சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US defence secretary warns China not to “underestimate” US military power

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி அமெரிக்க இராணுவ வலிமையைகுறைத்து மதிப்பிட வேண்டாம் என்று சீனாவை எச்சரிக்கிறார்.

By John Chan
11 January 2011

Use this version to print | Send feedback

சீனாவிற்குக் கடந்த சனியன்று மூன்று நாள் பயணமாக சென்று கொண்டிருக்கும்போது, அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் அமெரிக்கா மற்றும் அதன் இராணுவச் சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ஒரு அசாதாரண அறிக்கையில் பெய்ஜிங்கை எச்சரித்தார்.

அமெரிக்கச் சரிவைப் பற்றிய இத்தகைய சிடுமூஞ்சித்தனமான கருத்து இரண்டு அல்லது மூன்று முறைகள் வந்துள்ளதை நான் பார்த்துள்ளேன். இன்னும் வியத்தகு அளவில் 1970களின் பிந்தைய பகுதியில் உள்ளதாக உள்நாட்டிலும் உலகம் முழுவதும் அமெரிக்கா சரிவில் உள்ளது என்று நினைப்பவர்களுக்கு நான் கூறும் கருத்து, அமெரிக்காவின் எதிர்ப்புத் தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்திய நாடுகளால் வரலாற்றின் குப்பைத் தொட்டிகள் நிறைந்துள்ளது என்பதுதான்என்று நிருபர்களிடம் அவர் கூறினார்.

சீனா இப்பொழுது அமெரிக்காவை ஒரு சரிந்து வரும் சக்தியாகக் காண்கிறது என்று ஒரு செய்தியாளர் தெரிவித்த கருத்திற்கு கேட்ஸ் விடையிறுத்தார். கேட்ஸின் பதில் பெய்ஜிங்கை மட்டும் இலக்கு கொண்டிருக்கவில்லை, சீனாவுடன் நெருக்கமான அரசியல், இராணுவத் தொடர்புகளை வளர்க்க விரும்பும் எந்த நாட்டிற்கும்தான் இலக்கைக் கொண்டிருந்தது. வாஷிங்டன் ஆசிய-பசிபிக் பகுதியில் அது கொண்டுள்ள மேலாதிக்க நிலைமையை அமைதியாக பெய்ஜிங்கிற்கு விட்டுக் கொடுத்துவிடும் என்ற கருத்தையும் அவர் நிராகரித்தார்.

சீனாவின் ஏற்றத்தை ஏற்பது என்பதற்கு முற்றிலும் மாறாக, வாஷிங்டன் ஆக்கிரோஷத்துடன் ஆசியாவில் பெய்ஜிங்கின் செல்வாக்கைக் குறைக்கத்தான் முற்பட்டுள்ளது. கேட்ஸின் கருத்துக்கள் 1970 களில் இருந்து சரிந்து வரும் அமெரிக்க நிலைப்பாட்டை ஈடுசெய்வதற்காக இராணுவ வழிவகைகளை அது மேற்கொள்ள இருக்கும் தயாரிப்புக்கள் பற்றிய அடையாளம் ஆகும். இன்று அமெரிக்க முதலாளித்துவம் ஐயத்திற்கு இடமின்றி ஒரு வரலாற்றுச் சரிவில் உள்ளது. பெருகிய பொதுக் கடன்களும், தொழில்துறைச் சரிவும் நிறைந்துள்ளன. மேலும் அது 1930களுக்குப் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிச் சகதியிலும் ஆழ்ந்துள்ளது.

இராணுவரீதியான கருத்துப் பறிமாற்றங்களுக்காக கேட்ஸ் உத்தியோகபூர்வமாக சீனாவிற்குப் பயணித்துக் கொண்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் ஒபாமா நிர்வாகம் தைவானுக்கு 6.4 பில்லியன் டொலர் ஆயுத விற்பனை செய்தபோது பெய்ஜிங் இப்பறிமாற்றங்களை முறித்திருந்தது. இவருடைய கருத்துக்கள் 2009 நடுப்பகுதியில் அமெரிக்காமீண்டும் ஆசியாவிற்கு வந்துள்ளது” —அதாவது மூலோபாயமுறை மற்றும் இராஜதந்திர முறையில் சீனாவைத் தீவிரமாகக் கட்டுப்படுத்துவது-- என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டன் அறிவித்ததைத் தொடர்ந்து 18 மாதங்களாக நிலவியிருந்த அழுத்தங்களின் தீவிரத் தன்மையை உயர்த்திக் காட்டுகின்றன

தைவானுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ஒபாமா திபெத்தின் தலாய் லாமாவை, சீனாவின் வலுவான எதிர்ப்புக்களையும் மீறி சந்தித்தார். ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பில்  அமெரிக்காவானது தென் சீனக் கடல் பகுதியில்சுதந்திரமாக கடல் பயணத்தைக் கொள்ளும் உரிமைகொண்டுள்ளது என்று கிளின்டன் அறிவித்ததைத் தொடர்ந்து அழுத்தங்கள் அதிகமாயின, அவர் தென் சீனக் கடலிலுள்ள தீவுகள் குறித்து பெய்ஜிங் கொண்டுள்ள ASEAN அமைப்பு அரசுகளுடனான மோதல்களுக்கும் வலுவான ஆதரவைக் கொடுத்திருந்தார்.

செப்டம்பர் மாதம், வாஷிங்டன் பெய்ஜிங்குடனான டோக்கியோவின் இராஜதந்திர மோதலிலும் உட்குறிப்பான ஆதரவைத் தெரிவித்தது. இது ஜப்பானிய கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர் மோதலுக்கு உட்பட்ட சென்காகாகு/டையோயு தீவுக் கூட்டங்களில் ஒரு சீன மீன்பிடிக்கும் கப்பல் தளபதியைக் கைது செய்தபின் நடந்ததுநவம்பர் 23ம் திகதி இரு கொரியாக்களுக்கும் இடையே குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதைடுத்து, வாஷிங்டன் தென் கொரியாவிற்கு ஊக்கம் அளித்து, டிசம்பர் மாதம் வட கொரியாவிற்கு அருகே தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளை தென் கொரியாவுடன் இணைந்து நடத்தியது. மேலும் வெளிப்படையான மோதல் என்னும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக சீனா எடுத்துக்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகளையும் நிராகரித்தது.

கேட்ஸின் பயணத்தின்போது இந்த நடைபெறுகின்ற அழுத்தங்கள் மேலோங்கி நின்றன. கேட்ஸின் வருகைக்கு சற்று முன்னதாக அதனுடைய புதிய “Stealth” போர் விமானம் J-2- ன் புகைப்படங்களை சீனா அனேகமாக கசிய விட்டிருந்தது. இந்த ஜெட் விமானம் இராணுவப் பகுப்பாய்வாளர்களால் நவீன US F-22 Raptor போர் விமானத்திற்கு போட்டியாக ஸ்டெல்த் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பரந்த அளவில் கருதப்படுகிறது. இப்புகைப்படங்கள் அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் கேட்ஸ் சீனாவின் இராணுவக் கட்டமைப்பைகுறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளார்அல்லதுதவறாகக் கணித்துள்ளார்என்ற குறைகூறல்களை எழுப்ப வைத்துள்ளது. 2009ல் அவர் சீனாவினால் 2020க்கும் முன்னால் ஸ்டெல்த் ஜெட் விமானத்தைத் தயாரிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

இதே விமானச் செய்தியாளர் கூட்டத்தில் சீனாவின் J-20 கள் மற்றும் விரைந்து செல்லும் ஏவுகணைகளைப் பற்றியும் கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்: “நம்முடைய திறன்களை சிலவற்றை ஆபத்திற்கு உட்படுத்தும் திறனை அவர்கள் தெளிவாகக் கொண்டுள்ளனர். நாம் அவற்றின்மீது கவனம் செலுத்த வேண்டும். நம் திட்டங்கள் மூலம் உரிய முறையில் அவற்றிற்கு விடையிறுக்க வேண்டும்.” சீனாவின் புதிய இராணுவத் திறனுக்கு எதிராக இராணுவத் திறன்கள் வளர்ச்சிக்குப் பென்டகன் முன்னுரிமை கொடுக்கும் என்றும் கேட்ஸ் கூறினார்.

பெய்ஜிங்கில் கேட்ஸ் சீனாவின் பாதுகாப்பு மந்திரி லியங் குவங்லியை நேற்று சந்தித்தார். ஆனால் உறவுகள் கலகலப்பாக இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ உறவுகளை மீண்டும் நிறுவுவதில் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கோள்ளப்பட்டன. மேலும் தைவானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விற்றது குறித்து சீனாவின் கவலைகளை மீண்டும் லியங் எழுப்பினார்அதுதான் உறவுகள் முறிவதற்குக் காரணமாக இருந்ததது.” தைவானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை என்பது சீனாவின் அடிப்படை நலன்களைப் பற்றிய கவலைகளை தீவிரமாகச் சேதப்படுத்தியுள்ளது. அது மீண்டும் நடக்கக்கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்என்று அவர் அறிவித்தார்.

சீனாவில் கேட்ஸ் இருக்கும்போது தன்னுடைய வலிமையையும் காட்ட பென்டகன் விரும்பியது. இதையொட்டி அது ஜப்பானிலுள்ள ஓகினாவாவில் 15, F-22 போர் விமானங்களை இந்த வாரம் முதல் நான்கு மாதங்களுக்கு நிலைப்படுத்தும் என்று அறிவித்துள்ளது. இதைத்தவிர, அமெரிக்க அணுசக்தியால் இயக்கப்படும் விமானங்களைச் செலுத்தக்கூடிய USS Carn Vinson அதனுடன் இணைந்துள்ள போர்க் கப்பல் குழுவும் ஜப்பானில் திங்களன்று ஜப்பானிய கடற்படையுடன் கூட்டாகப் பயிற்சிகளை நடத்த வந்துள்ளது. USS Carl Vinson , தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளில் சமீபத்தில் தொடர்பு கொண்டிருந்த USS George Washington க்குப் பதிலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வெள்ளியன்று தென் கொரியாவிற்கு கேட்ஸ் செல்லும்போது, USS Carl Vinson பதட்டமுடைய மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தும். சீனா முன்னதாகவே மஞ்சள் கடலில் அமெரிக்க விமானங்களை இயக்கும் கப்பல்கள் நிலைநிறுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளது. ஆனால் இது வாஷிங்டனால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கன்சர்வேடிவ் நாளேடான Sankai Shimbun   கடந்த வாரம் வடகிழக்கு ஆசியாவில் போர்க் குழு தென்சீனக் கடலுக்குதீவிரமாக அதிகரிக்கும் சீனக் கடற்படையைக் கட்டுப்படுத்தசெல்லும் என்று தகவல் கொடுத்திருந்தது.

சீன ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள் சீனாவின் கொல்லைப் புறத்தில் அமெரிக்க இராணுவப் பயிற்சிகள் நடத்துவதை எதிர்கொள்ளும் விதத்தில் கூடுதல் இராணுவச் செலவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. சீனத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மேஜர் ஜேனரல் ஜியாங் லூமிங் Study Times  ல் போனவாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் பெய்ஜிங் நிரந்தரமாக அதன் இராணுவச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமென உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதே பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பேராசிரியர் லியு மிங்பு கடந்த ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டு “21ம் நூற்றாண்டில் உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுடன் போராடுவதற்குசீனா தயாரித்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோ ஜனவரி 19 அன்று அமெரிக்காவிற்கு செல்வதாக உள்ளார். ஒரு சுமுகமான வருகையாக இருக்க வேண்டும் என்பதற்காக பெய்ஜிங் வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சியை வாஷிங்டனுக்குக் கடந்த வாரம் ஜனாதிபதி ஒபாமா மற்றும் கிளின்டன் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க அனுப்பியது. ஒபாமா நிர்வாகம் சீன ஜனாதிபதி முக்கிய சலுகைகளைக் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுக்க இப்பயணத்தைப் பயன்படுத்தும் என்பதை ஏற்கனவே தெளிவாக்கியுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் கடந்த புதன்கிழமை ஒரு முக்கியமான கருத்தாக, சீன நாணயத்தை விரைவில் மறு மதிப்பீடு செய்வதற்கான கோரிக்கையை ஒபாமா முன்வைப்பார் என்பதாகும்இது சீனத் தொழில்துறையில் பல பிரிவுகளைப் பேரழிவிற்கு உட்படுத்திவிடும். “மனித உரிமைகள்”, கொரிய அழுத்தங்கள்  உட்பட ஏனைய பதட்டமான பிரச்சினைகளிலும் ஹுவிற்கு ஒபாமா அழுத்தம் கொடுப்பார் என்று கிப்ஸ் குறிப்புக் காட்டியுள்ளார். தென் கொரியாவை கடின நிலைப்பாட்டை மேற்கொள்ள ஊக்கம் கொடுத்துள்ள வகையில், அமெரிக்கா பலமுறையும் சீனாவை வட கொரியாவின்முரட்டுத்தனநடவடிக்கை எனக் கூறப்படுவதைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றதற்காக குறைகூறியுள்ளது.

கேட்ஸ் பெய்ஜிங்கிற்குப் பயணித்துள்ளது ஒபாமா நிர்வாகமானது சீனாவுக்கு இணக்கமாக நடந்து கொள்ளும் விருப்பம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மாறாக அமெரிக்கா சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்க்கும் வகையிலும் ஆசியாவில் அதன் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையிலும் அதன் ஆக்கிரோஷ நடவடிக்கையை தொடரும்.