சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament approves increase in European bank bailout fund

ஐரோப்பிய வங்கிப் பிணையெடுப்பு நிதி அதிகரிப்பிற்கு ஜேர்மனியப் பாராளுமன்றம் ஒப்புதல் கொடுக்கிறது

By Christoph Dreier
30 September 2011

Use this version to print | Send feedback

வியாழன் அன்று அரசாங்கத் திவால்களால் அச்சுறுத்தப்படும் வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை உடைய ஐரோப்பிய பிணை எடுப்பு நிதி விரிவாகத்திற்கு ஜேர்மனிய பாராளுமன்றம் ஒப்புதல் கொடுத்தது.

523 க்கு 85 என்ற வாக்குக் கணக்கில் பாராளுமன்றம் ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பின் உத்தரவாதங்களை 400 பில்லியன் யூரோக்களில் இருந்து 780 பில்லியன் யூரோக்களுக்கு உயர்த்துவதற்கு ஒப்புக் கொண்டது. இதில் ஜேர்மனியே 253 பில்லியன் யூரோக்களுக்கு உறுதியளிக்கிறது.

ஐரோப்பிய நிதிய ஸ்திரப்படுத்தும் ஒழுங்கு (EFSF) யூரோப்பகுதி உறுப்பினர்களால் நிறுவப்பட்டுள்ள ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இது சாதாகமான விகிதங்களில் கடன்களை வாங்கி தங்கள் பலவீனமான தரத்தை ஒட்டி சுதந்திரச் சந்தைகளில் பணம் எழுப்ப முடியாத யூரோப் பகுதி நாடுகளுக்குக் கடன்களைக் கொடுக்கிறது.

ஜூன் 2010ல் இது நிறுவப்பட்டதில் இருந்து EFSF யூரோப்பகுதியில் அதிகக் கடன்பட்டுள்ள நாடுகளுக்குக் கடன் கொடுத்துள்ள வங்கிகள் தங்கள் கடன்களை உரிய நேரத்தில் முழுமையாகப் பெறுவதற்கு உறுதியளிப்பது மட்டும் இல்லாமல், வட்டியும் பெற உதவுகிறது. புதிய நடவடிக்கைகளை ஒட்டி, EFSF இப்பொழுது நேரடியாக நிதிய நிறுவனங்களுக்குப் பணத்தைக் கொடுக்க முடியும். இனி வரும் நாட்களில், இந்த அரசாங்க பங்குப்பத்திரங்களை முதலீட்டாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கி, வங்கிப் பிணைஎடுப்புக்களுக்குக் கடன்கொடுத்து, நேரடியாக திவாலை எதிர்கொள்ளாத நாடுகளுக்கும் கடன் வசதிகளை சுயாதீனமாக கொடுக்க முடியும்.

இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தேசிய திவால்களினால் ஏற்படும் ஆபத்துக்களை யூரோ நாடுகளின் வரவு-செலவுத் திட்டங்களுக்கு மாற்றுவதாகும். ஏற்கனவே வந்துள்ள முந்தைய நடவடிக்கைகள் கிரேக்கத் திவால் என்பது உடனடியாக அரசுக்கு 28 பில்லியன் யூரோக்களை இழக்கச் செய்யும், ஆனால் ஜேர்மனிய வங்கிகளுக்கு 12 பில்லியன் யூரோக்கள் இழப்புகளாக இருக்கும்.

ஆனால், மிக அதிகக் கடன்பட்டுள்ள கிரேக்கம், ஸ்பெயின் அல்லது போர்த்துக்கல் போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த மீட்பு நிதி எந்த நிவாரணமும் அளிக்காது. மாறாக EFSF இடம் இருந்து ஆதரவு என்பது, கடுமையான சிக்கன நடவடிக்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம்—EU, ECB, IMF— என்னும் முக்கூட்டுகிரேக்கம் மாபெரும் சமூகநலச் செலவு வெட்டுக்களைச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது; இது நாட்டில் பெரும்பான்மை மக்களை பெரும் வறுமையில் தள்ளியிருப்பதுடன் நாட்டையும் ஆழ்ந்த மந்தநிலைக்கு உட்படுத்திவிட்டது. இது கடன் பிரச்சினையைத் தீர்க்கவில்லை; மாறாக அதை மோசமாக்கிவிட்டது. வங்கிகள் இடரை எதிர்கொள்ளாமல், ஐரோப்பிய நாடுகள்தான் எதிர்கொள்கின்றன.

வியாழன் அன்று முக்கூட்டின் பிரதிநிதிகள் இதுவரை செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்தவும், இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கை குறித்து விதிகள் இயற்றவும் கிரேக்கத்திற்கு பயணித்தனர். கிரேக்க சமூக ஜனநாயக PASOK அரசாங்கம், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் இவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், நிதியப் பிரபுத்துவத்தின் ஆணைகளை பின்பற்றுவதாக உறுதிமொழி கொடுத்துள்ளது.

EFSF செயற்பாடுகள் இத்தகைய நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் பரவும் என்ற பொருளைத் தருகின்றன. ஸ்பெயின், இத்தாலி அல்லது போர்த்துக்கல் போன்ற மிக அதிக கடன்பட்டுள்ள நாடுகள் மட்டும் பாதிப்பிற்கு உட்படுவது என்பதுடன் யூரோப்பகுதியின் அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும். இது சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு அடிப்படை சொத்து மறுபகிர்வு என்பதைப் பிரதிபலிக்கிறது.

அரசாங்கக் கடன்கள் இப்பொழுது ஐரோப்பா முழுவதும் பொதுமக்களுக்கு தள்ளப்படுகிறது; இவையோ சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் செல்வக் கொழிப்பு அடைவதற்காக நிகழ்த்திய அவலச் செயல்களின் விளைவு ஆகும். ஜேர்மனியில் பொதுக் கடன் கடந்த 12 ஆண்டுகளில் 1.2 ல் இருந்து 2.0 ட்ரில்லியன் யூரோக்கள் என உயர்ந்துவிட்டது. இதே காலத்தில் தனியார் சொத்துக்கள் 3.4 ட்ரில்லியனில் இருந்து 5 ட்ரில்லியன் யூரோக்கள் என உயர்ந்துவிட்டது; சமூகத்தின் மூன்றில் ஒரு பகுதி என்று உயர்மட்டத்தில் இருப்பவர்கள் இச் செல்வத்தில் 90% த்தின் உடைமையாளர்கள் ஆவர்.

பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை இக்கொள்கைகளுக்கு அரசியல் தட்டினரிடையே உள்ள பெரும் ஆதரவை தெளிவாக்குகிறது. கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி, கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU), தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP), சமூக ஜனநாயகக் கட்சி (SPD) பசுமை வாதிகள், முதலாளிகள் சங்கங்கள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கின்றன. இவை போதுமானதாக இல்லை என்றுதான் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை தாக்கியுள்ளன.

முந்தைய CDU/CSU, மற்றும் SPD யின் பெரும் கூட்டணி ஆட்சியில் இருந்த முன்னாள் நிதிமந்திரி பீர் ஸ்ரைன்ப்ரூக் (SPD) கிரேக்கத்தில் சில சிக்கனநடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், “அவை போதுமானவை அல்லஎன்றார். ஒரு முறையான திவால்தன்மை பரிசீலிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். பசுமைவாதிகளின் தலைவர் யூர்கென் ரிட்டீன் அரசாங்கம் அது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதற்கு குறைகூறியுள்ளார். இந்த நெருக்கடி சிறிய நடவடிக்கைகளால் தீர்க்கப்பட முடியாது என்றார் அவர்.

சமீபத்திய வாரங்களில் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சியின் பிரதிநிதிகள் பலமுறையும் மீட்பு நடவடிக்கைகள் விரிவாக்கப்பட வேண்டும், யூரோப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். அதாவது, பொது ஐரோப்பிய அரசாங்கப் பத்திரங்களுக்கு, இவற்றில் எல்லா யூரோப்பகுதி நாடுகளும் வங்கிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும்.

ஜூலை மாதம் சமூக ஜனநாயகக் கட்சி தலைமை பிணையெடுப்புக் கருவிக்கும் அதில் இருந்து விளையும் அனைத்து செல்வாக்கற்ற நடவடிக்கைகளுக்கும் அங்கேலா மேர்க்கெலுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்தது. இடதுகட்சியின் தலைவர் கிரிகோர் கீஸி யூரோப் பத்திரங்களை (euro bonds) நிறுவுதல் தவிர்க்க முடியாததுஎன்றார். இடது கட்சியின் தலைவர் கிளவ்ஸ் ஏர்னெஸ்ட் இது தமது கட்சியின் ஒரு முன்மொழிவாக இருந்தது என்றும் இப்பொழுது அனைவரும் அதுகுறித்து விவாதிக்கின்றனர். என்றார்.

வியாழன் வாக்கெடுப்பில் இடது கட்சி வேண்டாம்வாக்களித்தாலும், இது ஒரு வெளிப்படையான தந்திர உத்திதான். எப்பொழுதும் அவர்களுடைய வாக்கு முக்கியத் தேவை என வரும்போது, வங்கிகளை மீட்பதற்கு விரைவான நடவடிக்கைகளுக்கு இசைவு தருதல் என வரும்போது, இடது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கத் தயங்கியதில்லை.  இந்த விவாதத்தின்போதும், அவர்கள் அடிப்படையில் அரசாங்க நடவடிக்கைக்கு ஆதரவளித்தனர். அவர்களுடைய ஒரே உண்மையான கோரிக்கை ஐரோப்பிய மத்திய வங்கி கடன்பட்டுள்ள நாடுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வேண்டும் என்பதாகும். இதற்கான கருவி EFSF போலவேதான் இருக்கும்: வங்கிகளுக்கு புதிய நிதிகள் கொடுக்கப்படும், அரச கருவூலங்கள் இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும்.

ஒரு வாரத்திற்கு முன் ஜேர்மனியில் நான்கு முக்கிய முதலாளிகள் சங்கங்கள் மீட்பு நடவடிக்களுக்கு ஆதரவாகத் தெளிவாக உரைத்தன. EFSF இல்லாவிடின், “ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொது நாணயத்திற்கு  விவரிக்க முடியாத விளைவுகள் என்னும் அச்சுறுத்தல் உள்ளது என்று அவர்கள் பாராளுமன்றத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிதி யூரோப்பகுதி முழுவதையும் ஒருங்கிணைத்துச் செல்லுவதற்கான திறவுகோல் ஆகும் என்றனர்.

ஜேர்மனிய பெரு வணிகத்தில் இருந்து வரும் அழுத்தத்தின் பொருள் வாக்கெடுப்பு என வரும்போது ஆளும் கூட்டணியில் ஒரு சிலரே பிணையெடுப்புப் பொதியை நிராகரிப்பர் என்பது ஆகும். சமீபத்திய வாரங்களில் பல கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சட்டத்திற்கு எதிராக ஒரு வலதுசாரி தேசியவாத முன்னோக்கில் இருந்து பேசியுள்ளனர்.

நடவடிக்கையை குறைகூறுவோர், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் வொல்வ்காங் போஸ்பாக் அல்லது ஜனநாயகக் கட்சியின் பிராங்க் ஷாப்லர் போன்றோர் ஏற்கனவே வாக்கெடுப்பிற்கு முன் அவர்கள் மற்ற நாடுகளின் கடன்களுக்காக ஜேர்மனி பொறுப்பேற்பதற்கு எதிராக உரைக்கப்போவதாக வலியுறுத்தியிருந்தனர்.

நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள  (CDU)  கிரேக்கம் இனி ஆதரவு ஏதும் பெறவில்லை என்றால் திவாலாகிவிடும், ஜேர்மனிய நிதிய நிறுவனங்கள்தான் ஜேர்மன் பணத்துடன் மீட்கப்படும் என்ற நிலை பற்றி உரைத்துள்ளார். மாறாக EFSF நிதிகள் அனைத்துக் கடன்பட்டுள்ள நாடுகளிலும் தீவிரமாக இயங்கும் எல்லா வங்கிகளுக்கும் பயனளிக்கும்.

நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கொண்டிருக்கும் பெருகிய தேசியவாதத்தைத்தான் இக்கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. ஆளும் உயரடுக்கில் பெரும்பாலானவர்கள் தற்பொழுது ஜேர்மனிய நலன்கள் ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் யூரோவின் மீட்பை நடத்துகின்றது என்று காண்கையில், ஒரு தேசியவாதப் பாதை பற்றிய ஆதரவுக் குரல்களும் ஒலிக்கின்றன.

அத்தகைய பாதை ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை கொடுக்கும். இப்படி நடந்தால் ஆயுதமேந்திய மோதல்கள்கூட வரலாம் என்று Spiegel Online கூறியுள்ளது. யூரோவின் தோல்வி என்பது உலக நிதிய முறையின் கரைப்புஎன்ற பொருளைத்தரும் என்று அது எழுதியுள்ளது. வரலாறு முழுவதிலும் ஒரு பொது நாணயத்தின் முடிவு என்பது அரசியல் கூட்டுக்கள் சரிவு அல்லது போர்என்று முன்னதாக வந்துள்ள நிலையைக் கண்டுள்ளது. நாணய ஒன்றியத்தின் முடிவு ஒரு பெரிய தீயகனா காட்சியைப் போல் இருக்கும்

வாக்கெடுப்பிற்கு முன் அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கும் இடையே உள்ள அழுத்தங்கள் கணிசமான முறையில் மோசமாயின. ஜனாதிபதி  பாரக் ஒபாமா EFSF ன் அளவு 2 டிரில்லியன் யூரோவிற்கு உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரியது மட்டும் இல்லாமல், ஐரோப்பிய செயலற்ற தன்மை உலகத்தையே அச்சத்தில் இருத்தியுள்ளது என்றார்.

முன்பு ஷௌய்பிள பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் பாதிப்பிற்கு உட்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இக்கோரிக்கையை எதிர்கொள்கையில் பெரும் நிதானத்துடன் இருந்தார். இப்பொழுது அமெரிக்காவில் இருந்து அழுத்தம் அதிகமாயிருக்கும் நிலையில், ஜேர்மனிய அரசாங்கத்திற்குள் இருக்கும்  இணக்கமின்மை அதிகரிக்கும்.