சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

The war against Libya and the German Left Party

லிபியாவிற்கு எதிரான போரும் ஜேர்மன் இடது கட்சியும்

 By Lucas Adler
7 May 2011

Use this version to print | Send feedback

லிபியப் போரில் ஜேர்மனிய அரசாங்கத்தின் கொள்கைக்கு இடது கட்சி காட்டிய பிரதிபலிப்பு எந்தளவிற்கு ஜேர்மனிய ஏகாதிபத்தியத்திற்கு இக்கட்சி ஒரு ஆலோசகராக செயல்படுகிறது என்பதை நிருபிக்கிறது. லிபியாவிற்கு எதிரான போரை இடது கட்சி அரசாங்கத்திடம் நெருக்கமாக நகரவும் பரந்துபட்ட மக்களின் எதிர்ப்பில் இருந்து அதற்கு பாதுகாப்பளிக்கவும் பயன்படுத்திவருகிறது.

ஏற்கனவே மார்ச் மாதம் இடது கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் லிபியாவிற்கு எதிரான போரில் தனக்கு அடிப்படை எதிர்ப்புக்கள் ஏதும் இல்லை என்பதை அடையாளம் காட்டியது. பல ஆண்டுகள் இடது கட்சியின் முக்கிய உறுப்பினரும் தற்பொழுது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதன் பிரிவின் தலைவருமான லோதர் பிஸ்க்கி ஒரு தீர்மானத்தை முன்வைத்தார்; அது பெங்காசியில் உள்ள தேசிய இடைக்கால  குழுவிற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியதுடன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவ தலையீட்டிற்கும் ஆதரவைக் கொடுத்தது. இடது கட்சியில் எவரும் பிஸ்க்கியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அவரை விமர்சிக்கவில்லை.

ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் பாதுகாப்புக் குழுவிற்குள் இடது கட்சியின் பங்கும் போரைப் பற்றி கட்சியின் நிலைப்பாட்டை அதன் அனைத்து வெற்று இராணுவவாதம் பற்றிய குறைகூறல்களைவிட அதிகம் வெளிப்படுத்துகிறது. செப்டம்பர் 2009ல் குண்டுஸில் நடைபெற்ற படுகொலைக்குப் பின் இது குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படையாக உள்ளது. அந்நிகழ்வு போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் இராணுவ வரலாற்றில் மிகக் கொடூரமான நடவடிக்கை ஆகும்.

இடது கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்புக்குழுவில் உறுப்பினர்களாக இருந்து மிகத் ஆரம்பத்திலேயே தாக்குதல்களின் துவக்க இலக்கு எழுச்சியாளர்கள் என்று இருந்தாலும் டஜன் கணக்கான சாதாரண மக்களின் உயிரிழப்பு பற்றி அறிக்கைகளைப் பெற்று இருந்தாலும்இவற்றில் ஏதும் பொதுமக்களுக்குக் கூறப்படவில்லை. மாறாக இந்த விவகாரம் பற்றி முழுமையாக வெளிப்படையாக்கும் பொறுப்பை வலதுசாரி இராணுவ வட்டாரங்களுக்கு விட்டுவிட்டனர். அது பின்னர் இராணுவம் எவ்வித சட்டப்பூர்வ பொறுப்பில் இருந்து விடுவிப்பதில் ஈடுபட்டு அதற்கு கொல்லும் உரிமையையும் அளிக்க முன்வந்தது.

ஆனால் தற்பொழுது ஜேர்மனி லிபியாவில் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக தன் நலன்களை லிபியாவில் இராணுவ சக்தியைத் தளமாகக் கொண்டு நிலைநிறுத்த முடியாது. இது ஜேர்மனிய அரசாங்கம் அதன் மரபார்ந்த நட்பு நாடுகளான பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவற்றிற்கு எதிராக லிபியாவிற்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்குழு வாக்களிப்பில் நடந்த கொள்ளும் முடிவில் வெளிப்பட்டது. தற்பொழுது ஜேர்மனிய ஏகாதிபத்தியம் அதன் முக்கியமான உலகளாவிய நலன்களைச் செயல்படுத்துவதற்கு மிக வெற்றிகரமான கருவியாக இராஜதந்திர உறவுகள், பொருளாதார உறவுகள் ஆகியவற்றின் மூலம் செல்வாக்கத் திரட்டும்  திறன் என்பனவாகவே உள்ளன.

இவ்விதத்தில் இடது கட்சி ஜேர்மனிய அரசாங்கத்திற்குத் தன் முழு ஆதரவையும் கொடுத்து நிற்கிறது. மற்ற முதலாளித்துவ கட்சிகளைப் போலவே லிபியாவிற்கு எதிரான போரில் கட்சியின் கொள்கை எண்ணெய் வளமுடைய நாட்டில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தில் நலன்களை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டுள்ளது; அதே போல் அரபுப் பகுதியில் தன் நலன்களை அச்சுறுத்தும் எத்தகைய புரட்சியையும் நெரிக்கும் வகையில்தான் உள்ளது. ஆனால் தற்போதைய நிலைமையில் இடது கட்சி நேரடி இராணுவக் குறுக்கீடு இந்நலன்களை செயல்படுத்துவதற்கு பொருத்தமானது அல்ல என்று கருதுகிறது. மாறாக அவர்கள் ஜேர்மனிய அரசாங்கம் தன்னுடைய தற்போதைய நடவடிக்கை போக்கை தொடருமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.

இந்த ஆண்டு முன்னதாக துனிசியாவிலும் எகிப்திலும் வெகுஜன எழுச்சிகள் ஏற்பட்டபோது தன்னுடைய விவாத வழிவகையை இடது கட்சி ஏற்கனவே கோடிட்டுக் காட்டியுள்ளது. பெப்ருவரி தொடக்கத்தில் கட்சியின் வெளியுறவுப் பிரிவு செய்தித் தொடர்பாளர் வொல்ப்காங் கெர்க்க  அப்பகுதியில் எதிர்ப்புக்களை முகங்கொடுப்பதற்கு ஜேர்மனிய நலன்களில் சில மாற்றங்கள் தேவை என்று கூறினார். ஜேர்மனிய அரசாங்கம்இன்னும் குழப்பத்திற்கு இடம் இல்லாமல் எகிப்து மற்றும் மத்திய கிழக்கில் தன் முந்தைய கொள்கைகள் அடிப்படையில் தவறு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த உண்மை நிலைப்பாட்டுடன் சரியாகச் செயல்படாவிட்டால் புதிய ஆரம்பம் ஏதும் ஏற்படாதுஎன்று கெர்க்க கூறினார்.

சில நாட்களுக்குப் பின், கெர்க்க ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக் குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து அரசாங்கத்திற்கு உறுதியான  ஆலோசனையையும் வழங்கினார்: அதாவது அரசாங்கம் இறுதியாக தோல்வியை ஒப்புக் கொண்டு எகிப்தில் இன்னமும் ஆளும் ஜனாதிபதி உடனடியாகராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரவேண்டும்.”

நிலைமையை உறுதிப்படுத்த இது ஒன்றுதான் வழிவகை என்பது இடது கட்சியின் கண்ணோட்டமாக உள்ளது. அதே நேரத்தில் எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்கள் நிறுத்தப்பட வேண்டும், மற்றும் எகிப்திய பொலிஸ், இராணுவம் ஆகியவற்றிற்கு கொடுக்கும் பயிற்சியில் ஒத்துழைப்பைத் தருவது பற்றியும் மறு மதிப்பீடு வேண்டும். புதிய அரசியல் சக்திகளை நம்புவதும் தேவையாகும். இத்தகைய சக்திகள் எவை என்பதையும் கெர்க்க ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார். அவர் அப்பகுதியில் தான் பல அரசியல் குழுக்கள், தனிநபர்களுடன் பல மத்திய கிழக்கு நாடுகள் வழியே தான் சென்றிருந்தபோது நடத்திய ஏராளமாக தீவிர விவாதங்கள்பற்றியும் குறிப்பிட்டார்.

இந்த வாதங்களுடன் இணைந்த வகையில், இடது கட்சி இப்பொழுது லிபியா பற்றி அரசாங்கத்திற்கு நெருக்கமாக வந்துள்ளது. .நா.பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிய அரசாங்கம் வாக்கெடுப்பில் பங்கு பெறாததின் உண்மை நலன்களைப் பற்றி ஆராயாமல், அவர்களுடைய பிரிவின் துணைத் தலைவரான ஜான் வன் ஆக்கென் பெரும் களிப்புடன் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி எடுத்த நிலைப்பாட்டை களிப்புடன் புகழ்ந்தார்: “உங்கள் முடிவு மிக நிதானமானது, நல் விளைவு தருவது என்று நான் நினைக்கிறேன்திரு.வெஸ்டர்வெல்ல அவர்களேஎன்றார். வெஸ்டர்வெல்ல முன்னதாக மற்ற எவரையும் விட ஆர்வத்துடன் லிபாயவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளைக் கோரினார் என்பதை பற்றி ஆக்கென் குறிப்பிடவில்லை.

இடது கட்சிக்கு ஏகாதிபத்தியத்திடம்-அது ஜேர்மனிய, பிரெஞ்சு, பிரிட்டிஷ், அமெரிக்க என்று எவ்வகையாயினும்-அடிப்படை எதிர்ப்பு ஏதும் இல்லை. அப்படி இருந்தால் அது அப்பகுதியில் இருந்து அனைத்து வெளிநாட்டுத் துருப்புக்களும் உளவுத்துறை உறுப்பினர்களும் வெளியேறவேண்டும் என்று கோரும் கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கும்; அத்துடன் அப்பகுதியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு தங்கள் ஆட்சியாளர்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு கொடுக்க நேரிடும். மாறாக இடது கட்சி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் ஜேர்மனிய நலன்கள் திறமையுடன் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கிறது.

இவ்விதத்தில், தங்கள் சமீபத்திய அறிக்கையில் இடது கட்சி ஜேர்மனிய அரசாங்கம் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா கொடுக்கும் அழுத்தத்திற்கு அடிபணியக்கூடாது என்று எச்சரித்துள்ளது. பாராளுமன்றப் பிரிவின் கூட்டத்திற்குப் பின்னர் அது வெளியிட்ட அறிக்கை கூறுகிறது: “பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் வெளியுறவு மந்திரிகள் லிபியாவிற்கு எதிரான போரில் நேட்டோ ஈடுபாடு முடுக்கிவிடப்பட வேண்டும் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த அழுத்தத்தின்கீழ் ஜேர்மனிய அரசாங்கம் தன்னுடைய தற்போதைய நிலைப்பாட்டை கைவிட்டு நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியப் போரிடும் துருப்புக்களின் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க நினைக்கலாம். இடது கட்சி தன் பாராளுமன்ற மற்றும் அதற்குப் புறத்தேயும் நடத்தும் எதிர்ப்புக்களின் மூலம் அத்தகைய போக்கிற்கு எதிராகச் செயல்படும்.”

அடிப்படையில் இதன் பொருள் இடது கட்சி பூகோள- அரசியல் அரங்கில் தங்கள் போட்டியாளர்கள் கொடுக்கும் அழுத்தத்தை எதிர்த்து நிற்பதற்கு ஜேர்மனிய அரசாங்கத்திற்கு தன் ஆதரவைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் இது ஜேர்மனிய போட்டி நாடுகளுக்கு எதிரான லிபியாவில் ஜேர்மனியக் கொள்கைக்கு ஆதரவு திரட்டுவதாகவும் உறுதி அளிக்கிறது. செய்தி ஊடகத்திற்கு கொடுக்கப்பட்ட அறிக்கை கீழ்க்கண்டவாறு முடிவடைகிறது: “ஜேர்மனி போரில் பங்கு கொள்வதை நிராகரித்து, சமாதான உடன்பாட்டில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இத்தகைய இறுதியான ஜேர்மனிய பங்கிற்குத்தான் நாங்கள் ஆதரவளிக்க முடியும்.”

இரண்டு வாரங்களுக்கு பின்னர் போரில் ஈடுபடுவதை விட சமாதானத்திற்காக தனிமைப்படுத்தப்படுதல்என்ற தலைப்பில் பாராளுமன்றத்தின் இடது கட்சி ஒரு செய்தி அறிக்கையில் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சிக்காது தமது ஆதரவை மீண்டும் அறிவித்து, அத்தகைய கொள்கையில் முக்கிய உந்துதல்கள் உள்ளன என்று கூடத் தெரிவித்தது: “அமைதி வேண்டும் என்னும் கொள்கையான தீவிர ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக்கு இடது கட்சி ஆதரவைக் கொடுக்கிறது. ஜேர்மனிய அரசாங்கம் லிபியாவில் போர்நிறுத்தத்திற்கான முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும், .நா.வில் பேச்சுவார்த்தை நடத்தும் பங்கையும் மேற்கொள்ள வேண்டும்.”

இடது கட்சியின் கொள்கைகள் வலதுசாரி மேர்க்கேல் அரசாங்கம் கொண்டுள்ள இதே பூகோள-மூலோபாய நலன்கள் என்ற கொள்கைளால்தான் உருப்பெருகின்றன. இப்பொழுது கட்சி கூட்டாட்சி அரசாங்கத்தில் இல்லை என்ற வசதியான நிலையில் இருப்பதால், நாடு மரபார்ந்தரீதியாக மேலை நாடுகளுடன் கொண்டிருந்த உறவுகள் பற்றிப் பொருட்படுத்தாது, வெளிப்படையாக ஜேர்மனியின் மேலைப் பங்காளிகளுக்கு எதிரான ஒரு கொள்கையை தொடர முடியும்ஜேர்மனிய இராணுவத்தின் வரலாற்று மட்டுப்படுத்தல்களை ஒட்டி தற்பொழுது கொள்ளப்படும் நிலைப்பாட்டை பார்த்தால் அது போருக்கு எதிர்ப்பு என்பது போலவே தோன்றும்.

ஆனால் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடுகள் அதிகரித்துவரும்போது இந்நிலைப்பாடு மாறும். இடது கட்சியின் வாதம் கட்சியை நேரடியாக ஜேர்மனிய நலன்கள் என்ற பெயரில் போருக்கு ஆதரவு கொடுப்பவர்களுடைய முகாமிற்கு இட்டுச் செல்லும்.

இவ்விதத்தில் இடது கட்சி (இதன் பிரிவுகளுள் ஒன்று கிழக்கு ஜேர்மனியின் ஆளும் கட்சியாக இருந்த ஜேர்மன் ஐக்கிய சோசலிச கட்சியின் அரசியல் வாரிசு ஆகும்) இரும்புத்திரையின் கிழக்கு பகுதியில் இருந்து வரும் ஒரே ஜேர்மனியக் கட்சி என்ற அதன் பின்னணியுடன் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் சார்பை நிர்ணயித்தலில் முக்கிய பங்கைப் பெறும்.