சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany contemplates “nuclear option” for Greece

"கிரேக்கத்திற்கு அணுசக்தி தேர்வை" ஜேர்மனி சிந்திக்கிறது

By Stefan Steinberg 
29 June 2011
 
Use this version to print | Send feedback

கிரேக்கத்தில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், ஜேர்மனிய செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஆளும்தட்டின் சில பிரிவுகள் அந்நாட்டை திவாலுக்குத் தள்ளும் தேவை பற்றிய அல்லது நோக்கத்தைப் பற்றி முக்கியத்துவப்படுத்திக் காட்டியுள்ளன. முக்கிய ஜேர்மனிய தொழில்துறை உரிமையாளர்களும் பொருளாதார வல்லுனர்களும் கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து தானே நகர்ந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அகற்றப்பட வேண்டும் என வாதிட்டுள்ளனர்.

ஜூன் 20ம் திகிதி செய்தி ஏடான Der Spigel பதிப்பில் இப்பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த ஏடு தன்னுடைய முதல்பக்க அட்டையில் யூரோ நாணயம் கறுப்பு சட்டமிடப்பட்டு ஒரு சவப்பெட்டியில் வைத்திருப்பதைக் காட்டியது. தலைப்போதிடீரென, எதிர்பாராமல்நிகழ்ந்தது எனக் கூறுகிறது. யூரோவின் இறப்பைப் பற்றி அறிவித்தபின்னர், Der Spiegel  கூட்டு நாணயம்ஐரோப்பாவின் மிகப் பெரிய அச்சுறுத்தல்என்று அதன் வலைத்தள பதிப்பில் விவரித்தது. இக்கட்டுரை கிரேக்கத்தில் இருவித நிகழ்வுகள் நடைபெறலாம் என முடிக்கிறது.

தீவிரமான தீர்வு என விளக்கப்படும் முதல் காட்சியில் ஜேர்மனி கிரேக்கத்திற்கு இனியும் நிதிய உதவியை மறுப்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. இது திவாலுக்கு வகை செய்யும்; நாடு சர்வதேச சந்தைகளில் இருந்து பணத்தை வாங்க முடியாமற் போய்விடும். நாட்டின் வங்கித் துறையில் பெரும் பகுதி சரியும், சங்கிலித் தொடர் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும்; இதில் மற்ற நலிவுற்றிருகற்கும் யூரோப்பகுதி நாடுகளிலும் தொடர்ச்சியாக வங்கிகள் சரியும்.

இதன் பின் கட்டுரை கிரேக்கத்திற்கு உள்ள இரண்டாம் தேர்வு ஒருஅணுசக்தி தேர்வுஎன விவரிக்கிறது. ஏடு எழுதுகிறது: “முற்கூட்டி கணிப்பிடமுடியாத போக்குகளை ஒட்டி (மேலே பார்க்கவும்), பலரும் இப்பொழுது அணுசக்தி தேர்வு ஒரு உண்மையான மாற்றீடு எனக் கருதுகின்றனர். கிரேக்கம் நிதிய ஒன்றியத்தில் இருந்து விலகி, மீண்டும் ட்ராச்மாவை அறிமுப்படுத்துகிறது. ஏதென்ஸில் உள்ள அரசாங்கம் ஏற்கனவே இக்கருத்துப் பற்றிச் சில வாரங்கள் முன் பரிசீலித்தது, இப்பொழுது சர்வதேசரீதியாக மதிப்புடைய பொருளாதார வல்லுனர்களும் அதைத்தான் பரிந்துரைக்கின்றனர்.”

கிரேக்கம் இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றிய ஊகமும் ஐரோப்பிய ஒன்றியம் முற்றிலும் உடைவது பற்றிய விவாதங்களுடன் இணைந்து வந்துள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் ஜேர்மனியின் மிக முக்கியமான பழைமைவாத செய்தித்தாளான Frankfurter Allgemeine Zeitung (FAZ)  “மீண்டும் தேசத்திற்கு திரும்புதல்என்ற தலைப்பில் ஒரு கருத்துக் கட்டுரையை வெளியிட்டது. இதன் ஆசிரியர் இரண்டு உலகப் போர்களின் போது 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஐரோப்பாவை பெரும் சேதத்திற்கு உட்படுத்திய தேசியவாதத்தை கடக்கும் பாராட்டத்தக்க முயற்சி என்று ஐரோப்பிய ஒன்றியத்தை புகழ்ந்த வகையில் தன் விமர்சனத்தை ஆரம்பிக்கிறார்.

ஆயினும் கூட ஐரோப்பிய ஒன்றியம் அதன்பின் ஒரு அதிகாரத்துவ அரக்கன் என்று நிரூபித்துக் கொண்டுள்ளது, பெருகிய முறையில் ஜனநாயக உரிமைகள் மற்றும் தனி நாடுகளின் மரபுகளை ஊடுருவுகிறது என்று ஆசிரியர் தொடர்ந்து எழுதியுள்ளார். “ஐரோப்பாவிற்கு ஒரு முன்னேற்றப் பாதைதான் உள்ளது, மீண்டும் தேசியத்திற்கும், மீண்டும் ஜனநாயகத்திற்கும் திரும்புதல்தான் அதுஎன்று செய்தியாளர் கருத்துரையை முடிக்கும் வகையில் அறிவிக்கிறார்.

சமீபத்திய வாரங்களில் FAZ ஆசிய நாடுகளுடன் விரைவாக வளரும் வணிகத்தினாலும், ஐரோப்பாவில் சரிந்து கொண்டுவரும் தொடர்பினாலும் ஜேர்மனி தப்பிப் பிழைக்கும் என்றும், ஏன் ஐரோப்பிய ஒன்றியச் சரிவின் மூலம் அல்லது அதில் இருந்து விலகுவதின் மூலம் இலாபம் கூட அடையலாம் என்றும் அதிக கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் முறிவடைதல் பற்றிய இத்தகைய சிந்தனைகள் ஒன்றும் ஜேர்மனிய செய்தி ஊடகத்துடன் நின்றுவிடவில்லை. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் செய்தி ஊடகத்தில் வந்துள்ள பல சமீபத்திய அறிக்கைகள் கிரேக்கம் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால் பிரெஞ்சு, ஜேர்மனிய வங்கிகள் மட்டுமே இழப்பைப் பெறாது என்பதைத் தெளிவாக்கியுள்ளன. கிரேக்க அரசாங்கப் பத்திரங்களில் அவை நேரடி முதலீடுகளைக் கொண்டுள்ளதை தவிர, பல ஆங்கிலோ-சாக்ஸன் வங்கிகளும் நிறைய கடன் செலுத்துமதியின்மை காப்பீட்டு நிதிகளை கொண்டுள்ளன. இவை கிரேக்கம் கடனைத் திருப்பிக் கொடுப்பதை தவிர்த்தால் உடனடியாக பெரும் இடர்களை எதிர்கொள்ளும். இந்த வங்கிகளும் அந்நாநாடுகளின் அரசாங்கங்களும் நெருக்கடிக்கால திட்டங்களை தயாரிக்கும் தேவையை எதிர்கொள்கின்றன.

பிரிட்டனின் கார்டியன் பத்திரிகையில் கடந்த வாரம் எழுதிய மார்ட்டின் கெட்டில், “ஐரோப்பியக் கனவு முடிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதுஎன்று அறிவித்துள்ளார். இப்பொழுதுள்ள நிலைமையில்அதிகமாகச் செய்யக்கூடியது ஐரோப்பிய ஒன்றியம் உடைதல் என்று கணிக்கப்படும் நிலையை எப்படி பொறுப்பாகவும், நிதானமாகவும் செயல்படுத்துவது என்பதுதான்என்று அறிவித்தார். நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கிரேக்கத்தின் மீது கொண்டுள்ள கொள்கையைக் குறைகூறும் வொல்ப்காங் முன்சௌ பைனான்சியல் டைம்ஸில் அவருடைய பரிவுணர்வுகள் கிரேக்கப் பாராளுமன்றத்தில் தற்போதைய விவாதத்தில் எதிர்க்கட்சியுடன் உள்ளது என்று உறுதிப்படுத்தும் அளவிற்கு எழுதியுள்ளார். பாப்பாண்ட்ரூவின் பொதிக்கு எதிராக வாக்களிப்பதில் அவை முற்றிலும் நியாயப்படுத்தப்படலாம் என்றும், இது கிரேக்க மந்தநிலையை ஆழப்படுத்தும் என்றும் முன்சௌ அறிவிக்கிறார்.

பாப்பாண்ட்ரூவின் அரசாங்கத்தின் விதி அடுத்த சில நாட்களில் தீர்மானிக்கப்படக்கூடும். அரசாங்கம் சரிவுற்றால், சர்வதேச நிதிய மற்றும் அரசியல் உயரடுக்கு விரைவில் செயல்பட்டு சமீபத்தில் போர்த்துக்கல்லில்  சுமத்தப்பட்ட தீர்வைப் போல் நடைமுறைப்படுத்தும்அதாவது முக்கூட்டினதும் வங்கிகளினதும் திட்டத்தை இரக்கமின்றிச் சுமத்துவதற்கு முடிவெடுத்துள்ள ஒரு வலதுசாரி அரசாங்கத்தை எல்லா எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உருவாக்கும்.

அதிகரித்தளவில் வனப்புரையாகஒழுங்கான”, “ஒழுங்கற்றசெலுத்துமதியின்மை என்ற தலைப்புக்களில் கூறப்படும் தற்பொழுது விவாதங்களில் உள்ள மாற்றீடுகள் அனைத்தும் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரங்களை சிதைப்பதில் தொடர்புடையவை. அதனால் அவை ஒரு நெம்புகோலாகவும், ஐரோப்பா முழுவதும் வாழ்க்கைத் தரங்களை அழிப்பதற்கு முன்மாதிரியாகவும் பயன்படுத்தப்படும்.

தேசியத்திற்கு திரும்புவோம்என்று பெருகிய முறையில் அனைவரும் கோஷமிடுவது, ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகள் மிக இழிந்த தேசிய முறைகளை செயல்படுத்த விரும்புவது ஆகியவை வங்கிகளின் பிடிகளை முறித்து, உண்மையான சோசலிச சமூகத்தை நிறுவுவதற்காக ஒன்றுபட்ட தாக்குதலை ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கம் நடத்துவதின் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும்.