சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Bourgi affair exposes French imperialism’s criminal activities in Africa

ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை புர்ஜி விவகாரம் அம்பலப்படுத்துகிறது

By Anthony Torres
22 September 2011

use this version to print | Send feedback

 

செப்டம்பர் 11 அன்று Journal du Dimanche க்குக் கொடுத்த நீண்ட பேட்டி ஒன்றில் வக்கீல் ரொபேர்ட் புர்ஜி ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் பிரான்ஸிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இரகசியப் பணம் கொடுக்கப்பட்டதில், தான் இடைத்தரகராக செயல்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.

மற்றவர்களிடம் இருந்து வந்துள்ள சாட்சியங்களும், குறிப்பாக எல்ப் எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Loïk Le Floch-Prigent உடையதும், ஏற்கனவே அத்தகைய நிதி பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.  (see: France: Elf verdicts reveal state corruption at highest levels”) புர்ஜியின் அறிக்கைகள் நாட்டின் முன்னாள் காலனிகள் பற்றிய பிரெஞ்சு அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நாம் அனைவரும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் ஆபிரிக்காவில் அது கொண்டிருக்கும் ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்கும் இடையேயுள்ள தொடர்புக்களை இதையொட்டிக் காணமுடிகிறது.

ஆபிரிக்க அரசியல்வாதிகளிடம் இருந்து தான் எவ்வாறு பெரும் நிதிகளைப் பெற்றார், அவற்றை அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுக்குக் கொடுத்தார் என்பதைப் பற்றிய விவரங்களை புர்ஜி கொடுத்துள்ளார். பேட்டியில் புர்ஜி கூறுவது: “என் மூலம்…. ஐந்து ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள்புர்க்கினா பாசோவின் Blaise Compaoré, ஐவரிக் கோஸ்ட்டின் Laurent Gbagbo, கொங்கோவின் Denis Sassou Nguesso, மற்றும் சொல்லத்தேவையில்லை, காபோனின் Omar Bongo—2002 ஜனாதிபதித் தேர்தலுக்குக் கிட்டத்தட்ட 10 மில்லியன் டொலர்கள் நன்கொடை அளித்தனர்.”

இந்த ரொக்கத்தைப் பல நேரமும் ஆபிரிக்க முரசு வாத்தியக் கருவியான djembes ல் புர்ஜி மறைத்து வைத்தார். மேலும் பேட்டியின்போது, 1990கள் முழுவதும் அவர் பல ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் மூலம் திரட்டியதையும் விவரித்தார்; இதில் Zaire இன் மிருகத்தனச் சர்வாதிகாரி மார்ஷல் மொபுடு சேஸ் சேகோவும் அடங்குவார்.

இவர் குறிப்பிட்டுள்ளது பிரெஞ்சு வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், இராணுவம் ஆகியவை பல ஆபிரிக்க ஆட்சிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது. இந்த வலையமைப்புக்கள் காலனி ஆட்சி முடிந்தபின்னரும் தொடர்ந்தனஆபிரிக்க பொதுமக்களைக் கொள்ளையடிப்பதற்காக; மேலும் சிராக்கின் அரசாங்கம் போன்றவற்றில் பிற்போக்குத்தனமான கொள்கைகள் சுமத்தப்படுவதற்கும்,  பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும் பங்களிப்புக்களை கொடுத்தன.

இத்தகைய வழக்கங்கள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன என்பதையும் புர்ஜியின் கருத்துக்கள் உறுதிபடுத்துகின்றன. தன்னை அவர் ஜாக் பொக்கார்ட்டிற்குப் பின்தோன்றல் என்று கூறிக் கொள்கிறார்; அவர் ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோலினால்திரு ஆபிரிக்கா என்று தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதான சுதந்திரம் அடைந்திருந்த முன்னாள் காலனிகளுடன் ஐந்தாம் குடியரசுடனான உறவுகளை நிர்வாகம் செய்திருந்தார்; ஐந்தாம் குடியரசு 1958ல் டு கோலினால் நிறுவப்பட்டிருந்தது.

போக்கார்ட்டை தன்ஆசிரியர் என்று அழைத்த புர்ஜி அவர் தன்னிடம் இத்தகைய வழக்கங்கள்ஜனாதிபதிகள் ஜோர்ஜ் பொம்பிடோ, வாலெரி கிஸ்கார்ட் டெ எஸ்டைங் மற்றும் பிரான்சுவா மித்திரோன் ஆகியோர் காலத்திலும் இருந்தன என்று நேரடியாகக் கூறியதாகவும் விளக்கினார்காபோனின் தலைநகரான லிப்ரவில்லேயில் நான் பலமுறையும் திரு பிரான்சுவா டு க்ரோஸுவர், திரு ரோலண்ட் டுமா ஆகியோரைக் கண்டுள்ளேன் என்றார். இவர்கள் இருவரும் மித்திரோனுக்கு மிக நெருக்கமானவர்கள் ஆவர்.

இதன் பொருள் ஐந்தாம் குடியரசின் எல்லா ஜனாதிபதிகளின் கீழும், முதல் ஜனாதிபதி டு கோல் தொடங்கி, தற்பொழுதைய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வரை இரகசிய வலையமைப்புகள் செயல்பட்டுவந்தன என்பதாகும். புர்ஜியின் வெளிப்பாடுகள் பிரெஞ்சு வலதிற்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களில் சார்க்கோசியின் பிரிவுடைய செயற்பாட்டினால் பகிரங்கமாக்கப்பட்டுள்ளன. Journal du Dimache ஆனது வில்ப்பன் விடுவிக்கப்படுவதற்கு சில நாட்களின் முன் புர்ஜியுடனான பேட்டியை வெளியிட்டது; வில்ப்பன் சார்க்கோசியினால் Clearstream ஊழல் வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். (பிரான்ஸ் கிளியர்ஸ்ட்ரீம் வழக்கிலிருந்து வில்ப்பன் விடுவிக்கப்பட்டார்)

புர்ஜியின் அறிக்கைகள் பில்லியனர் வணிகர் Ziad Takieddine, முன்னாள் பிரெஞ்சுப் பிரதம மந்திரி Edouard Balladur க்கு நெருக்கமானவர், பல்லடூரின் 1995 தேர்தல் பிரச்சாரத்திற்கு சட்ட விரோதமாக நிதி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதுடன், பாக்கிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் கொடுக்கப்பட்ட உடன்பாடுகளின் தொடர்பு கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். Takieddine 2000ம் ஆண்டில் சார்க்கோசிக்கும் லிபிய நாட்டுத் தலைவர் முயம்மர் கடாபிக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.

2002ல் 11 பிரெஞ்சு பொறியியலாளர்கள், பாக்கிஸ்தானில் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டமைக்கப்படுவதை மேற்பார்வையிட வந்தவர்கள் ஒரு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட ஊழல்களுக்கு நிதியளித்த சட்டவிரோத உடன்பாடுகளில் Takieddine இடைத்தரகராக இருந்தார் என்றும் பல்லடூர் தோல்வியுற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பெற்ற பணத்திற்கு இடைத்தரகராவும் இருந்தார் எனக் கூறப்படும் கருத்துக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அந்த நேரத்தில் சார்க்கோசி வரவு-செலவுத் திட்ட மந்திரியாக இருந்து பல்லடூரின் பிரச்சாரத்திற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.

 

1996ம் ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் மற்றும் அவருடைய பிரதம மந்திரி அலன் யூப்பே இருவரும் பாக்கிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பணத்தை நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்தனர். குண்டுத் தாக்குதல்கள், உடன்பாடு நிறுத்தப்பட்டதற்குப் பதிலடியாக பாக்கிஸ்தான் தலைவர்களால் உத்தரவிடப்பட்டிருக்கலாம். (see: “France: Investigation of 2002 Karachi bombing implicates Sarkozy”).

இந்தப் பல வகையான ஊழல்கள் பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கையின் முழுக் குற்றம் சார்ந்த தன்மையையும் அம்பலப்படுத்துகின்றன. இவை அரசியல் மற்றும் எண்ணெய் தொழில்துறையில் உள்ள சிறு குழுக்கள், பிரான்ஸ் மற்றும் ஆபிரிக்க மக்களுக்கு விரோதப் போக்கு உடையவர்களால் ஆணையிடப்படுகின்றன. உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் துனிசியா, எகிப்தில் தொழிலாளர்களின் புரட்சிகர எழுச்சி ஆகியவற்றின் பின்னணியில் இவை சிறப்பு முக்கியத்துவம் கொண்டுள்ளனபிந்தைய நிகழ்வுகளுக்கு பிரான்ஸ் ஆபிரிக்காவில் தொடர்ச்சியான ஏகாதிபத்திய போர்கள் மற்றும் குறுக்கீடுகள் மூலமாக முகம் கொடுத்துள்ளது.

பிரெஞ்சு முதலாளித்துவம் லிபியாவில் அதன் இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தவதற்கு கடாபிக்கு எதிராக மக்களைப் பாதுகாத்தல் என்ற வாதத்தைக் கூறியுள்ளது; ஆனால் கடாபியுடன் பிரெஞ்சு மற்றும் மேற்கத்தையத் தலைவர்கள் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தனர். உண்மையில் இத்தலையீட்டின் நோக்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு இன்னும் கூடுதலாக வளைந்து கொடுக்கும் ஆட்சியை அங்கு இருத்துவதுதான்; அந்நாடோ வட ஆபிரிக்கத் தொழிலாளர்களின் எழுச்சிகளினால் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனமான Total, எல்பின் வழித்தோன்றல், லிபியாவின் எண்ணெய் இருப்புக்களில் பெரும் பங்கைப் பெறலாம் என்று நம்புகிறது.

ஐவரி கோஸ்ட்டில் ஜனாதிபதி Gbagbo வை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு நடைபெற்ற உள்நாட்டுப் போர் ஒன்றிலும் பிரான்ஸ் தலையிட்டுள்ளது. பிரெஞ்சு இராணுவம் அபிஜனில் அவருடைய வீட்டின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியது.

ஐந்தாம் குடியரசுக் காலம் முழுவதும் திருட்டுத்தனமான வலையமைப்புகளின் செயற்பாடுகள், சோசலிஸ்ட் மற்றும் வலதுசாரி ஜனாதிபதிகள் அனைவரின் கீழ் நடைபெற்றதும், பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஊழல் மற்றும் மோசடித்தன அஸ்திவாரங்களை அம்பலப்படுத்தியுள்ளன.

பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் இந்நிலைமையை எதிர்ப்பதற்கு ஒரு முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவஇடது அரசாங்கத்தை அதிகாரத்தில் இருத்தி, ஆறாம் குடியரசில் சீர்திருத்த அமைப்புக்களைக் கொண்டுவருவதின் மூலம் தீர்க்க முடியாது. இந்த வெவ்வேறு கட்சிகளும் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் துணைக் கோள்கள்தாம்; இவை இந்த ஏகாதிபத்திய வலையமைப்புகளுடன் முழுமையானத் தொடர்பு கொண்டவை.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆபிரிக்காவிலுள்ள குற்றம் சார்ந்த எண்ணெய் வலையமைப்புகளுக்கு எதிரான உண்மையான போராட்டம் ஒரு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின், ஆபிரிக்காவிலுள்ள மேற்கத்தைய ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலம்தான் அமைக்கப்பட வேண்டும்.

ஐந்தாம் குடியரசு பிற்போக்குத்தனமாக நிறுவப்பட்டபோதுஆபிரிக்க தொடர்பின் முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டுவது உகந்தது ஆகும். நான்காம் குடியரசின் கலைப்பு 1958ம் ஆண்டு அல்ஜீரியாவில் இராணுவரீதியான ஆட்சி மாற்றம் தோற்றதை அடுத்து நடைபெற்றதுஅது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திரப் போர் ஆகும்; அப்பொழுது டு கோலை ஆதரித்திருந்த இராணுவ வட்டங்கள் அந்த ஆட்சிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

பல கோலிச அரசியல்வாதிகள் அப்பொழுது டு கோலின் கட்சிச் செல்வாக்கை வட ஆபிரிக்காவில் விரிவாக்க முயன்றனர். ஆபிரிக்காவில் இரண்டாம் உலகப்போரின்போது முதலாளித்துவ சார்பு எதிர்ப்பாளர்களின் தலைவர் என்று இருக்கும்போதே டு கோல் பிரெஞ்சு ஏகாதிபத்திய அமைப்புக்களுடனான பிணைப்பைத் தக்க வைத்திருந்தார்.

மே 13, 1958ல் அல்ஜியர்ஸில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று, தளபதி ரோவுல் சலான் ஒழுங்கமைத்திருந்தது, நான்காம் குடியரசிற்கு எதிரான ஆட்சி கவுழ்ப்பு முயற்சியாக மாறியது; அப்பொழுது கோர்சிக்காவின் Ajaccio வில் வான்குடைத் துருப்புக்கள் இறங்கி பிரெஞ்சு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தன; அது பின்னர் டு கோலுக்கு ஆதரவாக இராஜிநாமா செய்துவிட்டது.

வரலாறு கொடுத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, கட்சிகள் சரிவினால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஒட்டி, நாட்டிற்கு தற்காலத் தேவைகளுக்குப் பொருத்தமான நிறுவனங்களை அளிக்கும் வகையில், நாட்டிற்கு மீண்டும் உறுதிப்பாடு, தொடர்ச்சி என்று 169 ஆண்டுகளாக இல்லாத தன்மையை அளிப்பதற்கு ஐந்தாம் குடியரசு நிறுவப்படுகிறது என்று தன் முடிவிற்கு டு கோல் நியாயம் கற்பித்தார்அதாவது 1789 பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் இது தேவைப்படுகிறது என!

உண்மையில், அல்ஜீரியாவில் முக்கிய பிரெஞ்சு வட்டங்கள் விரைவில் அவருக்கு எதிராக மாற இருந்தன; குறிப்பாக 1961ம் ஆண்டு ஜெனரல்கள் அல்ஜீரியாவின் சுய நிர்ணயம் பற்றிய வாக்கெடுப்பின்போது பிரெஞ்சு மக்களுக்கு எதிராக வாக்களிப்பது என்ற ஆட்சி மாற்றச் செயற்பாட்டின்போது.

தற்பொழுதைய ஊழல்கள் காட்டியிருப்பதுபோல், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சர்வதேச வலையமைப்புக்கள், ஐந்தாம் குடியரசை நிறுவியதில் மையப் பங்கைக் கொண்டவை, இன்னும் செயற்பாட்டில் இருந்து, ஜனநாயக விரோத மற்றும் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன.