சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Occupy Wall Street enters second month amid global protests

உலகளாவிய ஆர்ப்பாட்டங்களை நோக்கி வோல் ஸ்ட்ரீட் ஆக்கிமிப்பு இரண்டாம் மாதத்தில் நுழைகிறது

By Bill Van Auken
18 October 2011

use this version to print | Send feedback

திங்களன்று வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமித்தல் என்னும் எதிர்ப்பு மான்ஹட்டனில் முதல் மாதம் முழுவதும் நடந்து முடிந்தது. இந்த நிறைவு நாள் உலகெங்கிலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற இரண்டு நாட்களில் வந்தன; ஒவ்வொரு நாட்டிலும் பெருகும் வெகுஜன வேலையின்மை, சரியும் வாழ்க்கைத் தரங்கள், முதலாளித்துவம் உலகம் முழுவதும் தோற்றுவித்துள்ள அப்பட்டமான சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிரான பெருகிய சீற்றத்தின் சக்தி வாய்ந்த அடையாளத்தை இந்த ஆர்ப்பாட்டங்கள் கொடுத்தன.

ஒரு மாத கால எதிர்ப்பு இயக்கம் உலகில் சமுக அளவில் பெரும் எதிர்முனைகளையுடைய மக்களைக் கொண்டுள்ள நகரங்களில் ஒன்றான நியூ யோர்க் நகரத்தின் மக்கள் மற்றும் ஆளும் உயரடுக்கு ஆகியவற்றிடம் இருந்து பெருத்த மாறுபட்ட விடையிறுப்புக்களை தூண்டியது.

திங்களன்று வெளியிடப்பட்ட Quinnipiac பல்கலைக்கழக கருத்துக் கணிப்பு நியூ யோர்க் நகரத்தில் பதிவு செய்துள்ள வாக்காளர்களில் மூன்றில் இரு பகுதியினர் வங்கிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு, அவர்களின் சமத்துவக் கோரிக்கைகள் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுப்பதாகக் குறிப்பைக் காட்டியுள்ளது.

கருத்துக் கணிப்பின்படி, கருத்துப் பதிவு செய்தவர்களில் 57 சதவிகிதத்தினர் தாங்கள் எதிர்ப்பாளர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளனர்; 23 வீதம்தான் அவற்றை எதிர்ப்பதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில் நியூ யோர்க் நகரவாசிகள் மிகப் பெரிய 87% ஆதரவு 10% எதிர்ப்பு என்ற முறையில் லிபர்ட்டி பிளாசாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து இருக்கும் உரிமைக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்தவுடன், நியூயோர்க் நகரத்தின் பில்லியனர் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் திங்களன்று Queens பகுதியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தைப் பயன்படுத்தி ஒரு மாத கால ஆக்கிரமிப்பை முறிப்பதற்கு பொலிஸ் படைகளைப் பயன்படுத்தக்கூடும் என்று அதிக மறைப்பு இல்லாத அச்சுறுத்தலை வெளியிட்டார்.

அரசியல் அமைப்பு, கூடாரங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று ப்ளூம்பெர்க் நிருபர்களிடம் கூறினார். “அது பேச்சு, கூடும் உரிமைகளுக்குத்தான் பாதுகாப்புக் கொடுக்கிறது.”

வோல் ஸ்ட்ரீட்டில் நீண்ட காலத் தொடர்பை ஒட்டிச் சொந்தச் சொத்துக்கள் $18 பில்லியன் மதிப்பு என்பதைச் சேர்த்துள்ள மேயர், தொடர்ந்து கூறியது: “ஒரே ஒரு கண்ணோட்டம் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலைமையை நாம் கொள்ள முடியாது. சில இடங்களில் நீங்கள் உங்கள் வெளிப்பாடுகளைக் கூறினால் பொருத்தம்தான் என நான் நினைக்கிறேன்; ஆனால் மற்ற இடங்கள்தான் கூடார நகரத்தை நிறுவ உரியவை. ஒரே இடத்தில் வெளிப்பாடுகளும் கூடார நகரங்களும் தேவையில்லை.”

நகரவையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூங்காவின் தனியார் பெருநிறுவன உரிமையாளரான Brookfield Office Properties உம் கடந்த வெள்ளியன்று இடம் சுத்தப்படுத்தவேண்டும் என்ற போலிக்காரணத்தை கூறி இப்பகுதியில் இருந்து மக்களை அகற்றும் திட்டத்தில் இருந்து பின் வாங்கினர். நகரவையின் இந்த தந்திரோபாய பின்வாங்கல் வெள்ளியன்று விடிவதற்கு முன்னரே எதிர்ப்பு இயக்கத்திற்கு பல ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டதுதான்.

நகரவையின் பூங்கா ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு பொலிஸ் பயன்படுத்தப்படும் என்று ப்ளூம்பெர்க் தெளிவாக்கியுள்ளார்; ஆனால் லிபர்ட்டி பிளாசாவின் பெருநிறுவன உரிமையாளர் பொலிஸ் நடவடிக்கை அங்கு தேவை எனக் கூற வேண்டும் என்றார்.

இது ஒன்றும் நகரவையின் பூங்கா அல்ல என்றார் அவர். “நகரவைப் பூங்காவில் நாம் சட்டங்களையும் விதிகளையும் கொண்டுள்ளோம். குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்திருக்கிறோம். அங்கு அவற்றைச் செயல்படுத்துகிறோம்; எவர் ஆக்கிரமித்தாலும், அவர்கள் நோக்கங்கள் எப்படி இருந்தாலும் சரி. ஆனால் இது ப்ரூக்பீல்டின் வசம் உள்ளது; அவர்கள்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும்.”

அரசியலமைப்பு முதல் திருத்த உரிமைகளை மதிப்பதாக மேயரின் முறையான அறிக்கைகள் கூறினாலும், நகரவையும் ப்ரூக்பீல்டும் ஒரு மாதம் நிறைந்துவிட்ட ஆர்ப்பாட்டத்தை நசுக்குவதற்குத் தீவிரத் தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

நியூ யோர்க் பொலிஸ் துறை கிட்டத்தட்ட 900 ஆர்ப்பாட்டக்காரர்களை செப்டம்பர் 17 அன்று எதிர்ப்புத் தொடங்கியதில் இருந்து கைது செய்துள்ளது; பலமுறையும் தீவிர வன்முறையையும் மிருகத்தனத்தையும் எதிர்ப்பு அணிவகுப்பின்போது பயன்டுத்தியுள்ளது; அவற்றிலோ 20,000 மக்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை அன்று குழுமினர். குதிரைப்படை பொலிசாரும் மக்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்; பொலிசார் 80 பேருக்கும் மேலானவர்களைக் கைது செய்தனர்.

மற்றும் ஒரு 700 பேர் அக்டோபர் 1ம் தேதி பொலிசார் அணிவகுத்தவர்கள் ப்ரூக்லின் பாலத்தில் பாதிக்கு மேல் சென்ற பின் அவர்களைச் சூழ்ந்து கைதுசெய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் உள்ள வக்கீல்கள் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் அவற்றில் பெரும்பாலனவை நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்ற ஆணைகள், கைதுகளை எதிர்த்தல், போக்குவரத்துக்களை மறித்தல், முகமூடி அணிதல் போன்ற சிறு குற்றங்களுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்ட குறிப்புக்கள் ஆகியவை கைவிடப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். இல்லாவிடில் அவர்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனைத்து வழக்குகளையும் எடுத்துச் செல்ல இருப்பதாக அச்சுறுத்தியுள்ளனர்.

நவம்பர் 15ம் தேதி வழக்குகளில் முதலாவது எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது; இதில் 60 ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிபதியின் முன் தோன்றவேண்டும்.

இதற்கிடையில் திங்களன்று வோல்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு ஊக்கம் கொடுத்துள்ள எதிர்ப்புக்கள் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் பல நகரங்களிலும் தொடர்ந்தன; இவை வார இறுதியில் நடந்த ஆர்ப்பாட்ங்கள் நூறாயிரக்கணக்கான மக்களைத் தெருக்களுக்கு கொண்டுவந்தபின் நடந்துள்ளது.

பல நகரங்களிலும் எதிர்ப்புக்கள் ஏராளமான கைதுகள் மற்றும் பொலிஸ் மிரட்டலையும் மீறித் தொடர்ந்தன. உதாரணமாக சிக்காகோவில் 175 பேர் ஞாயிறன்று அதிகாலையில் கிரான்ட் பார்க்கில் இரவில் 11 மணிக்குப் பின் கூடக்கூடாது என்ற உத்தரவை மீறியதற்குக் கைது செய்யப்பட்டனர். சிக்காகோ டிரிபூன் திங்களன்று ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் முன்னாள் வெள்ளை மாளிகை உயர்மட்ட அதிகாரி மேயர் ரஹ்ம் எமானுவல் உடைய நிர்வாகம் ஏராளமான கைதுகளை அடுத்த மே மாதம் மிகப் பெரிய அளிவில் நடக்க இருக்கும் அடக்குமுறைக்குஒத்திகை எனக் கருதியாதாகக் குறிப்பிட்டுள்ளது; அப்பொழுது நகரத்தில் G8 மற்றும் நேட்டோ உச்சிமாநாடுகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன.

அரிசோனா பினிக்ஸில் எதிர்ப்பாளர்கள் நகவரை சிறைக்குவங்கிகளுக்கு பிணை எடுப்புக் கொடுக்கப்பட்டுவிட்டது, எங்களுக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது என்று கோஷமிட்டு அணிவகுத்துச் சென்றனர். இது ஞாயிறன்று நகரத்தின் மையத்தில் இருக்கும் மார்கரெட் டி. ஹானஸ் பூங்காவை இரவு 10.30 மணிக்கு நீங்காததற்காக 45 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தது குறித்து எழுப்பப்பட்ட கோஷம் ஆகும்.

முன்னதாகச் சனிக்கிழமையன்றுஅரிசோனா எல்லைப் பாதுகாப்பு என குடியேறுவோர் எதிர்ப்பு வகையில் புதிய பாசிஸ்ட்டுக்கள் குழு ஒன்றிற்கு பாதுகாப்பு வளையம் ஒன்றைப் பொலிசார் கொடுத்தனர்; அவர்கள் ஆயிரக்கணக்கான வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான எதிர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பாசிஸ்ட்டுக்கள் தாக்கும் துப்பாக்கிகள் ஏந்தி போர்ச் சீருடையில் அணிவகுத்தனர்.

இதற்கிடையில் ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள், லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும் என்று தம்மை அழைத்துக் கொண்டு, லண்டனின் செயின்ட் பால் கதீட்ரலின் வெளியே உள்ள ஒரு சதுக்கத்தில் முகாமிட்டனர். ஞாயிறன்று திருச்சபை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முயற்சிக்கும் பொலிசார் நீங்க வேண்டும் என்று கோரினர்.

இன்னும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜேர்மனியில் பிராங்பேர்ட்டில் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு வெளியே 50 கூடாரங்களை நிறுவினர்; இவற்றில் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெதர்லாந்தில் எதிர்ப்பாளர்கள் ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தைக்கு வெளியே கிட்டத்தட்ட 40 கூடாரங்களை  அமைத்தனர்.

திங்களன்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் பிற இடங்களில் வெளிப்பட்டுள்ள நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு போலித்தன பரிவுணர்வைக் காட்டி அறிக்கைகளை வெளியிட்டனர்.

வணிகர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து வந்த செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பை, “இந்த இளைஞர்களுடைய வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கள் பற்றிய கவலைகள் முற்றிலும் நெறியானவையே. ஆனால் எங்கள் பொறுப்பு ஒரு நல்ல வருங்காலத்திற்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கு இந்த செல்வாக்கற்ற காலத்தைக் கடத்தல் என்று உள்ளது என்றார்.

வேறுவிதமாகக் கூறினால், “நெறியான கவலைகள் இருந்தபோதிலும்கூட, ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்குகள் வேலையின்மைக்கு உந்துதல் கொடுத்து தொழிலாளர்களின் சமூக உரிமைகளை அழிக்கும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளை தொடரும் என்பதாகும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தளத்தில் இருந்து வரும் வார இறுதி எதிர்ப்புக்களை பற்றிய அறிக்கைகளைப் பற்றிய தகவல்கள் WSWS இன்றும் தொடரும்.