சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political lessons of the Strauss-Kahn affair

ஸ்ட்ராஸ்-கான் விவகாரத்தின் அரசியல் படிப்பினைகள்

Patrick Martin
4 July 2011
Use this version to print | Send feedback

சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் மீது தொடுக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு வழக்கு ஒரே இரவில் திடீரென்றும் எதிர்பாராமலும் மதிப்பிழந்தது அரசியல் வாழ்வின் நிலையை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றது. இது தற்காலத்திய அரசியல் வழிவகைகள், ஆத்திரமூட்டுதல்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை தீர்மானிக்க செய்தி ஊடகம் பயன்படுத்தும் திரித்தல்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்காவை பற்றி என, நிறையவே கூறுகிறது.

ஸ்ட்ராஸ் கான் பாலியல்ரீதியான தாக்குதலை மன்ஹாட்டனில் சோபிடெல் ஓட்டலில் ஒரு பணிப்பெண்ணின்மீது நடத்தினார் என்ற குற்றச்சாட்டு ஒரு நடுவர்குழு அடங்கிய நீதிமன்றத்தின்முன் இனி வைக்கப்படுமா என்பது வெளிப்படையான வினாவாக ஆகிவிட்டது. அரசாங்க வக்கீல் அலுவலகம், புகார் கூறிய சாட்சி பெருநடுவர் மன்றத்தில் தாக்குதல் நடந்தது எனக் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டிக் கூறியவை அனைத்திலும் பொய் உரைத்தார், கடந்த காலத்திலும் மற்றொரு பாலியல் பலாத்காரம் பற்றிப் பொய் கூறியுள்ளார், சிறையில் இருக்கும் தன் போதைப்பொருள் கடத்திய நண்பரிடம் இவ்வழக்கில் இருந்து வரக்கூடிய பண ஆதாயங்கள் பற்றி விவாதித்துள்ளார் என்பதை ஒப்புக்கொண்டபின் சாட்சி பற்றிய அனைத்து நம்பகத் தன்மையையும் இழக்கப்பட்டுவிட்டன

ஸ்ட்ராஸ்-கான் கைது செய்யப்பட்ட நேரத்தில் இருந்தே, நியூயோர்க் நகரத்தில் நிகழ்ந்த வழிமுறைகள் பற்றிக் கவலை கொள்ளுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. இக்கைதை ஒட்டி ஒரு பெரும் பரபரப்புக்கூடிய வகையில் ஸ்ட்ராஸ் கான் குற்றவாளி என அறிவித்த செய்தி ஊடகப் பிச்சாரம் ஒன்று நியூயோர்க் டைம்ஸின் தலைமையில் நடந்தது; அதன் கட்டுரையாளர் மௌரின் டௌட் கைதுசெய்யப்ப்ட நபர்ஒரு கிறுக்குப்படித்த, இழிந்த, முகச் சுருக்கங்கள் நிறைந்த வயதான தீய எண்ணம் நிறைந்தவர்என்று வர்ணித்தார். நியூயோர்க் அரசாங்க வக்கீல் அலுவலகம் சாட்சியம் பற்றி எத்தீவிர விசாரணையையும் நடத்துவதற்கு முன்பே ஒரு குற்றச்சாட்டு ஆவணத்தை பெறுவதற்கு விரைந்த ஆர்வத்தைக் காட்டியது.

ஸ்ட்ராஸ்-கான் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் என்னும் முறையில், உலக முதலாளித்துவ முறையில் மிக முக்கியமான பதவிகள் ஒன்றை வகித்து வந்தார்.அவ்வகையில் அவர் அமெரிக்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுடன் முரண்பட்ட தன்மையில் இருந்தார். இந்த ஆண்டுக் கடைசியல் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்னும் நிலையை அவர் அடைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அவ்வகையில் அவர் தற்பொழுதுள்ள வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியைத் தோற்கடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்களுக்குள் அமெரிக்காவின் பெரும் அழுத்தங்களைத் தொடர்ந்து அவர் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார். அங்கு அவருக்குப் பதிலாக அவருடைய அமெரிக்க உதவியாளர் பொறுப்பேற்றார்.

சமீபத்திய ஆண்டுகளில் ஒரு மிக உயர்ந்த பதவியில் இருக்கும் நபர் திடீரென கொடூரப் பாலியல் அவதூறின் மையக்குவிப்பில் வந்துள்ளது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இத்தகைய குற்றச்சாட்டுக்கள்  அமெரிக்க மற்றும் உலக அரசியலில் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படல், சிலருடைய பகைக் கணக்கைத் தீர்த்துக் கொள்ளுதல் அல்லது ஒரு உறுதியான உத்வேகத்தைக் கொடுப்பதற்காக, பொதுவாக ஒரு வலதுசாரித் தன்மையை எடுத்தமை பல முறை நிகழ்ந்துள்ளன.

ஜனாதிபதி பில் கிளன்டன் மீது பெரிய குற்ற விசாரணை நடத்தப்பட்டபோது, மிகத்தீவிர வலதுசாரிச் சக்திகள் செய்தி ஊடகம் உந்துதுல் கொடுத்து ஒரு பாலியல் அவதூறைத் திரித்துத் தூண்டிவிட்டன. அதன் நோக்கம் இரு ஜனாதிபதித் தேர்தல்களை தலைகீழாக மாற்றுதல் என இருந்தது. மார்ச் 2008ல் நியூ யோர்க் ஆளுனர் எலியன் ஸ்பிச்டரும் வோல் ஸ்ட்ரீட் நெருக்கடியின் தொடக்க கட்டங்களில் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார். ஏனெனில் அவர் விசாரணை செய்ய முற்பட்ட விசாரணைகளில் நிதிய மோசடியை ஒட்டி இது நிகழ்ந்தது. இன்னும் சமீபத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனம் ஜூலியன் அசாஞ்சே சிறையில் அடைக்கப்பட்டதுடன் அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படக்கூடும் என்ற அச்சுறுத்தலையும் கொண்டார். இதற்குக் காரணம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய வகையில், அவரை எதிர்த்தவர்களால் முன்வைக்கப்பட்ட  இட்டுகதையானசற்றும் ஒவ்வாத பாலியல் தாக்குதல் குற்றச் சாட்டுக்கள்தாம். இவற்றைத் தவிர ஏராளமான சிறிய அளவு வழக்குகளும் உள்ளன.

மே 14ம் திகதி ஸ்ட்ராஸ்-கான் கைதுசெய்யப்பட்ட உடன், செய்தி ஊடகத்தின் பிரச்சாரம் பற்றி உலக சோசலிச வலைத் தளம்  ஒரு விமர்சனரீதியான நிலைப்பாட்டைக் கொண்டு, வழக்கில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்படி உண்மையை அறிதல் இயலாது என்றும் கொள்கைரீதியான இன்னும் முக்கிய வினாக்கள் பணயத்தில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியது.

வர்க்க நிலைப்பாடுசிறப்புரிமை மற்றும் சமூகப்பார்வை ஆகியவற்றில் ஸ்ட்ராஸ்-கான் உலக சோசலிச வலைத் தளம் எதிர்க்கும் அனைத்தின் உருவகமாக உள்ளார்ஆனால் அவரும் ஒரு மனிதர்தான்ஜனநாயக உரிமைகளை உடையவர்அதில் சட்டபூர்வ விசாரணைநிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்பட வேண்டும் என்ற கருத்து ஆகியவை உள்ளனஅவருடைய கைதுக்குப் பின் ஸ்ட்ராஸ் கான் நடத்தப்படும் முறை  மற்றும் இந்நிகழ்வு பற்றி அமெரிக்க செய்தி ஊடகத்தில் வரும் தகவல்களில் இருந்து இந்த முன்கருத்து நடைமுறையில் இல்லையோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.”

அமெரிக்காவின் இடது தாராளவாதம் மற்றும் போலி சோசலிஸ்ட் போக்குகளின் பிரதிநிதிகள், நேஷன் ஏடு போன்றவை மற்றும் சர்வதேச சோசலிச அமைப்புஆகியவை முற்றிலும் எதிரிடையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்கள் செய்தி ஊடகத்துடன் ஸ்ட்ராஸ்-கான் சூனிய வேட்டையில் சேர்ந்துகொண்டு, எந்த ஆதாரமும் இல்லாமல் அவருடைய குற்றம் பற்றி அறிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வலுவாக வாதிட்டனர்.

அவர்களுடைய அரசியல் தீர்மானங்கள்படி, பாதிக்கப்பட்டவரின் அடையாளம், ஒரு குடியேறிய பெண், மேற்கு ஆபிரிக்காவில் இருந்து வந்த ஒற்றைத் தாய், நடந்ததாகக் கூறப்பட்ட பாலியில் குற்றத்தின் தன்மை ஆகியவை முக்கிமான கூறுபாடுகளாக இருந்தனவே ஒழிய சான்றுகள் அல்ல. ஸ்ட்ராஸ் கானுக்கு எதிரான வழக்கு பிற்போக்குத்தன அரசியல் நோக்கங்களுக்கு உதவத் திரிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தை அவர்கள் உதறித்தள்ளினர்.

அரசியல் பின்னணியைக் கருத்திற் கொள்ளாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை எவரும் அணுக இயலாது. இதில் மிக உண்மையான வாய்ப்பானஉதாரணத்திற்குக் கிளின்டன் பெரிய குற்ற விசாரணையில் இருந்தது போல்பாலியல் அவதூறை வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படும் அரசியல்வாதிக்கு ஒரு அரசியல் பொறி போல் வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

WSWS இதை ஸ்ட்ராஸ் கான் வழக்கில் சுட்டிக்காட்டும் வகையில் கேட்டது:   “ஸ்ட்ராஸ்-கானுக்குச் சக்தி வாய்ந்த விரோதிகள் உள்ளனர்அவரைப் பொறியில் அகப்பட்டுக் கொள்ளுமாறு செய்ய முடியும்குறைந்தபட்சம் இந்த விவாகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்ரீதியாக அவரை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட முடியும் என்று நினைப்பது பைத்தியக்கராத்தனமாஅந்த சாத்தியப்பாட்டை விலக்கிவைப்பது என்பது அரசியல் ரீதியாக அபத்தமானது மட்டுமல்லதிறைமையுடன் அது விசாரணையின் முக்கிய பகுதியை மூடிவிடுகிறதுஅவரைப் பொறியில் தள்ளுவதற்கு எவரேனும் ஆர்வம் காட்டுபவர்திறன் உடையவர் உள்ளனரா என்று விசாரணையாளர்கள் ஸ்ட்ராஸ்-கானைக் கேட்க மாட்டார்கள் என்று எவரேனும் நம்ப முடியுமாஅல்லது அவர்மீது குற்றம்சாட்டுபவரின் தொடர்புகளை பற்றி விசாரணையாளர்கள் கவனிக்க மாட்டார்களா?”

இப்பொழுது நமக்குகுற்றம் சாட்டப்பட்டவரின் தொடர்புகளில்போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதிருமணம் செய்து கொள்ள இருப்பவர், பெயரிடப்படாத நண்பர்கள்$100,000க்கும் மேலாக ரொக்கத்தை பெண்ணின் வங்கிக் கணக்குகளில் நான்கு மாநிலங்களில் கட்டியவர்கள் உள்ளார்கள் என்று தெரியும். இன்னும் கூடுதலான சான்றுகள், குறிப்பாக இந்ததொடர்புடையவர்களுக்கும்அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் இருக்கும் அரசாங்க அமைப்புக்களுக்கும் இருக்கும் தொடர்பு விசாரணை தொடரும்போது வெளிப்படக்கூடும்.

பாதிக்கப்பட்டவர் எனக்கூறுப்பட்ட பெண் குறைமதிப்பிற்கு உட்பட்ட பின்னரும்கூட, சில தாராளவாதிகளும் பெண்ணுரிமை ஆர்வலர்களும் ஸ்ட்ராஸ்கான் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையில், மௌரின் டௌட் தொடர்ந்து ஸ்ட்ராஸ் கானைஒரு கொள்ளையர்என்று முத்திரையிட்டுள்ளார்; ஆனால் பெண் பணியாளர்வாடிக்கையாகப் பொய்கூறுபவர்என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இது போன்ற நிலைமையில், “குற்றம் செய்தவர்கள் பல நேரமும் தப்பிவிடுகின்றனர்என்று அவர் முடித்துள்ளார்.

ஒரு உண்மையான பிற்போக்குத்தனக் கட்டுரை பிரிட்டிஷ் தாராளவாத செய்தித்தாளான கார்டியனில் காத்தரின் ஆக்சில்சனால் எழுதப்பட்டது வந்துள்ளது. அதில் ஸ்ட்ராஸ் கானுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட வேண்டும் என்று கூறும் எக்கருத்தும் கண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊழியர் பலமுறை பொய் கூறியிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதற்கு இவருடைய விடையிறுப்பு, “அதனால் என்னஎன்ற முறையில் உள்ளது. “குற்றம் சாட்டப்பட்டுள்ளவருடைய நம்பகத்தன்மை சரியில்லை என்றால் குற்றச்சாட்டில் பெண்ணின் நம்பகத்தன்மை மட்டும் எப்படிப் பொருந்தும்? கற்பழிப்புக் குற்றம் தள்ளுபடி செய்துவிடப்படும் என்பதுதான் இதன் பொருளா?”

இந்த நிலைப்பாடு ஜனநாயக உரிமைகள் பற்றிக் கொண்டுள்ள உட்குறிப்பு அதிர்ச்சி தருவதாகும். நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் அமெரிக்க அரசியல் திருத்தங்கள் நடைமுறையில் இல்லை என்பது போல் ஆக்செல்சன் எழுதுகிறார். பழிவாங்கும், அநியாய குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைப்பதில் இருந்து தனிநபர்கள் நீண்ட காலம் கடுமையாகப் போராடவேண்டும் என்பது இவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஆக்செல்சனை பொறுத்தவரை கற்பழிப்புக் குற்றம் எவர்மீது சுமத்தப்பட்டாலும், அவர் தனக்கு எதிராகக் கூறப்படும் சாட்சியத்தின் நம்பகத்தன்மையை சவால் விட அனுமதிக்கப்படக்கூடாது. நிரபராதி என்று தீர்ப்பு முடிவாகும் வரை கருதப்பட வேண்டும் என்பது இவரைப் பொறுத்தவரை இல்லை. ஒரு குற்ற வழக்கில் அரசாங்கம் சந்தேகத்திற்கு சிறிதும் இடம் இல்லாமல் குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் முறை என்பது பற்றி திருமதி.ஆக்செல்சனுக்குத் தெரியாது போலும். தெரிந்தாலும் அது பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆக்செல்சன் மற்றும் அவரைப் போன்றவர்களுக்கு கற்பழிப்புக் குற்றச்சாட்டு மட்டும் முழுமையான தன் உண்மையைக் கொண்டது, எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்றபட்டது என்று உள்ளது.

ஒரு எழுத்தாளர் என்னும் முறையில் திருமதி ஆக்செல்சன் கருத்துக்கள் எவ்வித விளைவுகளுமற்றவை. ஆனால் ஒரு குறிப்பிட்ட மேல்படி நிலையில் உள்ள சமூக அந்தஸ்த்தை இவர் உறுதியாகப் பிரதிபலிக்கிறார். இதில் மத்தியதர வர்க்க உயர் வகுப்பினரின் செல்வக்கொழிப்பு நிறைந்த பிரிவுகள் உள்ளன. இவை பால், பாலியல்ரீதியான, இனம் போன்ற பலவித அடையாள அரசியலில் (identity politics) செழிக்கின்றன. இவைதான் அதன் சொந்த தன்முனைப்பு மற்றும் பிற்போக்குத்தன வர்க்க நலன்களுக்கு மறைக்க சேவைசெய்யகின்றன.

நீண்ட காலம் முன்னரே ஆளும் உயரடுக்கு இந்த மத்தியதர உயர்மட்ட அடுக்குகளைத் தன் நலன்களுக்குப் பயன்படுத்துவது பற்றி நன்கு அறியும். தனிப்பட்டஅடையாளத்துடன்தொடர்புடைய உணர்வுகளை கிளறிவிடக்கூடிய பிரச்சினைகளை பற்றி எழுப்பிவிட்டால் அவர்களை நிதிய மூலதனத்தின் பிரபுக்களின் முக்கியமான பொருளாதார, அரசியல் முனைப்புக்களின் பின்னால் வரிசையாக நிற்க வைத்துவிட முடியும்.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார 

The serious questions raised by the Dominique Strauss-Kahn affair

The American “left” and the Strauss-Kahn affair