சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Class struggle emerges in Saudi Arabia

சௌதி அரேபியாவில் வர்க்கப் போராட்டம் வெளிப்படுகிறது

By Harvey Thompson
25 February 2011

Use this version to print | Send feedback

சௌதி அரேபியாவின் மெக்காவிலுள்ள Grand Mosque க்கின் வடபகுதி முற்ற விரிவாக்கத் திட்டத்தில் ஒரு முக்கிய நிறுவனத்தால் அமர்த்தப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு வேலை கொடுத்துள்ள King Abdul Azis Endowment Project என்னும் நிறுவனம் கடந்த இரு மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை, கூடுதல் பணிநேர ஊதியமும் கொடுக்கவில்லை. தொழிலாளர்கள் ஊதிய அதிகரிப்புக்கள் மற்றும் நல்ல வசிக்குமிடங்களைக் கோரியுள்ளனர்.

திங்களன்று நிறுவனத்திற்கு அருகே எதிர்ப்புத் தெரிவித்த வேலைநிறுத்தம் செய்பவர்கள் கலைந்து செல்லப் பொலிசார் பயன்படுத்தப்பட்டனர்.

சௌதி கட்டுமானத்துறை இழிந்த முறையில் குறைவூதியம் கொடுப்பதும், மற்றும் ஆபத்துத் தன்மையையும் உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கும் குடியேறி வந்துள்ள தொழிலாளர்களுக்கும் கொடுக்கிறது. கடந்த மாதம் தலைநகர் ரியத்தில் இளவரசி நௌரா பின்ட் அப்துல் ரெஹ்மான் பெண்கள் பல்கலைக்கழகக் கட்டுமானப் பகுதி ஒன்றில் ஒரு சாரம் சரிந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமுற்றனர்.

பெப்ருவரி 16ம் தேதி, அரசர் அப்துல்லா நிதிய மாவட்டத்தில் (KAFD) மற்றும் தலைநகரில் KSU எனப்படும் அரசர் சௌத் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் திட்டங்களிலும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் முறையாக அவர்களின் ஊதியங்கள் மற்றும் கூடுதல் பணிநேர ஊதியம் கொடுக்கப்படாததால் வேலையை நிறுத்தினர்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்துள்ள ஒரு தொழில்நுட்பவாளர், “எங்களுக்கு ஊதியம் கிடைக்கிறது, சில நேரம் தாமதமாக வருகிறது. ஆனால் கூடுதல் பணி நேரத்திற்கு ஊதியங்கள் எதுவும் எங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றார்.

அமெரிக்க ஆதரவுடைய வரம்பிலா முடியாட்டிக்கு எதிரான தொழில்துறை நடவடிக்கை வெடித்துள்ளதானது சௌதிய பரம்பரையினரால் ஆளப்படும் நாட்டிலுள்ள ஆழ்ந்த சமூக அழுத்தங்களின் வெளிப்பாடு ஆகும். வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பரவியுள்ள புரட்சி அலை மிருகத்தன ஏகாதிபத்திய புரவலர் தன்மை, குடியேறும் மில்லியன் கணக்கான தொழிலாளிகளை இரக்கமற்ற வகையில் சுரண்டுதல், உலகிலேயே மிக அதிக எண்ணெய் இருப்புக்கள் ஆதாரங்களைச் சுரண்டுதல் என்ற தளத்தைக் கொண்டுள்ள அப்பிராந்தியத்தின் ஒரு தேசத்தில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. இங்கோ பல தசாப்தங்களாக ஆட்சியானது வர்க்கப் போராட்டத்தை நசுக்கித்தான் வந்துள்ளது.

உறுதித்தன்மை வளர்ந்துள்ளது என்ற தோற்றத்தைக் காட்டினாலும், எண்ணெய் இராச்சியத்தின் மேற்பரப்பிற்குக் கீழே அழுத்தங்கள் எழுச்சி பெற்று வருகின்றன. ஜனவரி 21ம் தேதி அடையாளம் காணப்படாத ஒரு 65 வயது நபர் ஜிசான் சம்டா என்னும் சிறு நகரத்தில் தனக்கே தீ வைத்துக் கொண்ட பின்னர் இறந்து போனார். நாட்டில் முதல் முறையாக தெரியவந்துள்ள சுய தீக்குளிப்பு இதுவாகும்.

ஜனவரி 29ம் திகதி, ஜேட்டா நகரில் நகரத்தின் வறிய உள்கட்டுமானத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள், பெரும் வெள்ளங்கள் 11 பேரைக் கொன்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெள்ளத்திற்கு மக்கள் நடவடிக்கை விடையிறுப்பாக வரவேண்டும் என்ற அழைப்புக்கள் smart தொலைபேசிகள் மூலம் அனுப்பப்பட்டன.

அணிவகுத்துச் செல்லத்தொடங்கிய 15 நிமிடங்களில் ஆர்ப்பாட்டத்தை பொலிஸ் நிறுத்தியது. கிட்டத்தட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெப்ருவரி 5ம் திகதி, கறுப்பு அங்கிகள் அணிந்த 40 பெண்கள் தலைநகரில் விசாரணையின்றிக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

10 மனித உரிமைகள் ஆர்வலர்களும் வக்கீல்களும் ஒன்றாக வந்து உம்மா இஸ்லாமியக் கட்சியைத் தோற்றுவித்துள்ளனர் என்று பெப்ருவரி 10ம் திகதி ராய்ட்டர்ஸ் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய அமைப்பு 1990களுக்குப் பின்னர் முதல் தடவையாக முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி கோரும் முதல் சௌதி அரேபியக் கட்சி இது எனக் கூறப்படுகிறது. பெப்ருவரி 18 அன்று கட்சியின் பத்து நிறுவன உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படுவதற்கு மாற்றீடாக அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டனர்.

தலைநகரில் மார்ச் 11ம் தேதிசீற்ற தினம் ஒன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் 87 வயது முடியரசர் அமெரிக்கா மற்றும் மொரோக்கோவிலிருந்து முதுகு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கடந்த வாரம் திரும்பிய பின்னர், முன்னோடியில்லாத பொருளாதாரப் பொதி ஒன்றை அரசாங்கம் அறிவித்தது. இதில் வீடுகள் கட்ட வட்டி இல்லாத கடன்கள், வேலையின்மை உதவி மற்றும் ஏராளமான கடன்கள் இரத்து செய்யப்படுதல் ஆகியவை அடங்கியிருந்தன. அரசாங்கம் சௌதி அரேபியா முழுவதும் வரக்கூடும் என எதிர்பார்த்த அமைதியின்மை நிலையை எதிர்கொள்ளும் வகையில் இந்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது.

பெப்ருவரி 23ம் திகதி Bloomberg, “இவற்றிற்கான மொத்தச் செலவு 135 பில்லியன் சௌதி ரியால்கள் ($36 பில்லியன்) என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால் இது ஒன்றும் நன்கொடை அல்ல. ஏற்கனவே அரபு உலகை நிலைகுலைத்துள்ள, படர்ந்து வரும் எழுச்சிகள், குருதி கொட்டுதலில் தான் ஒரு பங்கைப் பெறக்கூடாது என்பதற்காக சௌதி அரேபியா தெளிவாக விரும்புகிறது என்று கருத்துக் கூறியுள்ளது.

வீடுகளின் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் வெளிப்படையாக இயங்கும் வகையில் ஏராளமான பணத்தை சௌதி அதிகாரிகள் பெரும் திகைப்புடன் உட்செலுத்துகின்றனர் என்று சௌதி அரேபியத் தளத்தைக் கொண்ட Banque Saudi Fransi ன் தலைமைப் பொருளாதார வல்லுனரான John Sfakianakis கூறியுள்ளார்.

இத்தகைய ரொக்க உட்செலுத்துதல் அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொலைக்காட்சி மூலம் பல முறையும் முக்கியமாக ஒளிபரப்பப்பட்டது— 50 பில்லியன் ரியால்கள் ($10.7 பில்லியன்) நிதி என்று சௌதி மக்கள் வீடுகள் வாங்க அல்லது கட்டுவதற்கு இலவச வட்டிக் கடன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஒரு கடன் வாங்கத் தகுதி பெறுவதற்கு 18 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும்.

மற்றும் ஒரு 15 பில்லியன் ரியால்கள் ($4பில்லியன்) பொது வீட்டு அதிகாரத்தின் வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. அதே நேரத்தில் Saudi Credit & Savings Bank மூலதனமாக 30 பில்லியன் ரியால்களை ($8 பில்லியன்) பெறும். இந்த வங்கி மற்றவற்றுடன் திருமணம் நடத்த, வணிகம் தொடங்க ஆகியவற்றிற்குக் கடன்களைக் கொடுக்கிறது. இதற்கு சௌதி அரசாங்கமும் ஆதரவு கொடுக்கிறது.

ஆன்லைன் ஷர்க் அரபு மொழிச் செய்தித்தாள், “அரசவைக்கு நெருக்கமான ஆதாரங்களிலிருந்து அரசாங்க ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் 30 சதவிகித அதிகரிப்பைப் பெறுவர் என்றும், அத்துடன் மாட்சிமை தங்கிய இரு புனிதத் தலங்களுக்குப் பாதுகாவலர் திரும்பி வந்துள்ளதைக் குறிக்கும் வகையில் மூன்று மாத ஊதியத்தை அன்பளிப்பாகவும் பெறுவர் என அறிகிறது என்று கூறியுள்ளது.

மற்றய நடவடிக்கைகளில் அரசாங்கத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கத்தர சரிசெய்யும் 15 சதவிகிதப் படி, இளைஞர்களுக்கு ஓராண்டு வேலையின்மை உதவி, அரசாங்க உதவி பெறுவதற்குத் தகுதி என்று குடும்பங்களில் நபர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக 15 என்று உயர்த்துதல் ஆகியவை அடங்கும். பொருளாதாரத் திட்டங்கள் வளர்ச்சி நிதியிலிருந்து கடன் வாங்கிய பின்னர் இறந்துவிட்டவர்களுடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்படக்கூடும் என்றும் தெரிகிறது.

தேசிய வருமானம் எப்படிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதை அளிக்கும் அரசாங்கப் புள்ளிவிபரங்கள் சௌதி அரேபியாவில் கிடைக்கவில்லை. ஆனால் சில பகுப்பாய்வாளர்கள் நாட்டில் 450,000 க்கும் மேலானவர்கள் வேலையின்றி உள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மற்றவர்களால் நம்பத்தகுந்தது இல்லை, ஏனெனில் உறுதியற்ற வேலை என்னும் காரணி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கருதப்படுகிறது. 15 முதல் 24 வயது வரையுள்ள குழுவில் வேலையின்மை சௌதி அரேபியாவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் என்று உள்ளது.

நாட்டின் மக்கட்தொகை கிட்டத்தட்ட 26 மில்லியன் ஆகும். இதில் 5.5 மில்லியன் சௌதியைச் சேராதவர்கள். முக்கியமாக குறைவூதியம் பெறும் வெளியிடங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் ஆவர்.

வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப படி கொடுப்பது குறைந்த தொகைக்கு என்பதாலும், ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 5.3 சதவிகிதம் என்று இருந்த பணவீக்கத்தாலும், வீட்டு விலைகள் உயர்வினாலும் சமூக அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் எகிப்தில் எதிர்ப்புக்கள் ஏற்பட்ட முதல் நாட்களில் சிலபொருளாதார இனிப்புக்களை வழங்கினார். ஆனால்  அதற்குப்பின் விரைவில் அகற்றப்பட்டுவிட்டார். ஜோர்டான், யேமன் போன்ற மற்றய அண்டை நாடுகளும் உதவித்தொகைகளை அதிகரிக்க முற்பட்டுள்ளன. அடிப்படைப் பொருட்களின் விலைகள் செயற்கையாகக் குறைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் அரசாங்க நிறுவனம் ஒன்றை ஜோர்டான் புதுப்பிக்க முயல்கிறது. ஆனால் இது எதிர்ப்புக்களைக் குறைப்பது என்ற வகையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

மார்ச் 11 பெரிதும் விரும்பப்படும் புரட்சி என்பதை ஒரு பேஸ்புக் பக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு நூற்றுக்கணக்கான பார்வையாளர்களின் கவன ஈர்ப்பிற்கு வந்துள்ளது. அப்பக்கத்தில் வந்துள்ள ஒரு தகவல்ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்து கோரிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளது. அவற்றுள் ஆட்சியாளர் மற்றும் ஆலோசனைச் சட்டமன்றம் தேர்ந்தெடுக்கப்படுவது, அதற்கு ஷுரா சபை எனப் பெயரிடுதல் போன்றவை அடங்கியுள்ளன.

வளைகுடா ஒத்துழைப்புச் சபையின் உறுப்பு நாடாகிய பஹ்ரைனிலுள்ள அமைதியின்மை, மற்றும் இப்பொழுது லிபியாவில் அமைதியின்மை ஆகியவை உலக எண்ணெய்ச் சந்தையில் ஆழ்ந்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் இந்நாடுகள் OPEC யில் முக்கிய உறுப்பு நாடுகள் ஆகும். சௌதி அரேபியா உலகின் மிகப் பெரிய நிரூபிக்கப்பட்ட மரபார்ந்த கச்சா எண்ணை இருப்புக்களில் முதல் இடத்தில் உள்ளது.

வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய் அளிப்புக்களின் தடை ஏற்படுவது தற்போதைய இரு ஆண்டுகளில் உயர்ந்த பீப்பாய்க்கு 100 டொலருக்கும் மேல் என்னும் விலை மலிவு போல் தோன்றிவிடும். ஏற்கனவே எண்ணெய் விலைகள் லிபியாவில் அமைதியின்மையை அடுத்து இந்த எண்ணிக்கையைவிட உயர்ந்துவிட்டன.

முதலீட்டு வங்கி Goldman Sachs ஒரு ஆய்வு அறிக்கையில் பஹ்ரைன் எதிர்ப்புக்கள் எப்படி வளைகுடா நாடுகளும் பாதிப்பிற்கு உட்படலாம் என்பதைக் காட்டுகின்றன எனத் தெரிவிக்கிறது. அது ஒரு தீவு நாட்டிலும் லிபியாவிலுமுள்ள அமைதியின்மை முக்கிய எண்ணெய் வழங்கல் தடைகள் என்னும் இடர்களை தகர்க்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சௌதிய பரம்பரை ஏற்கனவே பல பிரச்சினைகளில் உள்ளது. 87 வயதான மன்னர் அப்துல்லாவின் உடல் நிலை ஆழ்ந்த ஊகத்திற்கு உட்பட்டுள்ளது. அதுவும் அவருக்குப் பின் வரக்கூடியவர்கள் என்பவர்களின் வயதும் மூப்பானவை என்ற நிலையில். அவர் அமெரிக்காவிலும் மொரோக்கோவிலும் மூன்று மாதங்கள் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அப்துல்லாவின் அரைச் சகோதரர் இளவரசர் சுல்த்தான் அவருடைய 80 வது வயதில் உள்ளார், உடல்நிலையும் திருப்திகரமாக இல்லை. மன்னர் இல்லாத காலத்தில் இவர்தான் பொறுப்பேற்றிருந்தார்.

மன்னர் திரும்பிவந்தது சௌதிச் செய்தி ஊடகத்தால் வரவேற்கப்பட்டது. ஆனால் நரம்புத் தளர்ச்சி நிறைந்த ஒலிக்குறிப்புக்களும் நிறைந்திருந்தன. ஆங்கில மொழி ஏடான Arab News, “இப்பகுதியில் இப்பொழுது அரசர் ஒருவர்தான் உறுதிக்கான தூணாக உள்ளார்….ஒழுங்கான முன்னேற்றத்திற்கு அவர் ஒருவர்தான் உறுதிப்பாடு கொடுக்க முடியும்….. அரபு உலகம் முழுவதற்குமே..” என்று கூறியுள்ளது.

திரும்பி வந்தவுடன், அப்துல்லா பஹ்ரைன் மன்னர் ஹமாத்துடன் பேச்சுக்களை நடத்தினார். அது சௌதி அரேபியாவின் கிழக்கு எல்லையில் உள்ளது.

ஏகாதிபத்தியத்திற்கு சௌதி அரேபியாவின் பிராந்திய மற்றும் மூலோபாய முக்கியத்துவம் முதன்மையானது. இது ஈராக், ஜோர்டான், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், ஓமன், யேமன் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதைத்தவிர பஹ்ரைனுக்கு கடல்வழி பாதை ஒன்றின் மூலம் தொடர்பும் கொண்டுள்ளது. இஸ்ரேலிய அரசு, ஒருவேளை எகிப்து தவிர இப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு முக்கிய அச்சாணி போரில் வேறு எந்த நாடும் பங்கு கொண்டதில்லை.