சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Foreign Minister Westerwelle under fire for abstention in Libya war

ஜேர்மனி லிபியப் போரில் பங்கு கொள்ளாததற்காக வெளியுறவு மந்திரி வெஸ்டர்வெல்ல தாக்குதலுக்குள்ளாகின்றார்

By Peter Schwarz
30 August 2011

use this version to print | Send feedback

லிபியத் தலைநகர் திரிப்போலி நேட்டோ ஆதரவுடைய எழுச்சியாளர்களால் வெற்றிகொள்ளப்பட்டதை அடுத்து ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டெர்வெல்ல தீவிர தாக்குதலுக்கு உட்பட்டுள்ளார். ஜேர்மனி செய்தி ஊடகத்தினரும் அரசியல்வாதிகளும் அவருக்கு எதிராகக் கடுமையாகக் குறைகூறியுள்ளனர்; இதற்குக் காரணம் மத்தியதரைக்கடல் நாட்டு சூறையாடலில் ஜேர்மனி  பங்கு பெறவில்லை, வெற்றியின் கொள்ளைகள் பகிர்ந்துகொள்ளப்படும்போது ஜேர்மனி வெறுங்கையுடன் நிற்க வேண்டும் என்பதாகும்.

மார்ச் மாதம் ஜேர்மனி, பிரிக் நாடுகளுடன் (பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்குழுவின் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை; அத்தீர்மானம்தான் லிபியாவில் இராணுவக் குறுக்கீட்டிற்கு பச்சை விளக்கு காட்டியது, பின்னர் ஜேர்மனி போரில் பங்கு பெறவில்லை.

ஆறு மாத காலத்திற்கு நேட்டோ திட்டமிட்டபடி நாட்டின்மீது குண்டுத்தாக்குதலை நடத்தியது. மேலும் எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் அளித்து, விஷேட பயிற்சிபெற்ற தரைத் துருப்புக்களுடைய ஆதரவுடன் அவர்கள் திரிப்போலி செல்ல வழிவகையும் செய்தது. இது .நா.வின் தீர்மானத்தை தீவிரமாக மீறிய செயல் ஆகும்; அது ஒரு விமானம் பறக்கக்கூடாது பகுதியை நிறுவுதல், குடிமக்கள் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தல்இவற்றில் மட்டும் ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தது.

ஒரு கைப்பாவை அரசாங்கத்தை அதிகாரத்தில் நேட்டோ நிறுவியுள்ளது; அதில் கடாபி ஆட்சியில் முன்பிருந்த அதிகாரிகள், இஸ்லாமிய வாதிகள், பழங்குடிப் பிரதிநிதிகள் மற்றும் மேலை உளவுத்துறை முகவர்கள் ஆகியோர் உள்ளனர். கடாபி ஆட்சியில் இருந்து இது முக்கியமாக வேறுபடுவது இது இன்னும் அடிமை முறையில் மேற்கத்தைய எண்ணெய் நலன்கள், பெருவணிகங்களுக்கு தாழ்ந்து நிற்கும் என்ற உண்மையில்தான் உள்ளது. இந்த ஆட்சியும் அதற்கு முன்பு இருந்ததைப் போலவே அரசியல் எதிர்ப்பாளர்களை அடக்குவதில் இரக்கமற்று இருக்கும்; கடாபி ஆதரவாளர்கள் படுகொலைகள் பற்றிய விவரங்களை சர்வதேச செய்தி ஊடகங்களின் தகவல்கள் ஏராளமாகக் கொடுத்துள்ளன.

லிபியாவை நேட்டோ ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தது ஒன்றும் மனிதாபிமானக் காரணங்களுக்காக அல்ல. மாறாக பொருளாதார, புவி-அரசியல் காரணங்களுக்காகத்தான். இது நாட்டின் செழிப்புடைய எரிசக்தி இருப்புக்களுக்கு போர் செய்யும் நாடுகளுக்கு அணுகும் வாய்ப்பைக் கொடுத்து அவற்றின் வட ஆபிரிக்க, மத்திய கிழக்குச் செல்வாக்கை வலுப்படுத்தவும் உதவும். இது ஒரு காலனித்துவவகைக் குற்றம் ஆகும். முசோலினி அபிசீனியாவை வெற்றிகொண்டது அல்லது ஹிட்லர் சுடேட்டன்லாந்தை வெற்றி கொண்டது ஆகியவற்றிற்கு ஒப்பானது ஆகும். அந்த நேரத்திலும் செய்தி ஊடகம் எதியோப்பிய முடியரசுக் குடும்பத்தின் மனிதாபிமானமற்ற வன்முறை, சுடேட்டன் ஜேர்மானியர்கள் பிராக்கினால் அடக்கப்பட்டது ஆகியவற்றைப் பற்றி முதலைக்கண்ணீர் வடித்தன.

ஆனால் இம்முறை அத்தகைய காரணங்கள் ஜேர்மனியச் செய்தி ஊடகம் மற்றும் அரசியல்வாதிகளால் காலனித்துவமுறையின் மறு எழுச்சி பற்றிக் கூறப்படவில்லை. மாறாக இவர்கள் அனைவரும் ஜேர்மனி முதலில் இதில்  ஈடுபாடு கொள்ளாதது குறித்துத்தான் சீற்றம் கொண்டுள்ளனர்.

பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தில் கலந்து கொள்ளமால் இருந்தது குறித்து பரவலாக சில குறைகூறல்கள் இருந்தன. ஆனால் நேட்டோ கடாபி ஆட்சியை உறுதியாக அகற்றிவிடக்கூடும் என்பது தெளிவானவுடன்பல தொடக்க இடர்கள் இருந்தாலும்இக்குறைகூறல் மிகப் பெரிய அளவிற்கு உயர்ந்தன. சில விமர்சகர்கள் ஜேர்மனி வட ஆபிரிக்காவில் நிலைப்பாடு கொள்ளக்கூடிய இரண்டாம் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்று நினைக்கின்றனர்; முதல் வாய்ப்பு ரோம்மெல் இன் ஆபிரிக்க படைப்பிரிவினர் 1943ல் சரண்டைந்தபோது வந்திருந்தது.

இவ்வகையில் Süddeutsche Zeitung பத்திரிகையில் சனிக்கிழமை அன்று ஜேர்மனி பங்கு பெறாததிற்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த விலைஎன்ற தலைப்பில் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. இதில் .நா.தீர்மானம் பற்றிய ஜேர்மனிய அணுகுமுறை இந்த அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள வெளியுறவுக் கொள்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறப்பட்டுள்ளது.

இதை எழுதிய ஸ்டீபன் கோர்னிலியஸ் தன்னுடைய நோக்கங்களை மறைக்கவில்லை. இதன் விளைவாக ஜேர்மனிக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சேதத்தை அவர் வன்மையாகக் கண்டிக்கிறார். வாக்கெடுப்பில் பங்கு பெறாததற்காக ஜேர்மனி அதிக விலையை கொடுத்துள்ளது. லிபிய இடைக்கால தேசியக்குழு நம்முடன் வணிகம் செய்ய விருப்பம் காட்டவில்லை என்பதில் வியப்பு ஏதும் இல்லைஎன அவர் எழுதியுள்ளார். நேட்டோவில் முக்கிய கட்டுப்பாட்டுப் பதவிகளுக்கு உரிமை கோருவதையும் ஜேர்மனி கைவிட வேண்டியிருக்கும். ஞாயிறன்று முன்னாள் வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷ்ஷர் Der Spiegel இதழுக்கு கொடுத்த பேட்டியில் வெஸ்டெர்வெல்லவைத் தாக்கிப் பேசியுள்ளார். பசுமைவாத அரசியல்வாதி ஜேர்மனி .நா.பாதுகாப்புக்குழுத் தீர்மானத்தில் பங்கு பெறாதது குறித்து கூட்டாட்சிக் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து நிகழ்ந்துள்ள மிகப் பெரிய வெளியுறவுக் கொள்கை தவறு ஆகும்என்றார். இதையொட்டி ஜேர்மனியின் நிலை கணிசமாக சேதப்பட்டுள்ளதுஎன்றும் அவர் கூறினார்.

வெளியுறவு மந்திரியாக இருக்கும்போது பிஷ்ஷர் ஜேர்மனிய இராணுவம் முதன் முறையாக வெளிநாட்டுப் போர்ப்பணியில் (யூகோஸ்லாவியாவில்ஈடுபடுவதற்கு) பாடுபட்டார். ஆப்கானிஸ்தானில் ஜேர்மனி பங்கு பெறுவதற்கும் கணிசமான உட்கட்சி எதிர்ப்பை மீறிச்செயல்பட்டார். இப்பொழுது அவர் வெஸ்டர்வெல்ல ஜேர்மனியின் மேற்கத்தைய பங்காளிகளை பாதிக்கும் வகையில் ஒரு தனியான உலகக் கொள்கைகளைகளைகடைப்படிப்பதாகவும் புதிய மூலோபாயப் பங்காளித்தனத்தை நாட முற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பிஷ்ஷர் வெளிப்படையாக முன்னாள் சான்ஸ்லர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை CDU- சேர்ந்த ஹெல்முட் கோலைக் குறிப்பிடுகிறார்: அவர் Internationale Politk ஏட்டில் ஒரு கட்டுரையில் கூட்டாட்சி அரசாங்கம் சில ஆண்டுகளாக ஜேர்மனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படக்கூடிய ஒரு சக்தியாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், இருக்கும் நிலையில் தோற்றுவிட்டதுஎன்று எழுதியுள்ளார்.

சமூக ஜனநாயக் கட்சி SPD- தலைவர் சீக்மார் காப்பிரியேல் இதே பல்லவியில் சேர்ந்துகொண்டு வெஸ்டெர்வெல்லவின் லிபியாவை பொறுத்தவரையிலான நடவடிக்கை குழப்பமானது, கௌரவமற்றதுஎன்று விவரித்துள்ளார்.

தன்னுடைய கட்சியில் இருந்தும்கூட வெஸ்டெர்வெல்ல குறைகூறலை எதிர்கொண்டுள்ளார். கடந்த வார இறுதியில் நேட்டோவிற்காக தங்களை மிக அதிகம் எவர் தாழ்த்திக் கொள்ளுவர் என்பதற்கான போட்டியே இருந்தது.

எழுச்சியாளர்கள் திரிப்போலியை வெற்றி கொண்டது குறித்து வெஸ்டெர்வெல்ல வரவேற்று, நேட்டோவின் பங்கைக் குறித்து பாராட்டாமல் இருக்கையில், தாராவாத ஜனநாயக்கட்சி FDP- தலைவர் பிலிப் ரோஸ்லர் வெள்ளியன்று கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆழ்ந்த மதிப்பு மற்றும் நன்றியறிதலைநேட்டோ பங்காளிகளுக்கு, கொலைகார கடாபியின் பிரிவுகள் தங்கள் வழியில் செல்வதைத் தடுத்து நிறுத்தியதற்காகதெரிவித்துக் கொண்டார். சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU) பகிரங்கமாக நேட்டோவின் செயற்பாடுகளுக்குத் தன் ஆழ்ந்த மதிப்பைவெளிப்படுத்தினார்.

இத்தகைய கருத்துக்கள் பரந்த முறையில் வெளியுறவு மந்திரியை குறைகூறுவதாக விளக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் ரோஸ்லருடன் பல தொலைபேசி உரையாடல்கள், பதவியை விட்டு அவர் நீக்கப்படக்கூடும் என்ற பெருகிய வதந்திகளுக்கு இடையே, வெஸ்டர்வெல்ல இறுதியாக ஞாயிறன்று நேட்டோ முன் அடிபணிந்து நின்றார். Welt am Sonntag  பத்திரிகையில் ஞாயிறன்று வந்த கட்டுரை ஒன்றில் அவர் கூறியது: லிபியர்கள் கடாபி ஆட்சியை சர்வதேச இராணுவப் பணியின் உதவியுடன் அகற்றிவிட முடிந்தது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். நம் பங்காளிகள் செய்துள்ளதற்கு நாம் மதிப்பைக் காட்டுகிறோம்.

தாராவாத ஜனநாயக்கட்சி தலைமை எழுத்து மூலமாக வெஸ்டர்வெல்ல தவிர்க்கமுடியாமல் பதவி மாற்றப்படுவார்என்பது வதந்திதான் என்று தெரிவிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

ஆயினும்கூட அவர்ராஜிநாமா செய்யவேண்டும் என்ற அழைப்புக்கள் தொடர்கின்றன. திங்களன்று Spiegel Online வெஸ்டர்வெல்ல அதிகாரத்தில் இருப்பதற்கான தகுதியை நீண்டகாலம் முன்பே இழந்துவிட்டார் என்று கூறியது: அவருடைய ஆடம்பரமான, தன்னைத்தானே நேர்மையுடையவர் எனக் காட்டிக் கொள்ளும் குணம், மற்றும் வரலாற்று, அரசியல் பின்னணி இல்லாத தன்மைஆகியவை இதற்குக் காரணம் என்று கூறி அவர் உடனடியாகராஜிநாமா செய்யவேண்டும் என்றும் கோரியது.

ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் சங்கடம்

வெஸ்டெர்வெல்ல பற்றிய விவாதத்தில் செய்தி ஊடகம் முக்கியமாக அவருடைய குணநலன்களில் கவனத்தை செலுத்திக்காட்டி அதோடு தொடர்புபட்ட அரசியல் பிரச்சினைகளைப் பெரிதும் மறைத்துள்ளது. இதில் உள்ள பணயம் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் வருங்காலச் சார்பு பற்றியதாகும். .நா.பாதுகாப்புக் குழுத் தீர்மானத்தில் ஜேர்மனி பங்கு பெறாமல் இருந்ததற்குக் காரணம் நேட்டோவின் ஆக்கிரோஷம் பற்றிக் கொண்ட மன உளைச்சல் ஒன்றும் இல்லை; மாறாக சீனா, ரஷ்யா மற்ற பிற பிரிக் BRIC- நாடுகளை விரோதப்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற முயற்சிதான்.

குறிப்பாக ரஷ்யாவும் சீனாவும் லிபியாவுடன் ஆழ்ந்த பொருளாதார உறவுகளைக் கொண்டிருந்தன. இந்த உறவுகள் போரினாலும் கடாபி அகற்றப்பட்டுவிட்டதாலும், பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுவிட்டன. நேட்டோ தாக்குதல்கள் தொடங்கியபோது 36,000 சீனத் தொழிலாளர்கள் லிபியாவில் இருந்து தப்பியோடினர். பெரும்பாலான சீனர்கள் பெரிய கட்டுமானத்திட்டங்களில் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

ரஷ்ய ஆயுதம் வழங்கும் நிறுவனமான Rosoboronexport தான் கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆயுத உடன்பாடுகளில் லிபியாவிற்கு எதிரான போரினால் இழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது. லிபிய எண்ணெய்த்துறையிலும் ரஷ்யா தீவிரமாக இருந்தது, லிபியாவுடன் நீண்டகாலமாக இராணுவ ஒத்துழைப்பை கொண்டிருந்தது. புதிய ஆட்சி இந்த உறவுகளைப் புதுப்பிப்பது சந்தேகம்தான்.

தங்கள் பங்கிற்கு ரஷ்யாவும் சீனாவும் நேட்டோ சக்திகளுடன் லிபியப் போர் குறித்து வெளிப்படையான அரசியில் மோதல் என்ற இடருக்கு உட்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இரு நாடுகளும் பாதுகாப்புக் குழுவில் தங்களுக்கு இருந்த தடுப்பதிகாரத்தை பயன்படுத்தவில்லை; இதையொட்டி அவர்கள் வாக்கெடுப்பில் பங்கு பெறாததால் லிபியத் தீர்மானம் ஏற்கப்பட்டது.

இதன்பின் சீனா இரு முகாம்களிலும் தொடர்பு கொள்ள முற்பட்டது. ஜூன் மாதம் கடாபியின் வெளியுறவு மந்திரி உபைடியும் இடைக்கால தேசியக் குழுவின் ஒரு வெளியுறவுக் கொள்கைச் செய்தித்தொடர்பாளரான மஹ்முத் ஜிப்ரிலும் பெய்ஜிங்கிற்கு வரவேற்கப்பட்டிருந்தனர். போரைப் பற்றித் தகவல் கொடுப்பதில் சீனச் செய்தி ஊடகம் மேற்கு நாடுகளின் எண்ணெய் நலன்கள்தான் நேட்டோ தலையீட்டிற்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்தின.

ரஷ்ய மக்களில் பெரும்பாலானவர்களும் போரை நிராகரித்துள்ளனர். மார்ச் மாதம் 78% மக்கள் நேட்டோ லிபியா மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதை எதிர்த்தனர். வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் நேட்டோ .நா.தீர்மானத்தை மீறுகிறது என்று குற்றம் சாட்டினார். பிரதம மந்திரி புட்டின் இன்னும் வெளிப்படையாக நேட்டோ ஒரு சிலுவையுத்தத்தைநடத்துகிறது என்றார்.

ஆனால், மே மாதம் Deauville ல் நடைபெற்ற G8 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் நேட்டோ நடவடிக்கையை ஏற்கும் வகையில் கடாபி ஆட்சி லிபியாவில் தோற்றால் ரஷ்ய நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நிலைப்பாடு எடுத்தார்.

ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி வெஸ்டெர்வெல்ல தன்மீது குறைகூறுபவர்களுடன் வெளிப்படையான மோதலைத் தவிர்த்துள்ளார். ஏற்கனவே செயலற்று இருக்கும் ஆளும் கூட்டணியை இன்னும் வலுவற்றதாக ஆக்க அவர் விரும்பவில்லை. ஆனால் பல அறிக்கைகளில் அவர் முக்கிய பிரச்சினை பிரிக் BRIC- நாடுகளுடன் மூலோபாயச் சார்பு என்பதுதான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த வார நடப்பகுதியில் அவர் ஜேர்மனிய தொலைக்காட்சியில் எது முக்கியம் என்பது பழைய பங்காளித்தனத்தை பாதுகாப்பது மட்டும் என இல்லாமல் இருக்கும் நட்புகளை ஆழப்படுத்துவதும் ஆகும் என்றார். 21ம் நூற்றாண்டு உலகில், உலகின் புதிய அதிகார மையங்களை தீவிரமாகக் கணக்கில் எடுத்துக் கொள்வதும் புதிய மூலோபாய பங்காளித்தனத்தை கட்டமைப்பதும் முக்கியம்என்றார். இதுதான் புதிய சகாப்தத்தை இலகுவாக அறிந்துகொள்ளலாகும்

Welt am Sonntag க்கு தன்னுடைய நீண்ட வேலைத்திட்டம் பற்றிய அறிக்கையில் வெஸ்டெர்வெல்ல இந்த புதிய அதிகார மையங்கள்ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக்குக் கொண்டுள்ள முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் ஆகியவற்றைத் தவிர, தென் ஆபிரிக்கா, வியட்நாம், மெக்சிகோ, கொலம்பியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ மற்றும் ஐரோப்பாவிற்கு தான் கொண்டுள்ள உறுதிப்பாடு “ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் அஸ்திவாரமாக இருக்கும்” என்று வெஸ்டெர்வெல்ல அறிவித்தார். “ஐரோப்பாவின் வருங்காலம் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைக்கு முக்கிய பிரச்சினை ஆகும்” என்றார் அவர். இதன்பின் தன் கருத்துக்களை ஒப்புமைப்படுத்தும் வகையில் இந்த உறவுகளை நிதியக் கட்டுப்பாடு, வரவு செலவுத்திட்ட ஒருங்கிணைப்பு, போட்டித் தன்மைக்கு வலுவூட்டுதல்” இவற்றுடன் பிணைத்தார்.

சில கடன்பட்டுள்ள நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று கூறத் தயங்குபவர்கள் குறித்து அவர் கூறினார்: உத்வேகத்துடன் செயல்படமுடியாதவர்கள் மற்றவர்களின் வேகத்தை நிறுத்தக்கூடாது.

உலகின் புதிய அதிகாரமையங்களுடன் மூலோபாய பங்காளித்தனத்தை கட்டமைக்கதான் கூடுதல் கவனம் கொடுப்பதாக அவர் கூறினார்.

நம் ஏற்றுமதிகள் அவ்விடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்தால் இந்நாடுகள் கணிசமாக அரசியல் சக்தியை கொண்டுள்ளன. அது இல்லாமல் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்த அல்லது உலகப் பிரச்சினைகள் பற்றிய தீர்வுகளுக்கு உடன்பட முடியாது.என்று அவர் எழுதியுள்ளார்.

வெஸ்டெர்வெல்ல பற்றிய விவாதம் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் சங்கடத்தை பிரதிபலிக்கிறது. இந்த விவாதம் வெஸ்டெர்வெல்ல தன் பதவியில் நீடித்தாலும், நீடிக்காவிட்டாலும் தொடரும்.

ஐரோப்பிய ஒன்றிய நெருக்கடி, அமெரிக்காவின் சரிவு என்று உள்ள நிலையில், ஜேர்மனியப் பொருளாதாரம் புதிய சந்தைகளையும் முதலீட்டு வாய்ப்புக்களையும் புதிய அதிகார மையங்களில்காண முற்படுகிறது. இந்த வெளியுறவுக் கொள்கை ஜேர்மனியை தங்கள் சொந்த உலக நலன்களைத்தான் ஆக்கிரோஷமாக தொடர்கின்ற அதன் மரபார்ந்த ஐரோப்பிய, அமெரிக்க நட்புநாடுகளுடன் மோதலை ஏற்படுத்துகிறது.

பசுமைவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஆளும் கட்சிகளில் பெரும்பாலானவை நேட்டோவிற்கு லிபியாவில் அது கொண்ட வெற்றியை ஒட்டிக் குவித்துள்ள பாராட்டுகள் பற்றி சிந்தனைக்கு இடம் கொடுக்க வேண்டும். அவர்களுடைய பாராட்டும், ஆர்வமும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அமெரிக்க அரசாங்கங்கள்மீது இயக்கப்படவில்லை. அவை தங்களுக்கு சாதகமாக இராணுவ வெற்றியை பயன்படுத்த அனைத்தையும் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. மாறாக அவர்களுடைய நன்மதிப்பு நேட்டோ சக்திகள் பயன்படுத்திய மிருகத்தன, சட்டவிரோத, ஆபத்தான வழிவகைகளுக்காகத்தான் உள்ளன. இதை ஒரு உதாரணமாக ஜேர்மனி எடுத்துக் கொண்டு தன் சொந்த ஏகாதிபத்திய நலன்களை வருங்காலத்தில் முன்னேற்றுவிக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கருதுகின்றனர்.