சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Wisconsin protests and the re-emergence of the American working class

விஸ்கான்சன் போராட்டங்களும், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மீழெழுச்சியும்

Bill Van Auken
18 February 2011

Use this version to print | Send feedback

பணியிட நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கடுந்தாக்குதலுக்கு எதிராக, விஸ்கான்சனில் ஆயிரக்கணக்கான அரசு தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களையும் சேர்த்து கொண்டிருக்கும் பெரும் மக்கள் போராட்டங்கள், அமெரிக்க மற்றும் உலக அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கின்றன.

வெகுஜன போராட்டங்களால் சமீபத்தில் துனிசியா மற்றும் எகிப்திய ஜனாதிபதிகள் தலைகீழாக கவிழ்த்தப்பட்ட சம்பவங்கள், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்கள் மீழெழுச்சி பெற்றுள்ளதை காட்டுகின்றன. எவ்வாறிருந்தபோதினும், இத்தகைய போராட்டங்களை தோற்றுவித்த நிலைமைகளானதுவேலைவாய்ப்பின்மை, உச்சபட்ச அளவுகளில் நிலவும் சமூக சமத்துவமின்மை, பெரும்பான்மை மக்களின் தேவைகள் மற்றும் நலன்களை முற்றிலுமாக உதாசீனப்படுத்தும் ஓர் அரசியல் அமைப்புமுறை போன்றவற்றால், ஒரு சர்வதேச தன்மையைக் கொண்டுள்ளன. விஸ்கான்சனில் வெடித்துள்ள வெகுஜன போராட்டங்களின் எழுச்சியானது, நீண்டகாலமாக உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் மையமாக செயல்பட்டு வந்த அமெரிக்காவில், ஒரு புதிய வெளிப்படையான வர்க்க போராட்ட சகாப்தத்தின் முதல் வெளிப்பாடாகும்.

PATCO விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம் நிர்மூலமாக்கப்பட்டதையும், மற்றும் ஹோர்மெல், கிரேஹவுண்ட், பெல்ப்ஸ் டோட்ஜ் தொழிலாளர்களின் போர்குணமிக்க வேலைநிறுத்தங்களின் தோல்வியையும் கண்ட 1980களுக்குப் பின்னர், வர்க்க போராட்டம் அமெரிக்காவில் செயற்கையாக ஒடுக்கப்பட்டது. இது பெருநிறுவன அரசியல் அமைப்புமுறைக்குள் தன்னைத்தானே முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நெருக்கமாக இணைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டத்தையும் தோற்கடிக்கவும், பிரித்துவிடவும் திட்டமிட்டு வேலைசெய்து வரும் AFL-CIO தொழிற்சங்கத்தின் முற்றிலும் பிற்போக்குத்தனமான பாத்திரத்தால் சாத்தியமாக்கப்பட்டது.

குறிப்பாக, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், சோசலிசத்தைப் பற்றி முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிப் பிரவாகத் தூற்றல்கள் அவற்றின் உச்ச கட்டத்தை அடைந்திருந்த பொழுது, சிலர் தொழிலாள வர்க்கம் இருப்பதைக் கூட மறுத்தனர். கம்யூனிஸ்ட் அறிக்கையின் புகழ் மிக்க சொற்தொடர் போல வரலாறானது, “இந்நாள் வரையிலான சமுதாய வரலாறு, வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” – என்பது, முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறப்பட்டது.

2008 இலையுதிர் காலத்தில், வோல் ஸ்ட்ரீட்டின் நிதியியல் பொறிவுடன் தொடங்கிய உலக பொருளாதார நெருக்கடிக்குள் இரண்டரை ஆண்டுகள் சென்ற பின்னர், அமெரிக்க தொழிலாள வர்க்கம் நிதியியல் பிரபுத்துவத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதன் முதல் எதிர்தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த அரசியல், பொருளாதார அமைப்புமுறை தோற்றுவிட்டது; ஒரு புதிய சமூக அமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பது அங்கே பரந்துபட்ட அளவில் உணரப்பட்டு வருகிறது.

விஸ்கான்சனில் ஆர்ப்பாட்டக்காரர்கள், அரேபிய தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த பெரும் எழுச்சியால் தூண்டப்பட்டுள்ளனர். அவர்கள் மடிசனைக் கெய்ரோவுடனும், விஸ்கான்சன் ஆளுனர் ஸ்காட் வோல்கரை ஹோஸ்னி முபாரக்கோடும் ஒப்பிடுகின்றனர். நியூயோர்க் நகரில், பாடசாலை கதவடைப்புகளுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், “ நியூயோர்க் எகிப்தாகிவிட்டது,” என்று கோஷமிட்டனர். இது முற்றிலும் பொருத்தமானதே. மேலும் அவர்கள் ஒரு பொதுவான போராட்டத்தையும், ஒரு பொதுவான எதிரியையும் முகங்கொடுத்து வருகிறார்கள் என்ற ஓர் உணர்வு தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வருவதன் ஒரு வெளிப்பாடாக இது உள்ளது.

அமெரிக்காவை ஆளும் நிதியியல் பிரபுத்துவம், எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் தலைமையிலிருந்த அந்த சர்வாதிகார ஆட்சியிலிருந்து ஒவ்வொரு துணுக்கையும் உருவி எடுத்ததைப் போல, பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கு விரோதமாக உள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வேலைகளையும், வீடுகளையும், வருமானத்தையும் இழந்திருக்கும் நிலையில், இந்த தலைமுறைகளின் முன்னால் நிற்கும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் உழைக்கும் மக்களுக்கு உதவும் வகையில் எந்த முறைமையும் எடுக்கப்படவில்லை. மாறாக, மக்கள் பணத்திலிருந்து மில்லியன் கணக்கான டாலர்கள், எந்தவித கேள்வியும் இல்லாமல், யாருடைய இரக்கமற்ற ஊகவணிகத்தால் தூண்டப்பட்டு இந்த நெருக்கடி முன்னிலைக்கு வந்ததோ, அவர்கள்வசமே ஒப்படைக்கப்பட்டது.

தொழிலாள வர்க்கம் தியாகம் செய்ய வேண்டும் என்பது தான் இப்போது அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கும் கோரிக்கையாக உள்ளது. ஒபாமா நிர்வாகம் இந்த வாரம் தான், தொழிலாள வர்க்கத்திற்கு உதவும் சமூக திட்டங்களில் இருந்து, 1 ட்ரில்லியன் டாலரை வெட்டும் வரவு-செலவுக் கணக்கை முன்மொழிந்தார். வோல்கரும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியின் தலைமையில் அவருக்கு எதிர்பலத்தில் இருப்பவர்களும் அவர்கள் பங்கிற்கு, வேலைகளை வெட்டி வருவதுடன், கொந்தளித்துவரும் மக்கள் எதிர்ப்பையும் சமூக அவலங்களையும் முற்றிலும் மதிக்காமல், சமூக திட்டங்களை வெட்டி வருகின்றனர்.

குடியரசுக் கட்சியின் வோல்கர், கூட்டு பேச்சுவார்த்தைகளை உடைப்பது மற்றும் அரசு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளில் கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்டு வருவதை நோக்கி நகர்ந்துள்ளார். அவர் சம்பள உயர்வுகளை, உயர்ந்து வரும் வாழ்க்கை செலவுகளுக்குக் குறைவாக வைத்துக்கொண்டே, ஓய்வூதியங்கள், சுகாதாரம், பணியிட நிலைமைகளில் கடும் தாக்குதலை திணித்துள்ளார். நாடு முழுவதும் கொண்டு வர முன்மொழியப்பட்டிருக்கும் மேலும் சில முறைமைகளாவன:

* வடக்கு கரோலினாவில், ஏற்கனவே நாட்டில் குறைந்தபட்சமாக இருக்கும் பெருநிறுவன வரிவிகிதங்களை இன்னும் குறைத்துவிட்டு, சுமார் 10,000 அரசு தொழிலாளர்களின் வேலைகளை ஒழிக்கும் ஒரு வரவு-செலவு கணக்கை ஜனநாயகக் கட்சி ஆளுனர் பெவ் பர்டியூ சமர்பித்தார்.

* மிசிகனில், குடியரசு கட்சி ஆளுனர் ரிக் ஸ்னெய்டர், பாடசாலைகள், உள்ளுர் சமூக அமைப்புகள், பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்படும் அரசு நிதியுதவிகளில் கடும் வெட்டுக்களை முன்மொழிந்தார். அது சேவைகளிலும், வேலைகளிலும் பெரும் வெட்டுக்களைக் கொண்டு வரும். இதற்கிடையில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியங்களுக்கு வரிவிதிக்க கோரிய அதேசமயம், அவர் அரசின் வியாபார வரிகளில் 1.8 பில்லியன் டாலரைக் குறைக்க முன்மொழிந்தார்.

* அடுத்ததாக நியூயோர்க் நகரில் "சுயேட்சை" மேயர் மைக்கேல் புளூம்பேர்க், 4,666 ஆசிரியர்களைத் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கவும், தரத்தில் குறைந்தமைக்காக மேலும் 1,500 ஆசிரியர்களின் வேலைகளை அகற்றவும் அழைப்புவிடுக்கும் பெருநகராட்சியின் வரவு-செலவு கணக்கைச் சமர்பித்தார். உயர்ந்துவரும் வோல் ஸ்ட்ரீட்டின் இலாபங்கள், நகரத்திற்கு கூடுதலாக 2 பில்லியன் டாலர் வருவாயை அளிக்கிறது என்ற போதினும் கூட, இந்த கோடீஸ்வர மேயர் வெட்டுக்களை செய்ய உத்தேசித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள இத்தகைய கொள்கைகள், பின்பற்றப்பட்டு வரும் உத்யோகபூர்வ அரசியலின் கொடூரமான குணாம்சத்தையும், மற்றும் அதற்கு வெளியில் அபிவிருத்தி அடைந்துவரும் ஆழமான சமூக பதட்டங்களையும் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவற்றை உறுதிப்படுத்தவும் செய்கின்றன.

தேசிய பாதுகாப்புப்படையை ஒருங்கிணைத்து எந்தவிதமான எதிர்ப்பிற்கும் தம்மால் பதிலடி கொடுக்க முடியும் என்று வலியுறுத்தியதன் மூலமாக, இன்று நிலவிவரும் அமெரிக்க வர்க்க உறவுகளின் உண்மையான நிலைக்கு விஸ்கான்சன் ஆளுனர் ஓர் இறுக்கமான வெளிப்பாட்டை அளித்தார். மில்வாக்கியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சுட்டுக்கொல்ல அரசு இராணுவத்தினர் அழைக்கப்பட்ட போது, சிக்காக்கோவில் 1886 Haymarket படுகொலைக்குப் பின்னர் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புப்படை தான், விஸ்கான்சனில் இந்த விதத்தில் கடைசியாக நிறுவப்பட்டது.

வோல்கரின் அச்சுறுத்தல் விஷயமற்றதல்ல. அமெரிக்காவில் இன்றிருக்கும் வர்க்கப் பதட்டங்கள் கடந்த நூற்றாண்டின் மூன்று தசாப்தங்களில் இருந்திடாத அளவுக்கு மிக கூர்மையாக உள்ளன. தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு எதிரான அரசு வன்முறை பொதுவானதொரு விஷயமாக இருந்த "வளம்கொழித்த காலத்திற்கு" (Gilded Age) பின்னர், வேறெந்த காலக்கட்டத்தையும் விட, இப்போது சமூக சமத்துவமின்மையும், மேல்மட்டத்திலிருக்கும் 1 சதவீதத்தினரிடம் செல்வவளம் குவிந்திருப்பதும் (நாட்டின் செல்வவளத்தில் மூன்றில் ஒரு பங்கை தற்போது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது) மிக அதிகளவில் உள்ளது. அமெரிக்கா, சமூக எழுச்சியின் ஒரு புதிய காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என்பதற்கு விஸ்கான்சன் சம்பவங்கள் ஒரு தெளிவான அறிகுறியாக உள்ளன. முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியாலும், வேலைக்கான, வாழ்வதற்கேற்ற சம்பளத்திற்கான, கல்விக்கான உரிமைகள், சுகாதாரம் மற்றும் ஒரு பாதுகாப்பான ஓய்வூதியத்திற்கான உரிமைகள் என உழைக்கும் மக்களின் எல்லா உரிமைகள்மீதும் ஆளும் வர்க்கம் அதன் செல்வவளங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்திய இரக்கமற்ற தாக்குதல்களினாலும், தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த போராட்டங்களை முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது. முதலாவதாக தொழிலாளர்களின் உண்மையான அனைத்து போராட்டங்களை ஒடுக்கவும் மற்றும் ஜனநாயக கட்சிக்கு முட்டுக்கொடுக்கவும் தங்களால் முடிந்தமட்டிற்கும் எல்லாவற்றையும் செய்த தொழிற்சங்கங்களின்மீது துளியும் நம்பிக்கை வைக்க முடியாது. வெட்டுக்களைச் செய்ய வேண்டிய தேவைக்கு அவர்கள் உடன்படுவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தையைக் கைவிட விரும்பவில்லை என்றும் விஸ்கான்சனில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர். உண்மையில், ஒழிந்து போகவிருக்கும் இந்த அமைப்புமுறையின் எச்சசொச்சங்கள் மூலமாக தங்களின் நிதியியல் அஸ்திவாரங்களைக் காப்பாற்றிக் கொள்வதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

தொழிற்சங்க தலைவர்களால் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் நிர்வாக அமைப்பால் வலியுறுத்தப்படும் எந்த சலுகைகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். விஸ்கான்சின் நிதி பற்றாக்குறை என்பது நாட்டில் உள்ள பில்லினியர்களின் செல்வவளத்தில் ஒரு மிகச் சிறிய அளவு தான். உண்மையில், மொத்தம் உள்ள 50 அரசுகளின் ஒட்டுமொத்த நிதிபற்றாக்குறையானது, 400 மிகப் பெரிய அமெரிக்க பணக்காரர்களின் மொத்த செல்வவளத்தில் சுமார் பத்தில் ஒரு பங்கு மட்டுமே. இந்த செல்வவளமும், வங்கிகளுக்கு பிணையெடுப்பாக செலவிடப்பட்ட ட்ரில்லியன்களும், பெரும்பான்மை மக்களின் அடிப்படை சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய திரும்பப் பெறப்பட வேண்டும்.

வரவு-செலவு கணக்கில் உள்ள வெட்டுக்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில், விஸ்கான்சனில் உள்ள மற்றும் நாடு முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களும், தொழிலாளர்களும் ஒன்றுபடுவது அவசியமாகும். விஸ்கான்சனிலும், அதற்கு அங்காலும் உள்ள அண்டையவர்கள், பாடசாலைகள், வேலைகூடங்களில் உள்ள அரசுத்துறை மற்றும் தனியார்துறை தொழிலாளர்களையும் அவர்களோடு இளைஞர்களையும் ஐக்கியப்படுத்த, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட அமைப்புகளைஅதாவது, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் சாமானிய குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும். வெட்டுக்களுக்கு எதிராக எல்லா தொழிலாளர்களின் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு இப்போதே தயாரிப்புகளைச் செய்ய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தேவைப்படுவது என்னவென்றால், ஜனநாயக கட்சிக்கும் முதலாளித்துவ இரு-கட்சி அமைப்புமுறைக்கும் தொழிலாள வர்க்கம் அடிபணிந்திருக்கும் வரையில் எதையுமே காப்பாற்ற முடியாது என்ற புரிதலோடு தொடங்கும் ஓர் அரசியல் போராட்டமே தேவைப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் வேலைகளையும், வாழ்க்கை தரங்களையும் அழித்தால் தான் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முடியும் என்று கூச்சலிடுவதன் மூலமாக, உண்மையில் அந்த முதலாளித்துவ பிரதிநிதிகள், அவர்கள் ஆதரிக்கும் அமைப்புமுறை வராலற்றுரீதியாக திவாலாகிவிட்டது என்பதையே ஒப்புக் கொள்கிறார்கள்.

வர்க்க போராட்டத்தின் மீள்-எழுச்சியானது, அதனோடு ஒரு சோசலிச போராட்டத்தையும் மீட்டெடுத்து வரும். அமெரிக்க தொழிலாள வர்க்கம் சமூக பேரெழுச்சியின் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைகின்ற வேளையில், இந்த போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க ஒரு புரட்சிகர சோசலிச கட்சியை இப்போது கட்டியெழுப்புவதே முக்கிய பணியாக உள்ளது. ஆகவே சோசலிச சமத்துவ கட்சியின் கூட்டங்களில் பங்குபெற்றும், இன்றே சோசலிச சமத்துவ கட்சியோடு இணைந்தும், இந்த போராட்டத்தில் பங்கெடுக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் அதன் வாசகர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.