சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

“A book that fails to meet the basic standards of historical scholarship”

The American Historical Review discredits Robert Service’s biography of Leon Trotsky

வரலாற்று ஆய்வுக்கான அடிப்படைத் தகுதிகளையும் கூட பூர்த்தி செய்யாத ஒரு நூல்

ரொபேர்ட் சேர்விஸ் எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச்சரித நூல் மதிக்கத்தகாதது என்பதை அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூ கூறுகிறது

The Political Committee of the Socialist Equality Party (US)
28 June 2011

Use this version to print | Send feedback

அமெரிக்காவின் மிகப் பழமையான மிகக் கவுரவம் கொண்ட கல்வித்தளச் சுற்றிதழ்களில் ஒன்றான அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூ தனது ஜூன் 2011 பதிப்பில் இரண்டு புத்தகங்கள் குறித்த ஒரு விமர்சனரீதியான ஆய்வை வெளியிட்டுள்ளது: ஒன்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியரான ரொபேர்ட் சேர்விஸ் ட்ரொட்ஸ்கியை கண்டனம் செய்யும் வகையில் எழுதிய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு நூல், இன்னொன்று அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவுக்கும் தலைவராய் இருக்கும் டேவிட் நோர்த் எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து (In Defense of Leon Trotsky) என்கின்ற நூல். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சர்வதேச உறவுகளுக்கான துறையில் ஒரு விரிவுரையாளராகவும் ஹூவர் இன்ஸ்டியூட்டில் ஆய்வாளராகவும் இருக்கும் வரலாற்றாசிரியரான பெர்ட்ராண்ட் படேனோட் (Bertrand Patenaude) தான் இந்த கூட்டுத் திறனாய்வின் ஆசிரியர். இவர், ட்ரொட்ஸ்கி: ஒரு புரட்சியாளனின் வீழ்ச்சி என்கின்ற 2009ல் ஹார்பர் கோலின்ஸ் வெளியிட்ட ஒரு புத்தகத்தின் ஆசிரியரும் கூட.

சேர்விஸ் எழுதிய வாழ்க்கைசரிதம் 2009ல் பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. ட்ரொட்ஸ்கி மீதான இப்புத்தகத்தின் விடாப்பிடியான தாக்குதல் சேர்விஸுக்கு பிற்போக்குத்தனமான பிரிட்டிஷ் ஊடகங்களிடம் இருந்து பாராட்டைப் பெற்றுத் தந்தது, ஒரு திறனாய்வில் இந்த வாழ்க்கை சரிதம் ட்ரொட்ஸ்கியின்இரண்டாவது படுகொலை என விவரிக்கப்பட்டிருந்தது. இந்த இழிவான பாராட்டுகளை உற்சாகமிழக்கச் செய்வதற்கு அந்த ஆசிரியர் எதனையும் செய்யவில்லை. 2009 அக்டோபரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ரொபேர்ட் சேர்விஸ் அறிவித்தார்: “பழைய ட்ரொட்ஸ்கி பையனுக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது, அந்தப் பையனை ஐஸ் கோடரி முழுமையாகக் கொல்லவில்லை என்றால், அந்த வேலையை நான் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.”

நோர்த்தின் லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து நூல் மேஹ்ரிங் புக்ஸ் மூலம் 2010ல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் கணிசமான பகுதி சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச்சரிதத்திற்கான ஒரு விரிவான மறுப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தனது திறனாய்வுக் கட்டுரையில் படேனோட், ட்ரொட்ஸ்கி குறித்த சேர்விஸின் சித்தரிப்பின் வரலாற்றுத் துல்லியத்தின் மீதான ஒரு ஆய்வை எடுத்துக் கொள்கிறார், இந்த எல்லைக்குள்ளாக, இந்த வாழ்க்கைச்சரிதத்தின் மீதான நோர்த்தின் தாக்குதலின் செல்தகைமையையும் அவர் ஆராய்கிறார். 

இந்த சர்ச்சையில் படேனோடின் ஆய்வின் முடிவு சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச்சரிதத்துக்கான தயக்கமற்ற கண்டனத்தையும் நோர்த்தின் விமர்சனத்திற்கான வெளிப்படையான ஏற்றுக்கொள்ளலையும் கொண்டிருக்கிறது. கல்வியாளர்களுக்கான சுற்றிதழ்களில் விமர்சனங்கள் பொதுவாக எச்சரிக்கையான மனம்நோகச் செய்யாத வகையிலேயே வழங்கப்படுவதைக் கண்டிருக்கக் கூடியவர்களுக்கு, ஒரு வாழ்க்கைச்சரித ஆசிரியராகவும் வரலாற்றாசியராகவும் சேர்விஸ் மீதான படேனோடின் மதிப்பீட்டின் கழிவிரக்கத்திற்கு இடம்தராத கூர்மை அதிர்ச்சியாக இருக்கும்.

சேர்விஸ் எழுதிய வாழ்க்கைசரிதத்தின் நோக்கத்தை சுருங்க விவரிப்பதில் இருந்து படேனோட் ஆரம்பிக்கிறார்: ”ஒரு வரலாற்றுப் பிரபலமாகவும் ஒரு மனிதராகவும் ட்ரொட்ஸ்கி மீதான மதிப்பை முழுமையாய் இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் தான் அவர் [சேர்விஸ்] கிளம்புகிறார் எனத் தோன்றுகிறது. அவர் சித்தரிக்கும் ட்ரொட்ஸ்கி அகந்தையானவராகவும், தற்குறித்தனமான சிந்தனையுடையவராகவும் சுயசிந்தனைகளிலேயே உழலக் கூடியவராகவும் இருப்பது மட்டுமல்ல, அவர் ஒரு வெகுஜன மக்களைச் சாகடிக்கும் கொலைகாரராக, ஒரு பயங்கரவாதியாக, ஒரு இரக்கமில்லாத இருதயமில்லாத மகனாக, கணவனாக, தந்தையாக, மற்றும் தோழராக, ரஷ்யப் புரட்சியிலே தனது பாத்திரம் குறித்த பதிவில் பொய்யுரைத்து தலைமுறை தலைமுறைகளாக வாசகர்களைத் தொடர்ந்து முட்டாளாக்கி வருகின்ற (இது துறவிகளின் வரலாற்றை எழுதும் இசாக் ட்யூஷர் அவிழ்த்து விட்ட புரளி) எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான ஒரு புத்திஜீவித்தன அற்பமனிதமானராகவும் இருக்கிறார். ஒட்டுமொத்தமான படைப்பாக்கத் திறனின் புத்திஜீவித்தன நேர்மையையும் கேள்விக்குரியதாக்கும் மட்டத்திற்கு வரலாற்றுப் பதிவுகள் மீதான எண்ணற்ற திரிபுகளையும் உண்மைகள் குறித்த அப்பட்டமான தவறுகளையும் சேர்விஸ் செய்கிறார்.”  

படேனாட் தொடர்கிறார்:

அதன்பின்னர் தான் டேவிட் நோர்த் வருகிறார். டேவிட் நோர்த் ஒரு அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதி, இவரது நூல் சேர்விஸின் தொகுதி மற்றும் இயான் தாட்சர் மற்றும் ஜெஃப்ரி ஸ்வேய்ன் எழுதிய முந்தைய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை சரிதங்கள் ஆகியவை மீதான திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாய் இருக்கிறது. (அவர் எனது 2009 புத்தகமானட்ரொட்ஸ்கி: ஒரு புரட்சியாளரின் வீழ்ச்சி” (Trotsky: Downfall of a Revolutionary) புத்தகத்தை குறிப்பிடவில்லை.) நோர்த்தின் ட்ரொட்ஸ்கிச பின்னணியைக் கொண்டு பார்க்கையில் சேர்விஸுக்கு எதிரான அவரது விவரிப்புகளை மிகைப்படுத்தல்களாக சந்தேகப்பட நியாயம் இருக்கிறது. ஆனால் நோர்த்தின் புத்தகத்தை கவனமாய் ஆய்வு செய்தால் சேர்விஸ் குறித்த அவரது விமர்சனம், ட்ரொட்ஸ்கிச அறிஞரான பருக் நீ-பாஸ் (Baruch Knei-Paz) பின்னட்டையில் எழுதியுள்ள புகழுரையில் குறிப்பிடுவதைப் போல, இதுவிரிவானதாக, கவனத்துடன் செய்யப்பட்டதாக, திறம்பட்ட வாதத்துடனான, உடைத்து தூள்தூளாக்குவதாய் இருப்பதைக் காண முடியும்.

படேனோடின் திறனாய்வு தொடருகையில், நோர்த்தின் விமர்சனத்தின் முக்கிய இழைகளைப் பின் தொடர்ந்து, சேர்விஸின்ஒட்டுமொத்தப் படைப்புநோக்கத்தின்” ”புத்திஜீவித்தன நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கு அவர் மேலும் வலுச்சேர்க்கிறார். இளம் ட்ரொட்ஸ்கியை தனது முதல் மனைவியை இரண்டு குழந்தைகளுடன் நட்டாற்றில் தவிக்க விட்டு ஓடிய மிருகத்தனமானவராக சேர்விஸ் தீயநோக்கத்துடன் சித்தரிப்பதை படேனோட் கோபத்துடன் நிராகரிக்கிறார். படேனோட் எழுதுகிறார், “உண்மையில் ரஷ்யாவில் ட்ரொட்ஸ்கியின் குடும்பம் முதல் மனைவியான சோகோலோவ்ஸ்கயா மற்றும் அவர்களது மகள்களுக்கு ஆதரவாய் உதவியது, அவர் பாரிய பயங்கரத்தின் (Great Terror) போது ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியாகத் தான் மரணிக்கச் சென்றார்.” 

ஒரு வரலாற்றாசிரியராக சேர்விஸின் அடிப்படைப் திறன் குறித்த ஒரு தாக்கம்மிக்க மதிப்பீட்டை படேனோட் வழங்குகிறார். “சேர்விஸின் புத்தகத்தில் இருக்கும் உண்மை குறித்த பிழைகளின் எண்ணிக்கை, நோர்த் கூறுவதைப் போல், நம்மைதிகைக்க வைக்கும் எண்ணிக்கையில் இருக்கின்றன. நான்கு டசினுக்கும் அதிகமானவற்றை நான் எண்ணிக் குறித்திருக்கிறேன்.” ஒருகுறிப்புதவிப் புத்தகமாக சேர்விஸின் நூல் முழுமையாய் நம்பத்தகாதது என்று அவர் உறுதிபடக் கூறுகிறார். ஒரு வரலாற்றாசிரியர் இன்னொருவரின் படைப்பின் மீது இதனை விடவும் தாக்கம்மிக்க ஒரு மதிப்பீட்டை கொடுக்க முடியுமா என சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. சேர்விஸ் எழுத்து அக்கறையற்ற விதத்தில் இருப்பதின் மீது தனது சொந்த வெறுப்பை வாசகர்கள் ஓரளவு புரிந்து கொள்ளச் செய்வதற்கு படேனோட் மேலும் கூறுகிறார்: ‘சமயங்களில் இந்தத் தவறுகள் அதிர்ச்சியடையச் செய்வனவாக இருக்கின்றன.”

உண்மைகளை சேர்விஸ் மோசமாக கையாளுவதென்பது இன்னும் ஆழமானதொரு பிரச்சினையைப் பிரதிபலிக்கிறது: ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகள் குறித்த அவரது அறியாமை மற்றும் அக்கறையின்மை. ”ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களில் அவரது அரசியல் சிந்தனைகளை ஒரு தீவிரமான வழியில் ஆய்வு செய்ய சேர்விஸ் தவறி விடுகிறார், அல்லது அவற்றுடன் பரிச்சயப்படுத்திக் கொள்ளவும் அவர் ஒருபோதும் அக்கறைப்பட்டதாய் தோன்றவில்லை.” கலாச்சாரம் தொடர்பாய் ட்ரொட்ஸ்கி உண்மையில் எதிராய் வாதாடிய கருத்தாக்கங்களுக்கும் கூட அவர் மீதே பழியைச் சுமத்தும் அளவுக்கு ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகளைத் தவறாய் சித்தரித்த சேர்விஸ் கலாச்சாரம் குறித்தட்ரொட்ஸ்கியின் மதிப்பீடுகளின் மோசமானதன்மையை தான் அம்பலப்படுத்தும் பாதையில் உண்மைகள் குறுக்கிட்டு விட அனுமதிக்கத் தயாராயில்லை என்பதை படேனோட் சுட்டிக் காட்டுகிறார்.

வாழ்க்கைவரலாறு விடயத்தில் சேர்விஸின் தனிநபர் தாக்குதல் மீது தனது கவனத்தைத் திருப்பும் படேனோட் அறிவிக்கிறார்: “தனது தரப்பை நிரூபணம் செய்வதற்கு எந்த வழியுமற்று, ட்ரொட்ஸ்கியை ஒரு வெறுக்கத்தக்க மனிதராக தனது வாசகர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக சேர்விஸ் மலிவான தாக்குதல்களையும் அவதூறான விவரிப்புகளையும் நம்பி நிற்கிறார்.” மாஸ்கோ விசாரணைகளில் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுதலை செய்த 1937 ஆம் ஆண்டின் டூவே கமிஷனை மதிப்பிழக்கச் செய்வதற்கான சேர்விஸின் முயற்சியைநடந்த உண்மைகளைத் திரித்து சித்தரிக்கப்படும் கேலிக்கூத்து என்று அவர் விவரிக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரக் கொடுங்கோலர்களாய் ஸ்ராலினின் பக்கத்தில் ட்ரொட்ஸ்கியை வைப்பதற்கான சேர்விஸின் போராட்டத்திற்கு தனது பரிகாசத்தை படேனாட் மறைக்கவில்லை. ஆனால் வரலாறு சேர்விஸுக்கு எதிராய் பேசுகிறது. “ஏனென்றால் ட்ரொட்ஸ்கி மெக்சிகோவில் 1940ல் ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்படுகிறார் என்று வரலாறு செல்வதால், சேர்விஸ் தனது வாசகர்களை நம்பச் செய்ய தட்டுத் தடுமாற வேண்டியதாகிறது.” படேனோட் உடைத்தெறியும் விளைவுடன் மேலும் கூறுகிறார்: “ஆனால் சூட்சுமமாய் மூளையிலேற்றும் வேலையும் தர்க்கமற்ற கருத்துகளும் சேர்விஸை அவ்வளவு தூரம் தான் கொண்டு வர முடிந்தது என்பதால் அவர் ஆதாரத்தை இட்டுக்கட்டியாக வேண்டியதாகிறது.” ”ஒரு உண்மையான புரட்சிகர அமெரிக்க இயக்கத்தை உருவாக்க பல்லாயிரக்கணக்கான ரஷ்யத் தொழிலாளர்களையும் விறகாய் எரிக்க தனக்கு விருப்பம் என்று ட்ரொட்ஸ்கி தம்பட்டம் அடித்துக் கொண்டதாக சேர்விஸ் கூறியதன் மீது கவனத்தைத் திருப்பும் படேனோட், “அப்பட்டமான பொய்திரிக்கும் வேலையில், நோர்த், சேர்விஸை கையும் களவுமாய் பிடிக்கிறார் என சுட்டிக் காட்டுகிறார்.

சேர்விஸின் அடிப்படை ஆராய்ச்சியில் இருக்கும் பாரிய பற்றாக்குறைகளுக்கு கவனம் செலுத்த படேனோட் அழைப்பு விடுக்கிறார். ட்ரொட்ஸ்கி தான் படுகொலை செய்யப்படுவதற்கு கொஞ்சம் முந்தைய காலத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஹவ்டன் நூலகத்தில் வைப்பு செய்த ஆய்வறிக்கைகளை சேர்விஸ் அதிகமாய் கண்டுகொள்ளவில்லை என அவர் குறிப்பிடுகிறார்.

படேனோட் தனது திறனாய்வை ஒரு தாக்குதல்மிக்க தீர்ப்புடன் முடிக்கிறார்: ” சேர்விஸ் எழுதிய ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைசரிதத்தைகூலிக்கு மாரடிக்கும் வேலையின் ஒரு துண்டு என நோர்த் அழைக்கிறார். கனமான வார்த்தைகள் தான், ஆனால் முழுக்க நியாயமான வார்த்தைகளே. வரலாற்று ஆய்வுத் தேர்ச்சியின் அடிப்படைத் தகுதிகளைக் கூட பூர்த்தி செய்யத் தோற்கும் புத்தகத்திற்கு ஹார்வர்டு பல்கலைக்கழக பதிப்பகம் தனது ஒப்புதல் முத்திரையை அளித்திருக்கிறது.”

சேர்விஸ் மீது படேனோட் தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை மலைக்க வைக்கும் அதே அளவுக்கு பதிலளிக்க முடியாததாகவும் இருக்கிறது. சேர்விஸின் புத்திஜீவித்தன நேர்மையின்மையையும் அறிவுத்துறைரீதியான தேர்ச்சியின்மையையும் அம்பலப்படுத்தும் இதனை மறுப்பதற்கு சேர்விஸ் விளக்கிக் காட்டத்தக்க எந்த உண்மைகளும் இல்லை.

பிற்போக்குத்தனமான பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டும் கல்வித்துறை சமுதாயத்தின் பெரும்பகுதியில் நிலவக் கூடிய சிடுமூஞ்சித்தனமான மற்றும் புத்திஜீவித்தனரீதியாய் கோழைத்தனமான சூழலை அனுகூலமாய் எடுத்துக் கொண்டும் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் மீதான தனது அவதூறான தூற்றல்கள் எல்லாம் எந்தச் சவாலையும் சந்திக்க வேண்டியிருக்காது என்று சேர்விஸ் அனுமானித்தார். அவரது பொய்களுக்கும் திரிப்புகளுக்கும் கவனத்தை திருப்ப ட்ரொட்ஸ்கிச இயக்கம் அழைப்பு விடுத்த போதிலும் கூட, யாருக்கு இதெல்லாம் கவனிக்க நேரம் இருக்கிறது? என்றே சேர்விஸ் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் தனது சொந்த சிடுமூஞ்சித்தனம் தான் உலகமெங்கும் இருக்கிறது என்று அனுமானிக்கிற தவறை சேர்விஸ் செய்தார். மாறும் புற நிலைமைகள் ட்ரொட்ஸ்கி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் பிற மாபெரும் மார்க்சிச புரட்சியாளர்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் மீது ஒரு புதிய ஆர்வத்தைக் கொண்டு வரும் என்பதை சேர்விஸ் போன்ற ஒரு மோசமான வரலாற்றாசிரியர் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார். பெட்ராண்ட் படேனோட் ஒரு மார்க்சிஸ்டும் இல்லை அல்லது ட்ரொட்ஸ்கிக்கு அரசியல்ரீதியான அனுதாபம் கொண்டவரும் இல்லை என்றாலும் கூட, அவர் ஒரு முக்கியமான வரலாற்று மனிதர் என்பதையும் அவரது சிந்தனைகளும் செயல்களும் அக்கறையுடன், அதாவது புத்திஜீவித்தன நேர்மை மற்றும் ட்ரொட்ஸ்கி கூறியிருந்திருக்கக் கூடியஉண்மைக்கான விசுவாசத்துடன்-கற்புநேர்மையுடன்”, அணுகப்பட வேண்டும் என்பதையும் அவர் புரிந்து கொள்கிறார்.

வரலாற்று உண்மைக்கான போராட்டத்தில், சேர்விஸை அம்பலப்படுத்தி படேனோட் எழுதியிருக்கும் கட்டுரை அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூவில் வெளியாகி இருப்பது ஒரு முக்கியமான வெற்றி ஆகும். பிற வெற்றிகள் பின்தொடரும்.