சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The significance of the Berlin elections


பேர்லின் தேர்தல்களின் முக்கியத்துவம்

Ulrich Rippert
21 September 2011

use this version to print | Send feedback

ஞாயின்று நடந்த பேர்லின் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு முக்கியமான அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளது.

1930களுக்குப் பின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே தேர்தல்கள் நடந்தன. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வைமார் குடியரசின் முடிவுக் காலம் போலவே, வங்கிகள் மட்டுமின்றி முழு நாடுகளும் இப்பொழுது ஒரு பெரும் நிதியச் சரிவு விளிம்பில் நிற்கின்றன. டாலருக்கு பின்னர் அடுத்தாற்போல் உலகம் முழுவதிலும் இரண்டாவது முக்கிய நாணயமான யூரோ, மோசமான ஆபத்திற்கு உட்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்திடம் ஒரு பதில்தான் உள்ளது: தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பதே அது. ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிதியப் பிரபுத்துவம் ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் கொண்டுள்ள நோக்கங்களை கிரேக்கம் காட்டுகிறது. ஒரு முழு நாட்டின் சமூகக் கட்டுமானமும் அழிக்கப்படுகிறது, அரச நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படுகின்றன, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் அவர்களுடைய பாட்டனார்கள் கால அளவிற்கு குறைக்கப்படுகின்றன.

இந்நெருக்கடியை முகங்கொடுக்கையில், முதலாளித்துவ சமூகத்தின் கட்டமைப்பிற்குள் சமூக முன்னேற்றம் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் தோல்வியைத்தான் தழுவும். இது பேர்லின் தேர்தல்களின் முதல் முக்கியமான படிப்பினையாகும்.

பத்து ஆண்டுகாலம் பதவியில் இருந்தபின், சமூக ஜனநாயகக் கட்சி-இடது கட்சி கூட்டணியின் கீழ் உள்ள செனட், (மாநில நிர்வாகப் பிரிவு) வாக்காளர்களால் உதாசீனப்படுத்தப்பட்டது. 2001 ல் ஒரு கூட்டணியாக பதவிக்கு வந்தபோது, PDS எனப்படும் ஜனநாயக சோசலிச இடது கட்சி, இடது கட்சியின் முன்னோடி, 22.6% வாக்குகளைப் பெற்றிருந்தது. கடந்த ஞாயிறன்று, PDS, WASG எனப்படும் தேர்தல் மாற்றீட்டுடன் கரைந்து இடது கட்சி என்று ஆகியும்கூட, இது பெற்ற வாக்குகள் பாதியாகக் குறைந்துவிட்டன. முழு எண்ணிக்கையில், இடது கட்சி கிட்டத்தட்ட 200,000 வாக்குகளை இழந்துவிட்டன; இது முந்தைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பகுதியாகும்.

இடது கட்சியில் இருந்து தொழிலாள வர்க்கம் நகர்ந்து கொண்டிருக்கையில், SAV எனப்படும் சோசலிச மாற்றீடு, Marx21 மற்றும் பிற குட்டி முதலாளித்துவக் குழுக்கள் தங்கள் செல்வாக்கை இந்த அதிகாரத்துவக் கருவிக்குள் அதிகப்படுத்த முயல்கின்றன; இவை முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் இருந்த ஸ்ராலினிசக் கட்சியின் மீதமுள்ளவைகளையும் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவு கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவையும் கொண்டது. இவர்களுடைய இழிநிலைக்கு எல்லையே இல்லை. சமீபத்திய தேர்தல் தோல்வியைக் கூட இது வரவேற்கிறது; ஏனெனில், இப்பொழுது இடது கட்சி எதிர்க்கட்சியாக இருப்பதால், அது கூடுதலான இடது சாரிச் சொற்றொடர்களை மீண்டும் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறது.

இச்சூழ்நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) தேர்தல் பிரச்சாரம் மாபெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது ஒரு கூர்மையான அரசியல் துருவப்படுத்தல்களுக்கு வகை செய்தது. ஒருபுறத்தில் அனைத்து நடைமுறை அரசியல் கட்சிகளும், வலதில் இருந்து இடது வரை மற்றும் தொழிற்சங்கங்கள் SAV, Marx21 இன்னும் பிற குழுக்களுடன் ஒன்றாக இருந்தன. மறுபுறமோ PSG, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்திற்கு ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை தளமாகக் கொண்டு நின்றது.

இந்த அரசியல் அரசியல் துருவப்படுதல் மிகவும் முக்கியமாகும்; ஏனெனில் இது வர்க்க வேறுபாட்டின் ஒரு பகுதியாகும்; தற்பொழுது இது மிக விரைவில் வளர்ச்சி பெற்று வருகிறது.

PSG ஒன்றுதான் சளைக்காமல் SPD-இடது கட்சி ஆதிக்கத்தில் உள்ள செனட்டின் தொழிலாளர் வர்க்க விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்துவதுடுன், அவற்றிற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குடன் போராடுகிறது. SPD, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன்  உடனடியாக முறித்துக் கொண்டால்தான் 1930 களின் பேரழிவு மீண்டும் வராமல் தவிர்க்கப்பட முடியும் என்பதை அது தெளிவாக விளக்கியது. சமூகத்தில் அரசியல் அழுகிய தன்மை விரைவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆளும் வர்க்கம் சமூக நெருக்கடியை இனவழி, தேசிய வகைகளில் திசைதிருப்பும் முயற்சிகளுக்கு மீண்டும் செல்கிறது.

PSG தேர்தல் பிரச்சாரம் SPD-இடது கட்சி ஆதிக்கத்திலுள்ள செனட்டின் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு எதிரான ஒரு அரசியல் தாக்குதலுடன் நேரடியாகப் பிணைந்து இருந்தது. ஸ்ராலினிச, மாவோயிச மற்றும் பப்லோவாதம் ஆகிய தளத்தில் இருக்கும் குழுக்கள், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் விரைவில் வலதிற்குப் பாய்ந்துள்ள தன்மை எல்லா இடங்களிலும் காணப்படலாம். லிபியப் போரின்போது இவ் அமைப்புக்களில் பல ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் வலுவான ஆதரவு கொடுக்கும் பிரிவுகளாக வெளிப்பட்டன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் போலவே, இவை சமூகத்தில் சலுகை பெற்ற ஒரு அடுக்கை சார்ந்தவை, வர்க்க சமரசத்தில் ஈடுபட்டு ஜேர்மனியின் போருக்குப் பிந்தையசமூகப் பங்காளித்துவம் என்ற பின்னணியில் உறுதியாக உள்ளன. இவை இப்பொழுது பொருளாதார நெருக்கடி மற்றும் தீவிரமாகும் வர்க்க உறவுகள் ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்டு முதலாளித்துவ அரசின் பிடிகளுக்குள் தாவ முற்பட்டுள்ளன. அவர்கள் முதலாளித்துவ ஒழுங்கின் ஒரு பாகமாகும்; வருங்கால அரசாங்கங்களுக்கு தூண்போல் தம்மை அளிக்கின்றன, சற்றும் மறைப்பு இல்லாத விரோதப் போக்குடன்தான் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கின்றன.

இவற்றிற்கு எதிரான PSG யின் அரசியல் தாக்குதல், பல தசாப்தங்களாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் சந்தர்ப்பவாதம், தேசியவாதம் இவற்றிற்கு எதிராக நடத்தப்பட்ட கொள்கைப் பிடிப்புடைய போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

பேர்லின் தேர்தல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனியப் பிரிவு நிறுவப்பட்டு 40 ஆண்டுகள் நிறைந்த நிலையில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே, PSG யின் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter, BSA), தங்களை ஸ்ராலினிச அல்லது சமூக ஜனநாயக அதிகாரத்துவத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டவர்களுக்கும், முதலாளித்துவ முறையின் வடிவமைப்பிற்குகள் தொழிலாளர்களுடைய நலன்கள் அடையப்பட முடியும் என்று கூறியவர்களுக்கும் எதிராக மார்க்சிசத்தை பாதுகாக்க போராடி வந்துள்ளது

நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணமான இடைமருவு வேலைத்திட்டம் என்பதில் லியோன் ட்ரொட்ஸ்கி, “கொள்கையற்ற சந்தர்ப்பவாதம், திருத்ல்வாதம் இவற்றிற்கு எதிராக என்ற தலைப்பில் எழுதினார்:

நான்காம் அகிலம், இரண்டாம், மூன்றாம், ஆம்ஸ்டர்டாம் மற்றும் அனார்க்கோ-சிண்டிகலிஸ்ட் சர்வதேசியவாதிகளுக்கு எதிரான ஒரு சமரசத்திற்கு இடமில்லாத போரை அறிவிக்கிறது; அதேபோல் அவர்களுடைய மையவாத துணைக்கோள் அமைப்புக்கள் மீதும், சீர்திருத்தங்கள் இல்லாத சீர்திருத்தவாதம் மீதும் நடத்துகிறது; GPU உடன் ஜனநாயகத்திற்கு கூட்டுக் கொண்டுள்ளவர்களுக்கு எதிராகவும் நடத்துகிறது; சமாதானம் இல்லாத சமாதானவாதத்திற்கு எதிராக நடத்துகிறது; முதலாளித்துவத்தின் பணியில் ஈடுபட்டுள்ள அனார்க்கிசத்திற்கு எதிராக நடத்துகிறது; புரட்சி பற்றிசாவைக் கண்டு அஞ்சுவது போல் நடுங்கும் புரட்சியாளர்களுக்கு எதிராக நடத்துகிறது. இந்த அமைப்புக்கள் அனைத்தும் வருங்காலத்திற்கு உறுதிகூறுபவை அல்ல. கடந்த காலத்தின் இழிந்த எச்சங்களாகும். போர்கள் மற்றும் புரட்சிகளின் சகாப்தம் இவற்றை தீயினால் எரித்துத் தரையில் தள்ளிவிடும்.”

இந்த வார்த்தைகள் இன்றும் பெரும் புரட்சிகரப் பொருத்தம் உடையவையாகின்றன. வரலாற்றில் எப்பொழுதும் இருப்பது போல், சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டம் புரட்சிகரப் போராட்டங்களின் காலத்தில் மிக உயர்ந்த முக்கியத்துவமடைகின்றன.

இன்றைய பிரச்சினைகள் ஒரு சில ஆர்ப்பாட்ங்கள், எதிர்ப்பு வாக்குகளினால் தீர்க்கப்பட முடியும் என்று எவரேனும் நினைத்தால், அது பெரிய தவறு ஆகிவிடும். தேர்தல் பிரச்சார வேளையில் PSG யின் கொள்கைகளில் அக்கறை பெருகியபோது, செய்தி ஊடகம் பிராட் கட்சியை கட்டமைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்தது. எல்லா அரசியல் பிரச்சினைகளையும் முழு மேம்போக்குத்தனத்துடன் காணும் கட்சி, அதன் அறியாமையில் பெருமை கொள்ளும் கட்சி, கிட்டத்தட்ட 9% வாக்குகளைப் பெற முடியும் என்பது ஒரு எச்சரிக்கையாகக் கொள்ளப்பட வேண்டும். இது ஆழ்ந்த அரசியல் சார்பு பிறழ்தல் மற்றும் குழப்பத்தின் அடையாளம்தான். திரைக்குப் பின்னார், இந்த அமைப்பு அதே கன்சர்வேடிவ் சக்திகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக தலையிடுவது மிக அவசரமானது என்பதைத்தான் பேர்லின் தேர்தல்கள் எடுத்துக்காட்டுகின்றன. PSG தான் பெற்ற வாக்குகளை மூன்று மடங்கு அதிகமாக்கிக் கொள்ள முடிந்தது ஒரு பெரும் வெற்றியாகும்; ஏனெனில் இது இடது கட்சி மற்றும் அதன் மத்தியதர தட்டு ஆதரவாளர்களுக்கு எதிராக கொள்கை நிலைப்பாட்டுடன், சமரசத்திற்கு இடமில்லாத ஒரு பிரச்சாரத்தின் மூலம் அவ்வாக்குகளைப் பெற்றது.