சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Wall Street celebrates record profits

வோல் ஸ்ட்ரீட் சாதனையளவு இலாபங்களைக் கொண்டாடுகிறது

Tom Eley
18 January 2011

Use this version to print | Send feedback

வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஜேபிமோர்கன் சேஸிசின் 2010 இலாப அறிக்கை, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு முந்தைய பழைய நல்ல நாட்கள் மீண்டும் திரும்பியதற்காக, அமெரிக்க பணக்காரர்களுக்கு ஒரு கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வாக ஆகியுள்ளது. ஜேபிமோர்கனின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டெமொன், வங்கியின் சாதனையளவு இலாபங்கள் பரந்துபட்ட பொருளாதார மீட்சிக்கு ஒரு சான்றாக இருப்பதாக அறிவித்த போது, நிதியியல் மேற்தட்டின் பொதுவான மனோநிலையை தொகுத்தளிப்பதாக இருந்தது. அதனோடு தொடர்ச்சியாக அவர் கூறுகையில், “எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்,” என்றார்.

பெருமந்த நிலைக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான சமூக நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது ஊடகங்களிடமிருந்தோ எவ்வித எதிர்கருத்தும் இல்லாமல் இம்மாதிரி பேச முடிகிறது என்ற அடிப்படை உண்மையானது, மக்களிடமிருந்து நவீனகால பிரபுத்துவத்தினரைப் பிரித்திருக்கும் பெரும் பிளவின் ஒரு வெளிப்பாடாக உள்ளது.

உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 10 சதவீதத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது; பசியும் வறுமையும் வானளாவி பறந்து கொண்டிருக்கிறது; வங்கிகளால் முன்னில்லாத அளவிற்கு வீடுகள் ஜப்தி செய்யப்படுகின்றன; வீட்டுமதிப்புகளின் வீழ்ச்சியால் வீடுகள் மீதான செல்வவளம் நாசமாக்கப்பட்டு வருகிறது; கூலிகள் சரிந்து வருகின்றன; நாடு முழுவதும் பள்ளிகளின் கதவடைப்பு, சமூக சேவைகளில் வெட்டுக்கள் என்றிருக்கும் இத்தகைய நிலைமைகளின் கீழ்இதுபோன்ற கருத்துக்கள், ஒபாமா நிர்வாகத்தையும், இரண்டு அரசியல் கட்சிகள், காங்கிரஸ் மற்றும் ஏனைய அனைத்து அரசு அமைப்புகளையும் தனது பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்ற அறிவில் தெளிவாக இருக்கும் ஒருவரிடம் இருந்து மட்டும்தான் வெளிவர முடியும்.

ஜேபிமோர்கனின் அறிவிப்பு, வருவாய் திரட்டிய வார (a week of earnings reports) முடிவுகளோடு தொடங்கியது. 2010 ஆம் ஆண்டு அமெரிக்க வங்கிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஒரு சாதனையளவைத் தொட்ட ஆண்டாக இருந்தது என்பதை அது எடுத்துக்காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வங்கித்துறை ஜாம்பவான் 2009இல் 48 சதவீத இலாப உயர்வையும், 2010 இன் நான்காம் காலாண்டில் அதற்கு முந்தைய அதே காலாண்டை விட 47 சதவீத உயர்வையும் அறிவித்தது. ஜேபிமோர்கான் ஆண்டு நிகர இலாபமாக 17.4 பில்லியன் டாலரை ஈட்டியது. இது பொலிவியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமான அளவாகும். நான்காம் காலாண்டில் அதன் செயல்பாடானது, பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குழுமம் மற்றும் வெல்ஸ் பார்கோ உட்பட (இவை இந்த வாரம் அவற்றின் 2010 முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளன) ஏனைய முக்கிய வங்கிகளின் பங்குகளைத் தூக்கி நிறுத்தியது.

நியூயோர்க் டைம்ஸ் அறிவித்தது, “நிறுவனம் முழுவதும், வங்கியாளர்களும் ஜேபிமோர்கனின் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச இலாபம் ஈட்டிய அந்த ஆண்டின் ஆதாயங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.” 102 பில்லியன் டாலருக்கும் மேலான வருவாயில் சுமார் 28.1 பில்லியன் டாலர் தொழிலாளர்களின் இழப்பீட்டைச் சரிக்கட்ட ஒதுக்கப்பட்டுள்ளது, “அதில் பெரும்பகுதி போனஸாக அளிக்கப்பட உள்ளது.” ஜேபிமோர்கானின் வங்கி முதலீட்டு பிரிவிலுள்ள தொழிலாளர்கள் 2010க்காக ஏறத்தாழ 370,000 டாலருக்கு நெருக்கமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள், ஆனால் உயர் அதிகாரிகள் இதையும்விட பல மில்லியன் டாலர் போனஸ் காசோலைகளை எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.”

இந்த நிதியாண்டின் எதிர்பாரா இலாபம் (profit windfall), அமெரிக்க பெருநிறுவன இலாபங்களின் ஒரு பரந்துபட்ட எழுச்சியின் ஒரு பாகமாக உள்ளது. 1988க்குப் பின்னர், மிதமான இலாப வளர்ச்சியைவிட மூன்று மடங்கிற்கு நெருக்கமாக, நான்காம் காலாண்டில் 27.1 சதவீதம் உயர்ந்திருப்பதாக வல்லுனர்கள் கணிக்கின்றனர். இது 2010இன் முதல் மூன்று காலாண்டுகளில் அறிவிக்கப்பட்ட, சாதனையளவிலான ஆண்டுக்கு-ஆண்டு இலாப உயர்வுகளின் (37 சதவீதம், 51 சதவீதம் மற்றும் 92 சதவீதம்) சுவடையொட்டி வருகிறது.

பரந்துபட்ட மக்களுக்கு, பல்வேறு விதமான பதிவுக்குறிப்புகள் மட்டும் தான் இருக்கின்றன. கடந்த 20 மாதங்களாக இடைவெளியின்றி உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 9 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. இது பெருமந்த நிலைக்கும் பின்னால் ஏற்பட்டிருக்கும் மிக நீண்ட இடைவெளியாகும். 1928 மற்றும் 1933 க்கு இடையே மந்தநிலையின் போது நிகழ்ந்த அதிகபட்ச 25.9 சதவீத சரிவையும் தாண்டி, ஜூன் 2006இல் இருந்து வீடுகளின் மதிப்பு 26 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீடுகள் மீதான செல்வவளம் தலைகுப்புற சரிவடைந்துள்ளது; உத்தியோகபூர்வ வறுமை விகிதம் 1960களின் மத்தியிலிருந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஆரம்பத்திலிருந்தே, பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி நிதியியல் உயர்தட்டுக்களுக்குச் சாதகமாக, வர்க்க உறவுகளைப் பரந்தளவில் மறுகட்டுமானம் செய்வதே ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்பற்றோரை வேலையில் அமர்த்த தேவையான எந்தவிதமான முக்கிய முறைமைகளையும் ஒதுக்கிவிட்டு, ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்குப் பாய்ச்சுவதை மேற்பார்வையிட்டு வரும் ஒபாமா, வரிசெலுத்துவோரின் நிதியைக் கொண்டு பிணையெடுக்கப்பட்ட அந்த வங்கிகளின், கொடுப்பனவுகளை வரையறுக்கும் சட்டங்களை நீக்குவதிலும் தலையீடு செய்தார். ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லரின் அரசாங்க பிணையெடுப்பின் ஒரு பகுதியாக, புதிய வாகனத்துறை தொழிலாளர்களின் கூலியில் 50 சதவீத வெட்டைத் திணித்ததன் மூலம், நாடு முழுவதிலும் சம்பள வெட்டு பிரச்சாரத்திற்கு சமிக்ஞை காட்டினார்.

பின்னடைவினால் வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறையை முகங்கொடுத்து வரும் மாநிலங்களுக்கும், உள்ளாட்சிகளுக்கும் கணிசமான உதவிகளை அளிக்க மறுத்துள்ள இந்த நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் இதர பொத்துறை தொழிலாளர்களின் வேலைகள், சம்பளங்கள் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களை மௌனமாக ஆதரிப்பதுடன், சமூக சேவைகளிலும் வெட்டுக்களை ஊக்குவித்து வருகிறது.

பெருநிறுவனங்களுக்கு தோற்றப்பாட்டளவில் வட்டியில்லா கடன்களைக் அளிக்கவும், பெருநிறுவனங்களின் மற்றும் பங்குச்சந்தையின் இலாபங்களை உயர்த்தவும், வட்டிவிகிதங்களைப் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக தக்க வைத்து வரும் மத்திய வங்கிகூட்டமைப்பு, பில்லியன் கணக்கான டாலர்களையும் அச்சடித்திருக்கிறது. 2009 மார்ச்சில் இருந்து, அமெரிக்க பங்குச்சந்தை குறியீடு சுமார் 80 சதவீதத்திற்கு நெருக்கமாக உயர்ந்துள்ளது. அரசாங்க மானியங்கள் மற்றும் அதன் சொந்த செலவின வெட்டு நடவடிக்கைகளின் விளைவாக, பெருநிறுவன அமெரிக்கா பல மில்லியன் டாலர் பணக்கையிருப்பைக் குவித்துக் கொண்டுள்ளது. ஆனால் அவைஅரசாங்கத்திடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதிலும், அடிப்படை உற்பத்தியை விரிவாக்குவதிலும் பணக்குவியலைப் பயன்படுத்த மறுக்கின்றன.

பெரும்வங்கிகள், பொருளாதாரத்தில் அவற்றின் அதிகாரத்தை இறுக்கிப் வைத்திருப்பதற்கே அரசாங்க கொள்கைகள் உதவுகின்றன. மத்திய வங்கிகூட்டமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, ஐந்து வருடங்களில் வெறும் ஐந்து வங்கிகள்பேங்க் ஆப் அமெரிக்கா, ஜேபிமோர்கன் சேஸ், சிட்டிகுழுமம், வெல்ஸ் பார்கோ மற்றும் கோல்டுமென் சாச்ஸ் ஆகியவைதற்போது 8.6 ட்ரில்லியன் டாலர் சொத்துக்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றன, அல்லது மொத்த நிதியியல் நிறுவனங்களின் கையிருப்புகளில் 13.3 சதவீதம் இவற்றிடம் உள்ளன. அமெரிக்க மொத்த வைப்பீடுகளின் (deposits) 33 சதவீதமும், உள்நாட்டு அடமான மூலங்களில் பாதிக்கு மேற்பட்டதும் மூன்று மிகப்பெரிய வர்த்த வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.

வாகனத்துறை நடவடிக்கை குழுவின் தலைவராக ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வோல் ஸ்ட்ரீட் அங்கத்தவரான ஸ்டீவன் ராட்னர், அவருடைய Overhaul எனும் புத்தகத்தில், 2008 மற்றும் 2009இன் நிதியியல் நெருக்கடி மாற்றிக்காட்டப்படுவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அவர் குறிப்பிடுகையில், “ராஹ்ம் இமானுவேல் [வெள்ளை மாளிகையின் முதன்மை அதிகாரி] கூறும், 'ஒரு நல்ல நெருக்கடி ஒருபோதும் வீணாக்கப்படக்கூடாது,' என்பதை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு; அதிகரித்து வரும் பொருளாதார பேரழிவுகளை நாம் மாற்றங்களை எட்டுவதற்கும், தியாகங்களுக்கும் பயன்படுத்தினோம்; இதுவே வேறு சூழல்களில் இதை செய்ய சாத்தியப்பட்டிருக்காது,” என்று எழுதுகிறார்.

தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட இருக்கின்றன. ஒபாமாவின் வலதுசாரி கொள்கைகள், நவம்பர் தேர்தல்களில் ஜனநாயக கட்சி பெற்ற வாக்குகளில் வெளிப்பட்டன. 2008இல் ஒபாமாவிற்கு வாக்களித்த மில்லியன் கணக்கான இளைஞர்களும், தொழிலாள வர்க்க வாக்காளர்களும் நவம்பர் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்தே ஒதுங்கி கொண்டனர். இருகட்சிகளின் பரஸ்பர ஒத்துழைப்பு (bipartisanship) என்ற பெயரில் இன்னும் வலதிற்கு திரும்புவதும், அதன் பெருநிறுவனம்-சார்ந்த கொள்கையை வெட்கமில்லாமல் இன்னும் அதிகமாக தொடர்வதும் தான் நிர்வாகத்தின் விடையிறுப்பாக இருக்கிறது.

சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் மருத்துவ பராமரிப்பு, அரசுத்துறை தொழிலாளர்களின் பணிநீக்கங்கள் மற்றும் சம்பள வெட்டுக்கள், நுகர்பொருட்கள் மீது புதிய வரிகள், தொழிலாளர் மருத்துவ காப்பீடு ஆகியவற்றில் ஒபாமாவின், தேசிய நிதிநிலை கவனிப்பு மற்றும் சீரமைப்பு குழு வெட்டுக்களை அறிவித்த போதுஆனால் பெருநிறுவன வரிகளிலும், பணக்காரர்கள் மீதான வருமான வரிகள் மீதும் பெரும் வெட்டுக்கள் இதில் சேர்க்கப்பட்டிருந்தனகிடைத்த வாக்குகள் எண்ணும் அளவிற்குக் கூட இல்லை.

ஒபாமா பின்னர் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டிலான 111வது காங்கிரஸ் மூலமாக ஒரு வரிச்சலுகையைக் கொண்டு வந்தார். அது புஷ்-சகாப்தத்தில் பணக்கார அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வெட்டுக்களை விரிவுபடுத்தியது; அத்துடன் கோடீஸ்வரர்களின் எஸ்டேட்களுக்கும் பெரும் வரிவிகித குறைப்பையும் அளித்தது. முன்னாள் கிளிண்டன் நிர்வாகத்தில் வர்த்தகத்துறை செயலாளராக இருந்தவரும், ஜேபிமோர்கன் சேஸ் நிர்வாகியுமான வில்லியம் டேலெவையும் அவருடைய புதிய முதன்மை இராணுவ தளபதியாக நியமித்ததன் மூலம், பெருநிறுவன பட்டியலை முன்னெடுக்க அது தயாராக இருப்பதை வெள்ளைமாளிகை இன்னும் விளக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவு சமூகத்திற்குள் நிலவும் அடிப்படை வர்க்கப் பிளவுகளை மேலும் மேலும் தெளிவாக மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. ஆளும் உயர்தட்டுக்களுக்கும், பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கும் இடையிலிருக்கும் பிளவு, அமெரிக்காவைப் போன்று வேறெங்கும் இந்தளவிற்கு இருக்க முடியாது. ஒபாமா நிர்வாகமும், காங்கிரஸூம், பெருநிறுவன அமைப்புகளும் அல்லது ஊடகங்களும் வேலைவாய்ப்பற்றோரின் துயரங்களுக்கும், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் பல மத்தியதட்டு வர்க்க இளைஞர்களின் ஒட்டுமொத்த தலைமுறையின் எதிர்கால வாய்ப்புகள் சீரழிவதையும் பார்த்து வெறுமனே போலியான அக்கறை காட்டுகின்றன.

ஜனநாயக கட்சிக்கு அழுத்தம் கொடுத்து சீர்திருத்தங்களைச் செய்து விடமுடியும் என்ற அனைத்து வாதங்களும் திவாலாகி போய்விட்டதை ஒபாமா நிர்வாகம் நிரூபிக்கிறது. தொழிற்சங்கங்களைப் பொறுத்த வரையில், நெருக்கடி முழுவதிலுமே அவர்கள் உழைக்கும் மக்களின் எதிப்பை, அவர்களின் வாழ்க்கை தரங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒடுக்க, அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கிக் கொண்டு வெளிப்படையாகவே பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டாளிகளாக செயல்பட்டு வருகிறார்கள். நிதியியல் பிரபுத்துவத்தின் வெளிப்படையான கர்வமும், அசட்டைத்தனமுமே வரவிருக்கும் தீவிர சமூக போராட்டங்களுக்கு ஒரு முன்னறிவிப்பாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கும், இந்த இலாப அமைப்புமுறைத் தூக்கியெறிந்துவிட்டு சோசலிசத்தை ஸ்தாபிக்க அதை ஒன்றுதிரட்டுவதற்கும், தேவையான புரட்சிகர தலைமையையும், முன்னோக்கையும் அபிவிருத்தி செய்வது தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

சோசலிச சமத்துவ கட்சி, சோசலிசத்துக்கான போராட்டம் குறித்து விவாதிக்க இப்போது தொடர்ச்சியான பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணருபவர்கள், இந்த கூட்டங்களில் பதிவு செய்து கொண்டு, அதில் கலந்துகொள்ள திட்டமிடுமாறு நாங்கள் ஒவ்வொருவருக்கும் அழைப்புவிடுக்கிறோம்.