சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British Parliament overwhelmingly endorses war

பிரிட்டிஷ் பாராளுமன்றம் மிகப்பெரும் பெரும்பான்மையில் போருக்கு ஒப்புதல் கொடுக்கிறது

By Robert Stevens
 
23 March 2011
Use this version to print | Send feedback

லிபியாவிற்கு எதிரான வான் போருக்கு முழு பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபனமும் ஒப்புதல் கொடுத்துள்ளது. திங்கள் மாலையில் பாராளுமன்றம் கிட்டத்தட்ட ஒருமனதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் தலைமையில் நடக்கும் நவ காலனித்துவ ஆக்கிரமிப்புப் போருக்கு சட்டப்பூர்வ அத்தி இலை அளிக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்தை வரவேற்று, பிரிட்டனின் இராணுவப் படைகளை பயன்படுத்தலாம் என்னும் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து வாக்களித்தது.

கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவையும் பெற்றனர். 544 ஆதரவாகவும்,15 எதிராகவும் என்ற நிலையில் தீர்மானம் நிறைவேறியது. எதிராக வாக்களித்த 15 உறுப்பினர்களில் 9 பேர் தொழிற்கட்சி எம்.பி.க்கள், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த சமூக ஜனநாயக தொழிற்கட்சி உறுப்பினர்கள் 2 பேர், 1 கன்சர்வேடிவ் எம்.பி., மற்றும் ஒரே ஒரு பசுமைக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கரோலைன் லூக்காஸ் ஆகியோர் இருந்தனர். இரு தொழிற்கட்சி எம்.பி. ”டெல்லர்களும்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

அரசியலமைப்புப்படி, இராணுவ நடவடிக்கைக்கான இசைவிற்கு பிரதம மந்திரியின் முடிவே போதுமானது. பிரிட்டனின் படைகள் நிலைநிறுத்தப்படுவதில் பாராளுமன்றத்திற்கு ஒரு முறையான பங்கு கிடையாது. ஆயினும்கூட, பிரதம மந்திரி டேவிட் காமெரோன் வாக்கெடுப்பை நடத்த உடன்பட்டார். தொழிற்கட்சி உட்பட மிகப் பெரிய ஆதரவை தனது முடிவான இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அளிக்கும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

கிட்டத்தட்ட விவாதத்தில் கலந்து கொண்ட 50 உறுப்பினர்களும் இராணுவத் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தே பேசினர். ஈராக் படையெடுப்பிற்குப் பாராளுமன்றம் கொடுத்த ஒப்புதலின் போது பெறப்பட்ட வாக்கைவிட இப்பொழுது ஆதரவான வாக்குகள் அதிகம் ஆகும். ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பின்போது பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஏதும் நடைபெறவில்லை.

இத்தகைய மிகப் பெரிய ஒப்புதல் வாக்கு, பிரிட்டிஷ் மக்களில் கருத்துக் கணிப்பிற்கு உட்பட்டவர்களில் 53 சதவிகிதத்தினர் இராணுவத் தலையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தபோதிலும் கூட வந்துள்ளது. மூன்றில் ஒரு பகுதியினர் தான் ஒப்புதல் கொடுத்தனர்.

இத்தீர்மானம் தன் ஆதரவைலிபியாவில் தாக்குதல் என்னும் அச்சறுத்தலுக்கு உட்பட்ட குடிமக்கள் உள்ள பகுதிகள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும், ஒரு பறக்கக் கூடாத பகுதியைச் செயல்படுத்துவதற்கும், அதற்காக பிரிட்டனின் ஆயுதப் படைகள் மற்றும் இராணுவச் சொத்துக்களை ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1973ன் படி பயன்படுத்தவதற்கும்கொடுக்கிறது.

க்ரூஸ் ஏவுகணைகளும் குண்டுகளும் லிபிய மக்கள் மீது தாக்குதலின் மூன்றாவது நாளன்றும் பொழிந்த நிலையில், இத்தீர்மானம் பாராளுமன்றம்லிபிய ஆட்சி மேற்கொள்ளும் வன்முறையைக் கண்டிக்கிறதுஎனக் கூறியுள்ளது.

2005 மற்றும் 2010 பொதுத் தேர்தல்களில் லிபரல் டெமக்ராட்டுக்கள் 2003 ஈராக் போருக்கு எதிராகத் தாங்கள் வாக்களித்த அடிப்படையில் போட்டியிட்டனர். 2003ல் ஈராக்கியப் போருக்கு எதிராக நடந்த 2 மில்லியன் பேர் அடங்கிய ஆர்ப்பாட்டத்தில், சோசலிச தொழிலாளர் கட்சித் தலைமையிலான Stop the War Coalition இல் லிபரல் டெமக்ராட்டுக்களின் அப்பொழுது தலைவராக இருந்த சார்ல்ஸ் கென்னடி பேசிவதற்கு  மேடையில் பெருமிதமான இடம் அளிக்கப்பட்டது.

லிபரல் டெமக்ராட்டுக்கள் ஒன்றும் போரை ஒரு கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை. மாறாக அவர்கள் இராணுவ நடவடிக்கைக்கு இசைவைக் குறிப்பாகக் கொடுக்கும் ஒரு இரண்டாவது ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானம் இயற்றப்பட்டால் படையெடுப்பிற்குத் தங்கள் ஆதரவு உண்டு என்றனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அத்தகைய தீர்மானத்தை அடைவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி பிரான்சினால் தடைசெய்யப்பட்டது. போர் தொடங்கியவுடன், லிபரல் டெமக்ராட்டுக்கள் பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்குத் தங்கள் ஆதரவை அறிவித்தனர்.

திங்கள் பாராளுமன்றத்தில் சிலர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் முயம்மர் கடாபியின் ஆட்சிக்கும் இடையே இருந்த முந்தைய நெருக்கமான உறவுகளைப் பற்றிக் குறிப்புக்கூறும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். 2004ம் ஆண்டு முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர்பாலைவன உடன்பாடுசெய்து கொண்டதிலிருந்து, அரசாங்க மந்திரிகள், எண்ணெய் மற்றும் பிற பெருநிறுவன நிர்வாகிகள், முக்கிய பல்கலைக்கழக அதிகாரிகள், உயர்கல்வியாளர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் கூட கடாபியுடன் பிணைப்பிற்கு வரிசையில் நின்றனர். இதற்கு ஈடாக பிரிட்டிஷ் பெருநிறுவனங்கள் பெரும் இலாபகரமான ஒப்பந்தங்களைப் பெற்றன, பல்கலைக்கழகங்கள் தாராளமான லிபிய உதவிநிதிகளைப் பெற்றன.

லிபிய அரசாங்கம் சமீபத்திய எதிர்ப்புக்களுக்கு எதிராக நடத்திய அடக்குமுறை வன்முறைகள் பிரிட்டிஷ் அரசாங்கம் கடாபிக்கு விற்பனை செய்த ஆயுதங்கள் மூலம் நடந்தன. கடந்த ஆண்டு பிரிட்டன் லிபியாவிற்கு ஆயுத ஏற்றுமதி உரிமங்களை 200 மில்லியன் பவுண்டுகளுக்கு வழங்கியிருந்தது.

தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட், பஹ்ரைன், சௌதி அரேபியா இன்னும் பிற இடங்களில் அரசாங்க அடக்குமுறை பற்றி பிரிட்டன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உண்மை பற்றிய தன் கவலைகளைத் தெரிவித்தார். அதன் பின் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பதின் பொருள் ஒன்றுமே செய்யக்கூடாது என்பது அல்ல என்று வாதிட்டு காமெரோனுடன் ஒப்புதலைத் தெரிவித்தார். அரசாங்கமானதுகொள்கை மற்றும் நடைமுறையின்கலவை என்று அவர் கூறினார்.

இந்த வாக்களிப்பு தொழிற்கட்சியின்போர் எதிர்ப்பு இடது என்பது முற்றிலும் மறைந்துவிட்டதைத்தான் நிரூபிக்கிறது. ஒரு சில எம்.பி.க்கள் பெயரளவிற்குவேண்டாம்வாக்கு அளித்ததானது எந்தக் கொள்கை அடிப்படையிலும் பதிவானது அல்ல. மாறாக அரசியல் மற்றும் இராணுவ நடைமுறைக்கு ஒரு நயமான எச்சரிக்கைக் குறிப்பு வடிவில் இருந்தது ஆகும்.

இரு தொழிற்கட்சிஇடதுகள்”—ஜேரிமி கோர்பின் மற்றும் ஜோன் மக்டோனெல்—“ ஆயுதப்படைகள் செயற்படுத்தும் போதும் அதற்கு முன்பும், .நா.வின் கீழ் மோதலைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு சமாதான முயற்சியும் செய்யப்பட வேண்டும், மற்ற அரபு நாடுகளையும் நேரடியாகத் தொடர்புபடுத்த வேண்டும். மோதல் ஏற்பட்டால் குடிமக்களுக்குத் தீமை இல்லாமல் பாதுகாக்க ஒவ்வொரு முயற்சியும் தேவை, அதில் குறைமதிப்புடைய யுரேனிய ஆயுதங்கள் தொகுப்பு வெடிகுண்டுகள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்னும் திருத்தத்தை தீர்மானத்திற்கு முன்வைத்தனர்.

இந்த நயவுரை, இராணுவ வலிமை பயன்படுத்துவதை உண்மையில் எதிர்க்காதது, ஏற்கனவே மூன்று நாட்களாகத் தொடரும் போர்ச் சூழ்நிலையில் முன்வைக்கப்பட்டது. போருக்கோ ஐ.நா. மற்றும்பிற அரபு நாடுகளின்முழு ஆதரவும் இருந்தது.

காமெரோன் பற்றிய பெயரளவு எதிர்ப்பாளர்களின் கோழைத்தனமும் அவருக்குக் காட்டிய மதிப்பின் தன்மையும், காமெரோனைஇத்திருத்தத்திலுள்ள பல முக்கியக் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்என்று கூற வைத்தன.

தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த தொழிற்கட்சி எம்.பி.க்களில் ஒருவர் பாரி கார்டினர் ஆவார். 2003ல் ஈராக்கிற்கு எதிரான படையெடுப்பை அவர் ஆதரித்திருந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு அவர், “.நா. தீர்மானத்தை நான் வரவேற்கிறேன், ஆனால் அதைச் செயல்படுத்துவதில் பிரிட்டனின் இராணுவத் தலையீட்டை நான் எதிர்க்கிறேன்என்று கூறியிருந்தார்.

 

பிரிட்டிஷ் தேசிய நலன்களுக்கு போர் உகந்தது அல்ல என்ற அடிப்படையில் அவர் வேண்டாம் வாக்கை அளித்தார். “வட ஆபிரிக்கா நம் எல்லைகளுக்கு அருகே இல்லை. அது நம் செல்வாக்கு மண்டலத்தின் கீழ் நேரடியாக இல்லை. பிரிட்டனிற்கு லிபியா எந்த நேரடி அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை. முன்னாள் காலனித்துவ சக்தி என்ற முறையில் நமக்கு அங்கு எந்த வரலாற்றுப் பொறுப்பும் இல்லை. எனவே நாம் ஏன் மில்லியன் கணக்கான பவுண்டுகளை க்ரூஸ் ஏவுகணைகளில் செலவழித்து இத்தீர்மானத்தைச் செயல்படுத்த பிரிட்டிஷ் படையினர்களின் உயிரைப் பணயம் வைக்க வேண்டும்?” என்று அவர் அறிவித்தார்.

தன்னுடைய வரலாற்று அறியாமையைத்தான் கார்டினர் அம்பலப்படுத்தியுள்ளார். 1943 ல் இருந்து 1951 வரை, திரிபோலிடானியா மற்றும் சைரேனைகா மாநிலங்கள் உண்மையில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. பிரான்ஸ் Fezzan ஐக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தது. மேலும் இவருடைய திரிந்த தர்க்கம் முசோலினி மரபியத்தைப் பின்பற்றி இத்தாலி குண்டுவீச்சை நடத்தி லிபிய மக்கள் மீது படுகொலை நடத்தினால், இவர் மகிழ்ச்சியுடன் போருக்கு ஒப்புக் கொண்டிருப்பார்.

பசுமைவாத எம்.பி. லூக்காஸ் அளித்தவேண்டாம்வாக்கும் இத்தகைய போலித்தனம் உடையதுதான். பசுமைவாதிகள் மார்ச் 11 வெளியிட்ட அறிக்கையில் பாராளுமன்றத்திற்குலிபியாவில் கேணல் கடாபியின் படைகளுக்கு எதிராக எந்த இராணுவ நடவடிக்கை எடுக்கவும் ஒரு ஜனநாயக முடிவை எடுக்கும் உரிமைவழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் அந்த அறிக்கை அரசாங்கத்துடன் வெளிப்படையாகச் சேர்ந்து கொண்டு, “ஒரு பறக்கக்கூடாத பகுதிக்கு ஆதரவு இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அது மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டும், பிராந்தியத்திலுள்ள நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும்என அறிவித்தது.

பாராளுமன்றத்தில் கொடுத்த அறிக்கையில், லூகாஸ் லிபியா மீதான இராணுவத் தாக்குதலை எதிர்க்கவில்லை. காமெரோன்எந்த இராணுவ நடவடிக்கையும் கொள்கை மற்றும் தொடர்ச்சியைக் கொண்டிருக்கவகை செய்யும் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் எனத் தான் நம்புவதாகக் கூறினார். “அப்பிராந்தியத்திலுள்ள அடக்குமுறை ஆட்சிகளுக்கு ஆயுதம் விற்பதை நாம் நிறுத்தினால் நம் நிலைப்பாடு இன்னும் தொடர்ச்சியாகவும், கொள்கை உடையதாகவும் இருக்கும் என்னும் கருத்தை அவர் ஏற்கவில்லையா?”

காமெரோனுக்குத் தாழ்ந்த வகையில் உறுதிமொழி அளித்த வகையில் தொழிற்கட்சித் தலைவர் மிலிபாண்ட்இரு யூதப் பெற்றோர்கள் இனப்படுகொலையின்(holocaust) இருளினால் தாங்கள் வாழ்வு முற்றிலும் மாறிவிட்டதைக் கண்டனர், ஆயினும் கூட பிரிட்டனில் பாதுகாப்பைப் பெற்றனர்என்ற அவர் பல முறை கூறும் குறிப்புடன் உரையை முடித்தார். அவருடைய பெற்றோர்கள் தப்பிப்பிழைத்தனர், “ஆனால் என்னுடைய பெற்றோர்களின் உறவினர்கள் பலர் சர்வதேச சமூக உதவிக்கு அப்பால் இருந்தனர், அதன் விளைவாக தண்டனைக்கு உட்பட்டனர்என்று முடித்தார்.

ஒரு ஏகாதிபத்தியப் போரை, அதுவும் கிட்டத்தட்ட எதிர்ப்புத்திறனற்ற முன்னாள் காலனித்துவப் பகுதிக்கு எதிராகத் தொடுத்திருப்பதை, நாஜிசத்திற்கு எதிர்ப்பு, இனப்படுகொலைக்கு ஒப்பானது என்பதுடன் சமன்படுத்தும் மிலிபாண்டின் முயற்சி வரலாற்றை இழிவுபடுத்தும் ஒரு தவறு ஆகும். ஹிட்லரின் செயல்களுடனான உண்மையான இணைச் செயல்கள் கடாபி உடையது அல்ல, காமெரோனுடையதுதான்.

 

பெப்ருவரி 1938ல் Reichstag இல் பேசிய ஹிட்லர் தன்னை மூன்றாவது Reichstag இன் எல்லைகளில்அடக்கப்பட்ட ஜேர்மனியர்களின்பாதுகாவலர் என்று அறிவித்துக் கொண்டார். ஜேர்மனிய மக்களுக்குதன்னாட்சி உரிமைபெறுதல் என்ற மறைப்பின் கீழ்த்தான் நாஜிக்கள் தங்கள் Lebensraum –கிழக்கே வாழ்வதற்கு இடம்என்ற திட்டத்தைச் செயல்படுத்தினர். Sudeten ஜேர்மனியர்களைப் பாதுகாத்தல் என்னும் போலிக்காரணத்தைக் காட்டி செக்கோஸ்லோவாக்கியா மீது படையெடுக்கப்பட்டது. இதைபோல்தான் திரிபோலியும் லிபியாவின் மற்ற பகுதிகளும் லிபியக் குடிமக்களைக் காப்பாற்றுதல் என்ற போலிக்காரணத்தின் கீழ் பெரும் நாசத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

 

லிபியாவிற்கு எதிரான போருக்கு தொழிற்கட்சியின் ஆர்வமான ஆதரவின் உட்குறிப்புக்கள் ஒரு நாட்டின் விதிக்கு அப்பால் செல்கின்றன. முன்னாள் தொழிற்கட்சியின் வெளியுறவு மந்திரியும் ஈராக் போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவருமான ஜாக் ஸ்ட்ரா, லிபியாவிற்கு எதிரான ஐ.நா. தீர்மானம்வரலாற்றுத் தன்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது, அதன் கருத்துக்களில் மட்டும் அல்லஎன்றார். “பாதுகாப்புச் சபை மிக உறுதியாக பாதுகாக்கும் பொறுப்பைக் குறித்த சொற்கள் தொடர்பாக நடந்து கொண்டது இதுதான் முதல் தடவை. 2005 .நா. பொதுச் சபை மற்றும் 2006ல் பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1674ல் கூறப்பட்ட கருத்துக்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளனஎன்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாக்கும் பொறுப்பு என்று அழைக்கப்படுவது ஏகாதிபத்திய சக்திகள் படையெடுக்கவும் உலகின் எப்பகுதியையும் கொள்ளயடிப்பதற்கு முழு ஒப்புதலை அளிக்கிறது என்ற பொருள் போலும்.

பொது மன்றத்தில் ஒவ்வொரு எம்.பி.க்கும் லிபியாவில் இராணுவ நடவடிக்கைக்கான போலிக்காரணம் ஒரு பொய் என்று தெரியும். ஆனால் இதன் குற்றத்தன்மையை நேரடியாகச் சவால் விடும் வகையில் ஒரு குரல் கூட எழுப்பப்படவில்லை.

ஞாயிறன்று பாதுகாப்பு மந்திரி லியம் பாக்ஸ் லிபியத் தலைவர் கடாபி குண்டுவீச்சுக்களுக்குமுறையான இலக்குத்தான்என பகிரங்கமாகக் கூறினார். இலக்கு வைக்கப்பட்டு கடாபி படுகொலை செய்யப்படுதல்என்பதற்கு ஒரு வாய்ப்புத்திறன் உள்ளதுஎன்றும் அவர் கூறினார். வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்கும் கடாபி இலக்கு வைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராகவுள்ள, .நா. தீர்மானத்தை ஆதரிக்கும் பிலிப் சாண்ஸ் கூறினார்: “தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் என்பது பரந்த கருத்து, குடிமக்களைஅச்சுறுத்தலின் கீழ் வைக்கச்செயற்படும் கடாபியையும் மற்றவர்களையும் இலக்கு வைக்க அனுமதிக்கும் சொற்கள். இவை உண்மைத் தாக்குதல்களுடன் தொர்டபு கொண்ட தன்மையிலிருந்து தொலைவில்தான் செல்கின்றன.”

ஞாயிறு இரவு ஒரு ஏவுகணை பிரிட்டிஷ் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இயக்கப்பட்டது. இது கடாபியின் சொந்த வீட்டு வளாகத்தை இலக்கு கொண்டது.

பாக்ஸின் கருத்துக்களைத் தொடர்ந்து, பிரிட்டனின் பாதுகாப்புப் படைகளின் தளபதி சர் டேவிட் ரிச்சர்ட்ஸ், கடாபி ஒரு இலக்காகமுற்றிலும் இல்லைஎன்றும், “.நா. தீர்மானத்தின் கீழ் அவ்வாறு இல்லை, இது பற்றி நான் அதிகம் விவாதிக்க விரும்பவில்லைஎன்றும் கூறினார்.

ஆயினும்கூட மன்ற விவாதத்தில் பாக்ஸின் அறிவிப்பு கடாபி ஒருக்கால் படுகொலைக்கு உட்படலாம் என்பதை எவரும் எதிர்க்கவில்லை. மாறாக, தொழிற்கட்சியின் ஜிம் மர்பி பாக்ஸின் கருத்துக்கள்அரபு கருத்து உட்பட ஒரு பரந்த கூட்டணியைத் தக்க வைக்க முற்படுகையில், உகந்தவை அல்லஎன்றார்.

முன்னாள் தொழிற்கட்சி பாதுகாப்பு மந்திரி பாப் ஐன்ஸ்வோர்த் பாக்சின்பொறுப்பற்ற பேச்சுபூனையை பையில் இருந்து வெளியே விடப்பட்டுவிட்டது என்றார். “நடவடிக்கையின் பகுதியாக கேணல் கடாபியை இலக்கு வைப்பது சரியானாலும், அது சரிதான் என்ற உணர்வைப் பாதுகாப்பு மந்திரி கொடுப்பது சரியல்லஎன்றார்.