சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Villagers continue to protest against the Koodankulam nuclear power plant in southern India

தென் இந்தியாவில் கூடங்குள அணு உலை ஆலைக்கு எதிரான கிராம மக்களின் எதிர்ப்பு தொடர்கிறது

By V.Sivagnanan 

21 November 2011


use this version to print | Send feedback

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கோடி கடற்கரைக் கிராமமான கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் "கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட" (Kudankulam Nuclear Power Project (KNPP) ) கட்டிட வேலைகளை கைவிடக் கோரி, அப்பகுதியைச் சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் செப்டம்பர் மாதம் முதல் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி தொழில்துறை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் நடந்துவரும் இந்த அணுசக்தி-எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களால் அணு உலையின் கட்டுமான வேலைகள் இடை நிறுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கூடங்குளத்தில் அனுமதி கிட்டாத நிலையில், அருகிலுள்ள இடிந்தகரை கிராமத்தில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் உள்ளடங்கிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் கடல் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், மீனவர்கள், குடும்பபெண்கள், மாணவ-மாணவிகள் என சமூகத்தின் அனைத்து தட்டினரும் பங்கு கொள்கின்றனர். இந்த அணு திட்டத்தினால் தாங்களும் தங்களது எதிர்கால சந்ததியினரும் எதிர்கொள்ளக்கூடிய உயிராபத்தான நிலைமைகளைப் பற்றியே அவர்கள் கவலைகொண்டுள்ளனர்.

இது அட்ம்சற்றோஎக்ஸ்போர்ட் (Atomstroyexport) என்ற நிறுவனத்தினால் இரு அணு மின்நிலையங்களை நிர்மாணிப்பதற்கு 1988ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகையில் கோர்பசேவும் கைச்சாத்திட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் முதலாவது கட்டமாகும். முதலாவது மின்நிலையத்தில் டிசம்பர் மாதத்தில் உற்பத்தியினை  ஆரம்பிக்கவும் இரண்டாவது அதனை தொடரும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் "அணுவாயுதப் பரவா உடன்படிக்கை" யினை மீறுகின்றது என்ற அமெரிக்காவின் எதிர்பினால் நீண்ட காலமாக நடை முறைப்படுத்த முடியாமல் இருந்தது. எவ்வாறெனினும், அமெரிக்காவின் எதிர்ப்பு, இந்தியாவில் ஒரு ரஷ்ய கம்பனியினால் அணு உலைகளை நிர்மாணிப்பதோடு சம்பந்தப்பட்ட, ரஷ்யாவின் செல்வாக்கு பற்றிய தனது அக்கறையினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தியாவுடன் ஒரு மூலோபாய பங்காளுமையை அபிவிருத்தி செய்துவரும் அமெரிக்கா, அதன் மூலாதாரமாக, பிரதானமாக மின்வலு உருவாக்கத்துக்காக அணு எரிபொருள், தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை பூகோள வழங்கலில் இருந்து பெறுவதற்கு இந்தியாவை அனுமதித்து, 2008ல் புது டில்லியுடன் சிவில் அணு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டது.

கூடங்குளம் திட்டம், அமெரிக்காவுடனான இந்தியாவின் அணு உடன்படிக்கையினால் கிடைத்த வாய்ப்பில், நாடு பூராவும் அணு மின் நிலையங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கையின் பாகமாகும். அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்கும் இந்தியா, அதை குறைப்பதை இலக்காகக் கொண்டு அணு மின் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது. தற்போது தனது எண்ணெய் தேவைகளில் 70 வீதத்தை புது டில்லி இறக்குமதி செய்கின்றது. இதனைத் தொடர்ந்து  குஜராத், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அமெரிக்க, ஷ் மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களினால் அணு மின் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜெய்தாபூரில், பிரான்சை சேர்ந்த அரீவா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆறு அணு மின் நிலையங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 9,900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் கடந்த ஏப்ரல் 18 அன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரெஞ்சு .எஃப்.பீ. செய்திச் சேவையின்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளத்தில் கிராமத்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அதே வேளை, அணு உலை திட்டத்தினால் தமது பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாயத்துக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றிய அவர்களது கவலை உண்மையானதாகும். இந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் "அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்" (People’s Movement Against Nuclear Energy) அதை பிற்போக்கு பிராந்தியவாத வழியில் திசை திருப்பிவிட முயற்சிக்கின்றது. “தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம்  அருகில் இருக்கும்  மாநிலங்களுக்கு வழங்காவிடில்  தமிழ் நாட்டிற்கு போதுமானது. எனவே அணு ஆலைகளை தமிழ் நாட்டில் அன்றி ஏனைய மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் நிர்மாணிக்க வேண்டும்“, என அந்த அமைப்பு வாதிடுகின்றது. இதன் மூலம், அணு மின் நிலையத்தினால் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்கள் எத்தகைய ஆபத்துக்களை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என்பதே அந்த வாதத்தின் அர்த்தமாகும். இது பிற்போக்கு பிராந்திய வாதங்களின் மூலம் உழைக்கும் மக்களையும் கிராமப்புற வறியவர்களையும் பிளவுபடுத்தும் நிலைப்பாடாகும்.

கூடங்குளம் சம்பந்தமாக தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு இனவாத கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு, இந்த பிராந்தியவாத நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றன. அணு நிறுவனங்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாடு பிரகடனப்படுத்ப்படுவதையே தான் விரும்புவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் எஸ். ராமதாஸ் கூறுகின்றார்.

ஸ்ராலினிச சி.பீ.எம். இன் மாநிலக் கிளை தெரிவித்திருப்பதாவது: “இந்த மின்நிலையத்தினால் அவர்களது ஜீவனோபாயம் பாதிக்கப்படாது என்பதை அரசாங்கம் பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இத்தகைய விடயங்கள் பூர்த்தி செய்யப்படும் வரை, மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.” மற்றைய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான சி.பீ.. சார்பில் அதன் மாநில செயலாளர் டி. பாண்டியன், திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னதாக பிரதேசத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்குமாறு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இரு ஸ்ராலினிச கட்சிகளும், மக்களின் பாதுகாப்பு சம்பந்தமான விடயத்தில் அவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது அனு மின் உற்பத்தியை முன்னெடுக்க ஏக்கத்துடன் முயற்சிக்கும் காங்கிரஸ் அரசாங்கத்தின் தயவிலேயே கிராமத்தவர்களை விட்டுவிட தீர்மானித்துள்ளன.

கூடங்குள எதிர்ப்புகள்  செப்டம்பர் மாத இறுதியில் தீவிரமடைந்த போது, எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள கிராமத்தவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி திட்டங்கள் முழுமையாக இந்திய அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பல விஞ்ஞானிகளின் கண்காணிப்பில், நவீன தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார். இதற்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இந்த ஆர்ப்பட்டம் ஏனைய  மாநிலங்களுக்கும் பரவி, நாடு தழுவிய போராட்ட வடிவெடுத்தால், அது அந்நிய நேரடி முதலீட்டை நேரடியாகப் பாதிக்குமென இந்திய ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம், 1998ல் பொக்ரானில் இந்தியா நடத்திய அணுவாயுதப் பரிசோதனையில் மத்திய வகிபாகமாற்றிய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமை, அணு நிலையத்தின்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கிராமத்தவர்களுக்குநம்பிகையளிக்க அங்கு அனுப்பி வைத்தது. அவர், 10,000 பேருக்கு தொழில் வழங்குதல் மற்றும் அதிவேக சாலைகள் மற்றும் ஒரு புதிய நவீன வைத்தியசாலையையும் நிர்மாணித்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முனவைத்தார். அந்தவாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்டவை அல்ல. மாறாக அவை அணு மின் நிலையங்களுக்கு எதிரான கிராமத்தவர்களின் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை தணிப்பதற்கான முயற்சி மட்டுமே ஆகும்.

தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, “மக்களின் அச்சங்களைப் போக்குவதற்கு கூடங்குளத் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். தமிழ்நாடு அரசாங்கத்திற்கும், கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமவாழ் மக்களுக்கும் நம்பகமான உத்தரவாதங்களை அளிக்க, மத்திய அரசு அக்டோபர் 20 அன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களுடன் 15 பேர் கொண்ட குழுவை உடனடியாக அமைத்து.

இந்த திட்டம் 2000 மெகாவாட் மின்சார உற்பத்தியை தருவதன் மூலமாக, மாநிலத்தில் தற்போது நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை தீர்க்கும் எனக் கூறி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கமும், ஜெயலலிதாவின் மாநில அரசும் ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. ஆனால் நாட்டின் தற்போதைய மின் வழங்கலில் வெறும் 2.6 சதவீதமளவு மட்டுமே அணுமின்சாரம் பங்களிக்கிறது. திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலைகள் அனைத்தும் நிறுவப்பட்டு முழுமையாக இயக்கப்பட்டாலும் கூட, 2030ம் ஆண்டளவில் பெறக்கூடிய ஆகக் கூடிய பங்களிப்பு 7.8 சதவீதமாக மட்டுமே இருக்கும்”, என்றே மத்திய அரசாங்கத்தின் மின்சக்தி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம், பல மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்குவற்காக அல்லாமல், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, மக்களின் செலவில் தமது வர்த்தக நலன்களை அடைகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காகவே வகுக்கப்பட்டதாகும். இந்தியாவில் தொழிற்துறை பாதுகாப்பில் பதிவாகியுள்ள முற்றிலும் மோசமான நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 100 வீத பாதுகாப்பு பற்றிய அரசாங்கத்தின் உத்தரவாதத்தில் எந்தவொரு நம்பகத் தன்மையும் கிடையாது. எவரும் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போபால் அழிவை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்தியின் கீழ், பாதுகாப்பை விட இலாப நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

ஜப்பான் போன்ற வளர்சியடைத்த முதலாளித்துவ நாட்டில் கூட, முதலாளித்துவ ஆளும் தட்டு, எட்டு மாதங்களுக்கு முன்னர் புகுஷிமா டைச்சி அணு உலை சுனாமியால் தாக்கப்பட்டபோது ஏற்றப்பட்ட பேரழிவு சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது பொறுப்பற்ற தன்மையை நிரூபித்த ஆளும் தட்டு, சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தியது. டோக்கியோ பவர் கம்பனி, இயற்கை அழிவுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு முறைமையை அமுல்படுத்த கவனமாக முதலீடு செய்ய மறுத்தமையே இதற்கான பிரதான காரணமாகும். அவர்களது குறிக்கோள் இலாபம் மட்டுமே ஆகும். நிவாரண மற்றும் மீள் கட்டுமான வேலைகளை அமுல்படுத்துவதை அலட்சியம் செய்த ஜப்பான் அரசாங்கம், இலட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை பல தசாப்தங்களுக்கு நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

ஏனைய வழிகள் ஊடாக உற்பத்தி செய்வதை விட, அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகம் முன்னேற்றகரமானதாக கருதப்படுகிறது. எவ்வாறெனினும், உரிய விஞ்ஞானிகள் மூலமாக அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடுவதோடு, இலாப நலன்களை விட பொது மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, அணு மின் உற்பத்தியில் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான போராட்டம், இலாப அமைப்பை தூக்கி வீசி சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. சோசலிசத்தின் கீழ் மட்டுமே இலாப நலன்களுக்கு மேல், மனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட முடியும்.