சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The Nation, ISO seek to channel Wall Street protests back to the Democratic Party

வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்களை மறுபடியும் ஜனநாயகக் கட்சியின் பாதையிலேயே திருப்புவதற்கு தி நேஷன் மற்றும் ISO முனைகின்றன

By David Walsh
7 October 2011

use this version to print | Send feedback

வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம் மில்லியன்கணக்கான மக்களின் இதயத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கான பரந்த ஆதரவு அமெரிக்காவிலும் மற்றும் பிறவெங்கிலும் மக்களின் கருத்தின் உண்மையான நிலையை, அதாவது இலாப அமைப்புமுறைக்கான எதிர்ப்பு கடந்த பல வருடங்களாக ஆழமடைந்து விரிவு கண்டு வந்திருக்கிறது என்பதை, எடுத்துக் காட்டுகிறது. சொற்ப எண்ணிக்கையிலானோரின் கையில் பெரும் செல்வத் திரட்சியும் பரந்த பெருவாரியான மக்களுக்கு சகிக்க முடியாத நிலைமைகளும் இருப்பதை வடிவமாகக் கொண்டமுதலாளித்துவம்நாளுக்கு நாள் ஒரு அவலட்சணமான வார்த்தையாக ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்த இயக்கம் நடப்பு ஒழுங்கின் பொருளாதார அடித்தளங்களுக்கு  நனவான சோசலிச எதிர்ப்பாக அபிவிருத்தியடைந்து புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புமா? அல்லது அமெரிக்காவில் உள்ள நடப்புக் கட்சிகள் மற்றும் ஸ்தாபனங்களின், எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகக் கட்சியின், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, மக்களைத் தனது சொந்த ஒடுக்குமுறைக்கு பழக்கப்படுத்துவதற்கான மற்றுமொரு சாதனமாக மாறுமா?

குறிப்பாக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் நடப்பு நிலைமைகளுக்கு விரோதத்தை காட்டுகின்றனர், ஆனால் அவர்களின் பிழை அல்ல என்றாலும், வரலாறு, சமூக நிகழ்முறை, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போக்குகளின் பாத்திரம் ஆகியவை குறித்த அவர்களது அறிவு குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதி முக்கியமான கல்வியை அனுபவம் வழங்கும், ஆனால் நடப்புப் போராட்டத்தின்நண்பர்கள்எல்லோருமே நண்பர்கள் இல்லை என்பது தான் பலரும் கற்கவிருக்கும் முதலாவது விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.

பெருகும் முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் விளைவுகள் நடப்பு நிலைமையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கத்தை அடக்குவதற்கும், அதனை பாதிப்பின்றி மீண்டும் உத்தியோகபூர்வ வழிகளில், அதாவது ஜனநாயகக் கட்சியினருக்கு குறிப்பாக ஒபாமாவுக்கான ஆதரவாக, பாயச் செய்வதற்குமான முயற்சிகளில்  ஆளும் வர்க்கம் தனது தந்திரம், வெறுப்பு மற்றும் பரந்த அரசியல் அனுபவம் அனைத்தையும் ஒருசேரப் பயன்படுத்தியாக வேண்டியிருப்பது தவிர்க்கவியலாததாகி உள்ளது.

ஆர்ப்பாட்டங்களுக்கு அனுதாபத்தை அறிவித்துக் கொண்டு, ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த இயக்கம் பெரு வணிக இரு-கட்சி அமைப்புமுறையில் இருந்தும் மற்றும் அந்த அமைப்புமுறையை முழுமூச்சுடன் பாதுகாக்கும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்தும் முறித்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துகின்ற பிரசுரங்கள் மற்றும் அமைப்புகளின் வடிவத்தில் இந்தப் பிற்போக்குத்தனமான முயற்சிக்கு அதற்கான தாராளவாத அல்லது போலி-இடது முகமும் இருக்கிறது. இந்த விடயத்தில் தி நேஷன் பத்திரிகையும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும் (ISO) பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன.  

ஒரு நெடிய, மதிப்பிழந்த வரலாற்றுடன் தி நேஷன் ஜனநாயகக் கட்சியின் தாயக அங்கமாகத் திகழ்கிறது. 1930களில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு இந்த வாரப் பத்திரிகையின் ஆசிரியர்கள் சோசலிச இடதுக்கு எதிராக பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டைப் பாதுகாத்து, போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகவாதிகளின் கட்டைவிரலின் கீழ் பராமரிக்க உதவினர். நடப்பு நிர்வாகம் உட்பட ஜனநாயகக் கட்சி நிர்வாகம் ஒவ்வொன்றுக்கும் இப்பத்திரிகை ஆதரவையும் வக்காலத்தையும் வழங்கி வந்துள்ளது. தி நேஷன் பத்திரிகை வசதியான மற்றும் நிம்மதியான மத்தியதர வர்க்கத்தின் மேல்தட்டினரால் வெளியிடப்படுகிறது, இவர்கள் பங்குச் சந்தை மற்றும் பெருவணிக அமெரிக்காவில் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு பங்குதனைக் கொண்டிருக்கின்றனர்.

2008 நவம்பரில், நேஷன் பத்திரிகையின் ஆசிரியரும், வெளியீட்டாளரும் மற்றும் பகுதி-உரிமையாளருமான காட்ரினா வண்டேன் ஹூவெல் தானும் சக ஆசிரியர்கள் மற்றும் கட்டுரையாளர்களும்பராக் ஒபாமாவின் வெற்றியால் திறக்கப்பட்டிருக்கும் சாத்தியக்கூறின் புதிய சகாப்தம் குறித்து மிகவும் உற்சாகத்துடன் இருப்பதாகவருணித்துக் கொண்டதோடு, ’ஒபாமாவின் வெற்றி நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறித்து நிற்கிறது, கண்ணியம், பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையின் சக்திகளுக்கான ஒரு வெற்றியாகும் இதுஎன்று மேலும் உறுதிபடக் கூறியதை மறந்து விடக் கூடாது. உண்மையில், ஒபாமாவுக்கு வாக்களித்த மில்லியன்கணக்கான மக்களின் நம்பிக்கைகளுக்கும் ஆசைகளுக்கும் நேரெதிரான வகையில் 2008 தேர்தலானது செல்வம், அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் இராணுவவாதத்தின் சக்திகளுக்குத் தான் வெற்றியாக நிரூபணமாகியுள்ளது

இப்போது, நேஷன் வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அதன் ஆதரவைப் பிரகடனம் செய்கிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவரோ ஆதரவாளரோ எச்சரிக்கையுடன் இருங்கள்! அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு தலையங்கத்தில், இந்தப் பத்திரிகை இந்த இயக்கத்தை பத்திரமாக மதிப்பிற்குரிய மற்றும் முழுமையாக ஸ்தாபக மயமான அரசியலின் வட்டத்துக்குள் கொண்டு வர முனைகிறது.

எந்த ஒரு நேர்மையான பங்கேற்பாளரையும் சங்கடத்தில் ஆழ்த்தும் வண்ணம்இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள்குறித்து குறைமதிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்திய பின்னர், (”பிள்ளைகள் சரி தான்: ஆம், அவர்கள் கோபமாகத் தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தேடலில் இருக்கின்றனர், அத்துடன் நம்பிக்கையுடன் இருக்கின்றனர், எல்லாவற்றுக்கும் மேலாக, விடயத்தை தமது சொந்த கரங்களில் எடுத்துக் கொண்டுள்ளனர்”)நேஷன் ஆசிரியர்கள் கையிலிருக்கும் வேலைக்குச் செல்கிறார்கள்.

ஆனால் வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கத்திற்கு என்ன வேண்டும்? அக்கறையுடனான உரிமையுடனோ அல்லது கவலையுடனோ இந்தக் கேள்வி தான், அடையாள அரசியல் என்னும் அற்புதமான செயலால் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இளைஞர்களுக்கு முன்னால் வைக்கப்படும் கேள்வி. புத்திசாலித்தனமாக, அவர்கள் இதற்குப் பதிலளிக்க சாவகசமான கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றனர்.”

மக்களுக்கும் மேலாய் இலாபங்களை அமர்த்தும் பெருநிறுவனங்களை விமர்சனம் செய்கிற ஆர்ப்பாட்டத் தலைவர்கள் விநியோகித்த ஒரு அறிக்கையை நேஷன் பாராட்டுகிறது, அதன்பின் வெளிப்படையான கைவரிசையில் இறங்குகிறது: “உண்மை என்னவென்றால், இடது பக்கம் இருக்கும் நம்மிடம் கொள்கை யோசனைகளுக்கு பஞ்சம் ஏதுமில்லை. விரிவான கோரிக்கைகளுடனான பெரும் பேரணிகளை நாம் நடத்தியிருக்கிறோம். நிதிப் பரிவர்த்தனைகள் வரி கேட்கிறோம், அத்துடன் வோல் ஸ்ட்ரீட் வாசிகளுக்கு ஆதாயமளிக்கும் பங்கு இலாபங்களுக்கான (carried-interest) வரி என்னும் ஓட்டையைத் தடைசெய்வதற்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். ஆனால் நமது யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நமக்கு அதிகாரம் இல்லாதிருக்கிறது.”

வாரன் பபெட், ஜோர்ஜ் ஸோரோஸ் மற்றும் பில் கேட்ஸ் போன்ற பில்லியனர்களாலும் மற்றும் வலதுசாரி பிரெஞ்சு ஜனாதிபதி நிகோலோ சார்க்கோசியாலும் ஆதரிக்கப்படும் ஒருநிதிப் பரிவர்த்தனை வரியை நிறுவுகின்ற பரிதாபகரமான மற்றும் பயனளிக்காத யோசனையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்தஇடதின் பக்கம் இருக்கும் நாம்யார்? ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் தங்களைப் போல் கோழைகளாக இருப்பார்கள், முதலாளித்துவத்தின் சற்று மறுஒழுங்கு செய்யப்பட்ட ஒரு பதிப்புடன் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று வண்டேன் ஹூவெல்லும் நேஷன் பத்திரிகையும் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்

வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கத்தில் நிறையக் குழப்பம் உள்ளது, ஆனால் பெருகிய எண்ணிக்கையிலானோர் தங்களை ஆட்படுத்திக் கொண்டு கணிசமான தியாகங்கள் செய்வது இந்த பில்லியனர்களது செல்வத்தில் துளியளவிற்குக் குறைவதைக் காண்பதற்காக அல்ல. நடப்பு சமூக உறவுகளைத் தூக்கியெறிந்து பகுத்தறிவுபட்ட, ஜனநாயகரீதியாய் ஒழுங்கமைந்த சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக ஒட்டுமொத்தமாக பெருநிறுவனக் கழுத்துப்பிடிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே மிகத் தீவிரமான கூறுகளின் ஆசையாக ஏற்கனவே இருக்கிறது, இத்தகைய தொலைநோக்கிலான நடவடிக்கைகளுக்கான அவசியத்தை மேலும் மேலும் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கண்டு வருகின்றனர்.

நடப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னிலையில் இருக்கும் சிலரதுஅரசியல் கலவாமைஎன்னும் நிலைப்பாட்டை தி நேஷன் பத்திரிகை பாதுகாக்கிறதுஉதாரணத்திற்கு நேஷன் கட்டுரையாசிரியர் பெட்ஸி ரீட் அக்டோபர் 3 அன்று வெளியான தனது கட்டுரையின் தலைப்பில் கேட்கிறார், “ஏன் மிகப் பலரும் கோரிக்கைகள் என்னவென்று கேட்கிறார்கள்?” “கோரிக்கைகளை வழங்குவதில் அவர்கள் தோல்வி காண்கிறார்கள் என்பது தான் வோல்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம்[OWS]  குறித்து நாம் அடிக்கடி கேட்கும் விமரிசனமாக உள்ளது, வெகுஜன ஊடகங்களில் இருந்து மட்டுமல்ல முதுபெரும் இடதுசாரிகளிடம் இருந்தும் கூடஎன்று எழுதுகிறார். ஏதோ இந்த இயக்கத்தை கறைபடியாமலும் ஊழலில் இருந்தும் காப்பாற்ற முனைபவரைப் போல

இது ஒரு மோசடி வேலை. ரீடும் நேஷனும் இளைஞர் பட்டாளத்தின் அனுபவமின்மையைக் கணக்குப் போட்டு இங்கே மிதமிஞ்சி முகஸ்துதி பாடுகிறார்கள்அமெரிக்காவில் நிலவும் நடப்பு அரசியலின் மீதான ஒரு ஆழமான வெறுப்பை, உலகம் முழுவதும் காணத்தக்கதாய் இருக்கக் கூடிய ஒரு வெறுப்பை, மொத்தமாய் அரசியலை நிராகரிப்பதான ஒன்றுடன் கலந்துவிடக்கூடாது. அரசியல் தான் மாபெரும் சமூகக் கேள்விகள், எல்லாவற்றுக்கும் மேலாய் செல்வம் மற்றும் சொத்து உறவுகள் குறித்த கேள்விகள், வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எந்த வர்க்கம் சமூகத்தை நடத்த வேண்டும் என்கிற கேள்வி, ஒன்றுபடுத்தப்பட்ட மற்றும் உள்ளடங்கியுள்ள வடிவம்அரசியல் இன்று ஒரு முனையில் தொழிலாள வர்க்கமும் மற்றும் சோசலிசமும், மறுமுனையில் முதலாளித்துவ செல்வமும் அதன் வக்காலத்துவாதிகளும் நிற்கும் இருதுருவங்கள் என்பதையே அர்த்தப்படுத்துகின்றது.

முரண்நகையாக, “அரசியல் கலவாமைஎன்கிற சுலோகம் தான் நடப்பு அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் பாதுகாப்பு காண்பதற்கான வழியாக இருக்கிறது. எதிர்ப்பு காட்டுகிற சோசலிச அரசியலை நிராகரிப்பதென்றால், நடைமுறையில், நடப்பு அரசியலை, ஜனநாயகக் கட்சியின் அரசியலை, இற்றுப் போன முதலாளித்துவ ஆதரவு அரசியலைப் பாதுகாப்பது என்றாகிறது. ”வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கத்தில் பொதிந்த கோபம் ஒருநாள் வாக்குச்ச்சீட்டுப் பெட்டியிலோ அல்லது சட்டத்திலோ தனக்குரிய வடிகாலைக் காணும் என்று நம்புவோம்என்று நேஷன் தலையங்கம் முடிகிறது. வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு இயக்கத்தைக் கொத்தாக 2012 இல் ஒபாமாவை மீண்டும் தேர்வு செய்வதற்கான ஆதரவு இயக்கமாக மாற்றுவது தான் நேஷன் பத்திரிகையின் மிக விருப்பமான எண்ணமாக இருக்கிறது. அப்படி நடந்தால் அது இந்த இயக்கத்தின் அவமானகரமான மரணமாக இருக்கும்.

ஜனநாயகக் கட்சி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ளவர்களின் ஒரு பக்கத்தையே சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) குறித்து நிற்கிறது. முதலாளித்துவ ஆதரவு அரசியலை சோசலிச வார்த்தைஜாலத்தைக் கொண்டு இது அலங்கரிக்கிறது. நடப்பு சூழ்நிலையில், ஆர்ப்பாட்ட இயக்கத்தை AFL-CIO மற்றும் எஞ்சிய தொழிற்சங்க அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உதவுவதன் மூலமாக அந்த இயக்கத்தை மூச்சுத் திணறச் செய்வதற்கு ISO முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது அரசியல் குற்றவியல்தன்மை படைத்த ஒரு கொள்கையாகும். அமெரிக்காவின் பரந்த மக்கள் இன்று தங்களைக் காணும் சூழ்நிலைக்கு, தமது தேசியவாதம், வர்க்கக் கூட்டு மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சியினருக்கு கீழ்ப்படியச் செய்வது ஆகியவற்றின் மூலம், இந்த தொழிற்சங்கங்கள் தான் மையப் பொறுப்பானவையாக இருக்கின்றன.

ஆலை மூடல்கள், சமூக வேலைத்திட்டங்கள் அழிக்கப்படுவது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் முடிவற்ற போரின் கொள்கைகள் என தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் எதற்குமே AFL-CIO எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாகன உற்பத்தித் துறையிலும் மற்ற துறைகளிலும், நன்கு வருவாய் பெறும் தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது வருவாயில் ஒரு பைசாவைக் கூட இழக்கவில்லை என்கிற அதே சமயத்தில் ஊழியர்களின் ஊதியங்கள் மற்றும் நலத் திட்டங்களில் மிருகத்தனமான வெட்டுக்களைத் திணிக்க உதவியுள்ளனர்.

அக்டோபர் 5 அன்றுவோல் ஸ்ட்ரீட்டுக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை உருவாக்குவதுஎன்கிற தலைப்பில் வெளியான ISO/சோசலிஸ்ட் தொழிலாளர் தலையங்கம், “ஒழுங்கமைந்த தொழிலாளர்கள் வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் போராட்டங்களின் பக்கம் இறங்குவதுவரவேற்கத்தக்க உண்மை என்கிறது. “பெரிய தொழிற்சங்கங்களின் நுழைவு இந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் அதன் சமூக வேர்களை ஆழப்படுத்துவதற்கான சாத்தியத்தைச் சுட்டிக்காட்டுகிறதுஎன்கிற அதன் அடுத்த கூற்று ஒட்டுமொத்தமான பொய் ஆகும். அமெரிக்கதொழிற்சங்கங்கள்இன்று பணக்கார நிர்வாகிகளின் மூலம் நடத்தப்பட்டு பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக  உள்ள வணிக அமைப்புகளாக இருக்கின்றன. அவற்றின் பங்கேற்பு, இயக்கத்தின்சமூக வேர்களைஆழப்படுத்துவதில்லை, மாறாக அந்த வேர்களை நிலத்தில் இருந்து பிடுங்கியெறிவதற்கான ஒரு முயற்சியே.

AFL-CIO மற்றும் நடப்பு தொழிற்சங்கங்களை ISO அறிக்கை கொண்டாடுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்களை வழிமொழிந்தமைக்காக அமெரிக்காவெங்கிலுமான பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை இது பாராட்டுகிறது. சிவப்பு எதிர்ப்பு மற்றும் கம்யூனிச விரோத நடவடிக்கைகளுக்கு நெடுங்காலமாய் ஒரு கோட்டையாய் இருந்து வருகின்ற, கடந்த 30 வருட காலத்தில் தனது உறுப்பினர்களுக்குள்ளேயே பாரபட்சமான வகையில்  பாரிய வெட்டுகளையும் சலுகைகளையும் திணிக்கிற எஃகு தொழிலாளர் சங்கத்தின் தலைவரான லியோ கெரார்டும் இந்த பாராட்டைப் பெற்றவர்களில் இடம்பெறுகிறார். தனது தொழிற்சங்கத் தலைமைவோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கத்தின் பக்கம் நிற்கிறது என்றும் அதனை உறுதியாக ஆதரிக்கிறதுஎன்றும் கெரார்டு அறிவிக்கிறார் என்றால் ஒருவரின் முதுகுக்குப் பின்னால் பெரிய, கூர்மையானதொரு கத்தியால் குத்தப்படுவதை எதிர்பார்ப்பது அவசியமாகும்.

மிக முக்கியமாக, ISOவின் socialistworker.org தளத்தில் அக்டோபர் 6 அன்று பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை (”வோல் ஸ்ட்ரீட்டுக்கு எதிரான ஒற்றுமை”) பாப் மாஸ்டரின் உரையை மேற்கோளிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க தொலைதொடர்புத்துறை தொழிலாளர்கள் (CWA) அமைப்பின் டிஸ்டிரிக்ட் 1 சட்ட/அரசியல் இயக்குநராக இருக்கும் இவர் இப்போது தான் வெரிசான் தொழிலாளர்கள் மீதான மனச்சாட்சியற்ற முன்கண்டிராத காட்டிக் கொடுப்பில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். அங்கு அவருக்குக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர் கூறினார், “உங்களைச் சுற்றிப் பாருங்கள். இப்படித் தான் ஜனநாயகம் இருக்கிறது.”

ஆகஸ்டு மாதத்தில், வெரிசானில் CWA வேலைக்குத் திரும்புவது என சரணாகதியடைந்ததைப் பாதுகாத்து மாஸ்டர் கூறியதை அசோசியேடட் பிரஸ் வெளியிட்டிருந்தது. தனது சங்க உறுப்பினர்கள்வேலைக்குத் திரும்புவதில் அளவில்லாத மகிழ்ச்சி கொண்டதாகஅவர் கூறியிருந்தார். சில்லரைச் சலுகைகளைப் பெறுவதும் எதிர்ப்பு உறுப்பினர்கள் மீது வேலை வெட்டுக்களைத் திணிப்பதுமான வகையில் தான் CWA இல்ஜனநாயகம் தோற்றமளிக்கிறது”.

இந்த மதிப்பிழந்து போன துரோகவயப்பட்ட ஆசாமிகளுக்குஇடதுநம்பகத்தன்மையை வழங்குவதும் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதுமான வேலையைத் தான் ISO செய்து கொண்டிருக்கிறது.

வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்களில் தொழிற்சங்கங்கள் தலையீடு செய்கின்றன என்றால் அதற்குக் காரணம் ஜனநாயகக் கட்சிக்கு வெளியிலும் மற்றும் தங்களது சொந்த மறைந்து கொண்டிருக்கிற கட்டமைப்புகளுக்கு வெளியிலும் ஒரு பரந்த மக்களின் இயக்கம் எழுந்து விடுமோ என்கிற அச்சம் தான்.

ஆர்ப்பாட்டங்களை வழிமொழிந்து AFL-CIO வெளியிடும் கட்டுரைகளில் ஜனநாயகக் கட்சி, ஒபாமா அல்லது முதலாளித்துவம் ஆகிய எந்தப் பெயரும் இருப்பதில்லை. AFL-CIO தலைவரான ரிச்சர்டு டுரம்கா கூறியதாக இருப்பதைப் பாருங்கள்: “வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் இயக்கம் நாட்டின் கொள்கை உருவாக்குநர்கள் தங்களுக்காகப் பேசுகிறார்கள் என்பதில் நம்பிக்கையிழந்து விட்ட மில்லியன்கணக்கான அமெரிக்கர்களின் மனதையும் உணர்வையும் பற்றியுள்ளது. வோல் ஸ்ட்ரீட்டைப் பொறுப்பாக்கி நல்ல வேலைகளை உருவாக்கச் செய்வதற்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் தீர்மானத்தில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்.”

இந்த அறிக்கை மூலம் ட்ரும்காவை எதற்கும் பொறுப்பாக்கி விட முடியாது. ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரை ஆதரிக்கும் தொழிற்சங்கக் கொள்கையுடனான ஒரு முறிவை எந்த வகையிலும் இது குறிக்கவில்லை. ”நல்ல வேலைகளை உருவாக்குவதற்காகப் போராடுவதுஎன்றால் சீனா மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பிற போட்டியாளர்களுக்கு எதிரான தேசிய மேலாதிக்க உணர்வை உசுப்பி விடுவது என்றும் மலிவினும் மலிவான ஊதியங்களைத் திணிப்பதன் மூலம் அந்தப் போட்டியாளர்களை வென்றால் அமெரிக்காவில் வேலைகள்நிலைத்து நிற்கும்என்றும் AFL-CIO பொருள்விளக்கம் தருகிறது.  

மோசடிப் பேர்வழிகள் மற்றும் ஆள்மாறாட்டப் பேர்வழிகளைத் தள்ளி ஒருவரின் உண்மையான நண்பர்களையும் கூட்டாளிகளையும் அடையாளம் காண்பது என்பது அரசியல் வாழ்வில் மிக முக்கியமான அன்றாடப் பணியாக இருக்கிறது. வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்ட இயக்கத்தின் புரட்சிகர சாத்தியம் கொண்ட இருதயத்தை வெட்டியெடுக்கும் நோக்கத்துடன் தான் நேஷன் மற்றும் ISO அதில் தலையீடு செய்கின்றன.