சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A day of international action against Wall Street

வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைத் தினம்

Patrick Martin
17 October 2011

use this version to print | Send feedback

நியூ யோர்க் நகரத்தில் வோல் ஸ்ட்ரீட் முற்றுகைக்கு அதரவு காட்டும் வகையில் உலகெங்கும் அழைப்புவிடுத்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முழுப் பொருளாதார அமைப்புமுறைக்கு எதிரான மக்கள் சீற்றத்தில் ஆழ்ந்துள்ள உணர்வுகளுக்கு குரல்கள் கொடுத்துள்ளன. நூறாயிரக்கணக்கான உழைக்கும் மக்கள் உலகெங்கிலுமுள்ள நகரங்களில் சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு பொது நிலைப்பாட்டிற்காக அணிவகுத்துச் சென்றனர்.

அமெரிக்காவானது ஈராக் மீது போர்தொடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக வெகுஜன சர்வதேச எதிர்ப்புக்கள் நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின் முற்றுகை இயக்கம் வெடித்துள்ளது. அந்நிகழ்வில் 20 மில்லியன் மக்கள் உலகெங்கிலுமுள்ள நாடுகளில் இருந்து தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் பெப்ருவரி-மார்ச் 2003ல் நடைபெற்ற எதிர்ப்புக்களைப் போல் மிகப் பெரியவை இல்லை என்றாலும், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் பரந்த அடுக்குகளிடையே அரசியல் நனவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் காட்டுகின்றன.

குறிப்பாக அமெரிக்காவில், உத்தியோகபூர்வக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்குப் வெளியேதான் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயகக் கட்சி மற்றும் AFL-CIO இரண்டும் இந்த முதலாளித்துவச்சார்பு அமைப்புக்களுக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் செயல்படும் பல மற்ற குழுக்களும் எதிர்ப்புக்களில் இணைந்து நிற்கின்றன; ஆனால் எதிர்ப்புக்களோ அவற்றின் அடிப்படைச் சார்பிலிருந்து வேறு திசையில்தான் சென்று கொண்டிருக்கின்றன.

முற்றுகை இயக்கத்தின் அடிப்படை உந்துதல் சமூக சமத்துவத்திற்கும் வர்க்க அடக்குமுறைக்கு எதிராகவும் உள்ளது. கைகளால் எழுதப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பதாகைகளில் முக்கிய கோஷங்கள் பெருநிறுவன அதிகாரம் மற்றும் சமத்துவமற்ற தன்மை ஆகியவற்றின் மீது குவிப்புக் காட்டுகின்றன. பொதுவாக நிலவும் உணர்வு பற்றி ஒரு கோஷம்இந்த அமைப்புமுறை உடைக்கப்படவில்லை; இது அவ்வாறுதான் தோன்றியது என மிகப் பொருத்தமாக சுருக்கிக் கூறியுள்ளது.

முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனக் கட்சிகளுக்கு ஏற்றம் கொடுக்கும் ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியை தடுப்பதற்கு  இனம், பால் அல்லது பால் சார்பு ஆகியவற்றின் மீது குவிப்புக் காட்டி  பல தசாப்தங்களாக பலவித அடையாள அரசியல் வகைகளுக்கு ஊக்கம் தரும் மத்தியதர வர்க்கஇடது அமைப்புக்களின் முயற்சிகளை வர்க்கத்தின் மையம் குறுக்கிட்டுள்ளது. அனைத்து உழைக்கும் மக்களும் ஒரே வறிய நிலைகளைத்தான் எதிர்கொண்டுள்ளனர் என்று பெருகிய முறையில் அறியப்பட்டுள்ளது.

மற்றொரு வகையிலும் ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிடத்தக்கவைஅவற்றின் சர்வதேசத் தன்மையில். ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிற நாடுகளில் நூறாயிரக்கணக்கான கோஷ அட்டைகைளில், “நாம் 99 சதவிகிதமாக உள்ளோம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்களின் உலகளாவிய தன்மையும் சர்வதேச ஒற்றுமையும் அடிப்படையில் முதலாளித்துவ நெருக்கடியின் உலகளாவிய தன்மையின் பிரதிபலிப்புத்தான். உலகமயமாக்குதல் உலகில் தொழிலாளர்களை ஒற்றைப் பொருளாதார முறையில் இதற்கு முன்பு இருந்ததைவிட மிக நெருக்கமாகப் பிணைத்து, ஒருங்கிணைத்துள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் வங்கிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் என்று உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் வடிவமைப்பைக் கொண்டுள்ள பொது விரோதியைத்தான் எதிர்கொள்கின்றனர்.

தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் சர்வதேசத் தன்மை வளர்ச்சியை அறிந்துகொண்டிருப்பது 2011 ம் ஆண்டின் அரசியல் பெருமிதச் சின்னம் ஆகும். இந்த ஆண்டு துனிசியா மற்றும் எகிப்தில் எழுச்சிகளுடன் தொடங்கியது; இவற்றில் மில்லியன் கணக்கான மக்கள் பல தசாப்தங்களாக அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த ஜைன் எல் அபிடைன் பென் அலி மற்றும் ஹொஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரங்களை வீழ்த்துவதற்குக் கிளர்ச்சி செய்தனர்.

முபாரக் அகற்றப்பட்ட சில நாட்களுக்குள், அமெரிக்க மாநிலமான விஸ்கோன்சினில் தொழிலாளர்கள் கவர்னர் ஸ்காட் வாக்கரின் வேலை தகர்ப்புக்கள், ஊதியங்கள், தொழில் உரிமைகள் அழிப்புக்கள் ஆகியவற்றிகு எதிராக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; பலரும் குடியரசுக் கட்சி ஆளுனரை முபாரக்குடன் ஒப்பிட்ட கோஷ அட்டைகளைச் சுமந்துஎகிப்தியர் போல் நடப்போம் என்ற தங்கள் உறுதியையும் பறைசாற்றினர்.

 

கோடைகாலம் முழுவதும் ஐரோப்பாவானது கிரேக்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், ஸ்பெயினில் Indiganados வறுமையில் வாடுபவர்கள் பொதுச் சதுக்கங்களை ஆக்கிரமித்தது, பிரிட்டனில் மிகவும் இழப்புக்களுக்கு உட்பட்டுள்ள பகுதிகளில் கலகங்கள், மற்றும் சிக்கன நடவடிக்கைகள், வேலைத் தகர்ப்புக்களுக்கு எதிரான பல வெளிப்பாடுகளினாலும் அதிர்வுற்றது. சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அதன் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை இஸ்ரேல் கண்டது; சிலியின் நூறாயிரக்கணக்கான இளைஞர்கள் பொதுக் கல்வி முறை மீதான தாக்குதலை எதிர்த்து தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த எதிர்ப்புக்கள் ஒன்றோடு ஒன்று இடைத்தொடர்பைக் கொண்டு ஒன்றின் மீது ஒன்று செல்வாக்கையும் கொண்டிருந்தன. குறிப்பாக அமெரிக்காவிற்குள் எதிர்ப்பின் வளர்ச்சி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விளைவைக் கொடுக்கும். உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம்தான் இராணுவவாதம், அடக்குமுறை, நிதிய ஒட்டுண்ணிமுறை ஆகியவற்றின் முக்கிய ஆதாரம் என்ற கருத்தாய்வு உள்ளது. நீண்ட காலமாக அமெரிக்கா எப்படியோ தொழிலாள வர்க்கத்தின் இலாபமுறைக்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் என்ற வரலாற்றுப் போராட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டது என்று சித்திரிக்கப்பட்ட நாடாக இருந்தது. உண்மையில், வேறு எந்த நாட்டிலும் வர்க்க மோதல் இவ்வளவு ஆழ்ந்த வேர்களைக் கொண்டிருக்கவில்லை.

வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்கள் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கின்றன. அரசாங்கமும் முதலாளித்துவ செய்தி ஊடகங்களும் இடையறாமல் நெருக்கடிக்குத் தங்கள் தீர்ப்பை முரசு கொட்டியுள்ளனர்: சமூகத்தை பொதுக் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு இன்னும் நலப் பணிகளை அழித்தல், வேலைகள், ஊதியங்கள், ஓயவூதியங்கள் ஆகியவற்றைத் தகர்த்தல்தான் தீர்வு என்று கூறும் வகையில்இவை அனைத்தும் உயர்மட்டத்தில் இருக்கும் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையின் செல்வத்தை நிலைநிறுத்திப் பெருக்குவதற்குத்தான்.

இப்பொழுது மற்றொரு தீர்வின் ஆரம்ப வெளிப்பாடு வந்துள்ளது; இப்பொழுது அது உட்குறிப்பாகத்தான் உலகளாவிய எதிர்ப்பு எனக் காட்டப்படுகிறது. இந்த வெளிப்பட்டுள்ள எதிர்ப்பின் முதலாளித்துவ சார்பிற்கு எதிர்ப்பு என்பது முழு உணர்வுடன் கூடிய சோசலிச இயக்கம் வளர்வதற்கு வளர்க்கப்பட வேண்டும்; அதையொட்டி நிதியப் பிரபுத்துவத்தின் சேமிக்கப்பட்டுள்ள செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; பொருளாதார வாழ்வு பொதுமக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் சீரமைக்கப்பட வேண்டும்; அது மக்கள் அனைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயக்கப்பட வேண்டுமே ஒழிய, தனியார் இலாபத்திற்காக அல்ல.

ஒரு பொதுப் போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கம் பெருவாரியாக அணிதிரட்டப்படுவதின் மூலம்தான் சோசலிச மாற்றம் கொண்டுவரப்பட முடியும். முற்றுகை ஆர்ப்பாட்டங்கள் இப்படி வரவுள்ளதை எதிர்பார்த்திருப்பது, இன்னும் சக்தி வாய்ந்த இயக்கத்தை எதிர்பார்த்து நிற்பது ஆகும்.

முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு என்பது மிக ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் என்னும் பெரிய பிரச்சினைகள் இன்னும் எழுப்பப்படவில்லை. ஒரு புதிய திட்டம் கட்டமைப்பதற்கு ஒரு புதிய அரசியல் கட்சி மற்றும் தலைமை கட்டமைக்கப்படுவது என்பது தேவையாகும்.

 

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளான உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கைத் தளமாகக் கொண்டு போராடிவருகிறது. இன்று அரசியல் போராட்டத்தில் நுழையும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை SEP யில் சேருமாறும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான இந்த முன்னோக்கிற்காகப் போராடுமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.