சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany recognises Libyan opposition after US ultimatum

அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கைக்குப் பின் ஜேர்மனி லிபிய எதிர்தரப்பை அங்கீகரிக்கிறது

By Chris Marsden
15 June 2011

Use this version to print | Send feedback

பதவியில் இருந்து வெளியேறும் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ஐரோப்பா லிபியா, ஆப்கானிஸ்தானம் மற்றும் பிற இடங்களில் நடக்கும் காலனித்துவவகைப் போரில் இன்னும் கூடுதலான பங்கை ஏற்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை அதன் முதல் பலனை பெங்காசித் தளமுடைய இடைக்காலத் தேசிய குழுவிற்கு இராஜதந்திர அங்கீகாரத்தை ஜேர்மனி கொடுத்ததில் வெளிப்பட்டுள்ளது.

வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டெர்வெல்ல மத்திய கிழக்கிற்கு செல்லவிருந்த பயணத்தை பெங்காசி செல்வதற்காகத் திங்களன்று மாற்றியது பல ஐரோப்பிய நாடுகள் லிபியாவிற்கு குறைந்தளவே செய்துள்ளமை ஏற்கத்தக்கதுஅல்ல என்று கேட்ஸ் கூறிய புகாருக்கு விடையளிக்கும் வகையில் உள்ளது. குற்றச்சாட்டலுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகள் பெயரிடப்படவில்லை என்றாலும் அவர் எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி மட்டும் இல்லால் போலந்து, இந்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றையும் கருத்திற் கொண்டிருந்தார். இவை நேட்டோ நடவடிக்கையில் பங்கு பெறவில்லை.

முன்கூட்டி அறிவிக்கப்படாத வருகையின்போது வெஸ்டர்வெல்ல, லிபிய தலைவர் முயம்மர் கடாபிஅனைத்து சட்டபூர்வத்தன்மையையும் இழந்துவிட்டார், கடாபியின் முன்னாள் மந்திரிகளும் CIA இன் கையாட்களும் அடங்கிய இடைக்காலத் தேசியக் குழுதான் லிபிய மக்களின்சட்டபூர்வமான பிரதிநிதிகள் என்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே கூறியதை எதிரொலித்தார். ஆட்சி மாற்றத்திற்கு வெளிப்படையாக ஒப்புதல் கொடுத்தபின், அவர், “ ஒரு சுதந்திர லிபியா வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், கடாபி இல்லாமல் அது அமைதியையும், ஜனநாயகத்தையும் பெறும்என்று அறிவித்தார்.

உத்தியோகபூர்வ, இராஜதந்திர அங்கீகாரத்திற்கு சற்றே குறைந்த வகையில், வெஸ்டெர்வெல்ல ஜேர்மனிய தூதரகப் பிரதிநிதித்துவம் பெங்காசியில் திறக்கப்படும் என்று அறிவித்தார். இப்பொழுது 12 நாடுகள் இடைக்கால தேசியக் குழுவை அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்பெயின், காம்பியா, ஜோர்டான், மால்டா, கட்டார், செனெகல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

லிபியா மீது நடத்தப்படும் போரில் அமெரிக்க முக்கிய பங்கு வகித்தாலும், TNC க்கு தூதரக அங்கீகாரம் கொடுப்பதற்குச் சற்றுக் குறைவான நிலையில் உள்ளது; TNC “லிபிய மக்களின் சார்பாக நம்பகத்தன்மை உடைய, நெறி உடைய குழுஎன்று அது விவரித்துள்ளது.

ஜேர்மனியின் இராஜதந்திர ஆரம்ப முயற்சி போலவே வெஸ்டெர்வெல்லவின் முடிவு பற்றிய சுருக்கமான கருத்துரையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறித்துள்ளதும் அமெரிக்காவிற்கு முக்கியமானதுதான்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பரிசீலித்த சில ஜேர்மனியப் பாதுகாப்புத்துறை ஆவணங்களின்படி, அழைக்கப்பட்டால் லிபியாவில் அமைதிகாக்கும் துருப்புக்கள் அளிப்பது பற்றி ஜேர்மனி பரிசீலித்துவருகிறது.”

ஏப்ரல் மாதம் பெரும்பாலும் ஜேர்மன் துருப்புகள் அடங்கிய  “மனிதாபிமானஐரோப்பிய ஒன்றிய கடற்படை மற்றும் தரைப்படை நடவடிக்கையை லிபியாவிற்கு அனுப்பும் திட்டத்தில் இருந்து சற்றே மாறுபட்டது போல் தோன்றுகிறது. அத்திட்டம் ஐ.நாவில் தடைக்கு உட்பட்டு வாஷிங்டன், பாரிஸ் மற்றும் லண்டனால் எதிர்க்கப்பட்டது. ஏனெனில் அது நடைமுறையில் ஜேர்மனியால் தலைமைதாங்கப்பட்டு, அமெரிக்கா, நேட்டோ ஆகியவற்றிடம் இருந்து சுயாதீனமாகச் செயல்படும்

அப்போது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லிய ஹாக் நேட்டோ ஊடாக எமது முயற்சிகளை தொடரவும், தீவிரப்படுத்தவும் வேண்டும் என்றார். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஜேர்மனிய ஆவணங்களை இசைவுடன் மேற்கோள் இடுகிறது என்றால், அது நேட்டோத் தலைமையிலான பணியில் பங்கு பெறுவதைத்தான் குறிக்கும்.

அதிகரித்தளவில் நேட்டோ நடத்தும் குண்டுத் தாக்குதல்களின் ஆதரவு இருந்தும்கூட, எழுச்சியாளர்கள் என அழைக்கப்படுபவர்களால் அதிக முன்னேற்றம் காணவில்லை என்னும் சூழ்நிலையில் லிபியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் மற்றவற்றுடன் சேருமாறு ஜேர்மனி அதிக அழுத்தத்தைப் பெற்றுள்ளது.

லிபியாவில் நடக்கும் வான் தாக்குதல்களின் வேகம் கடந்த சில நாட்களாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று கடாபியின் பாப் அல்-அஜிஜியா வளகத்திற்கு அருகே மற்றும் ஒரு தாக்குதல் நடந்தது. இந்த இடம் அரசாங்க சார்புடைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதி ஆகும். இதில் சமீபத்தில்கூட பல வெளிநாட்டுப் போர் எதிர்ப்பு ஆர்வலர்கள் பங்கு பெற்றிருந்தனர். திரிப்போலி மற்றும் மிஸ்ரடாவிற்கு இடையே உள்ள உலக பாரம்பரிய இடமான லெப்டிஸ் மாக்னா எனப்படும் ஒரு பழைய ரோமானிய நகரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று கூற நேட்டோ மறுத்துவிட்டது; அரசாங்கம் இராணுவத் தளவாடங்களை சேகரித்து வைக்கும் இடமாக இதைப் பயன்படுத்துகிறது என்று இடைக்காலத் தேசிய குழு கூறியுள்ளது

ஆனால் பல போர் முனைகளில் அரசாங்கப் படைகள் இடைக்காலத் தேசியக் குழுவின் முன்னேற்றங்களை வெற்றிகரமான தடுத்துவிட்டது. ஞாயிறு மற்றும் திங்களன்று கடாபியின் துருப்புக்கள் 30கற்கும் மேற்பட்ட அரசாங்க எதிர்ப்புப் போராளிகளை கிழக்கு லிபியாவில் அஜ்டபியா மற்றும் பிரேகாவிற்கும் இடையே உள்ள பகுதியில் கொன்றதாகவும் பலரும் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் எண்ணெய் வணிகத்தில் மூலோபாய மையமாக உள்ளது.

இந்த இடர்களை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் லிபாயிவில் முழுமையாக ஈடுபடத் தயக்கம் காட்டும் ஜேர்மனி இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக குரலை உயர்த்திதற்போதைய ஐரோப்பாவின் பாதுகாப்பு தகமைகளின் சரிவு என்னும் போக்கு நிறுத்தப்பட்டு மாற்றப்படாவிடின்..வருங்கால அமெரிக்கத் தலைவர்கள்…அமெரிக்கா நேட்டோவில் செய்த முதலீட்டிற்கு உரிய ஆதாயம் கிடைக்கவில்லை என்ற முடிவிற்கு வருவர்என்று எச்சரித்தார்.

ஐரோப்பாவிற்கு அவர் கொடுத்த எச்சரிக்கைகள் அமெரிக்க செய்தி ஊடகத்தின் ஆதரவைப் பெற்றது இயல்பே ஆகும். Washington Post  “ஐரோப்பிய பாதுகாப்புச் செலவுகள் 2001ல் இருந்து 15 சதவிகிதம் குறைந்துவிட்டன, அமெரிக்காவிலோ அது இரு மடங்காக ஆகிவிட்டது என்று குறைகூறியுள்ளது.

ஆனால் இந்த நிலைப்பாடு இங்கிலாந்து செய்தி ஊடகத்திலும் ஒப்புதலைப் பெற்றது; அது ஜேர்மனியின் மறுப்பிற்கு மாறாக பிரிட்டன் தயாராக இருப்பது பற்றிய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 “உண்மை என்ன என்றால், ஒரு ஒழுங்கற்ற தன்மை, அபாயத்தை தவிர்ப்பது, அளவில் பெரிதாக இருந்தும் இராணுவரீதியாக திறனற்று இருப்பது என்பதைத்தான் நேட்டோ உணர்கிறது. அதன் நோக்கம் பெருகிய முறையில்விருப்பம் உடையோர் கூட்டணியினால் பலவந்தமாக பறிக்கப்பட்டுவிட்டது.” என்று கார்டியன்  தலையங்கம் எழுதியுள்ளது.

கேட்ஸ்பெரும் இராஜதந்திர திறமையுடன் எவரையும் பெயரிடவில்லை, “ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், துருக்கி ஆகியவற்றை இராணுவக் கூட்டில் தங்கள் பங்கை செய்யாததற்காக அடையாளம் காட்டவில்லை.ஆனால் ஒற்றை பெரும் ஐரோப்பியக் குற்றவாளி ஜேர்மனிதான் என்பது உறுதி.” என்று ஸ்காட்மன் பத்திரிகை குறைகூறியுள்ளது.

ரூபர்ட் மேர்டோக்கின் ஸ்கை நியூஸ்  லிபியாவில் போர் முடுக்கிவிடப்பட வேண்டும் என்று கோருவதில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நேட்டோ விமானங்கள் நாளொன்றிற்கு 50ல் இருந்து 150 தடவை அங்கு பறந்து சென்றபோதிலும்கூட இது, “கர்னல் முயம்மர் கடாபியின் துருப்புக்கள் மேலிருந்து வரும் அச்சுறுத்தலைப் தவிர்த்துக்கொள்கின்றன என்று குறை கூறியுள்ளது.

 “இராணுவ நடவடிக்கைகள் அனைத்துமே வேகத்தைப் பொறுத்தவை ஆகும். நேட்டோ கூட்டணியும் எழுச்சியாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்றால், களைப்படைந்த கட்டத்தையும் உட்பூசல்களையும் தவிர்க்க வேண்டும் என்றால், அவை கணிசமாக தங்கள் லிபியத் தலைவர் படைகள்மீதான தாக்குதல்களின் தரத்தை அதிகரிக்க வேண்டும்தாங்கள்குடிமக்களைக் பாதுகாக்கிறோம்என்ற போலித்தனத்தை மறந்து, ஆட்சியை மாற்றப் போராடுகிறோம் என்ற உணர்வைக் கொள்ள வேண்டும்.”

ஜேர்மனி மாறி வந்துள்ளது அத்தகைய மாற்றத்திற்குத்தான் வழிவகுக்கிறது; இது அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் இன்னும் கூடுதலான குற்றச் செயல்கள் புரியவும், கொள்ளைமுறை ஏகாதிபத்தியக் குறுக்கீட்டையும்தான் ஊக்குவிக்கும்; லிபியாவில் மட்டும் இல்லாமல், உலகெங்கிலும் இவற்றை நடத்துவதற்கு.

திங்களன்று வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் ஐரோப்பாவை கேட்ஸ் உலுக்கியதை ஆபிரிக்கத் தலைவர்களுக்கு விரிவாக்கம் செய்தார். எதியோப்பியத் தலைநகரான அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியத் தலைவர்கள் கூட்டத்தில் அவர்கள் கடாபியுடன் உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். “ஒவ்வொரு நாளும் அவர் ஆளுவதற்கான சட்டபூர்வதன்மையை இழக்கிறார் என்பது தெளிவாகிவிட்டது. அவர் அதிகாரத்தில் இருக்க முடியும் என்ற நாட்களை நாம் கடந்து பல காலமாகிவிட்டது.” என்றார் அவர்.

ஒரு உட்குறிப்பான அச்சுறுத்தலில், அவர் கூடியிருந்த பிரதிநிதிகளிடம் அவர்களும் கடாபி, எகிப்தின் ஹொஸ்னி முபாரக், துனிசியாவின் ஜேன் அபிடைன் பென் அலி போல் வீழ்ச்சியை எதிர்கொள்ளக்கூடும் என்றார். “ஆபிரிக்காவில் பல மக்கள் இன்னமும் நீண்டகாலமாக ஆட்சிசெலுத்துபவர்களின்கீழ் உள்ளனர். அந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சி நீடிப்பது பற்றிக் கவனம் செலுத்துகின்றனரே ஒழிய தங்கள் நாடுகளின் எதிர்காலத்திற்கு அவர்கள் கட்டமைக்க வேண்டிய மரபியத்தைப் பற்றி நினைப்பதில்லைஎன்றார் அவர்.

ஆனால் போரில் உட்புகாமை குறித்த கேட்ஸின் குறிப்புகள் ஐரோப்பாவிற்குள் சில நாடுகளை ஆழ்ந்த பிளவிற்குள் தள்ளி அவர்கள் இனி வாஷிங்டனை ஒரு நட்பு நாடு எனக் கருதுவதற்கு இல்லை என்றுகூட நம்ப வைத்துவிடும்.

வலுவான பழைமைவாத ஸ்பெக்டேடர் இதழில் ஐரோப்பியக் குழுவின் வெளியுறவுப் பிரிவில் மூத்த கொள்கை இயற்றுபவரும், அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் ஒரு முன்னாள் மூத்த ஆலோசகருமான  டேனியல் கொர்ஸ்கி கேட்ஸின் கருத்துக்கள்நன்கு ஆராயப்படாதவை என்றார்.

 “பல ஐரோப்பிய அரசாங்கங்கள் பென்டகன் தலைவரின் சொற்கள் பற்றி வேதனை அடைந்திருப்பது சரியே. ஏனெனில் ஆப்கானிஸ்தானத்திற்குக் கூடுதல் துருப்புக்கள் அனுப்பப் பட வேண்டும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் வேண்டுகோளை அவை நிறைவேற்றியுள்ளன என்று கூறி பின் எச்சரிக்கிறார்:

 “சீனா போன்ற சர்வாதிகார நாடுகள் எழுச்சி பெற்றுவரும் உலகில் அமெரிக்க அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளை விரோதப்படுத்திக் கொள்ள விரும்பினால், அது விரைவில் தன்னை ஒரு சங்கடமான நிலையில்தான் காணும். என்ன தவறுகள் இருந்தாலும்பல உள்ளனமுக்கிய ஐரோப்பிய அரசாங்கங்கள் இன்னும் அமெரிக்காவிற்குக் கிடைக்கக் கூடிய எப்பொழுதும் உதவும் சிறந்த நட்பு நாடுகள்தான்நேட்டோ போன்ற கூட்டுக்கள் பகிர்ந்து கொள்ளப்படும் அச்சுறுத்தல் அபாயம் இருக்கும்போது அல்லது சுமையைப் பகிர்ந்து கொள்ளுதல் என வரும்போது போதுமான ஒற்றுமையுணர்வை அவை காட்டும்.”

மேலதிகமாக, அமெரிக்க அதன் முக்கிய கூட்டுக்கள் பற்றி விரிவாக்கப்பட்ட இராணுவ நிலைப்பாட்டிலும் அறிகின்றது. இங்கிலாந்தின் முதல் கடற்படைப்பிரிவுப் பிரபு சேர்.அட்மைரல் மார்க் ஸ்டான்ஹோப் கேட்ஸின் புகார்களைப் பயன்படுத்தி லிபியாவில் பிரிட்டிஷ் கடற்படை பணி இன்னும் ஆறு மாத காலத்திற்கு மேல் நீடித்தால் நிலைத்திருக்க முடியாது என்று அறிவிக்க வைத்துள்ளது. பாதுகாப்பு வெட்டுக்களுக்கு எதிராகப் பேசுகையில் அவர் போர் நடவடிக்கை குறைந்த செலவுகளைக் கொண்டிருக்கும், பிரிட்டன் கடந்த ஆண்டு அகற்றிவிட்ட ஒரு விமானத் தளம் கொண்ட கப்பலையும் ஹாரியர் ஜம்ப் ஜேட்டுக்களையும் கொண்டிருந்தால்இன்னும் எளிதாகப் போயிருக்கும் என்றார். வேறு இடங்களில் செலவுகளைக் குறைக்காவிட்டால் கடற்படை அதன் லிபியச் செயற்பாடுகளை மற்றும் மூன்று மாதங்களுத் தொடரமுடியாது என்றார்.

இராணுவத்தின் தலைவரான ஜெனரல் சேர். டேவிட் ரிச்சர்ட்ஸ் தலையிடும் கட்டாயத்திற்கு உட்பட்டு, “இந்தச் செயற்பாட்டை நாம் விரும்பும் வரை தொடர்வோம். அதில் நான் மிகவும் தெளிவாக உள்ளேன்.” என்றார்.

கேட்ஸின் கூற்றான லிபியாவில் விநியோகங்கள் மற்றும் அமெரிக்க ஆதரவை நம்பியிருக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ள நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பதைத்தான் ஸ்டான்ஹோப் உறுதிபடுத்தியுள்ளார். பிரிட்டிஷ் கடற்படை அமெரிக்காவை மீண்டும் அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தும் தொமஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்குமாறு கோர வேண்டியதாயிற்று.

அமெரிக்காவும் அடுத்த தசாப்தத்தில் பாதுகாப்புதுறையில் கிட்டத்தட்ட  கணிசமான $800 பில்லியன் குறைப்புக்களை செய்து கொள்கிறது; இது வாஷிங்டன் போஸ்ட்டைஅமெரிக்காவே அதன் இராணுவத் திறன்களைக் குறைத்துக் கொண்டு, அதன் நோக்கங்களைப் பின்புலம் நோக்கி செலுத்தி, ஒரு போரின்போது பின் இருக்கைகளில் அமரும்போது, திரு. கேட்ஸின் அழைப்புகளுக்கு ஐரோப்பியர்கள் பிரதிபலிப்பை காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பது இயலாதுஎன்று எச்சரித்துள்ளது.