சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Egypts “second revolution”

எகிப்தின் இரண்டாம் புரட்சி

Joseph Kishore
31 May 2011

Use this version to print | Send feedback

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புரட்சிகர இயக்கம் நெடுங்கால சர்வாதிகாரியான ஹோஸ்னி முபாரக்கை பிப்ரவரி 11 அன்று பதவியை விட்டு விரட்டியதற்குப் பிந்தைய காலத்தின் மிகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் சென்ற வெள்ளியன்று எகிப்தில் நடந்தன. நூறாயிரக்கணக்கானோர் தலைநகரான கெய்ரோ மற்றும் பிற நகரங்களில் கூடி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின் அமர்த்தப்பட்ட இராணுவ அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்டனம் செய்தனர்.

இரண்டாம் புரட்சி ஒன்றுக்கான அழைப்பும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய முழக்கங்களில் இடம்பெற்றிருந்த ஒன்றாகும். மூன்றரை மாதங்களுக்கு முன்பாக முபாரக் வீழ்ந்தமை பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளுக்குத் தீர்வு கண்டிருக்கவில்லை என்கின்ற அதிமுக்கிய விளக்கம் இந்த வாசகத்தில் அடங்கியிருந்தது.

ஜனநாயக உரிமைகளின் விடயத்தில், புரட்சியின் ஒரு மையக் கோரிக்கையாக இருந்த அவசரநிலைச் சட்டங்களை இல்லாதொழிக்காது இன்னும் இராணுவ ஆட்சி தொடர்ந்து பராமரித்து வந்திருக்கிறது.  மார்ச் மாதத்தில், பொருளாதாரத்தைப் பாதிக்கும் வேலைநிறுத்தங்களை அல்லது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்கிற ஒரு புதிய சட்டத்தை இராணுவம் அமுல்ப்படுத்தியது. இராணுவம் அரசியலமைப்புசட்ட மாற்றங்கள் மீதான விவாதங்களில் ஒரு கழுத்துப்பிடியைப் பராமரித்துக் கொண்டிருப்பதோடு தேர்தல் என்கிற ஒன்று எப்போதாவது நடத்தப்படுமானால் அவற்றையும் நெருக்கமாய்க் கட்டுப்படுத்தும்.

ஏற்கனவே, தக்ரிர் சதுக்கத்தில் இளம் ஆர்ப்பாட்டக்காரர்களை இராணுவம் மூர்க்கமாய்த் தாக்கியிருக்கிறது. ஆயினும் அதன் அடக்குமுறை வழிமுறைகள், எகிப்தியப் புரட்சியை நடாத்திய அடிப்படை சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் இலக்காய்க் கொண்டுள்ளது. பிப்ரவரி 11க்கு இட்டுச் சென்ற நாட்களில் வெடித்த வேலைநிறுத்தங்கள் அதன்பின் தொடர்ந்தன விரிந்தன. அதிக சமத்துவம், மேம்பட்ட ஊதியங்கள், தனியார்மயமாக்கங்களை திரும்பப் பெறுவது மற்றும் பெருநிறுவனங்களது கட்டளைகளை எதிர்ப்பதற்கான ஜனநாயக உரிமை ஆகியவற்றுக்கான தங்களது கோரிக்கைகளை எட்டுவதற்கு தொழிலாளர்கள் முனைந்தனர். சமீப வாரங்களில் ஆலைத் தொழிலாளர்களின் மற்றும் வைத்தியர்களின் உட்பட போராட்டங்கள் விரிவடைந்துள்ளன.

அரசிடம் இருந்தான ஒடுக்குமுறையைத் தவிர எகிப்தியத் தொழிலாள வர்க்கம் இப்போது ஆழமடையும் ஒரு பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்கிறது. வேலைவாய்ப்பின்மை ஏறக்குறைய 12 சதவீதத்திற்கு அதிகரித்துவிட்டது. இந்தப் பெருந்திரளான வேலையின்மையை மேம்பட்ட ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை திருப்பி விரட்டுவதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்தும்.  

வெளியுறவுக் கொள்கையை பொறுத்த வரை, அமெரிக்காவுடனான கூட்டணி என்கிற பல தசாப்தகாலமாக எகிப்திய அரசின் அடிப்படை அம்சமாக இருந்து வருவதையே புதிய அரசாங்கமும் பராமரித்து வந்திருக்கிறது. அண்மை நாடான லிபியாவில் ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு உதவுவதில் அரசாங்கம் ஒரு அதிமுக்கியப் பாத்திரத்தை வகித்திருக்கிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, காஸாவுடனான ரஃவ்வா எல்லை வாசலை பாதி திறப்பது போன்ற குறைந்தபட்ச நடவடிக்கைகளை அது எடுத்துள்ளது, உள்நாட்டு எதிர்ப்பை அடக்கி வைப்பதையும் இஸ்ரேலுடனான எகிப்தின் மூலோபாயக் கூட்டணியைப் பாதுகாப்பதையும் இது நோக்கமாய் கொண்டிருந்தது. 

இராணுவ ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதில் அமெரிக்கா ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக, அமெரிக்க அரசாங்கம் முபாரக்கின் சர்வாதிகாரத்தை ஆதரித்து அதன் இராணுவ-பொலிஸ் எந்திரத்திற்கு நிதியாதாரம் அளிக்க ஒவ்வொரு வருடமும் பில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியது. வருடத்தின் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டங்கள் பெருகிய சமயத்தில், ஒபாமா நிர்வாகம் முதலில் முபாரக்கை வெளிப்படையாய் ஆதரித்தது, பின் முபாரக்கை ஒரு நீடித்த காலகட்டத்திற்கு அதிகாரத்திலேயே தக்கவைத்திருப்பதற்கு வசதியாக ஒரு ஒழுங்குமுறைப்பட்ட மாற்றத்தை ஒழுங்கமைக்க திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டது. இறுதியில் தனது ஆதரவாளரைக் கைவிடத் தள்ளப்பட்ட நிலையில், இப்போது தனது நலன்களைப் பாதுகாப்பதற்கு இராணுவத்துடன் வேலை செய்து கொண்டிருக்கிறது.

எகிப்தியப் பொருளாதாரத்தை அந்நிய ஊடுருவலுக்கு இன்னும் கூடுதலாய்த் திறந்து விட சூழ்நிலையை சுரண்டிக் கொள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் முனைந்து வருகின்றன. உண்மையில் புரட்சியை உருவாக்க உதவிய சமூக சமத்துவமின்மைக்கு எண்ணெய் வார்த்ததே இந்த சந்தைத் தாராளமயமாக்கம் தான்.

இந்த மாத ஆரம்பத்தில் மத்திய கிழக்கு பற்றிய தனது உரையில், ஒபாமா, “ஜனநாயகத்துக்கான அமெரிக்காவின் ஆதரவானது நிதி ஸ்திரத்தன்மை, சீர்திருத்தத்தை ஊக்குவிப்பது, போட்டித்திறன்மிக்க சந்தைகளை ஒன்றுடன் ஒன்றும் உலகப் பொருளாதாரத்துடனும் ஒருங்கிணைப்பது ஆகியவற்றை உறுதிசெய்வதனை அடிப்படையாகக் கொண்டிருக்கும்என்று வலியுறுத்தினார். இவையெல்லாம் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறைகளை உடைப்பதற்கும் நாடுகடந்த பெருநிறுவனங்கள் சுரண்டுவதற்கு எகிப்திய தொழிலாள வர்க்கத்தைக் கையளிப்பதற்குமான சங்கேத வார்த்தைகள். சென்ற வாரத்தில் ஜி8 உச்சி மாநாடு இந்தப் புள்ளியை மறுவலியுறுத்தம் செய்தது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நிறுவனங்கள் மூலமாக அளிக்கின்ற அற்பமான சிறு உதவியை சந்தைச் சீர்திருத்தத்துடன் அது இணைத்தது.

முபாரக் வெளியேறுவதை ஒட்டி பிப்ரவரி 10 அன்று உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது: எகிப்திய தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், ஒரு வயதான சர்வாதிகாரியின் கரங்களில் இருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்கு அத்தியாவசியமான சமூக சக்தியை வழங்கி விட்ட பின்னரும், சில முன்னிலை ஆட்களின் பெயர்களும் முகங்களும் மாறுவதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமான மாற்றமும் இருக்காது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் முதலாளித்துவ அரசு அப்படியே தான் தொடரவிருக்கிறது.

புதிய வெடிப்புமிகுந்த வர்க்க மோதல்கள் தொடுவானத்திற்கு வந்து விட்டன. இந்தப் போராட்டங்கள் வெற்றிகரமாய் அமைய வேண்டுமென்றால், எகிப்தியப் புரட்சியின் முதல் கட்டத்தின் படிப்பினைகளை வரைவது அவசியம். எகிப்து போன்ற ஒடுக்கப்பட்ட முன்னாள் காலனிய நாட்டில் வெகுஜன மக்களின் ஜனநாயக அபிலாசைகளும், ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் இருந்தான அவர்களது விடுதலையும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாகத் தான் எட்டப்பட முடியும் என்கிற கருத்தைத் தாங்கி நிற்கும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கான இன்னுமொரு சக்திவாய்ந்த நிரூபணமாக புரட்சியின் பாதை அமைந்திருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டமும் கட்சியும் இல்லாத நிலையில், எகிப்தில் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களானவை அரசியல்ரீதியாக முதலாளித்துவ எதிர்க்கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிகழ்வுகள் முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் முகமது எல் படேயைச் சுற்றிய அடுக்குகளின் கட்டுப்பாட்டிற்கு வெளியே ஆரம்பத்தில் அபிவிருத்தியுற்று வந்த காலத்தில் வெகுஜனங்களின் புரட்சிகர முயற்சிகளுக்கு ஒரு தடையிடும் சாதனமாகத் தான் அவற்றின் அத்தியாவசியமான பாத்திரம் இருந்தது. தொழிலாளர்களை நிராயுதபாணியாக்குவதற்கும் ஆட்சிக்கு எதிரான ஒரு தீர்மானகரமான போராட்டத்தைத் தலைசீவுவதற்கும் அவை மக்களின் இராணுவம் என்று கூறி இராணுவத்தின் மீதான பிரமைகளை ஊக்குவித்தன.

முபாரக்கின் வீழ்ச்சிக்கு பின்னரும் இந்தப் பாத்திரம் தொடர்ந்து நிகழ்ந்தது. முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு பகிரங்கமாக இராணுவ அரசாங்கத்தை ஆதரிப்பதோடு கடந்த வெள்ளிக்கிழமையின் ஆர்ப்பாட்டங்களைக் கண்டனம் செய்து அவற்றை ஒழுங்கமைத்ததற்காக மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள்மீது தாக்குதல் தொடுத்தது. எல்பரேடேயைப் பொருத்தவரை, புரட்சிக்கு முந்தைய நாட்களில் எகிப்து வெடிப்பு காணவிருப்பதாகஅவர் எச்சரித்ததோடு நாட்டைக் காப்பாற்ற இராணுவம் தலையிட வேண்டும்என்றார். இப்போது இன்னுமொரு புரட்சி, ஏழைகளின் கலகம் குறித்த எச்சரிக்கைகளை அவர் எழுப்பிக் கொண்டிருக்கிறார். அத்தகையதொரு எழுச்சியைத் தலைசீவச் சிறந்த வழியை அமெரிக்காவுக்கும் இராணுவ அரசாங்கத்துக்கும் ஆலோசனையளிப்பதே அவரது நோக்கம்.

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி சக்திகளின் சுற்றுவட்டத்தில் பல்வேறு போலி-இடது குழுக்களும் சுயாதீனமான தொழிற்சங்கங்களும்உள்ளன. எகிப்திலுள்ள புரட்சிகர சோசலிஸ்டுகள் போன்ற குழுக்கள் மற்றும் எகிப்திய சோசலிஸ்ட் கட்சி ஆகியவை, பிரிட்டனில் உள்ள சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை உள்ளிட்ட அவற்றின் சர்வதேசக் கூட்டாளிகளுடன் சேர்ந்து முபாரக் வெளியேறுவதற்கு முன்பாக எல்பரேடேய் மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்தை மாற்றத்திற்கான முற்போக்கான முகவர்களாய் ஊக்குவித்தன.

இப்போது இந்தக் குழுக்கள் எல்லாம் ஒரு பொதுவான தளத்தின் அடிப்படையின் மீது ஒன்று சேர்ந்திருக்கின்றன, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தைத் தடுப்பது தான் இவற்றின் அத்தியாவசியமான நோக்கம். இந்த மாத ஆரம்பத்தில், எகிப்திலுள்ள பல்வேறு இடதுகுழுக்களும் சோசலிச முன்னணி என்று அழைக்கப்படுகின்ற ஒன்றினை உருவாக்க ஒன்றுசேர்ந்தன, “பொதுவான தேசிய இலக்குகளைச் சாதிக்க அனைத்து முற்போக்கான மற்றும் ஜனநாயக சக்திகளுடன் ஒத்துழைப்பதுதான் தனது நோக்கம் என்று இது பிரகடனம் செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுக்கு கீழ்ப்படியச் செய்வதற்கு அவர்கள் தொடர்ந்து இயங்குவார்கள்.

தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துக்கான போராட்டத்தில் அணிதிரட்டுவதையும் முதலாளித்துவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டுவது தான் எகிப்திய தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற அடிப்படையான பணி ஆகும். எப்படியிருப்பினும், எகிப்தில் கட்டவிழும் போராட்டங்கள் எகிப்திற்குள்ளாக மட்டும் வெற்றிபெற்று விட முடியாது, அத்துடன் எகிப்தின் படிப்பினைகள் எகிப்தியத் தொழிலாளர்களுக்கு மட்டுமான படிப்பினைகள் அல்ல.

2008 இன் இலையுதிர் காலத்தில் தொடங்கிய நிதி நெருக்கடிக்குள் இரண்டரை ஆண்டு காலம் மூழ்கியிருந்த நிலையில், தொழிலாளர்கள் பரந்த அளவில் திருப்பிப் போராடத் தொடங்கியுள்ளனர். ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் தொழிலாளர்கள் தலைமுறைகளாய் போராடிப் பெற்ற நலன்களை இல்லாதொழித்து திரும்பச் செய்ய உலகளாவிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். லிபியப் போரும் எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சமூக வேலைத்திட்டங்களில் செய்யப்படும் வரலாற்று வெட்டுக்கள் உட்பட்ட ஒரு உலகளாவிய நிகழ்வுப்போக்கின் பாகமாகும்.

எகிப்தின் பிப்ரவரி நிகழ்வுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலான எழுச்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்த்தாக்குதலின் ஆரம்பமாக அமைந்தன. அவை உலகம் முழுக்க சக்திவாய்ந்த வகையில் அதிர்வுகளை ஏற்படுத்தின. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் தொழிலாளார்களின் போராட்டங்களுக்கு அவை உத்வேகம் அளித்தன, அமெரிக்கத் தொழிலாளர்கள் பகிரங்கப் போராட்டத்திற்குள் மீண்டும் குதிப்பதன் ஆரம்பம் தான் அது. இப்போது ஐரோப்பாவில், 20 ஆம் நூற்றாண்டின் பாதையில் வெல்லப்பட்ட ஒவ்வொரு சமூகநல உதவியின் மீதும் நிகழ்த்தப்படுகின்ற வரலாற்றுரீதியான தாக்குதலுக்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் பத்து மற்றும் நூறாயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பியக் கண்டம் ஒரு புதிய பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது, இது ஒட்டுமொத்தமாக உலகப் பொருளாதாரத்தின் ஒரு புதிய சரிவுக்கான தெளிவான அறிகுறிகளின் சமகாலத்தில் நிகழ்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு போராட்டத்திலும் முன்வந்து நிற்கின்ற அடிப்படைப் பணி என்னவென்றால் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டுவது என்பது தான்.