சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Defence Minister resigns

ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரி இராஜிநாமா செய்கிறார்

By Peter Schwarz
3 March 2011

Use this version to print | Send feedback

செவ்வாயன்று ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடோர் சூ குட்டன்பேர்க் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம் -CSU) தன் இராஜிநாமாவை அறிவித்தார். ஒரு எழுத்துத் திருட்டை (plagiarism) ஒட்டிய ஊழலில் வெளிவந்த அதிகரித்த அழுத்தத்திற்கு இவ்வாறு அவர் பிரதிபலிப்பை காட்டினார்.

கடந்த இரண்டு வாரங்களில் குட்டன்பேர்க் அவருடைய முனைவர் ஆய்வுக் கட்டுரைக்கு மற்ற ஆதாரங்களில் இருந்து முழுப் பிரிவுகளையும் அப்படியே மூலத்தின் மேற்கோள் காட்டாமல் பார்த்து எழுதியாக வெளிப்பட்டுள்ளது. இந்த எழுத்துத்திருட்டு அப்பட்டமான விதத்தில் இருந்ததால் பல வர்ணனையாளர்களையும் குட்டன்பேர்க் ஆய்வுக்கட்டுரையை வேறு ஒருவரைக் கொண்டு எழுதப் பயன்படுத்தினார் என்று சந்தேகிக்க வைத்துள்ளது.

எவ்வித எழுத்துத்திருட்டும் நடக்கவில்லை என்று குட்டன்பேர்க் வலுவாக மறுத்து, அத்தகைய கூற்றுக்கள்அபத்தமானவைஎன்றும் விவரித்தார். ஆனால் இணையத்தள ஆய்வு தொடர்ச்சியாக குட்டன்பேர்க் எப்படி கருத்துக்களை அப்படியே வெட்டி எடுத்து ஒட்டிய வகையில் கையாண்டார் என்ற புதிய தகவல்களைவயும் வெளிப்படுத்தி அவரை தற்செயலானதவறுகள்என்று ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளியது. இறுதியில் அவர் தான்பொருளற்றதைஎழுதியதாக ஒப்புக் கொண்டு, தற்காலிகமாக தன்னுடைய முனைவர் பட்டத்தையும் துறந்தார். அதன் பின்னர் அவர் நிரந்தரமாக அவருடைய முனைவர் (டாக்டர்) பட்டத்தை துறந்தார். அவர் முனைவர் பட்டம் (suma cum laude) 2006ல் பெற்றிருந்த பெய்ரூத் பல்கலைக்கழகமும் அவருடைய முனைவர் பட்த்திற்கான அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றது.

குட்டன்பேர்க் பற்றிய விவாதம் CDU, CSU என்னும் பழைமைவாத ஒற்றியங்களில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் இடதுகட்சி அவர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று கோரியபோது, சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU) அவருடைய ஆதரவிற்கு வந்து அவரைத் தான் பாதுகாப்பு மந்திரியாக நியமித்தேன் என்றும் ஒரு அறிவியல் உதவியாளராக அல்ல என்றும் வாதிட்டார்.

ஒன்றிய கட்சிக்குள் Bild செய்தித்தாள் மற்றும் வலதுசாரிப்பரிவு பெரிய பரம்பரையில் வந்த மந்திரியை காக்க ஆக்கிரோஷப் பிரச்சாரம் செய்தன. திமிர்த்தனமான போலி ஆவணத்தை ஒரு சிறுகுற்றம் என்று குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றனர் (“அனைவருமே சில நேரத்தில் பிற கருத்துக்களை அப்படியே கூறுவர்”) என்றும் அவருடைய படைப்புத்திருட்டைஅடிக்குறிப்பு கொடுக்கப்படாதுதான்என்றும் கருதினர். முன்னாள் ஹெஸ்ஸ பிரதம மந்திரி ரோலண்ட் கொச் மற்றும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த வோல்க்கர் பௌபியிரும் (இருவரும் CDU), இருவரும் கலந்து கொண்ட ஹெஸ்ஸ CDU கூட்டத்தில், கூட்டன்பேர்க் ஒரு தேசிய வீரர் என்று பாராட்டப்பட்டார்; அவருடைய மோசடி, ஏமாற்றுத்தனம் இரண்டும்  பெருமைப்படுத்தப்பட்டன.

கடந்த வார இறுதியில் குட்டன்பேர்க் நெருக்கடி முடிந்துவிட்டது எனக்கருதி தான் பதவியில் தொடர்வதாக வலியுறுத்தினார். ஆனால் அவருடைய திமிர்த்தன நடவடிக்கை அவரோ மேர்க்கெலோ எதிர்பாராத வகையில் பொது எதிர்ப்பை அலையெனக் கட்டவிழ்த்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியாளர்களும் இணையதள பயன்பாட்டினரும் இவருடைய தவிர்க்கும் கருத்துக்கள், பொய்கள் ஆகியவற்றை இணக்கமாக ஏற்கத்தயாராக இல்லை. கூட்டன்பேர்க்கிற்கு எதிரான முதல் குற்றச்சாட்டுக்கள் தோன்றியவுடன் அமைக்கப்பட்ட கூட்டன்ப்ளாக் விக்கி எனப்படும் வலைத் தளம், முறையாக அவருடைய கட்டுரையை படைப்புத் திருட்டிற்காக ஆராய்ந்தது. செவ்வாயன்று அவருடைய இராஜிநாமா பிற்பகல் 3.00 மணிக்கு வெளிவந்ததை அடுத்து வலைத்தளம் கூறியது: “படைப்புத்திருட்டுக்கள் 393 பக்க ஆய்வுக் கட்டுரையில் 324 பக்கங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இது 82.4 சதவிகிதத்திற்கு ஒப்பாகும். மொத்த ஆவணத்தில் 16,325 வரிகளில் 8,061 வரிகளில் 120 வேறுபட்ட ஆதாரங்களில் இருந்து திருடப்பட்ட கருத்துக்களின் உதாரணங்கள் உள்ளன என்று தற்பொழுது தெரிகிறது.”

Spigel Online கூறிய கருத்தாவது: “இந்த செவ்வாயன்று இது இறுதியாக தெரியவந்துவிட்டது: [முன்னாள் ஜேர்மனிய சான்ஸ்லர்] ஹெகார்ட் ஷ்ரோடர் அரசாங்கம் நடத்துவதற்கு ஒருவருக்குத் தேவையானது எல்லாம் Bild செய்தித்தாள், ஞாயிறு Bild மற்றும் தொலைக்காட்சிதான் என்னும் நகைச்சுவைக் குறிப்பு இனிப் பொருந்தாது. குறைந்தபட்சம் ஒருவர் ஏதேனும் ஒரு பொருள் பற்றி குற்றம் செய்துள்ளார் என்ற நிலையில் இப்படி இல்லை. மேலும் இது ஒன்றும்வலைத்தள சமூகம்என்று தீய முறையில் அழைக்கப்படும் அமைப்பின் பணியும் அல்ல. ஜேர்மனிய புத்திஜீவித வட்டாரங்கள் கூடியளவில் வலைத் தளத்தில் தங்கியுள்ளன. எண்முறைத் துறைக்கு வெளியே (digital realm) இருப்போர் எளிதில் புறக்கணிக்கப்படலாம் என்ற ஒரு சில கிறுக்கர்களின் கருத்தை ஜேர்மன் அரசியல் வட்டாரங்கள் விரைவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.”

ஒரு சில நாட்களுக்குள் சான்ஸ்லருக்கு இளம் உயர்கல்வியாளர்கள் எழுதிய எதிர்ப்புக் கடிதம் 50,000 கையெழுத்துக்களைச் சேகரித்தது. கடிதத்தை எழுதி நான்கு நண்பர்களுடன் பிரச்சாரத்தைத் தொடங்கிய Thobias Bunde ஒரு அரசியல் அமைப்பின் உறுப்பினர் அல்ல. தன்னுடைய நோக்கம் ஜேர்மனிய அறிவியல் சமூகத்தின் நேர்மையைக் காப்பதுதான் என்று அவர் கூறினார்.

சான்ஸ்லர் விரும்பியபடி ,“மீண்டும் வழக்கம்போல் வேலையைத் தொடரலாம் என்பது தடுக்கப்பட்டது பற்றி நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இணையத்தளத்தின் சக்தியைப்பற்றி நான் பரபரப்புக் கொண்டுள்ளேன்; இது அரசியலில் ஒரு புது வகையானது, நம் தலைமுறையை உருவாக்கும் தன்மை உடையதுஎன்று Spiegel Online இடம் அவர் கூறினார்.

இன்னும் தாராளச் சார்பு உடைய செய்தித்தாட்களைத்தவிர, Frankfurter Allgermeine Zeigung போன்ற கன்சர்வேடிவ் செய்தித்தாட்களும் கூட்டன்பேர்க், அவருடைய நடத்தை பற்றிய குறைகூறலில் சேர்ந்து கொண்டன. இதற்குப்பின், கடந்த வார இறுதியில் பல உயர்மட்ட CDU அரசியல்வாதிகளும் உயர்கல்வியாளர்களும் கட்சி படித்த மத்தியதர வர்க்கம் மற்றும் இளம் தொழில் நேர்த்தி உடையவர்களிடையே அது கொண்டுள்ள ஆதரவாளர்களை இழக்க நேரிடும் என்ற தங்கள் அச்சங்களைத் தெரிவித்தனர். படைப்புத் திருட்டு பற்றிய குற்றச்சாட்டுக்களை அறிவியல் நேர்மை மீதான தாக்குதல் என்ற குறைமதிப்பிற்கு உட்படுந்துவதை அவர்கள் கண்டித்து, அவருடைய குணநலனில் உள்ள குறைபாடுகளை ஒட்டி மந்திரிப் பதவியை குட்டன்பேர்க் வகிப்பது பொருந்துமா என்ற வினாவையும் எழுப்பினர்.

கல்வி மந்திரி Annette Schavan (CDU), Suddeutsche Zeitung இடம் கூறினார்: „31 ஆண்டுகளுக்குமுன் பட்டம் பெற்றவர் என்னும் முறையிலும், என்னுடைய உத்தியோகப்போக்கில் பல பட்டதாரி மாணவர்களை மேற்பார்வையிட்டுள்ளேன் என்ற முறையிலும், நான் வெட்கப்படுகிறேன், இதில் இரகசியம் ஒன்றும் இல்லை.“ பாராளுமன்ற தலைவர் நோர்பெர்ட் லாம்மெர்ட் (CDU) இந்த விவகாரமும் இதையொட்டி வந்துள்ள விளைவுகளும்நம் ஜனநாயகச் சவப்பெட்டியில் ஒரு ஆணி அறைந்தது போல் ஆகும்என்றார்.

குட்டன்பேர்க்கின் ஆய்வுக் கட்டுரையின் மேற்பார்வையாளரான 76 வயது ஓய்வுபெற்ற அரசியலமைப்பு வக்கீல் பீட்டர் ஹபெர்லேயும் இரு வார மௌனத்திற்குப் பின் பேசினார். இந்த முனைவர் ஆய்வுக்கட்டுரைகற்பனை செய்து பார்க்க முடியாத குறைபாடுகளைக் கொண்டுள்ளது”, “அவை தீவிரமானவை, ஏற்கத்தக்கவை அல்லஎன்றார்.

அவருக்குப் பின் அப்பதவிக்கு வந்த ஒலிவெர் லெப்சியஸ் இன்னும் அப்பட்டமாகக் கூறினார். அவர் கூட்டன்பேர்க் ஒரு மோசடிக்காரர் என்று சொல்லி, இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கோரினார். தன்னுடைய நடத்தியில் இருந்து விளைவுகளைப் பெறாவிட்டால், “அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உறவு தீவிரமாகச் சேதப்படும்என்றும் அவர் கூறினார். “அச்சேதம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்குத் திறனைக் கொண்டிருக்கும்என்றும் அவர் எச்சரித்தார்.

குட்டன்பேர்க் இராஜிநாமா செய்தது சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கு ஒரு பெருத்த அடியாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக 39 வயதான இந்த நீண்டகால உயர்குடும்பத்தில் தோன்றியவர் அவருடைய மிகப் புகழ் பெற்ற மந்திரி பல ஊழல்களில் இருந்து தொடர்ச்சியாகத் தப்பியிருந்தார். அவருடைய பொதுத் தோற்றம் செய்தி ஊடகம் தோற்றுவித்த விளைவு ஆகும்; அது இவரை ஒரு நேர்மையான, இயக்கம் நிறைந்த, இளைஞர் என்று சித்திரித்தது. இப்பொழுது இச்செயற்கையாகத் தோற்றுவித்த தோற்றம் அவருடைய வீழ்ச்சியிலும் தன் பங்கைக் கொண்டுள்ளது.

ஹாம்பேர்க்கில் CDU வின் சமீபத்தியே பேரழிவுத் தோல்விக்குப்பின், ரைன்லாண்ட்-பாலடினேட் மற்றும் பாடன் வூர்ட்டம்பேர்க்கில் முக்கிய மாநிலத் தேர்தல்களுக்கு நான்கே வாரங்களுக்கு முன்பு பாதுகாப்பு மந்திரியின் இராஜிநாமா மேர்க்கெல் அரசாங்கத்தில் சரிவை விரைவுபடுத்தத்தான் செய்யும்.

தங்கள் முயற்சியாலேயே அல்லது ஏதேனும் அழுத்தம் காரணமாக என, மேர்க்கெலிடம் இருந்து அகன்றுவிட்ட முக்கிய அரசியல் வாதிகள் நீண்ட பட்டியாலாகி வருகிறது: CDU பாராளுமன்றப் பிரிவுத் தலைவரும் வணிகப் பிரிவில் செல்வாக்கு மிகுந்தவருமான Friedrich Merz: ஹெஸ்ஸ  மந்திரி-தலைவர் வலதுசாரியான ரோலண்ட் கொச்; ஹாம்பர்க் மேயரான ஓல வொன் ப்யோஸ்ட்; முன்னாள் கூட்டாட்சித் தலைவர் ஹொர்ஸ்ட் கொஹ்லர்; மேலும் சமீபத்தில் மத்திய வங்கித்தலைவர் ஆக்செல் வேபர் அனைவரும் கடந்த ஆண்டிலும் அதற்கு முன்னரும்  அகன்றுவிட்டனர்.

வரவுசெலவுத்திட்டத்தை மீட்பதில் கவனம், தொழிலாள வர்க்கத்தின் மீது நிதிய நெருக்கடியின் விலையைக் கொடுத்துவிட வேண்டும் என்னும் நோக்கத்துடன் அதிகாரத்திற்கு வந்த மேர்க்கெல் அரசாங்கம் பெருகிய முறையில் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் சமூக அழுத்தங்கள் பெருகியிருப்பதுதான்; அவை, அதையொட்டி ஒன்றியக் கட்சிகளுக்கு வாக்குப் போடுபவர்கள் மற்றும் உறுப்பினர்களிடைய விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆளும் உயரடுக்கு  நீண்டகாலமாக தேவையான திமிர்த்தனம் மற்றும் இரக்க குணம் இல்லாதவரை அதன் ஆணைகளைச் சுமத்தத் தேடிக்கொண்டிருக்கிறது. அத்தகைய பங்கிற்கு குட்டன்பேர்க் தயாரிக்கப்பட்டார். ஜேர்மனிய இராணுவத்தில் அவர் திட்டமிட்டுக் கொண்டுவந்த சீர்திருத்தம்-அதாவது இராணுவத்தை சக்திவாய்ந்த சர்வதேசப் போரிடும் சக்தியாக மாற்றியது-இன்னும் உயர்ந்த பதவிகளுக்கு முதல் படியாக இருந்தது.

ஆனால் குட்டன்பேர்க்கின் இராஜிநாமா எந்த அளவிற்கு அரசியல் நிலைமையை அரசாங்கம் குறைமதிப்பாக நோக்குகின்றது  என்பதையும் காட்டுகிறது. தனது திமிர்த்தன நடவடிக்கையால் குட்டன்பேர்க் தூண்டிய கடும் எதிர்ப்பு அவர் மோசடித்தனம் செய்பவர், ஏமாற்றுக்காரர் என்பதை அம்பலப்படுத்திவிட்டது.

ஆளும் உயரடுக்கினுள், குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், ஒரு பெருகும் செல்வாக்குவட்டம் சமூக ஜனநாயக்கட்சி மற்றும் பசுமைவாதிகள் அதிகாரத்திற்குப் பழையபடி வேண்டும் என்பதற்கு ஆதரவு தருகிறது. முன்னாள் சமூக ஜனநாயக்கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டசி, ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஷ்கா பிஷ்ஷர் தலைமையில் அதன் 2010 செயற்பட்டியல் திட்டத்தின் மூலம் இதுவரை மேர்க்கெல் அரசாங்கம் சாதித்துள்ளதைவிட மிக அதிகமாக தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத் தாக்குவதில் அதிகத் திறமையாக இருந்தது.

அரசியல்ரீதியாக, சமூக ஜனநாயக்கட்சி மற்றும் பசுமைவாதிகள்  இறுதிவரை குட்டன்பேர்க்கிற்கு ஆதரவு கொடுத்துள்ளன. ஜேர்மன் இராணுவத்தை ஒரு சர்வதேசப் போரிடும் சக்தியாக மாற்ற வேண்டும் என்று அவை வாதிடுகின்றபோதிலும் செய்தி ஊடகம் தோற்றுவித்த குட்டன்பேர்க் போன்றவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை என நம்புகின்றனர்.