப்பவரும் ரொம்னிக்கு ஒரு மாற்றீடுமான நியுட் கிங்ரிச்சிற்கு பாதையை விட்டுள்ளது. கைனுக்கும் கிங்ரிச்சிற்கும் இடையே குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபடுகள் ஏதும் கிடையாது. சொல்லப்போனால கிங்கிச், ரொம்லிக்கு இடையேயும், குடியரசுத் தளம் முழுவதிற்கும் ஒபாமா எதிர்ப்பு கண்டனம் எத்தனை குடியரசுக்கட்சி கூட்டுங்களிலும் விவாதங்களிலும் இருந்தபோதிலும் ஒபாமாவிற்கும் இடையேகூட எனலாம்.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டும் பெருவணிகத்தின் அரசியல் கருவிகள் ஆகும். இவை பெருநிறுவன இலாபங்கள், தனியார் சொத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகாளவிய மேலாதிக்கம் ஆகியவற்றைக் பாதுகாக்க உறுதி கொண்டவை. ஆனால் எப்படி நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களை பாதுகாப்பது, அமெரிக்க மக்களில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தை எப்படி ஏமாற்றுவது என்பது குறித்து குறிப்பிடத்தக்க தந்திரோபாய முறையிலான வேறுபாடுகள் உள்ளன..

அமெரிக்க ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, இரு முக்கியக் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல் ஒரு முக்கிய விவகாரம் ஆகும். இரு கட்சிகளில் இறுதியில் வாக்காளர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தன் நலன்கள் நன்கு உறுதியளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிகொள்ளும் வகையில் நிதியப் பிரபுத்துவம் இந்த தேர்வு செய்யலில் திரித்தலை செயல்ப்படுத்துகிறது.

அரசியல் அனுபவம் இல்லாத நிலையில், சோதனைக்கு உட்படுத்தப்படாத, முயற்சிக்கு உட்படுத்தப்படாத கைன் இறுதியில் ஜனாதிபதிப் பதவிக்கு உகந்தவர் அல்ல என்று 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் மிகக்குறைந்த தரங்களாலேயே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. ஒரு மூத்த குடியரசுக் கட்சிச் செயலரான. 2008ல் செனட்டர் ஜோன் மக்கைனுக்குப் பிரச்சார மேலாளராக இருந்த ஸ்டீவ் ஷ்மித் இக்கருத்தை ஒப்புக்கொள்ளும் வகையில், “கைனின் வேட்பாளர்நிலை நாட்டின் உண்மையான நெருக்கடிக் காலத்தில் வினாடிக்கும் மிகச்சிறிய அளவுகாலத்திலும்கூட தீவிர கவனத்திற்குள்ளானது என்பது அரசியல் நிகழ்போக்கிலும் மற்றும் குடியரசுக் கட்சியினதும் ஆரோக்கியத்தைப் பற்றிய அடிப்படை வினாக்களை எழுப்புகிறது என்று அறிவித்தார்.

இன்னும் நம்பகத்தன்மை உடைய, சோதிக்கப்பட்டுவிட்ட குடியரசு வேட்பாளர், ரோம்னி, கிங்ரிச் அல்லது வேறு ஒருவரை ஜனவரி 3ம் திகதி நடக்க இருக்கும் அயோவோ தேர்தல் துவக்கப் போட்டிக்கு ஒரு மாதம் முன்பு தேர்ந்தெடுத்து ஆதரவை ஒருங்கிணைக்கும் வழிவகைக்கு ஒரு போட்டியில் கைன் வாக்கெடுப்பில் கலந்துகொண்டது ஒரு தடையாகி விட்டது. அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்றவுடன், இரக்கமின்றி, விரைவில் வெளியேற்றப்பட்டார்.

இந்த அரசியல் திரித்தலை சாதிக்க ஒரு பாலியல் அவதூறு பயன்படுத்தப்பட்டது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இத்தகைய செயற்பாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் முதலாளித்துவ அரசியலில் ஒரு முக்கிய மூலப்பொருளாகிவிட்டது. அம்பலப்படுத்துதல், மறுத்தல், செய்தி ஊடகப் பரபரப்பு, முணுமுணுத்துக்கொண்டு ஒப்புக் கொள்ளல் இறுதியில் சரிவு என்பது நன்கு அறியப்பட்ட கதையாகிவிட்டது. இது முன்கூட்டியே கூறக்கூடியதும் மற்றும் இழிவுபடுத்துவதுமாகும்.

இதையும்விட முக்கியமானது அமெரிக்காவின் மிக உயர்ந்த அரசியல் பதவிக்கு ஒரு வேட்பாளரை எது தகுதியற்றதாக ஆக்கிவிடாது என்பதுதான். கடந்த ஒரு மாதக் காலத்தில், கைனின் பிரச்சாரம் பாலியல் முறைகேட்டுக் குற்றச்சாட்டுக்களின் பாதிப்பை ஒட்டிச் சரிந்தது என்றால், அவருடைய போட்டியாளர்கள் (கைனே கூட) சிறார் தொழிற்சட்டங்களைக் கண்டித்து, பலவந்தமான மக்கள் வெளியேற்றங்களுக்கு ஆதரவு கொடுத்து, சித்திரவதைக்கு ஒப்புதல் கொடுத்து, ஈரானுடனான போருக்கும் ஆதரவாக வாதிட்டு, பொதுவாக அமெரிக்கப் பெறுநிறுவனங்கள் வரிகள், கட்டுப்பாடுகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு அல்லது தனியார் சொத்துக்களுக்குத் தடைகூடாது ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்க வரிசையில் நின்றுள்ளனர்.

இத்தகைய பிற்போக்குத்தனமான அரை-பாசிசக் கருத்துக்கள் வேட்பு நியமனத்திற்கு ஒரு தடை என்று கருதப்படவில்லை. இதற்கிடையில், ஒரு பெரிய போலி, பொருத்தமற்ற பிரச்சினை கைனை பாதையில் இருந்து ஒபாமா போல் இருக்கக்கூடிய இறுதியில் வரவிருக்கும் வேட்பாளரை அகற்றத் தயாரிக்கப்பட்டது. அப்படி வருபவர் நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்கு ஒரு பரிசோதிக்கப்பட்ட மற்றும் அனுபவமிக்க பாதுகாவலராக இருப்பார்.