சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel makes military preparations for UN vote on Palestinian state

பாலஸ்தீனிய அரசு குறித்த ஐ தொடர்பாக இஸ்ரேல் இராணுவத் தயாரிப்புக்களை மேற்கொள்கிறது

By Danny Richardson
September 2011

use this version to print | Send feedback

செவ்வாய் மாலை, துப்பாக்கிச் சண்டைப் பறிமாற்றம் மற்றும் காசாப் பகுதியில் வெடிமருந்துச் சேமிப்புக் கிடங்கின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளானது மக்கள் எதிர்ப்புக் குழுக்களின் இராணுவப் பிரிவு தளபதி ஒருவரைக் கொன்றன. IDF ன் தாக்குதல் காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள தாக்குதல்களில் ஒரு சமீபத்திய நிகழ்வுதான்; இஸ்ரேல் முழுமையான இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு தயாரிப்புக்களைக் கொண்டிருக்கக்கூடும்.

மேற்குக்கரையில் குடியேறியுள்ளவர்களுக்குபாதுகாப்புக் குழுவினர் என IDF பயிற்சி அளிப்பதுடன் அவர்களுக்கு ஸ்டென் கிரனேடுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் கருவிகளை இம்மாதம் பகுதியில் ஐ.நா. பொதுத் தேர்தலில் பாலஸ்தீனிய அரசு அந்தஸ்திற்குஆம் என்று உடன்படும் எதிர்பார்க்கப்படும் வாக்களிப்பிற்கு முன்னதாக அளித்துள்ளது.

மே மாதம் இஸ்ரேலிய அரசு நிறுவப்பட்டதின் ஆண்டு நிறைவைபாலஸ்தீனியர்களால்நக்பா அல்லது பேரழிவு என அழைக்கப்படுவது-- தொடர்பாக எழுந்த பாலஸ்தீனிய வெகுஜன எதிர்ப்பு வெடிப்பின் திறனுக்குத் தயாரிப்பு என்ற முறையில் குடியேறியவர்களுக்குப் பயிற்சியையும், ஆயுதங்களையும் கொடுப்பதாக IDF கூறியுள்ளது; மேலும் ஜூன் மாதத்தில் 1967 போரின் ஆண்டு நிறைவையொட்டியும் அவ்வாறு நடைபெற்றது. உண்மையில் இதன் நடவடிக்கைகள் ஒரு இராணுவ மோதலைத் தூண்டுவது போல் உள்ளன.

பாலஸ்தீனிய அதிகாரத்தின் (PA) ஜனாதிபதி மஹ்மூத் அப்பஸ் இவருடைய ஃபத்தா இயக்கம்தான் மேற்குக்கரையை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஒத்துழைத்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது கடந்த  ஆண்டு தான் ஐ.நா.வை அணுகி பாலஸ்தீனத்திற்கு ஒரு அரசு அந்தஸ்தைக் கோர உள்ளதாக அறிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக இந்த நடவடிக்கை இல்லை என்று அவர் வலியுறுத்தினார்; மாறாக அவற்றைத் தவிர நடத்தப்படும் முயற்சி என்றார். .நா. வாக்கு இஸ்ரேலை அங்கீகரித்தாலும், அவர் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளுக்குட்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து நாட உள்ளார் என்று அவர் கூறினார்.

எமது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் முன்னுரிமை பேச்சுவார்த்தைகள்தான் என்று திங்களன்று அவர் கூறினார். “இதைத் தீர்ப்பதற்கு வேறு வழி ஏதும் இல்லை. .நா.வில் என்ன நடந்தாலும், நாம் பேச்சுக்களுக்குத்தான் திரும்ப வேண்டும்.”

இஸ்ரேலியப் பிரதம மந்திரி பென்யமின் நேடன்யாகு இத்தகைய சமரச அறிக்கைகளை நிராகரிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு அந்தஸ்திற்கு முயல்வதுஅமைதிக்கு ஊறு விளைவிக்கலாம், பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துவிடலாம் என்று கூறினார்.

PA உடன் உடன்பாட்டைப் பேச்சுமூலம் காணும் விருப்பம் நேடன்யாகுவிற்குக் கிடையாது. மேற்குக்கரையில் மிகப் பெரிய குடியிருப்புக்களில் ஒன்றான Ariel ல் 300 புதிய வீட்டுத் தொகுப்புக்களைக் கட்டும் திட்டத்திற்கு இஸ்ரேல் இப்பொழுதுதான் ஒப்புதல் கொடுத்துள்ளது. அதேபோல் கிழக்கு ஜெருசலத்தில் 1,600 புதிய வீட்டுப் பிரிவுகளைக் கட்டுவதற்கும் ஒப்புதல் கொடுத்துள்ளது; பாலஸ்தீனியர்கள் இதைத்தான் தங்கள் வருங்கால அரசின் தலைநகராக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கை இஸ்ரேலுக்குள்ளேயே இருந்து வீட்டு வசதிகளுக்காக நடத்தப்படும் வெகுஜன மாபெரும் சமூக எதிர்ப்புக்களின் கோரிக்கைகளை மீறி வந்துள்ளது. பல ஆண்டுகளாக அரசாங்கம் புதிய மற்றும் நிதான வருவாய்க்குரிய வீடுகளை 1967 எல்லைகளுக்குள் கட்டுவதற்கு மறுத்துள்ளது; இதற்குக் காரணம் மக்கள் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலத்தில் வசிக்கக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதாகும்.

பல தசாப்தங்களாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாட்டை அடையவேண்டும் என்பதற்கு, அதையொட்டி ஒரு சுருக்கப்பட்ட மேற்குக்கரை, காசாவைக் கொண்ட பாலஸ்தீனிய அரசு நிறுவப்பட வேண்டும் என்று அனைத்தையும் பணயம் வைத்துள்ள அப்பாஸ், நேடன்யாகு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மறுப்பது அல்லது குடியேற்ற விரிவாக்கத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்னும் நேர்மையற்ற அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் வேண்டுகோளையும் மறுப்பதால், முற்றிலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.

ஜனவரி மாதம்பாலஸ்தீன ஆவணங்கள் என்று அல் ஜசீராவால் வெளியிடப்பட்டவை பாலஸ்தீனிய அதிகாரம் மற்றும் அப்பாஸ் எப்படி அமெரிக்க, இஸ்ரேலிய நலன்களுக்கு முற்றிலும் தாழ்ந்து நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தியதுடன், அவர் பாலஸ்தீனிய மக்களின் ஒவ்வொரு வரலாற்றுத்தன்மை உடைய விழைவையும் தகர்ப்பதற்குத் தயாராக உள்ளார், இதில் கிழக்கு ஜெருசல இழப்பு, மற்றும் வெளியேறிவிட்ட பாலஸ்தீனியர்கள் திரும்பி வரும் உரிமை இழப்பு ஆகியவையும் அடங்கும். பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள் ஏராளமான எண்ணிக்கையில் ஒரு வருங்கால பாலஸ்தீனிய சிறு அரசிற்கு குடிபோவதை ஒப்புக் கொள்ள அப்பாஸ் தயாராக இருந்தார்; இஸ்ரேலின் இலக்கான மக்கட் தொகை பாதுகாப்பானயூத அரசாக இருக்க வேண்டும் என்பதற்காக இனரீதியான தூய்மைப்படுத்தும் முறைதான் அதன் வடிவமைப்பு ஆகும்.

இஸ்லாமியவாத இயக்கமான ஹமாசுடன் அப்பாஸ் உடன்பாடு ஒன்றைக் காண விரும்பினார்; அது காசாப் பகுதியின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது-- ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவவும் முயல்கிறார்; ஆனால் பல மாதங்களாகியும் இதைச் செயல்படுத்த முடியவில்லை. அது அவருடைய பாலஸ்தீனிய அரசிற்கான முயற்சிக்கு சற்று நம்பகத்தன்மை அளித்திருக்கும்.

பாலஸ்தீனிய அதிகாரத்தின் நாடு கோரும் முயற்சியை நிறுத்த, பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்த இருப்பதாக வாஷிங்டன் உறுதி கொண்டுள்ளது; இதையொட்டி அப்பாஸிற்கு பொது மன்றத்திற்கு செல்லுவதைத் தவிர வேறு விருப்பத் தேர்வு இல்லை. அங்கு வாக்களிப்பு கிடையாது. பார்வையாளர் என்னும் அந்தஸ்தில் PA மற்றய தேசங்களைத்தான் அரசுரிமைத் தீர்மானத்தை இயற்ற நம்பியுள்ளது: ஆனால் இதற்குத் தேவையான மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையான 128 வாக்குகளைப் பெற முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

100 நாடுகளுக்கும் மேலாக சுதந்திர அரசு நிலைப்பாட்டு அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளன என்று PA தலைவர் கூறுகிறார். அமெரிக்கா, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் செக் குடியரசு ஆகியவைதான் மேற்கு நாடுகளில் இதுவரை இதற்கு எதிராக வாக்களிக்க உறுதி கொண்டுள்ளன.

ஹாரெட்ஸ்  இதுவரை பார்த்துள்ள ஆவணங்களின்படி, IDF ஒருஆம் வாக்கு பொது எழுச்சிக்கு வகை செய்யும், அதில்முக்கியமான வெகுஜன ஒழுங்கீனம் இருக்கும்.”; இதைத்தவிரமுக்கிய கூடுமிடங்களுக்கு அணிவகுப்புக்கள், இஸ்ரேலிய சமூகங்கள், கல்வி மையங்களை நோக்கியும் அணிவகுப்புக்கள் இருக்கும்; [இஸ்ரேலிய] அரசாங்கத்தை சேதப்படுத்தும் அடையாளங்கள் மேற்கொள்ளப்படும்.”

பாலஸ்தீனிய அதிகாரம் அத்தகைய கருத்துக்களை மறுத்துள்ளது: வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் எதையும் தான் திட்டமிடவில்லை, ஆதரவு கொடுக்கவும் இல்லை எனக் கூறியுள்ளது.

IDF ஏற்கனவே குடியேற்றங்களில் பயிற்சிகளை நடத்தியுள்ளது என்று ஹாரெட்ஸ் கூறியுள்ளது; இவை குடியேற்றங்களின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஷிலோ இராணுவ நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்டு, அதன் Lachish தளத்தின் கட்டுப்பாட்டு மையத்தில்தயாராக இருக்கும் பிரிவுகளுக்கு பயிற்சி நடந்தன. இத்தயாராக இருக்கும் பிரிவுகள் குடியேறியவர்களைக் கொண்டவை; பெரும்பாலும் இராணுவத்தால் இருப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள், ஏற்கனவே தானியங்கிக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்தவர்கள்.

IDF செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்: “குடியேற்றத் தலைமையின் சில கூறுகள், வாடிக்கையான பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோருடன் தொழில் நேர்த்தியான உரையாடலில் IDF ஈடுபட்டுள்ளது; பல இருப்புக்களை படைகளுக்குப் பயிற்சி கொடுப்பதில் முதலீடு செய்துள்ளது; இது ஒரு பாதுகாப்பு நிலைப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது; எத்தகைய நிலையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கும். மத்திய கட்டுப்பாடு சமீபத்தில் அத்தகைய பயிற்சியின் பெரும்பகுதியை அவசரகால விடையிறுப்புப் பிரிவுகளுக்கு நடத்தியது; இத்தகைய பயிற்சி இன்னும் நடைபெறுகிறது.”

“Operation Summer Seed” என்று அழைக்கப்படும் இராணுவத் தயாரிப்புக்களில் மேற்குக்கரையின் ஒவ்வொரு குடியிருப்பின்சிவப்புக் கோடுகள் அல்லது எல்லைகளையும் உறுதிபடுத்துவதும் அடங்கியுள்ளது. பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்கள் சிவப்புக் கோடுகளைக் கடந்தால், துருப்புக்கள் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்படும்; அவ்வாறுதான் 1973ல் சிரியாவுடன் மோதலில் அவர்கள் செய்திருந்தனர்.

இஸ்ரேலிய துருப்புக்கள் 23 ஆயுதமற்ற எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொன்றனர்; அவற்றுள் ஒரு பெண்மணியும் 12 வயதான சிறுவனும் அடங்குவர்; மேலும் 350 பேர் கடந்த ஜூன் மாதம் நடந்த ஆர்ப்பாட்டங்கள்போது காயமுற்றனர்; சிரியாவின் அகதிகள் முகாமிலுள்ள எதிர்ப்பாளர்கள், இஸ்ரால் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கோலன் குன்று  எல்லையை 1967ப் போர் தொடங்கியதின் ஆண்டு நிறைவை ஒட்டி அணுகினர். நான்கு முன்னணி அரங்குகளில், சிரியா, காசா, லெபனான், மேற்குக்கரை என்று மூன்று வாரங்கள் முன்னதாக பெரிய, ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்ப்புக்கள் நடந்தவற்றை தொடர்ந்து இவைகள் வந்தன. மேலும் இரு பகுதிகள்மீது எகிப்து, ஜோர்டான், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; அவை அந்த அரசாங்கங்களால் தவிர்க்கப்பட்டன.

அமெரிக்க வெளியுறவு அலுவலகம் இஸ்ரேலுக்கு ஆதரவாக உறுதியாக வந்து, எதிர்ப்புக்கள் ஆத்திரமூட்டும் தன்மை உடையவை என்றும் இஸ்ரேல் இறைமை பெற்ற நாடு என்னும் முறையில் தன் எல்லைகளைப் பாதுகாக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று கூறியது.

இஸ்ரேல் நீண்ட காலமாகவே குடியேறியவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதித்துள்ளது. 2011 தொடக்கத்தில் இருந்து B’Tselem, இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பு, பொலிசார் இரு பாலஸ்தீனிய இளவயதினர் கொல்லப்பட்டது உட்பட, 42 யூதர்கள் குடியேறியோர் வன்முறை பற்றிய வழக்குகளை விசாரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

போருக்கு இஸ்ரேல் நடத்தும் தயாரிப்புக்கள் பற்றிய தெளிவான அடையாளமாக, IDF இருப்புப் படையினரைக் கூட்டுவதற்கான அவசரக்காலத் திட்டங்களையும் தயார் செய்துள்ளது. எகிப்துடனான தன் எல்லையையும் அது வலுப்படுத்தியுள்ளது; இது கடந்த மாதம் இஸ்ரேலிய தெற்கு நகமான எய்லட்டிற்கு அருகே நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது; அதில் எட்டு பேர் உயிரிழந்தனர், டஜனுக்கும் மேலானவர்கள் காயமுற்றனர். IDF மிக உயர்ந்த தொழிற்துறையை இப்பகுதியில் ஈடுபடுத்தியுள்ளது; 2012 ஐ ஒட்டி எல்லை வேலிப் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெடுஞ்சாலைகள் 10, 12 ஆகியவற்றையும் இது மூடிவிட்டது.

.நா.விடம் அங்கீகாரத்தை கேட்கும் திட்டத்தைத் தொடர்ந்தால் தான் PA க்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கும் நிதியுதவியான 470 மில்லியன் டொலர்களை நிறுத்திவிடுவதாக ஒபாமா நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது. பாலஸ்தீனிய பிரதம மந்திரி சலாம் பயட் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன், ஒரு தொலைப்பேசி உரையாடலில் தெரிவித்தார் என்றார்.

குடியரசுக் கட்சியின் Ilena Ros-Lehtinen, பிரதிநிதிகள் மன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவரும் பாலஸ்தீனிய அரசிற்கு வாக்களிப்பதற்கு ஆதரவு தரும் எந்த ஐ.நா. உறுப்பினருக்கும் செல்லும் நிதிகளைத் தடுக்க முற்பட்டுள்ளார். வாஷிங்டன் ஐ.நா.விற்குக் கொடுக்க வேண்டிய கட்டணங்களின் ஒரு பகுதியை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்; மேலும் ஐ.நா. மனித உரிமைகள் குழுவிற்குக் கொடுக்கப்படும் நன்கொடைகளையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோன்ற அச்சுறுத்தல் 1989ம் ஆண்டு பாலஸ்தீனிய அரசிற்காக PLO திட்டமிட்டபோது வந்ததை மேற்கோளிட்டு, அவர் “PLO வின் ஒருதலைப்பட்ச பிரச்சாரம் நிறுத்தப்பட்டது…..நா. இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவது அல்லது அமெரிக்க நிதியுதவிகளைப் பெறுவது என்பதற்குள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. அவர்கள் பிந்தியதைத் தேர்ந்தெடுத்தனர்.”