சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

More letters on the killing of Osama bin Laden

ஒசாமா பின்லேடன் படுகொலை குறித்த கூடுதல் கடிதங்கள்

7 May 2011

ஒசாமா பின்லேடன் படுகொலை குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வு குறித்து அதற்கு வந்திருந்த கடிதங்கள். இதற்கு முந்தைய கடிதங்கள் மே 5இல் பிரசுரிக்கப்பட்டது.

Unanswered questions on US raid that killed bin Laden கட்டுரை குறித்து

JP
India
4 May 2011

பல கேள்விகள் பதிலளிக்கப்படாமலே போகக்கூடும். பாகிஸ்தானின் முதன்மை இராணுவ மையத்திற்கு மிக நெருக்கத்தில் அந்நாட்டின் இதயமாக விளங்கும் ஒரு பகுதியை, பெரும் ஆபத்திற்கிடையில் வாழ ஒசாமா பின்லேடன் ஏன் தேர்ந்தெடுத்தார்? அமெரிக்க மற்றும் பாகிஸ்தானின் பல்வேறு கூட்டங்களால் நடத்தப்பட்டு வந்த மனிதவேட்டைக் குறித்தும், 50 மில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். “காட்டிக்கொடுப்பாளர்கள்" இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவரின் உள்ளுணர்வுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அவரும், அவருடைய குடும்பமும் இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறையில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதில் அவர் நம்பிக்கையோடு இருந்திருக்க முடியுமா? ஹெலிகாப்டர்களும், 40 நிமிட துப்பாக்கிச்சூடு சம்பவமும் எவ்வாறு அண்டையில் இருந்தவர்களால் கவனிக்கப்படாமல் போனது? மேலும் பாகிஸ்தானிலிருந்தே சுட்டுத்தள்ளிய பின்னர் அமெரிக்க படைகள் அதற்கு தகவல் அளித்த பின்னர் தான் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கே தெரிய வந்துள்ளது. வழக்கமாக ஒரு நபர் கொல்லப்படும் போது பின்பற்றப்படும் பொதுவான சட்ட வழிமுறைகளை எதிர்பார்ப்பது சற்று கூடுதலான எதிர்ப்பார்ப்பாக போய் முடியும். மேலும் ஒசாமாவின் உடல் ஏன் அந்நாட்டிலிருந்து திருடி செல்லப்பட்டது? பாகிஸ்தானிய அரசாங்கம் சோதனை செய்வதை தவிர்ப்பதற்காக அவசர அவசரமாக அமெரிக்க படைகளால் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டதா? மேற்கொண்டு கூடுதல் புலனாய்வுகளுக்கு அதை மீட்டெடுப்பதை தவிர்க்கவே அது நிலத்தில் புதைக்கப்படுவதற்கு மாறாக கடலில் புதைக்கப்பட்டதா?

JP
இந்தியா
4
மே 2011

On “Washington’s official story unravels, confirming extra-legal execution of Bin Laden

Washington’s official story unravels, confirming extra-legal execution of Bin Laden கட்டுரை குறித்து:

வாஷிங்டனின் வித்தகர்கள் குறித்தும், பின்லேடனின் மரணம் குறித்தும் பரி கிரேயின் கட்டுரை மிகச் சிறப்பானது. பின்லேடன் எங்கே இருந்தார் என்பதைக் குறித்து சில காலங்களுக்கு முன்னரே வாஷிங்டன் அறிந்திருந்தது என்ற உங்களின் கருத்து Guardian இதழின் இப்பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்லேடன் எங்கே இருந்தார் என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தது; ஆனால் கடந்த வாரம் விக்கிலீக்ஸ் அந்த தகவலை வெளியிடாத வரைக்கும் அது ஒன்றும் செய்யாமல் இருந்தது என்பதை போல தோன்றுகிறது.

பின்லேடன் எங்கே இருந்தார் என்பது வெளிப்படையாக வந்துவிடுமோ என்ற காரணத்திற்காக (அந்த விஷயம் உடனடியாக யாராலும் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்தாலும் கூட) பின்லேடனை இப்போது முடிவுக்குக் கொண்டு வர ஒபாமா முடிவு செய்திருக்கலாம் என்பதற்கு முற்றிலுமாக வாய்ப்புள்ளது. ஒருவிதத்தில், அசான்ஜ் ஒபாமாவின் கரத்தை நிர்பந்தித்துள்ளார்ஒபாமாவிற்கு அதுவொரு பெரும் சங்கடமாக போயிருக்கும் என்பது மிகவும் வெளிப்படையானது என்பதோடு, அந்த உண்மை வெளிப்பட்டிருந்தால் சந்தேகத்திற்கிடமின்றி அவரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கக்கூடும், மறுதேர்தல்களும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

Beata N
5
மே 2011

On “The killing of Osama bin Laden: Obama’s ‘historic moment’

The killing of Osama bin Laden: Obama’s ‘historic moment’ கட்டுரை குறித்து:

உண்மையில் இந்த சிறப்பு அதிரடிப்படைகளின் வேட்டையில் ஒசாமா கொல்லப்பட்டார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு பல விஷயங்கள் நம்மை இதுகுறித்து யோசிக்கத் தூண்டுகிறது. ஒரு சடலம் இருந்ததென்றாலும்சட்ட உத்தரவாணை!!—அது, “முஸ்லீம் பாரம்பரியங்களை" மதிக்காமல் நம்முடை இராணுவத்தால் அவை ஒதுக்கித்தள்ளப்பட்டு, நீலக்கடலுக்குள் இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது? பேரரசின் நண்பர்களாக நிரூபிக்கப்பட்டிருக்கும் பல பின்லேடன்களின் தொல்லைகளில் இருந்து காப்பாற்றுவதும், இறுதிச்சடங்கின் செலவும் அவர்களால் எவ்வாறு சிந்திக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்கு புதியவொன்றாக உள்ளது! அதுமட்டுமில்லாமல், வேட்டை குறித்த அல்லது கொல்லப்பட்ட ஒசாமாவின் படங்களை வெளியிடாததற்கு நம்முடைய ஜனாதிபதியின் "தேசிய பாதுகாப்பு" என்ற காரணம், மீண்டும் சுரத்தில்லாமல் உள்ளது என்பதோடு, நம்முடைய உளவுப்பிரிவின் பின்புலத்தோடு செயல்பட்ட சிறப்பு பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகள்என்ன விலைகொடுத்தாவது மூடிமறைக்கும் நடவடிக்கைகள்!—வழக்கம் போலவே சந்தேகத்திற்கிடமான வடிவத்தில் உள்ளன. உண்மையில் ஒசாமா நிராயுதபாணியாக இருந்தார், அவருடைய மனைவியையும் பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தவில்லை என்பது இப்போது உண்மையானால் (ஒருபுறம், இது மாறிக்கொண்டே இருக்கிறது), அவரை ஏன் உயிரோடு பிடிக்கவில்லை என்பது தான் எனக்கு குறைந்தபட்ச கேள்வியாக உள்ளது. அவர் அவருடைய கொடூரமான ஆதரவாளர்களுடன் சேர்ந்து. அல்லது புலனாய்வாளர்களோடு சேர்ந்தே கூட சதி செய்து கொண்டிருந்தார் என்பதற்கு CIA புலனாய்வாளர்கள் அருமையான எதிர்கால திட்டங்களை வரைந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்?

அர்த்தமற்ற முரண்பாடுகளையும், இந்த போலித்தனத்தில் இருக்கும் ஜனநாயக விரோத தன்மையின் மூர்க்கத்தனத்தையும் எடுத்துக்காட்டிய wsws.org வலைத்தளத்திற்கு நன்றி.

Jim
கொலாரோடோ, அமெரிக்கா
5
மே 2011

***

ஆசிரியர்கள்:

இப்போதிருந்து, அமெரிக்காவிலுள்ள மக்கள் ஊடகங்களை விவரிக்க ஒருவர் என்ன சொற்களைப் பயன்படுத்துவது?” என்பதை நீங்கள் தான் எழுத வேண்டும். மிகவும் உண்மையை எழுதியுள்ளீர்கள்!

பின்லேடன் மரணம் குறித்து நான் இஸ்ரேலிய நாளிதழான Ha'aretzஇல் படித்தேன். அடுத்த ஏழு நாட்களுக்கு அமெரிக்க ஊடகங்களை முகங்கொடுக்க வேண்டிய பயங்கர எண்ணங்களைக் குறித்தும், அவர்கள் பெற்ற பாடங்களையும், ஒட்டுமொத்தமாக அவர்கள் எவ்வாறு அதை ஜீரணித்துக் கொண்டார்கள் என்பதையும் வார்த்தைகளில் புலம்பி இருந்தது.

CW
5
மே 2011

On “Letters on the killing of Osama bin Laden

Letters on the killing of Osama bin Laden கட்டுரை குறித்து:

அவரின் தலையைக் கொண்டு வந்து தலைமை செயலகத்தில் காட்சிக்கு வைக்காததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த சமூகம் தறிகெட்டு போகும் வேகத்தைப் பார்த்தால், வெகு விரைவிலேயே நாம் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விடுவோம். ம்...

டேவிட் PN
5
மே 2011

***

ஒசாமா பின்லேடனின் படுகொலை குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் அருமையான கட்டுரைகள் குறித்து அனைத்து சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கும் இந்த கடிதங்களை படித்த பின்னர், என்னால் எதுவும் உதவ முடியவில்லை என்றாலும் கூட, செப்டம்பர் 11க்கு இணையான மற்றொரு பயங்கரத்தை குறித்தும், அமெரிக்க கைக்கூலிகளின் மற்றொரு படுகொலையை குறித்தும் என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அது சிலியின் ஒரு சிறப்பார்ந்த சுற்றுச்சுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் சல்வாடர் அலெண்டியின் படுகொலையாகும். சந்தேகத்திற்கிடமின்றி, சிலியின் ஆட்சிக்கவிழ்ப்பின் போது ஆயுதங்களை தூக்கியெறிந்துவிட்டு நின்ற ஹெர் ஹென்ரி கிசென்ங்கர், இன்றும்கூட அமெரிக்காவின் மேற்கில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார் என்பதோடு, ஷெரீப் ஒபாமா புஷ்ஷிற்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்! ஒருநாள் அமெரிக்க மக்கள் விழித்தெழுவார்கள். "நான் எதிரியைக் கண்டுவிட்டேன், நாம் தான் அந்த எதிரி,” அந்தோஅமெரிக்கா? என்று போகோ போசும் கூறுவதைப் போல கூறுவார்கள்.

Ray
கனடா
5
மே 2011