சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After the Thai election: A warning to the working class

தாய்லாந்து தேர்தலுக்கு பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை

Peter Symonds
8 July 2011


Use this version to print | Send feedback

முன்னாள் பிரதம மந்திரி தாஸ்கின் ஷனவாத்ராவின் ஆதரவிற்கு உட்பட்ட புவா தாய் (Puea Thai) கடந்த ஞாயிறன்று தாய்லாந்துத் தேர்தல்களில் மெருகூட்டும், ஜனரஞ்சகவாத பிரச்சாரமாகிய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் பாங்காங்கில் 91பேரைக் கொன்ற இராணுவ வன்முறையை அடுத்து அலையென வந்த சீற்றத்தை ஒட்டியும் வெற்றியை அடைந்தது.

ஆனால் புயா தாயின் வெற்றி அதற்கு வாக்களித்த மில்லியன் கணக்கான நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் நலன்களுக்கேற்பச் செயல்படும் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்துள்ளது என்ற நப்பாசையை எவரும் கொள்ளக் கூடாது. தாஸ்கினின் சாகோடரி யிங்லக் தலைமையில் வரவிருக்கும் அரசாங்கம் முந்தைய ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தைவிடச் சற்றும் குறையாத  இரக்கமற்ற முறையில் பெருவணிகத்தின் ஆணைகளைச் செயல்படுத்தும் என்பதோடு அதன் கொள்கைகளுக்கு எதிரான எந்த அரசியல் எதிர்ப்பையும் நசுக்கும்.

ஐயத்திற்கிடமின்றி புயா தாயின் வெற்றி பெரும் எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு, வடகிழக்கு கிராமப் பகுதிகள்  கடந்த ஆண்டின் எதிர்ப்புக்களுக்கு முதுகெலும்பு போல் இருந்து தேர்தலில் வெற்றிக்கு காரணமாகியுள்ளன. தொழிலாளர்களுக்கு பெரும் ஊதிய உயர்வுகள், விவசாயிகளுக்கு உத்தரவாதமான அரிசி விலைகள், மாணவர்களுக்குச் சிறிய கணினிகள், உணவு, போக்குவரத்து போன்ற அடிப்படைத் தேவைகளின் தீவிரமாக உயரும் விலைகள் கட்டுப்படுத்தப்படும் என்று அனைவருக்கும் உறுதிமொழிகளை யிங்லக் அள்ளிவீசியுள்ளார்.

இந்த தேர்தல் இராணுவம், முடியாட்சி மற்றும் அரச அதிகாரத்துதவம் என்ற மரபார்ந்த உயரடுக்குகளையும் நிராகரித்த தன்மையைக் கொண்டுள்ளது. இவைதான் 2006ல் ஆட்சி மாற்றத்தின்மூலம் தாஸ்கினை அகற்றிதாஸ்கின் சார்பு இரு அரசாங்கங்களையும் பின்னர் அகற்ற உதவி, 2008ல் ஜனநாயகக் கட்சியின் தலைமையில் கூட்டணி அரசாங்கம் ஒன்றையும் நிறுவின. கடந்த ஆண்டு வந்த அரசாங்க-எதிர்ப்புக்கள்சிகப்புச்சட்டைதலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கும் அப்பால் சென்றது. அவர்கள் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த சமூகப் பிளவை உயர்த்திக்காட்ட உடனடியான தேர்தல்களை தேவை என்றனர்.

ஆனால் புயா தாய் ஒரு முதலாளித்துவக் கட்சி. தாய் ஆளும் வர்க்கத்தின் கருத்துவேறுபட்ட பிரிவு ஒன்றின் நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது. அதிகாரத்தில் இருக்கும்போது, பில்லியனர் தாஸ்கின் நாட்டின் மரபார்ந்த உயரடுக்கினரை விரோதப்படுத்தும் வகையில் வெளிநாட்டு முதலீட்டிற்கு இன்னும் ஊக்கம் கொடுத்து, தன்னுடைய பெரிய வணிகப் பேரரசின் நலன்களுக்கு ஏற்ப செயல்படும் வகையில் பல ஆதரவாளர்களின் வலைப்பின்னலை செல்வாக்கைத் தகர்த்தார். குறைந்தப்பட்ச சமூகசலுகைகளை வழங்கியதின் மூலம் கிராமப்புற ஏழைகளிடம் ஓரளவு செல்வாக்கைப் பெற்று, அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்த உட்பிரிவு மோதல்களின் சமூகத்தளத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

தாக்சினை ஏழைச் சார்பாளர் என்னும் தோற்றத்தில் காட்டுவதில் முக்கிய பங்கு முன்னாள் மாணவர் தீவிரவாத பிரிவினரும் பின்னர் இப்பொழுது செயல்படாத தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறியவர்கள் மற்றும் அதன் மூலோபாயமான மாவோயிச கெரில்லா போர் முறையை 1970 களின் அரசியல் கொந்தளிப்புக் காலத்தில் ஏற்றுக்கொண்டோராலும் வகிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும் ஏமாற்றம் அடைந்த பலர் பாங்காக்கிற்குத் திரும்பினர். அங்கு சிலர் தாக்சினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய கட்சியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அவருக்கு 2001 தேர்தல்களில் வெற்றி பெற ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கிராமப்புறத் திட்டத்தையும் இயற்றினர்.

பல்கலைக்கழக உயர்கல்வியாளர் கைல்ஸ் ஜி உங்பகோர்ன் போன்ற மற்ற போலி இடதுகள் புவா தாயில் இருந்து ஒதுங்கி இருந்தனர். ஆனால் வெட்கம் கெட்ட வகையில் கட்சியை வளர்த்துசிவப்புச் சட்டைஇயக்கத்தை ஜனநாயகக் கட்சி மற்றும் இராணுவத்திற்கு ஒரே மாற்று என்று தொடர்புபடுத்தினர். ஞாயிறு தேர்தலுக்கு முன்னதாக உங்பகோர்ன் கட்டுரை ஒன்றில் தாய்லாந்தில் உள்ள சோசலிஸ்ட்டுக்கள்புவா தாய் முற்றிலும் முதலாளித்துவக் கட்சியாக இருந்தாலும் கூட அதற்கு வாக்களிக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர வேறு எதையும் கூறமுடியாதுஎன்று அறிவித்தார்.

சந்தர்ப்பவாதத்தின் ஒரு முன்னுதாரணமான அறிக்கை என்ற வகையில் உங்பகோர்ன் பொதுவாக முதலாளித்துவக் கட்சிகளை சோசலிஸ்ட்டுக்கள் ஆதரிப்பதில்லை என்றாலும், தற்பொழுதைய தாய் தேர்தலில் ஒரு விதிவிலக்கு செய்யப்படவேண்டும் என்று வாதிட்டார். “சர்வாதிகாரம், அடக்குமுறை ஆகியவற்றிற்கும் மில்லியன் கணக்கான மக்களின் ஜனநாயக விருப்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு கட்சிக்கும் இடையேதான் போட்டி என்பது தெளிவுஎன்று அவர் அறிவித்தார்.

பல போலி தீவிரவாத வலைத் தளங்களால் சர்வதேச அளவில் விமர்சனம் ஏதுமில்லாமல் அப்படியே போடப்பட்ட உங்பகோர்னின் அறிக்கை புவா தாய் பற்றிய நப்பாசைகளுக்கு ஊக்கம் கொடுத்து, உண்மையான சோசலிச முன்னோக்கை அடித்தளமாக கொண்ட ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு தடையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நூற்றாண்டு முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள், பலமுறையும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, காலம் கடந்து முதலாளித்துவ அபிவிருத்தியடைந்த நாடான தாய்லாந்து போன்ற எந்த நாட்டிலும் முதலாளித்துவத்தின் எப்பிரிவும் தொழிலாளர்களின் தேவைகளையும் விருப்புகளையும் நிறைவு செய்ய முடியாது. இரண்டாவதாக, எண்ணிக்கை இருந்தாலும், விவசாயிகள் பிரிவு சுயாதீன அரசியல் பாத்திரத்தை வகிக்கும் திறனற்றதுடன், நகரங்களில் தவிர்க்க முடியாமல் முதலாளித்துவத்தை அல்லது தொழிலாள வர்க்கத்தைத்தான் பின்தொடரும்; மூன்றாவதாக, தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் கிராமப்புற மக்களின் சமூக துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறன் உடையதுடன் அது ஒன்றுதான் அவர்களை ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவ வழிநடத்தி, சோசலிசக் கொள்கைகளுக்கும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு வழி நடத்த முடியும்.

இந்த அடிப்படை உண்மைகள் இன்றைய தாய்லாந்தில் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. இங்கு தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைப்பாடு உலகளாவிய உற்பத்தி முறையுடன் நாடு இணைந்துள்ளதின் விளைவாக மிகக் கணிசமாகக் கூடியுள்ளது. 1990 முதல் 2010 என்னும் இரு தசாப்தங்களில் உற்பத்தித்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை தொழிலாளர் தொகுப்பில் 1.9 சதவிகிதத்தில் இருந்து 13.8 சதிகிதம் என, கிட்டத்தட்ட  மில்லியனுக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதே காலக் கட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் விகிதம் 64 ல் இருந்து 38 என தொழிலாளர் தொகுப்பில் குறைந்துவிட்டது.

ஆயினும்கூட கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவி வரும் அரசியல் கொந்தளிப்பினால், தொழிலாள வர்க்கம் தன் சுயாதீன வர்க்க நலன்களுக்காக தலையிடுவது என்பது முற்றிலும் இல்லாத நிலையில் உள்ளது. அதன் விளைவாக வணிகப் பெரு முதலாளி தாக்சின், உங்பகோர்ன் போன்ற போலி தீவிரவாதிகளின் உதவியுடனும், உடந்தையுடனும் குறிப்பாக கிராமப்புற விவசாயிகளுடைய பெருகியுள்ள அதிருப்தியை, புவா தாய், சிவப்புச் சட்டை இயக்கம் மற்றும் தன் சொந்த அரசியல் செயல்பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடிந்துள்ளது. புவா தாய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்புவிட்டளவில் உங்பகோர்ன் வரவிருக்கும் யிங்லக் அரசாங்கத்தின் செயல்களுக்கு அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டும்

அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பே, புயா தாய் உடனடியாக நிதிய உயரடுக்கில் இருந்து அதன் தேர்தல் உறுதிமொழிகளைத் தூக்கி எறிய வேண்டும் என்ற அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளது. இப்பொழுதுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிக் கட்டத்தில், தாய்லாந்தின் பொருளாதாரம் இந்த ஆண்டு அதன் வளர்ச்சியில் அரைவாசியைத்தான் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்திலும் சர்வதேச அளவிலும் நிதானத்துடன் வணிக வட்டங்கள் புயா தாய் வெற்றியை வரவேற்றுள்ளது. தேர்தல்கள், குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், நாட்டில் இருக்கும் அரசியல் உறுதியற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்நிதிய மூலதனம் கோரும் சர்வதேச அளவிலான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம்  செயல்படுத்துவதற்கு அதன் ஏழைகள் சார்பு என்ற அடையாளத்தன்மை உதவும் என்ற நம்பிக்கையைப் பிரதிபலிப்பதால்தான்.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்பட்டு விமர்சனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நோக்கி அது திரும்பும்போது யிங்லக்கின் அரசாங்கம் எவ்வித அரசியல் எதிர்ப்பிற்கும் பொலிஸ் அரசு முறைகளை பயன்படுத்த தயங்காது. உங்பகோர்ன் புயா தாய்  இற்கு வாக்களிக்க அழைப்புவிடுகையில்  தாக்சினுடைய சொந்த சர்வாதிகார ஆட்சிச் சான்றான 2003ல் நீதிமுறைக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கான போதைக் கடத்தல்காரர்கள் எனக் கூறப்பட்டவர்களைக் கொல்ல அனுமதித்தது உட்பட மற்றும் நாட்டின் தெற்கில் 2004ல் முஸ்லிம் பிரிவினைவாதத்தை முற்றிலும் அகற்ற இராணுவத்தின் மூலம் கடுமையான அவசரகால நடவடிக்கைகளைச் சுமத்தியது ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தொழிலாள வர்க்கம் அதன் ஜனநாயக உரிமைகள் மற்றும் வர்க்க நலன்களை ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிடம் இருந்தும் அதன் அரசியல் சுயாதீனத்தை நிறுவி ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுதல் மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் வகையில்தான் முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்கு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப்புரட்சி வேலைத்திட்டம் முற்றிலும்  உள்வாங்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில்  இருந்த தொழிலாளர்களின் முக்கிய மூலோபாய அனுபவங்களும் உணரப்பட்டு சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு பிரிவைக் கட்டமைக்க திரும்ப வேண்டும். அதாவது தாய்லாந்தின் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவை நிறுவ வேண்டும்.