சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

United Nations attempts to stall Palestine statehood bid

பாலஸ்தீனம் அரச பெறும் தகுதி முயற்சியை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தாமதப்படுத்த முயல்கிறது

By Jean Shaoul
26 September 2011

use this version to print | Send feedback

வெள்ளியன்று பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவர் மஹ்முத் அப்பாஸ் முறையாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனிடம் பொதுச் சபை ஒரு பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

தன்னுடைய உரையில் அப்பாஸ் “63 ஆண்டுகளாகப் படும் கஷ்டங்கள் என்று அவர் விபரித்த இறப்புக்கள், அழிவுகள், அவமனாங்கள் ஆகியவற்றைக் குறித்து கவனத்தை ஈர்த்தார்.

இவைகள் போதுமானவை. பாலஸ்தீன மக்கள் தங்கள் விடுதலை, சுதந்திரம் ஆகியவற்றை அடைவதற்கான நேரம் வந்துவிட்டது என்றார் அப்பாஸ்; பாலஸ்தீனத்தின் அரசுத் தகுதி 1967ல் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலங்களை அடிப்படையாகக் கொண்டு ஜெருசலத்தைத் தலைநகராகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார். “அரபு மக்கள் தங்கள் ஜனநாயகத்திற்கான வேட்கையை உறுதிபடுத்துகையில்அரபு வசந்தம்இப்பொழுது பாலஸ்தீன வசந்தத்திற்கும் நேரம் வந்து விட்டது, உண்மையான சுதந்திரத்திற்குக் காலம் வந்துவிட்டது என்றார் அவர்.

அவருடைய பேச்சு ஐ.நா. கூட்டத்தில் ஆர்வம் மிகுந்த கரவொலியைப் பெற்றாலும், அரங்கத்தில் இருந்தவர்களுக்கு இக்கஷ்டங்கள், இஸ்ரேலினால் அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவை அப்பட்டமாக ஒன்றொன்பின் ஒன்றான ஐ.நா. தீர்மானத்தை மீறுகின்றன என்பது நன்கு தெரியும்.

ஆனால் பாதுகாப்புச் சபையில் விண்ணப்பம் தடுப்பதிகாரம் பயன்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படும் என்னும் வாஷிங்டனால் கூறப்பட்ட ஆபத்துக்கள் மற்றும் மற்ற நாடுகள் அதன் பேச்சைக் கேட்பதற்காகச் செய்யும் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பற்றியும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நிலைமை அதன் நீண்ட கால நண்பர்கள் ஹொஸ்னி முபாரக் மற்றும் ஜைன் எல்-அபிடைன் பென் அலி ஆகியோரை அகற்றிய மத்திய கிழக்கு வெகுஜன எழுச்சிகளால் பெரிதும் வலுவிழந்துள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அது தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது பெரும் சக்திகளின் நிலைமையை இன்னும் சமரசத்திற்கு உட்படுத்திவிடும் என்பதோடு அதன் முற்றுகைக்குட்பட்ட எகிப்து, ஜோர்டான் நட்பு நாடுகளையும் பாதிக்கும்; இஸ்ரேலுக்கு இவை கொடுக்கும் ஆதரவுதான் ஏற்கனவே வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்து இஸ்ரேலிய தூதர்கள் அகற்றப்பட வேண்டும் என்னும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கும், இஸ்ரேலுடன் உடன்பாடுகளை நிராகரிக்க வேண்டும், தங்கள் பாதுகாப்பிற்காக இஸ்ரேலியத் தூதரக அலுவலர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் வகை செய்துள்ளது.

எனவே, அப்பாஸின் அறிக்கை தொடர்ந்து அப்பட்டமாக ஐ.நா. பாலஸ்தீனத்தில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு உடந்தையாக இருப்பதுஅரபு வசந்தம் என்பதின் நட்பாக ஏகாதிபத்தியம் கொண்டுள்ள போலித்தனங்களை அம்பலப்படுத்தி புரட்சிக் கனல்களுக்கு எரியூட்டும்.

கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்துள்ள பல வழிவகைகள், அதுவும் அவை சமாதானப் பேச்சுக்கள் தொடுவானத்தில் இருப்பதைத் தடுப்பதைத் தீர்ப்பதில் வெற்றிகரமாக இல்லை என்பதை மீண்டும் தொடர்வது இனியும் இயலாது என்றார் அவர். “நெருக்கடி புறக்கணிக்கப்பட முடியாத அளவிற்குத் தீவிரமாகிவிட்டது, இதையும் விட அதைக் கடப்பது அல்லது ஒத்திவைப்பது என்பது அதன் வெடிப்பிற்குக் காரணமாகிவிடும்.”

இவருடைய கருத்துக்கள் அமெரிக்கா தலையிட்டுள்ளசமாதான வழிவகை”, இரு தசாப்தங்களுக்கும் மேலாக பாலஸ்தீன நிலத்தை அது ஆக்கிரமித்துள்ளது மற்றும் அதன் மக்களை அது அடக்கிவைத்துள்ளது என்று இஸ்ரேலினால் மறைத்துவைத்துச் செய்யப்படுவது வாஷிங்டன் உதவியுடன்தான் என்பதின் உட்குறிப்பான ஒப்புதல் ஆகும்.

அப்பாஸ் இஸ்ரேலுக்கு இணங்கி நடக்கும் முயற்சிகள்—“பாலாஸ்தீன ஆவணங்கள் என்று இந்த ஆண்டு முன்னதாக அல் ஜசீராவால் வெளியிடப்பட்டவைஅவருடைய நம்பகத்தன்மை மற்றும் அவருடைய பத்தா தலைமையிலான பாலஸ்தீன அதிகாரத்தின் நம்பகத்தன்மையையும் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன என்பதும் தெளிவாகியுள்ளன.

அரசு என்னும் தகுதிக்கு விண்ணப்பம் இஸ்ரேல் பலமுறையும் 1993 ஓஸ்லோ ஒப்பந்தங்களை ஒட்டி பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பலமுறையும் தோற்றுவிட்டதின் விளைவு ஆகும்; அந்த ஒப்பந்தங்கள் ஒரு வருங்காலப் பாலஸ்தீன நாட்டிற்கான திட்டங்களைக் கொடுத்திருந்தன என்றார் அப்பாஸ்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் எதுவும் மாறிவிடவும் இல்லை. கடந்த செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் தொடங்கிய பேச்சுக்கள்அமெரிக்கா, .நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவையும் தொடர்புபடுத்தியதுடன் எகிப்து, ஜோர்டான் நாடுகளையும் கொண்டதுஓராண்டிற்குள் சமாதான உடன்படிக்கைக்கான திட்டங்களை நிர்ணயித்திருந்தன. ஆனால் இஸ்ரேல் வருங்கால பாலஸ்தீன அரசின் ஒரு பகுதியாக வரக்கூடிய நிலப்பகுதியில் தற்காலிகமேனும் குடியிருப்புக்களை விரிவாக்குவதை நிறுத்துவதற்கு மறுத்த அளவில் இப்பேச்சுக்கள் முறிந்துபோயின.

ஆக்கிரமிப்பு இப்பொழுதுநம் நாட்டின் எல்லைகளை மறுபடியும் வரைவதற்கான காலத்திற்குள் அடங்கவில்லைஅதாவது பாலஸ்தீன அரசு நிலைகொள்ளுவதற்கான உண்மையான திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்றார் அப்பாஸ். இதுபன்முக இனவழித் தூய்மைப்படுத்தல்என்பதின் ஒரு பகுதிதான்.

அதே நேரத்தில், இஸ்ரேல்காசாப் பகுதியில் முற்றுகையைச் சுமத்துவதைத் தொடர்கிறது, படுகொலைகள், வான்தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் ஆகியவற்றின் மூலம் பாலஸ்தீன மக்களை இலக்கு கொள்ளுகிறது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காசா மீது ஆக்கிரமிப்பிற்கான அதன் போர் நடவடிக்கையில் இன்னும் ஈடுபட்டுவருகிறது; இது பெரும் அளவில் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை அழித்து, ஆயிரக்கணக்கான உயிர்நீத்த தியாகிகளையும் காயமுற்றோரையும் ஏற்படுத்தியுள்ளது.”

ஆயுதமேந்திய குடியேறியுள்ள குடிப்படைகள், ஆக்கிரமிக்கும் இராணுவத்தின் சிறப்புப் பாதுகாப்பைக் கொண்டுள்ள குற்றவாளிகள் என்று அப்பாஸ் அவர்களைச் சுட்டிக்காட்டினார். இவர்கள்தான்எங்கள் மக்களுக்கு எதிராக அடிக்கடித் தாக்குதல்களை நடத்துபவர்கள், மக்களின் வீடுகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மசூதிகள், விளையாட்டுத் திடல்கள், பயிர்கள், மரங்கள் ஆகியவற்றை இலக்கு வைக்கின்றனர். பல முறை நாங்கள் எச்சரித்தும், ஆக்கிரமிப்புச் சக்தி  இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தச் செயல்படவில்லை, அவர்கள்தான் குடியேறுபவர்களின் குற்றங்களுக்கு முழுப் பொறுப்பு என்று நாங்கள் கூறுகிறோம்.”

ஒரு யூத அரசு என்ற அங்கீகாரம் தனக்கு வேண்டும் என்று கூறும் வகையில், பேச்சுவார்த்தைகளுக்கு புதிய நிபந்தனையையும் இஸ்ரேல் அறிமுகப்படுத்த முயல்கிறது. இது பாலஸ்தீன இஸ்ரேலியர்களை இஸ்ரேலில் இருந்து மாற்றுவதற்கு வகை செய்யும் என்றார் அப்பாஸ். மேலும் இதுஎங்கள் எரியும் பகுதிகளுக்குள் மதப் போருக்கும் வழிவகுக்கும், ஒன்றரை மில்லியன் கிறிஸ்துவ, முஸ்லிம் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியக் குடிமக்களுக்கும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்று அப்பாஸ் எச்சரித்தார்; “இதை நாங்கள் நிராகரிக்கிறோம், இதை ஏற்பதற்கோ இது பற்றிப் பேசுவதற்கோ நாங்கள் உடன்படவில்லை.”

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் திரித்தல் தந்திரங்களுக்கு அப்பாஸிடம் மாற்றீடு ஏதும் இல்லை. அவருடைய தீர்க்கதரிசனமான எச்சரிக்கைகள் அவர் குறைகூறும் அதே பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்துவதற்குத்தான் உதவும்; இஸ்ரேல் குடியேற்றக் கட்டமைப்பை நிறுத்தியவுடன் பேச்சுக்களைத் தொடர இருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.

இதற்கு முற்றிலும் மாறாக இஸ்ரேலின் பிரதம மந்திரி பென்யமின் நெத்தென்யாகு ஒரு திமிர்த்தன, ஆக்கிரோஷ ஒலிக்குறைப்பை வெளிப்படுத்தி, .நா. “அபத்த அரங்கு ஆகிவிடும் என்று உதறித்தள்ளினார்.

ஹெஸ்பொல்லா ஆதிக்கத்தின் கீழுள்ள லெபனான் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குத் தலைமை தாங்குகிறது. ஒரு பயங்கரவாத அமைப்பு உலகப் பாதுகாப்பின் பொறுப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது புரிந்து கொள்ள முடியாதது என்றார் அவர். அரச அந்தஸ்திற்கான முயற்சியை நிராகரித்த நெத்தென்யாகுபாலஸ்தீனியர்கள் சமாதானம் இல்லாத ஒரு அரசை விரும்புகின்றனர், உண்மை என்னவென்றால் நீங்கள் அதை அனுமதிக்கக் கூடாது.”

அரச தகுதி பெற ஒரே வழி இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்பதுதான்ஒரு குறைந்தப்பட்ச உள்ளூராட்சி வடிவமைப்பு, மேற்குக்கரையில் 40% க்கும் குறைவானவர்களுக்கு; அதன் அடிப்படைப் பொறுப்பு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்குத்தான் கடந்த வாரம் ஐ.நா.வில் ஒபாமா இசைவு கொடுத்தார்.

பாலஸ்தீனியர்களுடன்ஒரு நியாயமான, நீடித்த சமாதனத்தைத் தான் பெற விரும்புவதாக நெத்தென்யாகு கூறினார்; பேச்சுவார்த்தைகள் மேசைக்கு மீண்டும் வருமாறு அப்பாஸுக்கு அழைப்பு விடுத்த அவர், பதிலாக எதையும் கொடுக்கத் தயாராக இல்லை.

இஸ்ரேல் 1967 எல்லைகளுக்கு மீள்வது என்ற கருத்தை அவர் நிராகரித்தார்; இதற்கு ஐ.நா. தீர்மானங்களின் ஆதரவு இருந்தபோதிலும்கூட. தன்னுடைய விரிவாக்கக் கொள்கைகளை இஸ்ரேலுக்கு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்  கூடுதல் நிலம் வேண்டும், குறிப்பாக போராளித்தன இஸ்லாமியவாத மற்றும் ஈரான் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக என்று நியாயப்படுத்தினார்.

இஸ்ரேலிய அரசாங்கம் ஐ.நா.வில் நாட்டுத் தகுதிக்கான முயற்சியை அடுத்து பாலஸ்தீன அமைதியின்மையைச் சமாளிக்க பரந்த தயாரிப்புக்களை நடத்திவருகிறது; இது நடைமுறையில் இராணுவப் படைகளை போர் அடிப்படையில் நிறுத்தும். பாலஸ்தீனத்தில் எழுச்சி ஏற்பட்டால் சமாளிக்க அது ஏற்கனவே இருப்புப் படையைத் தயார்நிலையில் வைத்துள்ளது; இராணுவம் இஸ்ரேலியக் குடியேறியவர்களுக்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகள், ஸ்டென் வெடி குண்டுகள் ஆகியவற்றைக் கொடுத்து அவை பயன்படுத்தப்படும் முறை பற்றியும் பயிற்சி அளித்துள்ளது.

வெள்ளியன்று துருப்புக்கள் ஒரு பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரரை மேற்குக்கரையில் குஸ்ரா கிராமத்திற்கு வெளியே சுட்டுக் கொன்றன. இது கிராமத்தின் மீது குடியேறியவர்கள் அணிவகுத்துச் சென்று அங்கு வசிக்கும் மக்களைத் தூண்டிவிட்டபின் நடைபெற்றது.

வாஷிங்டன் ஆதரவு என்னும் உத்தரவாதத்தைத் தவிர, இஸ்ரேலின் பாதுகாப்பில் உள்ள மற்றொரு கூறுபாடு பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நீண்ட காலமாக இஸ்ரேலுக்குள் இருக்கும் சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்களைத் திசைதிருப்பும் கருவியாகப் பயன்படுத்தப்படுவது ஆகும்.

ஆனால் அரச தகுதி விண்ணப்பம் வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலின் பெருகிய அரசியல் தனிமைப்பட்ட தன்மையை உயர்த்திக் காட்டியுள்ளது; அப்பிராந்தியத்தில் அவர்களுடைய நடவடிக்கைகளின் உறுதி குலைக்கும் தன்மையையும் உயர்த்திக் காட்டியுள்ளது.

உள்நாட்டில் அவருடைய அராசாங்கத்தையே அச்சுறுத்தும் வெகுஜன எதிர்ப்புக்களை நெத்தென்யாகு முகங்கொடுக்கிறார்; அதே நேரத்தில் அவர் பாலஸ்தீனியர்களுடன் எத்தகைய உடன்பாட்டையும் காணக்கூடாது என விரோதப் போக்குக் காட்டும் தீவிர வலது சாரி சக்திகளையும் எதிர்கொள்ளுகிறார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, சௌதி அரேபியாவின் இளவரசர் துர்க்கி அல்-பைசல், ஒரு முன்னாள் தூதராக அமெரிக்காவில் இருந்தவர், .நா. கூட்டத்திற்கு முன்பு நியூ யோர்க் டைம்ஸில் எழுதுகையில் அமெரிக்கத் தடுப்பதிகாரம் அரபு உலகில் அது இன்னும் ஏதேனும் செல்வாக்கு கொண்டிருந்தால் அதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும், இஸ்ரேலியப் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், ஈரானை வலுப்படுத்தும் மற்றும் இப்பிராந்தியத்தில் மற்றொரு போருக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

அது ரியாத்தை இன்னும் சுயாதீன, ஆக்கிரோஷ வெளிநாட்டுக் கொள்கையை ஏற்கக் கட்டாயப்படுத்தும் என்றார். சாராம்சத்தில் அவர் பாலஸ்தீன அரசு விண்ணப்பம் பற்றிய பேச்சுக்களில் காணக்கூடிய முன்னேற்றம் வேண்டும், அதுதான் அவருடைய நாடு வாஷிங்டன் அப்பிராந்தியத்தில் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்குத் தொடர்ந்த ஆதரவிற்கான விலை என்றார்.

அதே நேரத்தில் இஸ்ரேல் மே 2010ல் காசாவின் உதவிக்கு அனுப்பப்பட்ட கப்பல் வரிசைகளின் ஒரு பகுதியான துருக்கிய முக்கியக் கப்பலான மாவி மார்மோரா தளத்தில் இருந்த 9 துருக்கியக் குடிமக்களை இஸ்ரேலியர்கள் கொன்றது, இஸ்ரேலின் நீண்ட கால நட்பு நாடான, நேட்டோவின் உறுப்புநாடான துருக்கியின் ஆதரவை இழக்கச் செய்துவிட்டது. அங்காரா வெடிமருந்துடன் கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அனுப்பிவைத்தது; இஸ்ரேல் சைப்ரசுடன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்தால் தலையிடும் என்றும் எச்சரித்தது; அதற்கு முன்பாக துருக்கியின் கீழுள்ள வடக்கு சைப்ரசுடன் ஒருவித உடன்பாடு தேவை என்றும் கூறியது.

பாதுகாப்புச் சபையானது பாலஸ்தீன விண்ணப்பத்தை உடனே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது; ஆனால் பேச்சுவார்த்தைகள் பல மாதங்கள் நீடிக்கலாம்; இஸ்ரேலும் மேற்கத்தையச் சக்திகளும் நிகழ்ச்சி நிரலில் இருந்து பிரச்சினையை அகற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கோள்ளும்.

பாலஸ்தீன அதிகாரத்தின் சார்பாக தான் வசூலித்துள்ள வரிகள் அனைத்தையும் கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்போவதாக இஸ்ரேல் அச்சறுத்தியுள்ளது; அமெரிக்கா தான் கொடுக்கும் நிதியுதவியை நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது. நான்கு நாடுகளும்சமாதானப் பேச்சுக்கள் எனக் கூறப்படும் போலித்தனத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு அனைத்து உத்திகளையும் கையாள்கின்றன; இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் பேச்சுக்கள் மீண்டும் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.

அப்பாஸ் ஓர் உடன்படிக்கையை ஏற்றுள்ளதாகவும், அதன்படி பாதுகாப்புச் சபையின் வாக்கு தாமதப்படுத்தப்படும், இஸ்ரேலுடனான பேச்சுக்கள் தொடர்ந்து அதன் விளைவு தெரியும் வரை, என்று பரந்த முறையில் தெரியவந்துள்ளது.