சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Berlin election: SEP holds rally to demand affordable housing

பேர்லின் தேர்தல் சோசலிச சமத்துவக் கட்சி நியாயமான வீட்டு வாடகைக்காக அணிவகுப்பை நடத்துகிறது

By our correspondents
7 September 2011

use this version to print | Send feedback

செப்டம்பர் 3ம் திகதி சோசலிச சமத்துவக் கட்சி (Pareti fur Soziale Gleichheit PSG) பேர்லின் மாநில தற்போதைய தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அதன் மூன்றாம் அணிவகுப்பை நடத்தியது. பேர்லினில் தொழிலாள வர்க்கப் பகுதியான Neukölln இல் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் நகரத்தின் வீட்டுக் கொள்கைப் பிரச்சினை குறித்து முக்கியத்துவம் காட்டியது. அணிவகுப்பை தொடர்ந்து வாடகை அதிகரிப்புக்கள், வீடுகள் தனியார்மயமாக்கப்படல் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்தொகுதியின் ஊடாக சோசலிச சமத்துவக் கட்சி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியது.

பலவேறுபட்ட வாடகைக்கு குடியிருப்போரின் சங்கங்களும், குடியிருப்பாளர்  குழுக்களும் அன்றே வேறொரு ஆர்ப்பாட்டத்திற்கு மக்களைத் திரட்டின. ஆனால் இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சியில்அரசியல் கட்சிகள் ஏதும் தொடர்பு கொள்ளக்கூடாது, அதுதான் மிகவும் உயர்ந்துள்ள வாடக்கைக்கு எதிரானமிகப் பரந்த முன்னணியை நிறுவும்என வாதிட்டிருந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த வாதத்தை ஒரு அரசியல் மோசடி மற்றும் அரசியல் தணிக்கை என்றும் இவ் அப்பட்டமான செயலைக் கண்டித்து தன்னுடைய சொந்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. “வாடகை நிறுத்து” (“Rent-Stop”) நிகழ்வின் அமைப்பாளர்களில் தொழிற்சங்கவாதிகளும், இடது கட்சி, பசுமைவாதிகள், சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் முன்னாள் இடது தீவிரவாதிகள் ஆகியோர் அடங்கியிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் கட்சி உறுப்புத்தன்மையை குறைக்கும் வகையிலும், மறைப்பதற்கும் நல்ல காரணங்களைக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளில் சமூக ஜனநாயக் கட்சி-இடது கட்சி செனட் அறிமுகப்படுத்திய தண்டனை போன்ற சிக்கன நடவடிக்கைகளில் தாங்கள் கொண்டிருந்த பங்கை மறைக்க முற்பட்டனர்.

கடந்த தசாப்தத்தில் இடது கட்சி குறிப்பாக வீட்டு குடியிருப்புகள் மற்றும் அரசாங்கம் நடத்தும் எரிசக்தி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதில் தீவிர பங்கைக் கொண்டிருந்தது. இதன் விளைவு குடியிருப்போருக்கு வீட்டுவாடகைச் செலவுகளில் பெரிதும் அதிகரித்துவிட்டது ஆகும். செனட்டின்கீழ் வீடுகளை வாடகைக்கு பெறுவது என்பது பொதுநல நலன்கள் பெறுவோருக்கு பெருகிய முறையில் கடினமாகிவிட்டது; நலன்கள் பெறுவோர் பலரும் தங்கள் வீடுகளைக் காலி செய்து மலிவு வாடகை இருப்பிடங்களை நாட நேர்ந்துள்ளது.

கட்சிகள் மீது தடை என்பது செனட்டின் கொள்கைகளுக்கு ஆர்ப்பாட்டத்தை அமைக்கும் குழுக்கள் தொடர்பின் அரசியல் பொறுப்பை மறைப்பதற்குத்தான் பயன்பட்டது. இதன் நோக்கம் அரசியலில் அதிகம் அனுபவம் இல்லாதவர்களுக்குதெருக்களில் இருந்து வரும் அழுத்தங்கள் மூலம்செனட்டை இடது பக்கம் தள்ளலாம் என்னும் நப்பாசையை ஊக்குவிப்பது ஆகும். உண்மையில் சமூக ஜனநாயக் கட்சி-இடது செனட் ஆட்சியின் முக்கிய படிப்பினைகளில் ஒன்று இந்த முன்னோக்கின் துல்லியமான திவால்தன்மைதான். மேலும் தங்கள் உரிமைகளைக் காப்பதற்குத் தொழிலாளர்கள் ஒரு புதிய, சுயாதீனமான கட்சியைக் கட்டமைக்கும் தேவையைக் கொண்டுள்ளனர் என்பதும் ஆகும்.

இக்காரணங்களுக்காக சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய அணிவகுப்பையே நடத்தியது. அணிவகுப்பு தொடங்குவதற்கு முன், பேர்லின் அதிகாரிகள் தங்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபடுவபவர்கள் Neukölln நகரவைக்கு முன் புத்தக மேசையை வைக்கக் கூடாது என வலியுறுத்தினர். தடை குறித்து அற்ப வாதங்களை முன்வைத்த அதிகாரி ஒரு சில நிமிடங்களுக்கு முன் தொகுதி மேயரான புஸ்கோவிஸ்கி இடம் இருந்து அவர் பெற்ற தொலைபேசி அழைப்புமுற்றிலும் தற்செயல் நிகழ்வுஎன்று வலியுறுத்திப் பேசினார்.

இத்தகைய தடைகளையும் மீறி, சோசலிச சமத்துவக் கட்சி அதன் அணிவகுப்பு, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தியது. முதல் பேச்சாளர் ஜோகானஸ் ஷொட் வாடகை அதிகரிப்புக்கள், பொதுநலச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிரான எதிர்ப்புக்கள் ஒரு பெரிய சர்வதேசப் போக்கின் பகுதி என்று சுட்டிக் காட்டினார். துனிசியா மற்றும் எகிப்தில் நடந்த புரட்சிகள், அமெரிக்காவில் வெகுஜன வேலை நிறுத்தங்கள், கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியவற்றில் நடந்த எதிர்ப்புக்கள், இஸ்ரேலில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிரிட்டனில் இளைஞர்களின் எழுச்சி ஆகியவை அவர் இதன் தொடர்பாக நினைவு கூர்ந்தார்.

இப்போக்கின் பின்னணி 1930களுக்குப் பின் முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள மிக ஆழ்ந்த நெருக்கடியாகும். உலகம் முழுவதும் ஆளும் வர்க்கம் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் வென்றுள்ள வரலாற்று வெற்றிகள் அனைத்தும் பறித்துவிடும் வகையில் பிரச்சாரத்தை நடத்தியது.

முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாக்கும் அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் அவை பெயரளவிற்கு இடது அல்லது வலதுசாரி என்று எப்படி இருந்தாலும்கூட இச்சமூகத் தாக்குதல்களை செயல்படுத்த நெருக்கமாக ஒன்றாக உழைத்தன. இவர்கள் அனைவரும் ஒரு சிறிய, செல்வந்தர் உயரடுக்கிற்காக அரசியல் ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

இதைப் பொறுத்தவரை, பேர்லின் மிகச் சிறந்த உதாரணம் ஆகும். இடது கட்சி-சமூக ஜனநாயக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செனட்டின் கொள்கைகள் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு சமூகப் பேரழிவைத் தொடக்கியுள்ளன. இதில் தொழிலாள வர்க்க மக்களிடம் இருந்து பெரும் செல்வந்தர்களுக்குச் செல்வம் மாபெரும் முறையில் மறுபங்கீடு செய்யப்படுகிறது.

முக்கிய தொழிற்சங்கங்களான பொதுத்துறைப்பிரிவு வேர்டி -Verdi- தொழிற்சங்கம் போன்றவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புடன் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. முக்கியமாக இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயக் கட்சியின் உறுப்பினர்களை தலைவர்களாகக் கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் முறையாக பேர்லினில் ஒவ்வொரு வேலைநிறுத்தத்தையும்  நாசப்படுத்தி செனட்டிற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தைத் தடுத்தன. இந்த மே மாதம்தான் வேர்டி பேர்லின் Charité மருத்துவமனையின் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்தது.

அதேதினம் நடைபெற்றவாடகை-நிறுத்துஆர்ப்பாட்டத்தின் அரசியல் உள்ளடக்கம் பற்றியும் ஷொட் சுட்டிக்காட்டினார். ஒரு புதிய கட்சிக்கான தேவை பற்றிய விவாதத்தைத் தடுப்பதற்கு அமைப்பாளர்கள் மிகவும் முயன்றனர். “எந்த அரசியல் கட்சியும் கூடாதுஎன்னும் நிலைப்பாடு ஜனநாயகத்திற்கு முரணானது என்பது மட்டும் இல்லாமல், அதில் ஒரு தெளிவான அரசியல் இலக்கும் இருந்தது; அதாவது, செனட்டைக் காப்பாற்றுதல், உணர்மையுடனான அரசியல் எதிர்ப்பு வெளிப்படுவதைத் தடுத்தல் என்பதாகும்.  

வாடகை-நிறுத்து ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தவர்களைப் பற்றிய காட்சி இடது கட்சி, சமூக ஜனநாயக் கட்சி ஆகியவற்றின் அரசியல்வாதிகள், வெட்டுக்கள் வாடகை அதிகரிப்புக்கள் ஆகியவற்றிற்கு நேரடிப் பொறுப்பு கொண்ட தொழிற்சங்கங்கள் ஆகியோரின் நீண்ட பட்டியலை வெளிப்படுத்தியது. இவர்கள் பகிரங்கமாக தோன்றுவதை விரும்புவதில்லை, மாறாக தங்களை பல அமைப்புக்கள், முன்னெடுப்புக்கள் ஆகியவற்றில் அங்கத்தவர்களாக மறைந்து கொள்கின்றனர்.

தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சித் தலைவர் உல்ரிச் ரிப்பேர்ட் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் பேர்லின் தேர்தலில் பங்கு பெறும் பிற அமைப்புக்களுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளை எடுத்துக் காட்டினார். “மற்ற கட்சிகள் அனைத்திற்கும் முற்றிலும் எதிரான வகையில், நாங்கள் வங்கிகளின் சர்வாதிகாரத்தை ஏற்கவில்லை. எந்தவொரு தனி சமூகப் பிரச்சினைகூட வங்கிகளின் அதிகாரத்தை முறிக்காமல் தீர்க்கப்பட முடியாது.”

தற்போதைய பொருளாதார நெருக்கடி ஆகாயத்தில் இருந்து ஒன்றும் குதித்துவிடவில்லை. உலகம் முழுவதும் வங்கிகளை மீட்பதற்குக் கொடுக்கப்பட்ட பில்லியன்கள், அரசாங்க வரவு செலவுத்திட்டங்களில் பெரும் பற்றாக்குறைகளை ஏற்படுத்திவிட்டன. இப்பற்றாக்குறைகள் இப்பொழுது மாபெரும் வெட்டுத் திட்டங்கள் மூலம் தீர்க்கப்படுவதற்கு முயற்சிக்கப்படுகின்றன.

சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைக்கு அதிகமாக வசதியாக வாழ்கிறார்கள் என்னும் பில்லியனர்களின் கூற்றுடைய பொருள் பள்ளிகள், நூலகங்கள், தினப் பாதுகாப்பு மையங்கள், நீச்சல் தடாகங்கள் ஆகியவை மூடப்பட்டுவிடுவதற்கு இட்டுச்சென்றுள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டன. இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்துகையில், நிதிய உயரடுக்கின் திமிர்த்தனம் முதலாளித்துவ அரசியல் வாதிகளின் கோழைத்தனம், ஊழல் ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கும் வகையில்தான் இருந்தன.

நிதிய நெருக்கடிக்கு பொறுப்பான அனைத்து வங்கியாளர்களும் அரசியல்வாதிகளும் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்னும் சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கையை ரிப்பேர்ட் மீண்டும் வலியுறுத்தினார். உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு வெறும் எதிர்ப்பு நடவடிக்கைகளை போதா என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நிதிய உயரடுக்கு ஜனநாயக உரிமைகளைத் தகர்த்து, தன் சொந்த நலன்களை உறுதிப்படுத்த சர்வாதிகார நடவடிக்கைகளை எடுக்கும் உறுதியைக் கண்டுள்ளது.

ஆளும் வர்க்கத்தின் ஆக்கிரோஷம் ஆப்கானிஸ்தானத்திலும் லிபியாவிலும் நிரூபணம் ஆகியுள்ளது. “அதே போன்ற போர் நடவடிக்கைகளை, லிபியாவில் நடத்தியது போல், இங்கும் பயன்படுத்த அவர்கள் தயாராக உள்ளனர்.” என்று ரிப்பேர்ட் எச்சரித்தார். ஜேர்மனியின் பாரிய வர்க்கப் போராட்டங்கள் வரவிருக்கின்றன என்றும் வலியுறுத்தினார். அத்தகைய வெகுஜன எழுச்சி தவிர்க்க முடியாதது என்பது மட்டுமின்றி, இருக்கும் இலாப முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாகத் தேவைப்படுகிறது என்றும் கூறினார். “நூறாயிரக்கணக்கான மக்கள் அரசியலில் தலையிடுவது ஒன்றுதான் உண்மையில் எதையும் மாற்றும்.”

 இவ்வகையில், வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெறுவது தேவை என்று ரிப்பேர்ட் கூறினார். அத்தகைய வெகுஜன எதிர்ப்பு அதிகாரத்தை எடுத்துக் கொண்டு ஒரு தொழிலாள வர்க்க அரசாங்கத்தை நிறுவுதல் வேண்டும். அந்த அரசாங்கம் இலாப உந்துதல்களுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் நலன்களையும் தேவைகளையும் முன்வைத்து நிறுவப்பட வேண்டும். இதற்கு புரட்சிகர வேலைத்திட்டம் கொண்ட ஒரு கட்சி தேவைப்படுகிறது. 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சி என நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி இத்தகைய கட்சிதான்.

கூட்டத்தினர் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைப்பதில் பங்கு பெற வேண்டும், செப்டம்பர் 18 தேர்தல் அன்று வங்கிகளின் சர்வாதிகாரத்திற்கு எதிரான தெளிவான வாக்கைப் போட வேண்டும் என்றும் ரிப்பேர்ட் ஊக்கமளித்தார்.

Rippert
அணிவகுப்பில் சோசலிச சமத்துவக்கட்சித் தலைவர் உல்ரிச்  ரிப்பேர்ட்

இதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர் அமைப்பின் –ISSE- பிரதிநிதிகள் வழிநடத்தினர். பிரச்சாரத்தின் முக்கிய கருத்து அடங்கிய பதாகையைச் சுமந்து சென்றனர்: “ஒரு சர்வதேச புரட்சிகரக் கட்சியை கட்டமைக்கவும்.” பிற பங்கு பெற்றவர்கள், இனவெறி, போர் இவற்றிற்கு எதிரான அடையாள கோஷங்களை ஏந்திச் சென்றனர். மற்றொரு பதாகையில்ஒரு தேசிய பாதையோ, யூரோப்பத்திரங்களோ பயனில்லை: வங்கிகளை தேசியமயமாக்கு.” என்று எழுதப்பட்டு இருந்தது.

வாடகை நிறுத்து ஆர்ப்பாட்டத்திற்காக எதிர்ப்பாளர்கள் கூடியிருந்த இடமான Hermannplatz க்கு  சோசலிச சமத்துவக் கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர். அணிவகுப்பின் அமைப்பாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சி பேச்சாளர்கள் ஆர்ப்பாட்டத்தினருக்கு உரையாற்றுவதை தடுக்கும் வகையில் உரத்த இசையை முழக்கி சோசலிச மாற்றீட்டிற்குத் தங்கள் விரோதப் போக்கை மீண்டும் காட்டினர்.

இடது கட்சிக்கு வாக்களி என்னும் துண்டுப்பிரசுரங்கள் வாடகை நிறுத்து நிகழ்வின் முடிவில் வழங்கப்பட்டன. இதுஅரசியல் கட்சிகள் கூடாது என்ற அமைப்பாளர்களின் நிலைப்பாட்டிற்கு தெளிவான மீறல் ஆகும். இடது கட்சிக்குள் செயல்படும் மற்றும் பேர்லின் தேர்தல் பிரச்சாரத்தில் அதற்கு ஆதரவை கொடுக்கும் சோசலிச மாற்றீட்டு வோரன் குழுவிற்கு (SAV) உத்தியோகபூர்வ தடை இருந்தும்கூட தன் தகவல் மேசையை வாடகை நிறுத்து அணிவகுப்பில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதிகள் இக்கேலிக்கூத்தை எதிர்த்தும் அரசியல் தணிக்கை முயற்சியை எதிர்த்தும் தம் அறிக்கையை விநியோகித்து, சமூக ஜனநாயக் கட்சி-இடது கட்சி செனட்டிற்கு சவால் விடும் ஓர் அரசியல் மாற்றிட்டைக் கட்டமைப்பதற்கு அழைப்பு விடுத்தனர்.