சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The killing of Osama bin Laden: Obama’s “historic moment”

ஒசாமா பின்லேடனின் படுகொலை: ஒபாமாவின் "வரலாற்று சம்பவம்"

David North
4 May 2011
Use this version to print | Send feedback

ஞாயிறன்று இரவு நடந்த அறநெறிரீதியாக அழுக்கடைந்த சம்பவங்களில் இருந்து வந்துள்ள அனைத்துப் படங்களையும் விட பொறுமையால் நிரூபிக்கப்படக்கூடிய வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படமொன்று அரசியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவமுள்ள ஒன்றாக உள்ளது என ஒருவர் நம்புவதற்கு காரணமுண்டு. அதில் ஜனாதிபதி பராக் ஒபாமா, துணை ஜனாதிபதி ஜோசப் பிடென், வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், இராணுவவிவகாரத்துறை செயலர் ரோபர்ட் கேட்ஸ் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் ஏனைய உயர் அதிகாரிகளும் ஒரு விவாத அறையில் ஒன்றாக அமர்ந்து ஒசாமா பின்லேடனையும், ஒரு பெண்மணி உட்பட ஏனைய மனிதர்களையும் படுகொலை செய்வதைப் பார்க்கின்றனர்.

பொதுவாக ஒரு படுகொலையின் சாட்சியங்கள் படமெடுக்கப்படுவதில்லை. ஆனால் பின்வரும் சந்ததியினருக்காக இந்த "வரலாற்று சம்பவத்தை" வெள்ளை மாளிகை தெளிவாக படமெடுக்க விரும்பியது. தம்முடைய கணினியில் வேலை செய்து கொண்டிருந்த ஓர் இராணுவ அதிகாரியைத் தவிர, அந்த கொடூரமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடைய பார்வையும், ஒரு தொலைக்காட்சி திரையில் தெளிவாக நிலைகுத்தி இருந்தன. முன்னால் உற்றுப் பார்க்க முன்புறம் சாய்ந்திருந்த ஒபாமா இறுகிய முகத்தோடு இருக்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளில் நன்கு பரிச்சயமான கேட்ஸ் சிடுசிடுப்பான வெளிப்பாட்டோடு இருக்கிறார். தம்முடைய கண்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருக்கும் அந்த கோரமான காட்சிக்கு அடையாளமாக, ஹிலாரி கிளிண்டன் தம்முடைய வலது கரத்தால் வாயைப் பொத்தியுள்ளார்.

பின்லேடன் அழிக்கப்பட்ட பின்னர், உண்மையில் ஓர் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அரச படுகொலையாக இருந்த அதை கொண்டாட, வெள்ளை மாளிகையும், ஊடகங்களும் உடனடியாக தம்பட்டம் அடிக்கத் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை நடு இரவில், ஜனாதிபதி வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையிலிருந்து பின்லேடனின் மரணத்தை நாட்டிற்கு அறிவித்தார்.

அந்தப் படுகொலையில் தம்மையும் சம்பந்தப்படுத்திக் கொள்வதில் மிகவும் ஆவலாக இருந்த ஒபாமா, சந்தேகத்திற்கு இடமின்றி அது அவரின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் நிகழ்ந்திருக்கும் "குறிப்பிடத்தக்க" சம்பவமாக நம்புகிறார். ஆனால் ஊடகங்களால் மிகவும் உற்சாகத்தோடு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த விஷயம், அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அறநெறி நிலைமைகள் குறித்து எதை எடுத்துக்காட்டுகிறது?

பின்லேடன் நிர்மூலமாக்கப்பட்டார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அல்லது இன்னும் துல்லியமாக கூறுவதானால், அது ஊடகங்களால் அறிவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்ட பின்னர் காட்சிகள் மிகவும் வெறுக்கத்தக்கதாகவும், இழிவாகவும் இருந்தன. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 1984 ஒலிம்பிக் போட்டியில் வெட்கங்கெட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்களின் இழிந்த சோவினிசத்தால் கிளிர்ச்சியூட்டப்படும் வரையில் அமெரிக்காவில் அறியப்படாமல் இருந்த ஒரு முழக்கமான "அமெரிக்கா! அமெரிக்கா!" என்ற முழக்கத்தின் கூப்பாடு, கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த மக்களின் சம்பிரதாயமான குணாம்சத்தை எடுத்துக்காட்டியது. இத்தகைய அரசியல் பிற்போக்குத்தனத்தை எடுத்துக்காட்டுவதில் சில மக்களும் ஈடுபட்டார்கள் என்பதும் உண்மையே. ஆனால் மக்களை கட்டாயப்படுத்தவும், விமர்சனரீதியான சிந்தனையை ஒடுக்கவும், தங்களின் ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் அறநெறி நேர்மையை அடிபணியசெய்ய தயாராக இல்லாதவர்கள் மத்தியிலிருந்து ஒருவகை அரசியல் உணர்வையும் மற்றும் உணர்வுரீதியான தனிமைப்படுத்தலை ஊக்கப்படுத்தவும் ஊடகங்கள் அவற்றை எடுத்துக்காட்டி, ஊக்குவித்தன.

ஆனால் இப்போது, அமெரிக்காவின் பரந்த ஊடகங்களை விவரிக்க ஒருவரால் என்ன வார்த்தைகளைக் காண முடியும்? பின்லேடன் படுகொலைக்கு காட்டப்பட்டிருக்கும் விடையிறுப்பானது, செய்திகள் மற்றும் பிரச்சாரத்திற்கு இடையில் இருக்கும் வேறுபாடு உண்மையில் அழிந்து போயிருப்பதை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது. ஒபாமாவின் உரைக்காக செய்திவலையமைப்புகள் காத்திருந்த போது, CNNஇன் முதன்மை செய்தியாசிரியர் வோல்ப் பிட்ஜெர், மேம்போக்காக வெளியிட்ட ஒரு கருத்தில், கட்டவிழ்ந்து வரும் சம்பவங்களைக் காட்டுவதில் CNNஇன்பொறுப்புணர்வை" பாராட்டி, வெள்ளை மாளிகையிடமிருந்து ஒரு செய்தியை அந்த வலையமைப்பு பரிசாக பெற்றிருந்ததாக அவரின் நேயர்களுக்கு அவர் தெரிவித்தார். ஒரு முக்கிய இதழாளரால் வெட்கக்கேடாக பெறப்பட்ட அந்த பரிசு, பிட்ஜெரால் பெருமிதத்தோடு அறிவிக்கப்பட்டது.  

செவ்வாயன்று வெளியான நியூயோர்க் டைம்ஸின் முதல் பக்கம், “பின்லேடனின் வேட்டைக்குப் பின்னால்,” என்ற தலைப்பைத் தாங்கி வந்துள்ளது. அந்த கட்டுரை ஒரு செய்தி அல்ல, மாறாக அதுவொரு இழிகுணமுடைய பிரச்சார வேலையாக உள்ளது. நாம் படித்தது: “கடந்த தசாப்தத்தில் ஒரு தொடர்ச்சியான வேவுபார்ப்பு தோல்விகளைப் பரிசீலனை செய்த விமர்சனங்களைச் சகித்து கொண்டிருந்த உளவுப்பிரிவு சமூகம், பின்லேடனின் படுகொலை மூலமாக விட்ட அதன் மதிப்பை மீட்டு கொண்டு வந்துள்ளது. இரண்டு யுத்தங்களில், தற்போது முஸ்லீம் நாடுகளில் மூன்று அலைக்கழிக்கும் யுத்தங்களில் நசுங்கி கொண்டிருக்கும் ஓர் இராணுவத்திற்கு, அதுவொரு கலப்படமற்ற வெற்றியை அளித்தது. தேசிய பாதுகாப்பு தலைமை மீது கேள்விகளை முகங்கொடுத்திருந்த ஜனாதிபதிக்கு, அது வரலாற்று புத்தகங்களில் இடம்பெறத்தக்க ஓர் உறுதியான சம்பவமாக உள்ளது.”       

இவை அனைத்தும் பாகிஸ்தானுக்குள் திடீர் படையெடுப்பும் மற்றும் படுகொலை பற்றிய தெளிவான சட்டவிரோத தன்மை பற்றியும், நிகழ்வுகள் பற்றி ஒபாமா நிர்வாகத்தின் காட்சி விளக்கங்களால் உருவான பதிலளிக்கப்படாத கேள்விகள் மற்றும் முரண்பாடுகள் பற்றிய ஒரு விசாரணையை கருத்திலெடுக்காவிட்டாலும் ஒரு விமர்சனரீதியான ஆய்விற்கு போதுமானதாகும். உண்மையில், பின்லேடன் கொல்லப்பட்ட போது கையில் துப்பாக்கி வைத்திருந்தார் என்று செவ்வாயன்று இரவு வெளியான ஆரம்ப கருத்துக்கள் பின்னர் வந்த செய்திகளில் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட போது நிராயுதபாணியாக இருந்தார் என்று மறுக்கப்பட்டது

டைம்ஸின் முதன்மை தலையங்கமும் இந்த சம்பவத்தைப் பஞ்சமில்லாமல் கொண்டாடி இருந்தது. அது பின்வருமாறு தொடங்குகிறது: “பின்லேடன் கண்டறியப்பட்டு அமெரிக்க துருப்புகளால் கொல்லப்பட்டார் என்ற செய்தி எங்களையும், எல்லா அமெரிக்கர்களையும், ஒரு பெரும் நிம்மதி உணர்வில் நிறைத்துவிட்டது.”

எல்லா அமெரிக்கர்களின்" சார்பாகவும் பேசும் டைம்ஸின் அனுமதியற்ற துணிவுக்கு அப்பாற்பட்டு, ஒரு தசாப்தமாக மறைந்திருந்த, ஏறத்தாழ உலகம் முழுவதும் ஒத்துக்கொள்ளப்பட்ட விதத்தில், குறிப்பிடத்தக்க அளவிற்கு செல்வாக்கற்ற ஒரு மனிதரின் படுகொலை மட்டுமே ஏன் சம்பவங்களை நகர்த்திச் செல்கிறது, அவர்களுக்கு "நிம்மதியை" அளிக்கிறது? ஒரு தனிநபரின் சட்டத்தை-மீறிய படுகொலையின் நீண்டகால மற்றும் கண்ணுக்குப்புலனாகாத விளைவுகள் மற்றும் தாக்கங்களால் எழும் ஆழமான பிரச்சினைகளை அவருடைய கொலையால் அமெரிக்காவிற்கு கிடைத்த "நிம்மதி" ஏன் பலவீனமாக்கிவிட்டது? லிபிய தலைவரைக் கொலை செய்யும் ஒரு தோல்வி அடைந்த முயற்சியில் மௌம்மர் கடாபியின் மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் அமெரிக்காவாலும், நேட்டோவினாலும் கொல்லப்பட்ட ஒரேயொருநாளைக்குப் பின்னர் பின்லேடனின் படுகொலை நடந்தது என்பதை டைம்ஸ் எடுத்துக்காட்ட தவறுகிறது

ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பின்லேடன் படுகொலையின் "வரலாற்று" முக்கியத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால் இந்த சம்பவம் இப்போது இந்தளவிற்கு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை துல்லியமாக அதனால் விளங்கப்படுத்த முடியவில்லை. அமெரிக்கா ஈடுபட்டுள்ள யுத்தங்களையோ, ஆக்கிரமிப்புகளையோ பின்லேடனின் மரணம் முடிவுக்கு கொண்டு வருமா என்பதை ஒபாமாவோ அல்லது ஊடகங்களோ விரும்பவில்லை. ஆனால் அதற்கு எதிர்மறையாக நியூ யோர்க் டைம்ஸ் மேலே குறிப்பிட்ட அதே தலையங்கத்தில் அறிவித்தது: “இப்போது நாம் சற்று நிம்மதி பெருமூச்சு விடமுடியும் என்றாலும் கூட, தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் இன்னும் தீர்ந்துவிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யுத்தங்கள் தொடரும். பின்லேடனின் இடத்தில் மற்றொரு கற்பனை உருவம் கண்டுபிடிக்கப்படுவார் அல்லது உருவாக்கப்படுவார்

ஞாயிறன்று நடத்தப்பட்ட கொலையை விளக்குவதற்கு "வரலாற்று" என்ற சொல்லைத் தவறாக பயன்படுத்துவதென்பது வெறுமனே இதழ்கள் செய்யும் பீத்தல்களுக்கான ஓர் எடுத்துக்காட்டு மட்டுமல்ல. அது, பொறுப்பற்ற வன்முறை நடவடிக்கைகள் மூலமாக வரலாற்று போக்கை தீர்மானிக்க முடியும் என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் ஒரு மூடத்தனமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.      

ஆனால் வரலாற்று இயக்கம், அமெரிக்க இராணுவத்தைவிட மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார மற்றும் சமூக நிகழ்முறைகளால் வடிவமைக்கப்படுகின்றன.

அமெரிக்க முதலாளித்துவத்தின் கொடூரமான சீரழிவு தொடர்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், முடிவில்லா தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும், யுத்தங்களுக்கும் இடையிலும், அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலையை மீட்டெடுக்க ஆளும் வர்க்கத்தால் முடியாமல் இருக்கிறது. பின்லேடனின் படுகொலைக்கு முந்தைய வாரத்தில், அமெரிக்க டாலர் வரலாற்றில் முன்பில்லாத அளவிற்கு குறைவாக வீழ்ச்சி அடைந்தது.

பெருமந்த காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார பின்னடைவு சேற்றில் அமெரிக்க முதலாளித்துவம் சிக்கியுள்ளது. தேசிய அரசாங்கம் திவாலாகும் விளிம்பின் மீது ஊசலாடிக்கொண்டிருக்கிறது. மாநிலங்கள் ஆதாரவளங்களுக்காக போராடுகின்றன. சமூக உள்கட்டமைப்பு உடைந்து கொண்டிருக்கிறது. பெரும் பணக்காரர்களின் பேராசை, ஊழல், ஒட்டுண்ணித்தனம் இன்னும் அதிகமாக மக்களின் சீற்றத்தைத் தூண்டிவிட்டு வருகிறது. ஆனால் சமூக சீர்திருத்தம் மற்றும் பொருளாதார உதவிகளில் மக்களின் தேவைகளை தீர்ப்பதில் அரசியல் அமைப்புமுறை திறமையிழந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் ஊடகங்களால் "வரலாறு" என்று முத்திரைக்குத்தப்பட்ட எத்தனையோ சம்பவங்களைப் போலவே, அதாவது மிக சமீபத்திய சம்பவங்களில் சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டது போன்றவற்றைப் போலவே, இதுவும் எதிலிருந்து அது தோன்றியதோ அந்த இரக்கமற்ற முடிவுகளின் முன்கணிக்காத விளைவுகளால் உடனடியாக எடுத்துக்கொள்ளப்படும். ஒபாமாவின் "வரலாற்று சம்பவம்" அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அழுகிப்போன அரசியல், பொருளாதார, மற்றும் அறநெறிரீதியான மற்றொரு கீழ்தரமான அத்தியாயமாக மட்டுமே விரைவில் நிரூபிக்கப்படும்