World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Julian Assange legal team makes devastating critique of Swedish extradition attempt

ஜூலியன் அசான்ஜ் சட்டக்குழு ஸ்வீடனின் ஒப்படைக்கக் கோரும் முயற்சிக்கு கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது  

By Robert Stevens
8 February 2011

Back to screen version

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும், அதன் ஆசிரியருமான ஜூலியன் அசான்ஜை, ஜோடிக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக தங்களிடம் ஒப்புடைக்க கோரும் ஸ்வீடனின் முயற்சி, நேற்று இலண்டனின் பெலமார்ஷ் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வந்தது

அயல்நாட்டிடம் ஒப்படைத்தல் மீதான இரண்டு நாள் விசாரணையின் முதல்நாளாக அசான்ஜ் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஐரோப்பிய கைது உத்தரவாணையின்படி (EAW) அசான்ஜை ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்வீடனின் வழக்குப்பதிவு இயக்குனர் Marianne Ny கோரி வருகிறார். கற்பழிப்பு, பாலியல் முறைகேடு மற்றும் சட்டத்தைமீறிய பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஸ்வீடனின் இரண்டு பெண்களால் அசான்ஜ்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அசான்ஜ் இந்த முறையீடுகளை மறுக்கிறார்

காலை விசாரணை குறித்து, அசான்ஜின் சட்டக்குழு,  எனும் அறிக்கையை இணையத்தில் வெளியிட்டது. இது நீதிமன்றத்தில் அவர்கள் சமர்பிக்க இருந்த வாதங்கள் மற்றும் ஆதாரங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் 42 ஆவணங்களில் ஒன்றாகும்.  

ஜியோபிரி ராபர்ட்சன் QC மற்றும் ஜோன் RWD ஜோன்ஸால் எழுதப்பட்ட அந்த வாதம், ஸ்வீடன் வழக்கறிஞர் Marianne Ny ஐரோப்பிய பிடியாணை பிறப்பிக்க முடியாது அல்லது அவருக்கு போதிய "சட்டரீதியான அதிகாரமில்லை" என்று குறிப்பிடுகிறது. ஸ்வீடன் தேசிய பொலிஸ் ஆணையத்திற்கு மட்டும் தான் பிடியாணை பிறப்பிப்பதற்கான நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் இருந்ததாக முன்னர் ஒரு வழக்கில் நிறுவப்பட்டிருந்தது.

"பிடியாணை ஒரு பழிவாங்கும் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதால், பெயரிட்டு கூற வேண்டுமானால் அது பிறப்பிக்கப்பட்ட போது அவரை கைது செய்யவோ அல்லது குற்றஞ்சுமத்தவோ அல்லது தண்டனை விதிக்கவோ எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல், திரு. அசான்ஜை வலுக்கட்டாயமாக ஸ்வீடனுக்கு விசாரணைக்குக் கொண்டு வருவதற்காக" வழக்கு  துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஸ்வீடன் சட்ட அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

"பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்கான ஒரு முறையீட்டிற்கு அல்லது ஸ்வீடன் தூதரகத்தின் அல்லது ஸ்காட்லாந்து யார்டின் நேர்காணல் விசாரணைக்கு தொலைபேசி மூலமாகவும், ஸ்கைப், வீடியோலின்க், இன்னும் இதரபிற வழிகளில் இலண்டனில் இருந்தே நேர்காணல் செய்ய அசான்ஜ் ஒத்துழைக்க உடன்பட்டிருக்கும்" நிலையில், அவரை ஸ்வீடனுக்குக் கொண்டு வரும் பிடியாணை, “நியாயமற்றதாகும்".

கைது பிடியாணை ஆவணங்கள், வழக்கு விசாரணைக்கு அசான்ஜ் தேவைப்படுகிறார் என்பதைத் "தெளிவாக" எடுத்துக்காட்டாததால், அவரின் வழக்கறிஞ்ஞர்கள் அவற்றை செல்லுபடியாகாது என்று நிராகரிக்கின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அந்த நடத்தை இங்கிலாந்து விதிகளின்படி ஒரு குற்றத்தின்கீழ் வராது என்பதால், ஸ்வீடன் அதிகாரிகளால் சாட்டப்பட்ட முதல் மூன்று குற்றங்கள் "அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் குற்றங்களில் உள்ளடங்காதுநான்காவது குற்றத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நடத்தை, கற்பழிப்பு மீதான ஐரோப்பிய குற்ற வரையறைகளுக்குள் வராது என்பதால், நான்காவது குற்றமும் அயல்நாட்டிடம் ஒப்புடைக்கும் குற்றங்களில் இல்லை.”  

அசான்ஜின் ஒப்படைப்பானது, "அவருடைய மனித உரிமைகள் மிக மோசமான மறுப்புக்கு உள்ளாகும் நிஜமான அபாயத்தைக் கொண்டிருக்கிறது, குறிப்பாக ஏனென்றால் அந்த வழக்கு இரகசியமாக கையாளப்படுகிறது.” இத்தகைய நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகள் சாசனத்தின் வரைவு 47 மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் வரைவு 6ஐ மீறியதாக இருக்கும்.

ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்பட்டால், அமெரிக்கா அவரை ஒப்படைக்கக் கோரும் அல்லது சட்டத்திற்குப்புறம்பாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என்றவொரு நிஜமான அபாயம் உள்ளது. அங்கே அவர் குவாண்டனமோ வளைகுடா அல்லது வேறெங்காவது அடைக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது…. அங்கே [அதாவது, அமெரிக்காவில்] அவர் மரண தண்டனைக்கும் கூட இலக்காக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது".   

ஐரோப்பிய விதிகளின்படி, சந்தேகத்தின்கீழ் உள்ளவர்களை அவர்கள் மரணத்தை முகங்கொடுக்கக்கூடிய சட்டஅமைப்புமுறை உள்ள இடத்திடம் ஒப்படைப்பதென்பது சட்டவிரோதமாகும்.

ஐக்கிய இராச்சிய முடியாட்சி வழக்குதொடரும் பிரிவின் (UK Crown Prosecution Service) சட்ட பிரதிநிதி கலரே மோன்ட்கோமேரி, ஐரோப்பிய பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரியாக செயல்படும் Nyஇன் உரிமையை ஆதரித்தார். மிக முக்கியமாக, Nyஆல் பிறப்பிக்கப்பட்ட ஐரோப்பிய கைது உத்தரவாணையின்படி, “வழக்கு தொடுப்பதற்கு போதிய ஆதாரங்களை மிகத் தெளிவாக கொண்டிருப்பதால்" அந்த வழக்கை "அயல்நாட்டிடம் ஒப்படைக்கலாம்," என்று அந்த பெண்மணி வாதாடினார்.

இது முன்னர் கூறப்பட்ட, அதாவது அசான்ஜ் வெறுமனே விசாரணையை மட்டுமே முகங்கொடுக்கிறார் என்ற வாதங்களிலிருந்து பெரிதும் மாறியுள்ளது. அயல்நாட்டிடம் ஒப்படைக்காமல் விசாரணை என்றால் சரிதான் என்பதை அசான்ஜ் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்வதை அறிந்து வைத்திருப்பதால், ஸ்வீடன் அதிகாரிகள் கற்பழிப்பு குற்றச்சாட்டில் அசான்ஜ்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர் என்று வாதத்தை வழக்குவிசாரணை தற்போது முறையிடுகிறது. மேலும் இந்த குற்றச்சாட்டை நியாயப்படுத்த மேற்கொண்டு எந்த ஆதாரத்தையும் அதாவது, ஸ்வீடன் அதிகாரிகள் அவர்களின் ஓர் அறிக்கையையோ அல்லது இதுபோன்ற ஒரு வழக்குவிசாரணைக்கு சாதகமாக ஏதேனும் புதிய பிரத்யேக ஆதாரத்தை உருவாக்குவதன் மூலமாகவும் கூட அவர்கள் முன்வைக்கவில்லை.   

அசான்ஜ் முன்னர் ஸ்வீடன் பொலிசாரால் விசாரிக்கப்பட்ட போது, அப்போது எந்த குற்றச்சாட்டும் கொண்டு வரப்படாத நிலையில், விசாரணைக்கான ஒரு பிடியாணையை இப்போது எவ்விதத்திலும் பிறப்பிக்க முடியாது என்று வாதத்தின் போது ராபர்ட்சன் கூறினார்.

அசான்ஜின் ஒப்படைப்பு என்பது ஊடகங்களுக்கு அளிக்கப்படும் ஒரு தண்டனையாக போய் முடியும் என்று அவர் அஞ்சினார். அவர் கூறியது, “இவ்வகையிலான ஊடகங்களின் பிரச்சாரமும், ஊடகங்களின் அவதூறுகளும் இந்த இரகசிய வழக்கின்மீது தப்பெண்ணம் கொள்ளச் செய்யும்.” 

அந்த மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்களில் எதுவுமே அந்த சம்பவங்களின் போது எதிர்ப்பு காட்டப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று வலியுறுத்திய ராபர்ட்சன், என்ன நடந்ததென்றால் ஒருமித்த சம்மதத்துடனே தான் பாலியல் உறவு இருந்தது என்பதையும் வலியுறுத்தினார். ஸ்வீடன் சட்டத்தில் "சிறிய கற்பழிப்பு" என்று எது அழைக்கப்படுகிறதோ, அதில் மிரட்டலோ, நிர்பந்தமோ அல்லது சம்மதிமின்மையோ இல்லாததால் அது பிற சட்டஅமைப்புமுறைகளில் கற்பழிப்பாக கருதப்படுவதே இல்லை. ஆகவே "சிறிய கற்பழிப்பு" என்ற சொல், "முரண்பாடாக" உள்ளது என்றவர் கூறினார்.

ஸ்வீடன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், ஸ்வீடன் சட்டத்தில் ஒரு வல்லுனரும் ஆன பரிட சுண்ட்பெர்க் வேயத்மன், அதற்கு ஆதரவாக கருத்துரைத்தார். அசான்ஜை ஸ்வீடனுக்குக் கொண்டு வருவதில் ஸ்வீடன் அதிகாரிகளின் முயற்சி குறித்து அவர் கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே இது முற்றிலும் வி்சித்திரமானதாக…  இருப்பதாகவே நான் கருதுகிறேன்,” என்றார்.    

ஒரு ஐரோப்பிய கைது உத்தரவாணை பிறப்பிப்பதற்கான வழிமுறை முறையாக இல்லை என்று தெரிவித்த அந்த பெண்மணி, “நோக்கத்திற்கு எது அவசியப்படுகிறதோ அதையும்விட கடுமையான வழிமுறைகளை ஒரு அதிகாரி ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது…. இந்த கொள்கை இங்கே சிறிதும் மதிக்கப்படவில்லை என்பது தெளிவாக உள்ளது,” என்றார்

ஒரு பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டிருக்கும் ஒருவர், இந்த வழக்கில் செய்ததைவிட அதிகமாக ஒருவரை எவ்வாறு காயப்படுத்த முடியும் என்று என்னால் நினைத்தும் கூட பார்க்க முடியவில்லை. கற்பழித்த நபராக அவர் உலகம் முழுவதிலும் பிரபலமாக உள்ளார். ஆனால் அவர் அதற்காக குற்றம்சாட்டப்பட்டிருக்கவில்லை.”   

சுண்ட்பெர்க் வேயத்மன் கூறியது, "வழக்குவிசாரணையின் ஸ்வீடன் இயக்குனர் Ny ஸ்வீடனில் பாலியலில் விவகாரங்களில் அரசியல் செய்துள்ளார்" என்பதோடு, "பாலியல் குற்ற வழக்குகளைக் கையாள்வதில் அந்த நபர்களுக்கு எதிராக பாரபட்சமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார். வழக்குவிசாரணையின்கீழ் இருக்கும் ஒவ்வொருவரையும் குற்றவாளியாக அவர்கள் எடுத்துக்கொள்வதாக தெரிகிறது.”

அசான்ஜை ஸ்வீடனில் விசாரிப்பது அவசியப்படுகிறது, வேறெங்கும் விசாரிக்க முடியாது என்ற ஸ்வீடன் வழக்கு அறிக்கை அந்த பெண்மணி மறுத்தார். “என்னால் அவருடைய நேர்மையான மனோபாவத்தை இங்கே புரிந்துகொள்ள முடியவில்லை, இது வன்மமாக தெரிகிறது. அவர் ஸ்வீடனில் இருந்தபோதே அவரை விசாரித்திருப்பது இன்னும் எளிமையாக இருந்திருக்கும்,” என்று அவர் தெரிவித்தார். “அவர் ஸ்வீடனை விட்டு வெளியேறிய பின்னரும் கூட, அவரை மிக எளிதாக தொலைபேசி வழியாகவோ, வீடியோ இணைப்பு அல்லது ஒரு தூதரகம் வழியாகவோ விசாரித்திருக்கலாம்,” என்றார்.

மேலும் அந்த இரண்டு பெண்களின் வழக்கறிஞரான கிளைஸ் போக்ஸ்ரோம் இன் பாத்திரம் குறித்தும் ராபர்ட்சன் விளக்கினார். ஒரு பிரசித்தமான வலதுசாரி சமூக ஜனநாயக அரசியல்வாதியான அவர், 2000இல் இருந்து 2007 வரையில் நடுநலைவாதிக்கு (ombudsman) சமமான வாய்ப்புகளுடன் ஸ்வீடன் அரசாங்கத்தல் பணியாற்றினார். அவர் சமூக ஜனநாயக அரசியல்வாதியும், முன்னாள் நீதித்துறை மந்திரியுமான தோமஸ் பொட்ஸ்ரோம் உடன் சேர்ந்து, ஒரு சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். குற்றஞ்சுமத்திய இரண்டு பெண்களில் ஒருவர் ஸ்வீடன் சமூக ஜனநாயக கட்சியின் கிறிஸ்துவ பிரிவில் பங்கு பெற்றுள்ளார்.

"இந்த பெண்மணிகளால் தக்க வைக்கப்பட்டிருக்கும் ஓர் அரசியல்வாதி தான்" போக்ஸ்ரோம், என்று ராபர்ட்சன் தெரிவித்தார். அசான்ஜ் குறித்த அவரின் வெளிப்படையான அவதூறு, “இந்த நாட்டில் [நீதிமன்ற] அவமதிப்புக்காக சிறையில் இருக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.”    

சுண்ட்பெர்க்-வேயத்மன் நீதிமன்றத்திற்கு அளித்த அவருடைய எழுத்துப்பூர்வமான ஆதாரத்தில் [இதில் 42 இணைய ஆவணங்களும் உள்ளடங்கும்], “திரு. போக்ஸ்ரோம் ஐ ஒரு அதி-தீவிர பெண்ணியவாதியாக கருதலாம். தீவிர பெண்ணியவாத நடவடிக்கையோடு தொடர்புபட்ட தளத்தில் ஓர் அரசியல்வாதியாகவும் இருக்கும் அவர், கற்பழிப்பு வழக்குகளில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக வழக்காட சட்ட பயிற்சியை மேற்கொண்டிருந்தார். திரு. போக்ஸ்ரோம் ஸ்வீடனிலும், சர்வதேச ஊடகங்களிலும் திரு. அசான்ஜை கண்டித்து பல நிகழ்வுகளில் தோன்றியுள்ளார்.”

ஸ்வீடனின் ஒரு முன்னாள் வழக்கறிஞரும், ஸ்வீடன் கிரிமினல் சட்டம் மற்றும் வழக்கு விசாரணைகளில் நிபுணருமான ஸ்வேன்-எரிக் அஹ்லமும் கூட, அசான்ஜிற்கு ஆலோசனை வழங்குவிதத்தில் எழுத்துப்பூர்வ விவரங்களை அளித்துள்ளார். எரிக் அஹ்லம் தனது வாத ஆவணத்தில் பதினான்காவது புள்ளி குறிப்பிடுவதாவது, “ஸ்வீடன் சட்டம் மற்றும் வழிமுறைக்கு, பெயரிட்டு கூறவேண்டுமானால் கற்பழிப்பு மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் இரகசியமாக விசாரிக்கப்படுகின்றன; கற்பழிப்புக்காக குற்றஞ்சாட்டப்படும் நபர்களை அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே பிணையளிக்கபடாமல் பல மாதங்களுக்கு சிறையில் வைக்கலாம்; சந்தேகத்தின்கீழ் இருக்கும் அவர்களின் வாக்குமூலங்களை முறையாக பெறுவது தான் வழக்கறிஞர்களின் வேலை என்று அவர் ஆதாரத்தைத் தருகிறார். பரஸ்பர உதவி முறைகளின் அனுகூலத்தை பெறுவது பொருத்தமற்றது எனக்கூறி அதற்கு மாறாக  ஒரு ஐரோப்பிய கைது உத்தரவாணைக்கு விண்ணப்பிக்க அவர் அவருடைய நிபுணத்துவ கருத்தை அளிக்கிறார்.”  

நீதிமன்றத்திற்கு வெளியில் விசாரணை குறித்து கருத்து தெரிவித்த அசான்ஜ், “என்னுடைய வாழ்வில் ஒரு கருப்புப்பெட்டி(black box) பிரயோக்கிக்கப்பட்ட ஒரு நிலைமையில் ஐந்தரை மாதங்கள் நாங்கள் இருந்தோம்.

அந்த கருப்பு பெட்டியின் வெளிப்புறம் "கற்பழிப்பு" என்ற சொல் எழுதப்பட்டிருந்தது. அந்த பெட்டி தற்போது திறக்கப்பட்டு வருகிறது, ஒரு வெளிப்படையான நீதிமன்ற வழிமுறைக்கு நன்றி, மேலும் திறக்கப்பட்ட அடுத்த நாளே அந்த பெட்டி வெறும் காலிப்பெட்டி என்பதையும், வெளியிலிருக்கும் அந்த சொற்களோடு சிறிதும் தொடர்புபட்டதல்ல என்பைதயும் நாம் பார்ப்போம் என்று நான் நம்புகிறேன்