சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

1.5 Million Americans filed for bankruptcy in 2010

1.5 மில்லியன் அமெரிக்கர்கள் 2010ல் கடன்தீர்க்கவியலாமைக்குப் பதிவு செய்துள்ளனர்

By Jerry White
6 January 2011

Use this version to print | Send feedback
 

வேலைகள் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் குடும்பங்களினால், வீடுகளின் மதிப்புச் சரிவு மற்றும் இரக்கமற்ற கடன்தருனர்கள் கெடுபிடி ஆகியவற்றினால், கடந்த ஆண்டு அமெரிக்காவில் கடன்தீர்க்கவியலாமைக்குப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 9 சதவிகிதம், அதாவது 1.53 மில்லியன் என உயர்ந்தது.

நீதிமன்றப் பாதுகாப்பை நாடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 2005ல் கடன்தீர்க்கவியலாமைச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட வகையில், கூடுதல் செலவு என்ற வகையிலும் தீவிரமாகக் குறைந்தது. அப்பொழுதிலிருந்து இந்த எண்ணிக்கை தான் மிக உயர்ந்தது ஆகும். வழக்குகளில் சமீபத்தில் ஏற்பட்ட ஏற்றம்கூடுதல் செலவுகள், சட்டப்பூர்வ தடைகள் என்று இருந்தாலும்உத்தியோகபூர்வ கூற்றுக்கள் ஒரு பொருளாதார மீட்சி வந்துவிட்டது என்று கூறியும், எந்த அளவிற்கு அமெரிக்க மக்களின் பெரும் பிரிவுகள் பெரும் திகைப்பில் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில்பொருளாதார மந்த நிலையும் 2008 சரிவும் ஏற்பட்ட நிலையில்— 4 மில்லியன் நுகர்வோர்கள் கடன்தீர்க்கவியலாமைக்குப் பதிவு செய்து கொண்டனர். கடந்த ஆண்டின் எண்ணிக்கை 2005க்கு முன் ஏற்பட்ட மிக உயர்ந்த அளவை எய்தியது. பெரும்பாலான பதிவு செய்தவர்கள் $30,000க்கும் குறைவாக வருமானம் கொண்டவர்களும், கல்லூரிப் படிப்பு இல்லாமல் இருந்தாலும் ஆகும். $60,000 க்கும் மேற்பட்ட வருமானம் உடைய குடும்பங்கள், பட்டப்படிப்பு படித்த குடும்பங்களின் பெருகிய சதவிகிதமும் திவால்தன்மைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தாங்கள் கொடுக்க வேண்டிய கட்டணங்களை பல மில்லியன் மக்கள் கொடுக்க இயலவில்லை என்ற நிலையில், பெருநிறுவனங்களும் வங்கிகளும் உயர்ந்த இலாபங்களை ஈட்டுகின்றன. உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் பெரும் ஊதியங்களைப் பெறுகின்றனர். மக்களின் பெரும் செல்வம் படைத்த உயர்மட்ட 2 சதவிகிதத்தினர் ஒபாமா மற்றும் காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினரும் அளித்த வரிக் குறைப்புக்களை களித்துப் பாராட்டி மகிழ்கின்றனர்.

இப்பொழுது வாஷிங்டனின் விவாதம் சமூகநலச் செலவுகளை வெட்டுதல், வரிகளைக் குறைத்தல், பெருவணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளைக் குறைத்தல், ஊதியங்கள் மற்றும் நலன்களைக் குறைத்து அமெரிக்கப் பெருநிறுவனங்களை மேலும் போட்டித்தன்மை, இலாபத் தன்மை உடையவனவாகச் செய்தல் என்பவற்றிற்கு இரு கட்சிகளும் ஒருமித்த உணர்வு கொள்ள வேண்டும் என்ற உந்துதலால் மேலாதிக்கம் பெற்றுள்ளது. பெருநிறுவன-அரசியல் உயரடுக்கு மற்றும் சமூகப் பேரழிவை எதிர்கொள்ளும் ஏராளமான உழைக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள வர்க்கப் பிளவைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்டுள்ள தனிநபர் திவால்தன்மை அநேகமாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்டது என்று அமெரிக்கத் திவால் ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. மிகத்தீவிர ஏற்றம் தென்மேற்கு, தென்கிழக்கில் நடைபெற்றது. நெவடாவில் மில்லியன் மக்களுக்கு 15,000 பேர் பதிவு செய்தனர் என்றும் இது நாடு முழுவதும் பதிவான மில்லியனுக்கு 6,600 பதிவுகள் என்பதைவிட இரு மடங்கு ஆகும். இம்மாநிலம் நாட்டிலேயே மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தையும், கடன் அட்டை, அடைமான மீட்பு ஆகியவற்றில் பணம் செலுத்தா நிலையையும்கொண்டுள்ளது. 99 வீடுகளில் ஒரு வீடு முன்கூட்டி விற்பனைக்கு வருவதாக realtytrac.com தெரிவித்துள்ளது.

நெவடாவிற்கு அடுத்து ஜோர்ஜியாவும் டெனசியும்  உயர்ந்த பதிவு விகிதங்களைக் கொண்டுள்ளன; ஒவ்வொன்றிலும் ஒரு மில்லியனுக்கு 10,000 கடன்தீர்க்கவியலாமை பதிவுகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உயரும் விகிதத்தைப் பெற்றுள்ள மாநிலங்கள் ஹவாய் (22%), கலிபோர்னியா (19%), உடா (19%) மற்றும் அரிசோனா (18) ஆகியவை என உள்ளன.

தம்பதியரில் ஒருவர் வேலை இழந்தாலோ, இருவருடைய பணிநேரங்கள் குறைக்கப்பட்டாலோ, அல்லது சிறு வணிகம் நஷ்டப்பட்டுவிட்டாலோ குடும்பங்கள் கடன்தீர்க்கவியலாமைத் தன்மைக்குத் தள்ளப்படுவதாக உள்ளூர்ச் செய்தி ஏட்டுத் தகவல்கள் கூறுகின்றன. அடைமானத்திற்குக் கொடுக்க வேண்டிய பணங்களும் மற்ற கட்டணங்களும் சமாளிக்க முடியாமல், குடும்பங்கள் நாள் ஒன்றிற்கு கடன் கொடுத்தவர்களிடம் இருந்து 15 முதல் 18 தொலைபேசி அழைப்புக்களைப் பெறுகின்றனர். இதன் பின்னர் நீதிமன்றப் பாதுகாப்பிற்காக அவர்கள் திவால் தன்மைப் பதிவை நாடுகின்றனர்.

Las Vegas Review Journal இடம் அரிசோனாவின் டக்சனைச் சேர்ந்த ட்ரேஸி காம்போ அவருடைய கணவர் பணியில்  கூடுதல் நேர உழைப்பு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் போனதில் இருந்து தொந்தரவுகள் ஏற்பட்டுவிட்டதாகக் கூறினார். தங்கள் கடன் விதிகளை மாற்றவேண்டும் என்று வங்கியிடம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றுஅவர்கள் தங்கள் வீட்டை முன்கூட்டி விற்பனை செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். சொத்துக்கள்நகைகள், உடைகள் மற்றும் அனைத்தையும் கட்டணங்களைக் கொடுப்பதற்காகஅவர்கள் விற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டனர் என்றாலும் கடன் அட்டை மூலம் கடன்  அதிகரிக்கத் தொடங்கி டிசம்பர் மாதம் வாழ்வில் ஒரு புதிய துவக்கத்தை  காணும் நம்பிக்கையில் திவால் தன்மைக்குப் பதிவு செய்தனர்.

இது மிகவும் மன உளைச்சலைக் கொடுக்கிறதுஎன்று மூன்று குழந்தைகளின் 32 வயதுத் தாயார் காம்போ Review Journal இடம் கூறினார். “இது இகழ்வானதுநீங்கள் அனைத்துக் கட்டுப்பாட்டையும் இழந்து விட்டது போல். இதை நான் வெறுக்கிறேன். இதையொட்டிப் பெரும் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளேன்.”

நெவடாவில் கடன்தீர்க்கவியலாமைக்கான வக்கீல்கள் அவர்களுடைய தொழிலில் சுறுசுறுப்பு குறைவதற்கான அடையாளம் இல்லை என்று கூறினர். ஒரு வக்கீல் தான் தன்னுடைய உதவியாளர்கள் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பகுதி உயர்த்தித் தேவையைச் சமாளிப்பதாகக் கூறினார். இந்த நிலை இன்னும் பெருகும் எனத் தோன்றுகிறதுஎன்று Las Vegas நாளேட்டிடம்  ஆன்டனி டிலூக்கா தெரிவித்தார்.

தெற்கு பிளோரிடாவில் கடன்தீர்க்கவியலாமைக்குப் பதிவுகள் மிகப் பெரிய அளவாக 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று Sun Sentinel  தகவல் கொடுத்துள்ளது. பாம் பீச், பிரோவர்ட் மற்றும் டேட் மாவட்டங்களில்  பதிவுகள் 2009ல் 24,681ல் இருந்து 2010ல் 34,579 என உயர்ந்துள்ளன. உள்ளூர்த் தகவல்களின்படி இத்தீவிர வேகத்தில் வீட்டு விற்பனை மற்றும் வேலையின்மையும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளதுஇங்குத்தான் வேலையின்மை விகிதம் 12 சதவிகிதமாக உள்ளதுமற்றும் வணிகங்களை மூடலும் அலையென நடைபெறுகின்றன.

Plantation ல் திவால் வழக்குகளைக் கவனிக்கும் வக்கீலான டேவிட் லாங்லி Sun Sentinel   இடம் அவருடைய வழக்குகளில் பலவும் கட்டிடமைத்தல், வீடுகளுக்கான நிலங்கள் அல்லது அவை தொடர்புடைய வியாபாரங்கள் மற்றும் தொழில்களில் (professions) இருந்து வருகின்றன என்றார். “இது ஒரு குமிழி விளைவு ஆகும். கட்டிடமைப்பு இடத்திற்கு அருகே இருந்த சிறு உணவகம் அல்லது வீட்டு நிலங்கள் மற்றும் நிறுவனத்திற்கு அருகே இருந்த சிறு உணவகம் போன்றவை கடன்தீர்க்கவியலாமைக்குப் பதிவு செய்வதற்காக மூடப்படுகின்றன.” பல நேரமும் தனிப்பட்ட மற்றும் வியாபாரத் திவால் பதிவுகளை அத்தகைய கடைகளின் சொந்தக்காரர்களுக்காகச் செய்ய வேண்டியுள்ளது.

மருத்துவச் செலவுகள்  தனிநபர் திவால்தன்மைக்கு மிகப் பெரிய காரணங்களில் ஒன்றாக உள்ளன. பொருளாதாரச் சரிவிற்கு முன் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று பதிவுகளில் 62 சதவிகிதம் சுகாதாரப் பாதுகாப்புக் கடன்களை ஒட்டி எழுந்தன என்று கூறுகிறது. இந்த ஆய்வு கடன்தீர்க்கவியலாமைக்குப் பதிவு செய்பவர்களில் 78 சதவிகிதம் மருத்துக் காப்பீட்டையும் கொண்டிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளது.

Economic Policy Institute உடைய கருத்துப்படி, குடும்பச் சுகாதாரக் காப்பீட்டுக் கட்டணங்கள் 1999 க்கும் 2009க்கும் இடையே இருமடங்கிற்கும் மேலாகப் போய்விட்டது. இது தொழிலாளர்களின் வருமானங்கள் மற்றும் மொத்தப் பணவீக்கத்தைவிட அதிகம் ஆகிவிட்டது. முதலாளிகளோ தங்கள் தொழிலாளர் தொகுப்பின் மீது தான் மருத்துவப் பாதுகாப்பின் கூடுதல் செலவுகளை சுமத்துகின்றனர்.

நீண்ட கால வேலையின்மை தீவிரமாக அதிகரித்துள்ளதுபெருமந்த நிலைக்குப் பின் மிக அதிக இடர்களைக் கொடுப்பதுநிலைமையை மோசமாக்கியுள்ளது. இன்னும் கூடுதலான குடும்பங்கள் உணவு, பயன்பாடுகள் மற்ற அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்கு கடன் அட்டைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதைத்தவிர அவர்களுடைய சுகாதாரக் காப்பீட்டுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது.

இன்னும் வேலையில் இருப்பவர்கள் பெருகிய முறையில் ஊதிய வெட்டுக்களை எதிர்கொண்டு, பகுதி நேரம் அல்லது தற்காலிக வேலைகளையும் நாட வேண்டியுள்ளது. கடந்த காலத்தில்  வீட்டையொட்டி கொடுக்கப்பட்ட கடன்கள்வீடுகளின் விலையுயர்வைக் கருத்திற்கொண்டு தளம் பெற்றவைவருமானக் குறைவை ஈடு செய்வதற்குப் பெறப்பட முடிந்தது. ஆனால் இவை இப்பொழுது வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு ஒரு விருப்பத் தேர்வாக இல்லை. ஏனெனில் வீடுகளின் மதிப்புக்கள் பெரிதும் குறைந்துவிட்டன. நுகர்வோருக்குக் கொடுக்கப்படும் கடன்கள் இறுக்கமாகிவிட்டதும் மக்களை விளிம்பில் நிறுத்தியுள்ளது. ஏனெனில் திவால் தன்மையைத்  தடுக்க அவர்கள் முன்னதாக கடன் வாங்கியிருந்தனர்.

இந்த நெருக்கடி ஒவ்வொரு மக்கள் பிரிவையும் தாக்கியுள்ளது. மிச்சிகன் சட்டக்கூடத்தின் 2010 ஆய்வு ஒன்று, “The Rise in Elder Bankruptcy Filings” (முதிய குடிமக்கள் திவால் பதிவு செய்வதில் ஏற்றம்) என்பது 65 அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் திவால்தன்மைப் பாதுகாப்பை நாடும் அமெரிக்க மக்களில் அதிவிரைவாகப் பெருகும் பிரிவு, இதற்குக் காரணம் சராசரியாக $22.562 ஐ அவர்கள் கடன் அட்டை நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது என்று கண்டறிந்துள்ளது. “இக்கண்டுபிடிப்புக்கள் அதிர்ச்சி தருபவை, தீய விளைவுகளைக் கொடுப்பவைஎன்று ஆய்வின் ஆசிரியர் ஜோன் போட்டோவ் கூறுகிறார்.சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் மருத்துவக் கடன்கள் போன்ற பலவிதக் காரணிகள் முதிய மக்களின் நிதிய தொந்தரவிற்கு வகை செய்தாலும், ஆதிக்கச் சக்தி கடன் அட்டைகளின் தொடர்புடையவாகத்தான் உள்ளன என்று தோன்றுகிறது.”

வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்களுக்கு ஒபாமா நிர்வாகம் டிரில்லியன் கணக்கில் நிதிகள் அளித்து செல்வந்தர்களுக்கு மகத்தான வரிக்குறைப்புக்களையும் செய்துள்ள நிலையில், அது தங்கள் வீடுகள், வருமானங்கள், வாழ்க்கைச் சேமிப்புக்கள் ஆகியவற்றை இழப்பவர்களுக்குத் தக்க நிவாரணம் கொடுப்பதற்கு ஏதும் செய்யவில்லை. கடந்த மாதம் சட்டமன்ற கண்காணிப்புக்குழு ஒன்றின் அறிக்கை திறைசேரித் துறையின் Home Affordable Modification Program என்பது சிறிதும் பயனற்ற விளைவுகளைத்தான் கொடுத்துள்ளது என்று தெரிவிக்கிறது. அரை மில்லியன் அடைமானம் வைத்த வீட்டினர்கள் தான் தங்கள் வீடுகளைக் கட்ட உதவியைப் பெற்றனர்.  மார்ச் 2009ல் திட்டம் தொடங்கியதில் இருந்து, அதுவும் தற்காலிகமாகத்தான் என்றாலும். இக்காலத்தில் கிட்டத்தட்ட 4 மில்லியன் வீடுகள் முன்கூட்டிய விற்பனை அறிவிப்புக்களைப் பெற்றன. பெடரல் ரிசர்வ் மற்றும் ஒரு 4.25 மில்லியன் எண்ணிக்கையை அடுத்த இரு ஆண்டுகளில் எதிர்பார்க்கிறது.

அரசியல் ஸ்தாபனம்பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் பிரிவுகளால் மேலாதிக்கம் பெறப்பட்டுள்ள தன்மையில்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவு பற்றிச் சிறிதும் கவலைப்படுவது இல்லை. ஒபாமாவின் துணை ஜனாதிபதி ஜோ பிடென், கடன் அட்டைத் தொழில்துறையில் இருந்து பெரும் நன்கொடைகளைப் பெற்றவர். 2005ல் வந்த பிற்போக்குத்தன சட்டம் ஒன்றிற்கு ஜனநாயகக் கட்சியின் ஆர்வம் மிகுந்த  ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். இச்சட்டம் தொழிலாள வர்க்கம் மற்றும் மத்தியதரக் குடும்பங்களுக்கு தங்கள் கடன் சுமைகளிலிருந்து தப்ப முடியாத நிலையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் 1 பில்லியன் டொலர் ஆண்டு ஒன்றிற்கு கடன் கொடுத்தவர்களுக்கு, பெரும்பாலும் வங்கிகள், கடன் அட்டை கொடுப்பவர்கள் ஆகியோருக்கு வழங்கியது.

இரு கட்சி ஆதரவுடைய சட்டவரைவை சட்டமாக்கக் கையெழுத்திட்ட ஜனாதிபதி புஷ் இரு கட்சிகளும் வரலாற்றிலேயே மிகப் பெரிய அளிப்புக்களை வோல் ஸ்ட்ரீட்டிற்கு அளித்த குறுகிய ஆண்டுகளைத் தொடர்ந்துஅறிவித்தார்.அமெரிக்கா தனிப் பொறுப்புடைய ஒரு நாடாகும். இங்கு மக்கள் தங்கள் கடைமைகளை நிறைவேற்றுமாறு எதிர்பார்க்கப்படுகின்றனர். எவரேனும் தன் கடன்களை தீர்க்கவில்லை என்றால், இறுதியில் சமூகம் தான் அவர்களுக்காகக் விலைசெலுத்த நேரிடும்.”