World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

NY Times’ David Brooks on “Death and Budgets”

The voice of the ruling class

நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் ப்ரூக்ஸ்இறப்புக்கள் மற்றும் வரவுசெலவுத் திட்டங்கள்பற்றி
ஆளும் வர்க்கத்தின் குரல்

Kate Randall
18 July 2011

Back to screen version

வெள்ளியன்று தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் ப்ரூக்ஸ் அமெரிக்க நிதியப்பிரபுக்களின் சுகாதார பாதுகாப்புச் செலவுகளை பற்றிய உண்மையான சிந்தனையை வெளிப்படுத்துகிறார். பொதுமக்களின் வாழ்க்கை நீடிப்பதற்காக வளங்கள்சூறையாடப்படுவதுபற்றித் தங்கள் காழ்ப்புணர்வை அவருடைய கட்டுரையில் மனத்தை உறைய வைக்கும் வகையில் வெளிப்படுத்துவதுடன் அவர்கள் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளதையும் காட்டுகிறது.

மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி (Medicare, Medicaid) மற்றும் சமூகப் பாதுகாப்பு உட்பட வயதானவர்களுக்கும் வறியவர்களுக்கும் சுகாதார, ஓய்வூதிய திட்டங்களுக்காக டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிப்பதை பெரிதும் குறைக்க வேண்டும் என்பது பற்றிய வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுடனுமான விவாதங்களுக்கு இடையே இக்கட்டுரை வெளிவந்துள்ளது.  1930 களில் இருந்து கிடைத்துவரும் இந்த அடிப்படை சமூக சீர்திருத்தங்கள் மீது இந்த முன்னோடியில்லாத தாக்குதலை ஒபாமா நிர்வாகம் முன்னெடுப்பதுடன், கடன் உச்சவரம்பை உயர்த்தும் எந்த நடவடிக்கையும் பாரிய வெட்டுக்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ப்ரூக்ஸின் கட்டுரையுடைய சாரம்இறப்புக்களும் வரவுசெலவுத் திட்டங்களும்என்ற தலைப்பில் சுருக்கமாக கூறப்படுகின்றது. வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மக்கள் விரைவாகவே இறக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

இந்த நிதிய நெருக்கடி பல விடயங்களைப் பற்றியது. அவற்றுள் ஒன்று இறப்பை நாம் எதிர்கொள்ள இயலாதது என்பதும் ஒன்றாகும். அதாவது நம்முடைய வாழ்வை இன்னும் சில மாதங்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் நீட்டிப்பதற்கு செலவழித்து நம் நாட்டைத் திவாலாக்கும் எமது  விருப்பம்என்று அவர் எழுதியுள்ளார். ஆளும் உயரடுக்கின் அர்த்தமற்ற பேராசை, பெரும் செல்வம் ஆகியவையோ அல்லது போர் மற்றும் வங்கிப் பிணை எடுப்புக்களுக்கு செலவிடப்படும் டிரில்லியன்களோ இல்லாமல், அமெரிக்க மக்கள் நீண்டகாலம் வாழவேண்டும் என்று கொண்டுள்ள சுயநலமும் அறியாமையும் நிறைந்த விருப்பம்தான் நாட்டைத் திவாலாக்குகிறதுஎன்று அவர் வாதிடுகிறார்.

ஒரு விடயம்தெரிந்தவர் வாதிடும் முறையில், ப்ரூக்ஸ் ஒரு கொடூரமான மிகப்பலவீனமான, மாற்றமுடியாத நோயாளியின் நிலைமையை எடுத்துக் கொண்டு, மில்லியன் கணக்கான மற்றவர்களுக்குதேவையற்றசிகிச்சைகள் கொடுக்கப்படுவதற்கு எதிராக ப்ரூக்ஸ் வாதிடுகிறார். டைம்ஸின் முன்னாள் தலையங்க ஆசிரியர் ஒருவரான டட்லி கிளென்டினெனை மேற்கோளிடுகிறார். அவருக்கு ALS அல்லது Lou Gehrig நோய் (முள்ளந்தண்டு நரம்பில் ஏற்படும் தாக்கத்தால் தசைகள் பலமிழந்துபோதல்) உள்ளது, இனி எந்தச் சிகிச்சையும் பெறுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார்.

ALS நோய் பீடித்துள்ளவர்களின் நிலையை பற்றிப் பேசுகையில், ப்ரூக்ஸ் அறிவிக்கிறார்: “வாழ்க்கை என்பது தன்னையே மூடிக்கொண்டிருக்கும் ஒரு தோல் பை போன்று வெறும் சுவாசித்துக் கொண்டு, வாழ்வது அல்ல.” இங்கு சொற்களைப் போலவே ஒலிக்குறிப்பும் பெரும் நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளது.  இன்று உயிருடன் உள்ள நோய்வாய்ப்பட்டுள்ள மற்றும் வயோதிபத்தையடைந்துகொண்டு போகும் எத்தனை மக்கள் ப்ரூக்ஸினதும் அவரது தன்னையே மூடிக்கொண்டிருக்கும் ஒரு தோல் பை என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்பட உள்ளனர்?

இங்கு பாசிசத்தின் மணத்தை விட அதிகமான ஒரு நிலைதான் உள்ளது. உடல் அல்லது மனக்குறை உடைய மக்களுக்கு நாஜிகள் முன்வைத்த  தீர்வை ப்ரூக்ஸ் முன்வைக்கவில்லை. நாஜிகள் அத்தகையவர்கள் ஏராளமாகக் கொல்லப்பட வேண்டும் என்றனர். ஆனால் அத்தகைய கொடூரங்களை செய்தவர்கள் தங்களால் பாதிக்கப்பட்டவர்களை விவரிக்க அத்தகைய வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினர் என்பதை எளிதில் கற்பனை செய்ய முடியும்.

ப்ரூக்ஸ் வாதிடும் மனித வாழ்வின்செலவு-ஆதாய பகுப்பாய்வுமுறையின் தர்க்கபூர்வமான முடிவை விரிவாக்குகையில், 1930களில் இருந்து நாஜிக்கள் கருணைக் கொலை பற்றி வெளியிட்ட பிரச்சாரச் சுவரொட்டியான பரம்பரைக் குறைபாடுகளினால் அவதியுறுவது சமூகத்திற்கு 60,000 ரைஸ் மார்க் செலவைக் கொடுக்கிறதுசக ஜேர்மனியர்களே, இது உங்கள் பணமும்தான்என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

ALS நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள் தம் வாழ்வை முன்கூட்டியே முடித்துவிடுவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற வகையில்தான் ப்ரூக்ஸ் கருத்துத் தெரிவிக்கிறார். மனித உணர்வுகளைப் பற்றிப் பெரும் இகழ்வைக் கொண்டு மிகத்தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள் கூட சமூகத்திற்கு பங்களிக்க முடியும் என்பதையும் பொருட்படுத்தவில்லை. விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவ்க்கிங் பற்றிய நினைப்புத்தான் வருகிறது. நவீன மருத்துகளின் வாழ்வை நீட்டிக்கும் தன்மையினால், இவர் மிகவும் கடுமையாக ALS இனால் முடக்கப்பட்டிருந்த நிலையிலும் அவருடைய மிக முக்கியமான அறிவுசார் பங்களிப்புக்களை வழங்கினார்.

கிளென்டினெனின் விவகாரம் ப்ரூக்ஸினால் இழிந்த முறையில் மேற்கோளிடப்படுகிறது; இதற்குக் காரணம் சுகாதாரப் பாதுகாப்பு பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்று வாதிடுவதற்குத்தான். “சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிகம் செலவு செய்வதின் மூலம் நாம் நம் வாழ்க்கையின் தரத்தை தீவிரமாக முன்னேற்றுவித்து வருகிறோம் என்ற நப்பாசையை  கொண்டுள்ளோம்என்று அவர் அறிவிக்கிறார். இது எப்படி ஒருநப்பாசைஎன்பதை அவர் விவரிக்கவில்லை. ஆனால் வயதானவர்களுக்கு அரசாங்க சுகாதாரக் காப்பீட்டுத்திட்டமான Medicare (மருத்துவப் பாதுகாப்பு)1965ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அமெரிக்காவில் மூத்த குடிமக்களிடையே வறுமை குறைந்து ஆயுட்கால எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது என்பது ஒரு உண்மையாகும்.

அமெரிக்காவின் செல்வம் நிறைந்த உயரடுக்கின் ஒருமித்த உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ப்ரூக்ஸ் உண்மையிலேயே கூற விரும்புவது இப்போக்குகள் மிகத்தெளிவான தீமைகளாகும், இவை மாற்றப்பட வேண்டும் என்பதுதான்.

புற்றுநோயை குணமடையச் செய்யும் நிலையில் இருந்து தொலைவில்தான் உள்ளோம்”, “கண்ணுக்கெட்டும் தூரம்வரை இதய நோய்க்கும் குணமடையும் தன்மைஇல்லைஎன்ற பரபரப்பு அறிக்கையை அவர் கொடுக்கிறார். நுரையீரல், மார்பகம், விதை உட்பட பல பரந்த புற்றுநோய் வகைகள், இதய நோய்கள் ஆகியவற்றிற்கான சிகிச்சையில்  வியத்தக்களவில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை இவர் வெறுமே உதறித்தள்ளுகிறார் என்பதுதான் இதன் பொருள்.

நோய்கள் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் கருத்துப்படி, இப்பொழுதுபுற்றுநோயில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள்எண்ணிக்கை 1971ல் 3 மில்லியன் என்பதில் இருந்து 2007ல் 11.7 மில்லியன் என, 290%உயர்வைக் கண்டுள்ளது. முன்கூட்டியே கண்டறிதல், தீவிரமான சிகிச்சை ஆகியவை வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.

Archives of Internal Medicine  தெரிவித்துள்ள ஆய்வுகளின்படி, ஒரு இதய தாக்குதலை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் இறந்துபோகும் நோயாளிகளின் விகிதம் வியத்தகு அளவில் குறைந்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் புதிய மருந்துகளும், அறுவை சிகிச்சை முறைகளும்தான். 1994 முதல் 2006 வரை இத்தகைய இறப்புக்களின் விகிதம் 53.9 சதவிகிதம் 55 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும், அதே வயதுப் பிரிவில் உள்ள ஆண்களுக்கு 33.3 சதவிகிதமும் குறைந்துவிட்டது.

ப்ரூக்ஸ் கட்டுரையில் மிகத் தீய பகுதி ஆல்ஸ்கைமர் (நினைவு தவறுதல்) நோய், அதனால் துன்பப்படுவோருக்கான சிகிச்சையைப் பற்றியது ஆகும். “நம் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளின் பெரும்பகுதி தங்கள் வாழ்வின் கடைசிப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்டவர்களுக்கு செல்லுகிறது. இத்தகைய செலவு அதிகமாக வளர்ச்சி அடைகிறதுஇதுபற்றி ப்ரூக்ஸ் பெரும் புலம்பலை மேற்கொள்ளுகிறார்.

நாம் ஒன்றும் ஆல்ஸ்கைமர் நோயாளிகளை ஒதுக்கி வைத்து ஒரு மலைப்பகுதியில் விட்டுவிடப்போவது இல்லை. வயதான, நோய்வாய்ப்பட்டவர்கள் கைவிடப்படவேண்டும் என நாம் ஒன்றும் வலியுறுத்தப்போவதில்லை என்பதும் வெளிப்படை.” என்று வரலாற்றிற்காக ப்ரூக்ஸ் கூறுகிறார். இத்தகைய கூற்றுக்கள் பெரிதும் தெளிவற்றவையும், வேண்டுமென்றேதான் கூறப்படுகின்றன எனத்தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது.

வலியுறுத்துவதுஎன்றால் என்ன? ப்ரூக்ஸின் முகாமில் பலரும் கூறுவது போல் என்றால், காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி இறுதி வரை மிக விலையுயர்ந்த மருந்துகள், செயல்முறைகள், பரிசோதனைகளுக்கு மட்டும்தான் என்றால், மில்லியன் கணக்கான மக்கள் திடீரெனத் தாங்கள் நம்பியிருந்த மருந்துகள், சிகிச்சைகள் ஆகியவை இனி கிடைக்காது என்பதை அறிக்கின்றனர். இதுதான்வலியுறுத்தலா?”. தாங்கள் வாடகை கொடுப்பதை நிறுத்தலாம், அதிக உணவு உட்கொள்ளுவதை நிறுத்தலாம், பணவசதி இருந்தால் பணத்தால் விலைக்கு வாங்கக்கூடிய உயர்ந்த மருத்துவப் பாதுகாப்பைத் தொடர்ந்து பெறலாம்

மக்கள் தங்கள் குடும்பங்களுடன் கிளென்டினென் செய்வதை செய்யத்தயாராக இல்லை என்றால், சுகாதாரப் பாதுகாப்புப் பணவீக்கத்தைத் தீவிரமாக நம்மால் குறைப்பது இயலாதுஅதாவது மக்கள் இறப்பை எதிர்கொள்ளவேண்டும், உயிர்வாழ்வதற்குத் தங்கள் கடமையைச் செய்வதை எதிர்கொள்ளவேண்டும்.” என ப்ரூக்ஸ் முடிக்கிறார்.

தன்னுடைய கட்டுரையில் ப்ரூக்ஸ் ஜனநாயகக் கட்சி சார்புடைய New Republic ல் சமீபத்தில் வந்துள்ள ஒரு கட்டுரையைப் பெரிதும் பாராட்டிக் குறிப்பிடுகிறார். அக்கட்டுரை ஆசிரியர்கள், டானியல் கல்லஹன் மற்றும் ஷேர்வின் ந்யூலாந்த், இருவரும் சொல்லப்போனால் இன்னும் வெளிப்படையாக எழுதியுள்ளனர். “ஓராண்டு அதிகமாக வாழ்வதற்கு அதிகப்படியான செலவு $145,000 என உயர்ந்துவிட்டதுஎன்று ஓர் ஆய்வை மேற்கோளிட்டு அவர்கள் கூறுகின்றனர். “வயதானவர்களிடையே இப்போக்கு தொடர்ந்தால் மருத்துவப் பாதுகாப்பின் செலவு-ஆதாயத் திறன் இன்னும் மூப்பான காலங்களில் தொடர்ந்து குறையும்என்று கட்டுரையாளர்கள் முடிக்கின்றனர்.

இப்போக்கு மாற்றிவிடப்படலாம் என்ற களிப்பான நிகழ்வு ஏற்பட்டால், “சிலர் இப்பொழுதை விட முன்பே இறக்கலாம், ஆனால் அவர்கள் நல்ல இறப்புக்களைப் பெறுவர்.” இதன் பின் அவர்கள், “பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்புக் குறித்து தங்கள் எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட வேண்டும். இது ஓரளவு இணைக் கட்டணங்களை உயர்த்துவது, கழிக்கக் கூடிய தொகைகளை அதிகரிப்பது என்ற வேதனைதரும் தரத்தின் மூலம் செய்யப்படலாம்; அது மக்கள் வாழ்க்கையை நீட்டிக்கும் பாதுகாப்பை நாடுவதற்கான ஊக்கத்தைக் குறைத்துவிடும்.” என்றும் வலியுறுத்துகின்றனர்.

அரசியல் நடைமுறையின் அனைத்துப் பிரிவுகளும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களில் ஆழ்ந்த வெட்டுக்களைக் கோருகின்றன. ஆனால் தாராளவாத நடைமுறை மற்றும் ஜனநாயகக் கட்சி இத்தாக்குதலில் வழிநடத்தும் பங்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

நியூ யோர்க் டைம்ஸ் ஒபாமா நிர்வாகத்தின் சுகாதாரப் பாதுகாப்பை முற்றிலும் மாற்றுவது பற்றிக் கொண்டுள்ள பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. டைம்ஸில் முடிவில்லாமல் வரும் கட்டுரைகள், கருத்துக் குவியல்கள் புற்றுநோய் சோதனைகள், செயற்கை இதயத்துடிப்பு ஊக்குவிக்கிகள், சிறப்பு மருந்து சிகிச்சை முறைகள் இன்னும் முக்கியமான சிகிச்சை முறைகளில் கூடுதல் பணம் செலவழிப்பதைக் கடுமையாக சாடுகின்றன. ஒரு சாதாரண அமெரிக்கரின் வாழ்வை நீட்டிப்பதில் உள்ளாரந்த மதிப்பீடு ஏதேனும் உள்ளதா என்று வினவும் ப்ரூக்ஸின் கட்டுரை சுகாதாரப் பாதுகாப்பு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற அனைத்து வாதங்களின் உள்ளார்ந்த முன்கருத்தை வெளிப்படையாக கூறுவதுதான்.

ஒபாமாவின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்ட சீர்திருத்தம் 2009ல் விவாதிக்கப்பட்டது. இதுஅனைவருக்கும்சுகாதாரப் பாதுகாப்பை வழங்கும் விருப்பத்தினால் உந்துதல் கொண்டுள்ளது எனப் பரந்த முறையில் கூறப்பட்டது. அப்பொழுது உலக சோசலிச வலைத் தளம் இது ஒரு முற்போக்கான சீர்திருத்தம் அல்ல, மாறாகதொழிலாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பின்மீது முன்னோடியில்லாத தாக்குதல்சுகாதாரப் பாதுகாப்பு 1965ல் இயற்றப்பட்டதில் இருந்து பெறப்பட்ட சமூக நலன்களைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிதான் என்று எழுதியது.

இந்த மதிப்பீடு கடந்த இரு ஆண்டுகளில் முற்றிலும் உறுதியாக்கப்பட்டுள்ளது. ப்ரூக்ஸின் கட்டுரை போன்றவை ஒரு முக்கியச் செய்தித்தாளில் வெளியிடப்படுகிறது என்னும் உண்மையே அமெரிக்கப் பெருநிறுவன, நிதிய உயரடுக்கு ஆரம்பித்துள்ள சீற்றமிகுத் தாக்குதலுக்கு நிரூபணம் ஆகும்.