சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The many frauds of the “Buffett rule”

பஃபெட் விதியின்" பல மோசடிகள்

Patrick Martin
26 September 2011

use this version to print | Send feedback

அரசியல் மோசடி பல மில்லியன் வேலைகளை அளிக்குமென்றால், பணக்காரர்களுக்கு வரிவிதிக்க கோரும் ஓர் ஆலோசகராக காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி ஒபாமாவின் வார்த்தைஜாலமே, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமைந்துவிடும்.

அவருடைய 'அமெரிக்க வேலைகள் சட்டம்' (American Jobs Act) கொண்டு வரப்பட்டதிலிருந்து (இதையடுத்து உடனடியாக செல்வந்தர்கள் மீது வரிவிதிப்பதை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்று கூறப்பட்ட ஒரு பற்றாக்குறை-குறைப்பு திட்டம் வெகு விரைவிலேயே கொண்டு வரப்பட்டது, தாம் பொருளாதார "நியாயப்படி" நிற்பதாக கூறும் அவருடைய வாதத்தை பரப்ப, பல பிரச்சார-பாணியிலான மேடைகளில் ஒபாமா ஆஜராகி உள்ளார். பஃபெட் விதி என்றழைக்கப்படுவதே இந்த வாதங்களின் மையத்தில் உள்ளது. அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரரான ஒமாஹாவைச் சேர்ந்த பில்லியனரை மையமாக வைத்து அது பஃபெட் விதி(Buffett Rule) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இம்மாதம் ஒரு செய்தியிதழின் தலையங்கத்தில், தம்முடைய செயலாளரையும் விட தான் குறைந்த விகிதத்தில் வரிசெலுத்துவதாக அறிவித்த பஃபெட், பெரும்செல்வந்தர்களுக்கு "பரிவுகாட்டும்" அமெரிக்க வரிவசூல் முறைக்கு கண்டனம் தெரிவித்தார். நீண்டகாலமாக ஒபாமாவிற்கு மிகப்பெரிய நிதியாதரவு அளிப்பவர்களில் ஒருவராக இருந்துவரும் அவர், ஏனைய ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளையும் ஆதரித்து வருகிறார்

செலாவணி ஊகவணிகர் ஜோர்ஜ் சோரோஸ் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஏனைய பில்லினியர்களில் ஒருவரான பஃபெட், அமெரிக்காவில் அதிகரித்துள்ள சமூக சமத்துவமின்மை, வரிவிதிப்பில் நிலவும் வெளிப்படையான பாரபட்சம், மற்றும் செல்வந்தர்களுக்குச் சாதகமான வரவு-செலவு திட்ட கொள்கை ஆகியவை பரந்த மக்களின் அதிருப்தியைத் தூண்டிவிடுவதோடு அரசியல்ரீதியிலான நிலைகுலைவை ஏற்படுத்துவதாகவும் நிரூபணமாகலாம் என்று கவலையை வெளியிட்டுள்ளார்.  

பஃபெட் விதி" குறித்த ஒபாமாவின் பிரச்சாரம், நியூ யோர்க் டைம்ஸின் தலையங்க பக்கம், தலையங்க எழுத்தாளர் பால் குருக்மேன் மற்றும் Nation இதழ் உட்பட நிர்வாகத்தின் தாராளவாத மற்றும் "இடது" ஆதரவாளர்களின் தரப்பிற்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. டைம்ஸின் ஒரு தலையங்கம் வரிவிதிப்பு கொள்கையை "வலிமையான பொருளாதாரம்" என்றும், சமூக நீதியை நோக்கிய ஒரு படி என்றும் புகழ்ந்துள்ளது. இடதிற்கு நகரக்கூடியதாக இருக்கும் இந்நடவடிக்கையை, ஒபாமா தொடர்வதற்கு உற்சாகமூட்டும் விதத்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு Nation இதழ் அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் அதேயளவிற்கு, அதி வலதின் பக்கத்தில் இருந்து எதிர்பார்க்கத்தக்க கோபமான ஓலங்களும் இருந்தன. நவ பழமைவாத பத்தியாளரான சார்லஸ் கிரவுதாமர் தனது வழமையான நீண்ட பிரசங்கக் கட்டுரையில் அறிவித்தார்: “திட்டவட்டமாய் செயல்படும் ஒபாமா ஒரு சமப்படுத்துநர், ஒரு உறுதி கொண்ட சமூக ஜனநாயகவாதி, மறுவிநியோக அரசில், தீர்ப்பாயத்தில், எல்லாவற்றிற்கும் மேல் அரசாங்கத்தால் திணிக்கப்படுவதாகவும் அரசாங்கத்தால் அமலாக்கப்படுவதாகவும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறநேர்மையிலும் உறுதிபட்ட நம்பிக்கை கொண்டவர்..”   

இடது வலது என மாறி மாறித் தாவுவதென்பது, வோல்-ஸ்ட்ரீட்க்கு ஆதரவான வலதுசாரி அரசு நிர்வாகத்தை ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் இரண்டாம் வருகையைப் போல் சிட்டையிடுவதற்கு முனையும் ஒபாமாவினது பிரச்சாரத்தின் அப்பட்டமான அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியே. ஒரு "முற்போக்கான" ஜனநாயக கட்சி என்ற மாயபிம்பத்தோடு, 2012 ஜனாதிபதி தேர்தலில் மீண்டுமொருமுறை அமெரிக்க மக்களை ஏமாற்றுவதற்கு செய்யப்படும் அதன் முயற்சிகளின் பாகமாகும் இது.

வியாழனன்று சின்சினாட்டியில் நடைபெற்ற ஒரு பேரணியில், அவருடைய வரிவிதிப்பு கொள்கை "வர்க்கப் போர்" என்று குடியரசுக் கட்சியினர் கூறும் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஒபாமா, “நான் நடுத்தர வர்க்கத்தின் போர்வீரன். நடுத்தர வர்க்கத்தினருக்காகப் போராடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உழைக்கும் அமெரிக்கர்களுக்காகப் போராடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அறிவித்தார்.  

இதைத் தொடர்ந்து அவர் Congressional Black Caucus இன் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழாவின் இரவு விருந்தில் சனியன்று கலந்து கொண்டார். அங்கே கூடியிருந்தவர்களை நோக்கி அவர், “உங்களின் படுக்கையறை செருப்புகளைத் தூக்கி போடுங்கள். உங்களின் படை அணிவகுப்பின் காலணிகளை அணிந்து கொள்ளுங்கள்,” என்று அழைப்புவிடுத்தார். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை விட செல்வந்தர்களுக்கே அவருடைய நிர்வாகம் ஆதரவாக உள்ளதென விமர்சித்தவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கையில் ஹார்வர்டில் கல்விபெற்ற இந்த வழக்கறிஞர் தனது இறுதிப் பெருமுழக்கத்தில் முழங்கினார்: “உதறித் தள்ளுங்கள்; குறை கூறுவதை நிறுத்துங்கள்; நச்சரிப்பதை நிறுத்துங்கள்; அழுவதை நிறுத்துங்கள். நாங்கள் அழுத்தம் அளிக்கவிருக்கிறோம். நாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது,” என்றார்.      

உண்மையில், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபிய யுத்தங்களிலில் ஆரம்பித்து உழைக்கும் மக்களின் நலன்களைப் பலியிட்டு வங்கிகளுக்கும், பெரிய பெருநிறுவனங்களுக்கும் கையளிப்பது வரை தாயகத்தில் பெருநிறுவன அமெரிக்காவின் முக்கிய நலன்களுக்கும் மற்றும் அயலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நலன்களுக்கும் சேவை செய்வது தான் அந்தவேலை

பஃபெட் விதி என்பது ஒபாமாவின் இரட்டைவேடத்தின் ஒரு வெளிப்பாடு. அது ஒரு விதி கிடையாது. பெரும் பணக்காரர்களால் செய்யப்படும் வரி ஏய்ப்புகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்குகளை மட்டுப்படுத்த வெள்ளைமாளிகை எந்த உண்மையான நடவடிக்கையையும் முன்மொழியவுமில்லை. அல்லது அவ்வாறு செய்யப் போவதுமில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் பற்றாக்குறைக் குறைப்பில் குறைந்தபட்சம் 1.5 ட்ரில்லியன் டாலரைக் கொண்டு வருவதற்கான பொறுப்பளிக்கப்பட்டு வேலை செய்துவரும் காங்கிரஸின் இருகட்சிக் குழுவிற்கு அளித்திருக்கும் ஓர் ஆலோசனை என்பதற்கு மேல் அந்த "விதி" வேறொன்றுமில்லை.

ஒரு வெற்று ஆலோசனையாக கூட, பஃபெட் விதியை நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இது ஒபாமாவிற்கு நன்கு தெரியும். பற்றாக்குறை "சூப்பர்-கமிட்டியில்" இடம்பெற்றுள்ள ஆறு குடியரசு கட்சியினர் அனைவரும் செல்வந்தர்களுக்கு எவ்வித வரி அதிகரிப்புகளையும் எதிர்க்கும் பொறுப்பான எதிர்ப்பாளர்களாவர். அதேவேளை குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியினரில் ஒருவரான செனட்டர் மேக்ஸ் பௌக்கஸ், 2001இல் புஷ் நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட செல்வந்தர்களுக்கான வரி வெட்டுக்களை உடனிருந்து வடிவமைத்தவராவார். அந்த குழுவில் உள்ள மற்றொரு ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜோன் கெர்ரி, செனட்டிலேயே மிகவும் செல்வச்செழிப்பான மனிதராவார்.

அது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட, அந்த பஃபெட் விதி அமெரிக்க வரிவிதிப்பில் "நியாயமான" முறையை பிரதிநிதித்துவப்படுத்தாது. அது அமெரிக்க தாராளவாதம் செல்வாக்கு பெற்றிருந்த அந்த பாரம்பரிய கொள்கைக்குத் திரும்புவதைக் குறிக்காது. அக்காலக்கட்டத்தில் அந்த வரிக்கொள்கை பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு செல்வத்தை மிகக் குறைவாகவேனும் மறுபகிர்வு செய்வதை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்பட்டது. பஃபெட் போன்ற பில்லினியர்களால் அனுபவிக்கப்படும் சில வரிவிலக்குகளை மட்டுப்படுத்துவதன் மூலம், இன்று செல்வத்தை எதிர் திசையில், அதாவது ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மறுபகிர்வு செய்யும் அமெரிக்க வரிக்கொள்கையின் பல வழிகளில், ஒன்றேயொன்றை முடிவுக்குக் கொண்டு வர வெறுமனே அது அழைப்புவிடுக்கிறது.

பில்லினியர்களுக்கும், செயலர்களுக்கும் (secretaries) சமவரிவிதிப்பை நிறுவுவது என்பது எப்படி நியாயத்தை அடக்கியிருக்கும்? குறைந்தபட்சம், நியாயம் மற்றும் சமத்துவத்தைக் கவனத்தில் எடுத்திருக்கும் ஒரு வரிக்கொள்கையானது, கடந்த மூன்று தசாப்தங்களில் செல்வசெழிப்பிலும், வருவாயிலும் நிலவும் பலத்த துருவப்படுத்தலுக்குத் தீர்வு கூறவேண்டும். அந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்காவின் ஒரு சதவீதப் பெரும் பணக்காரர்களுக்கும், 40 சதவீத ஏழைகளுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி மூன்று மடங்கு அதிகமாகி விட்டிருந்தது. கடந்த தசாப்தத்தில், செல்வந்தர்கள் தேசிய வருவாயில் ஒவ்வொரு டாலர் அதிகரிப்பையும் கைப்பற்றி இருந்தனர். அமெரிக்க மக்கள்தொகையில் 10 சதவீதத்தினர் நாட்டின் செல்வவளத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றனர் என்ற வகையில், செல்வவள துருவமுனைப்பாடு இன்னும் அதிகமாக உள்ளது.  

குடியரசுக் கட்சியினர் "வர்க்கப் போர்" குறித்து ஓலமிடுகின்ற போதினும், வர்க்கங்களுக்கு இடையிலான உண்மையான உறவானது, தேசிய வருவாயின் ஒரு பங்காக பெருநிறுவன இலாபங்கள் சீராக அதிகரிப்பு காணும் நிலையில் அதற்கேற்ப ஊதியங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டே செல்வதில் விளங்கப்படுத்தப்படுகிறது. ரோபர் பாரோன்ஸ் காலக்கட்டத்திற்குப் பின்னர், தற்போது தான் தொழிலாள வர்க்கம் அதன் உழைப்பு உருவாக்கும் மதிப்பிலிருந்து மிகக் குறைந்த பங்கைப் பெறுகிறது.  

மத்திய அரசின் வரிக்கொள்கை இந்த பரந்த சமூக இடைவெளியை விரிவாக்கி மோசமடையச் செய்துள்ளது. செல்வம் படைத்த அமெரிக்கர்கள் மீதான வரி விகிதங்கள் 1950கள் மற்றும் 1960களில் சிறிதும்சோசலிசத்தின்" காவலரண்களாகக் கூறமுடியாத ட்ரூமேன், ஐசென்ஹோவர் மற்றும் கென்னடி நிர்வாகங்களின்கீழ் 91 சதவீதமாக இருந்ததில் இருந்து ரீகனின்கீழ் 50 சதவீதத்திற்குக் கீழும் மற்றும் தற்போது 35 சதவீதத்திற்கு கீழும் எனச் சரிந்துவிட்டது. நிதியியல் மூலதனத்தை இரண்டு தலைமுறைகளுக்கு மதிப்பிழக்கச் செய்த 1929 வோல் ஸ்ட்ரீட் உருக்குலைவுக்கு முன்னர் 1920களின் தொடக்கத்தில் இருந்த நிலைக்குப் பின் அதிக வருவாய்கள் மீதான வரிவிகிதங்கள் இப்போது தான் மிகக் குறைந்தவையாக உள்ளன.  

ஜனநாயக கட்சியினருக்கும், குடியரசு கட்சியினருக்கும் இடையிலான மத்திய அரசின் வரிக்கொள்கைகள் மீதான ஒட்டுமொத்த விவாதமும், தவறான முதற்கோளின்மீது நடத்தப்படுகிறது. இது ஏதோநியாயத்தை மீட்சி செய்வதான விவகாரம் இல்லை, சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை வியாபித்துள்ள ஒரு சமூகத்தில் அத்தகையதொரு விடயம் சாத்தியம் என்பதைப் போல. சோசலிச சமத்துவக் கட்சி முன்வைப்பது என்னவென்றால் செல்வமும் வருவாயும் பணக்காரர்களிடம் இருந்து உழைக்கும் மக்களுக்கு தீவிரமான வகையில் மறுவிநியோகம் செய்திடப்பட வேண்டும் என்பதைத் தான். எப்படிப் பார்த்தாலும் அந்த உழைக்கும் மக்களின் உழைப்பு தானே  சமூகத்தின் ஒட்டுமொத்தச் சொத்துக்களுக்கும் மூலவளமாக இருக்கிறது.   

பெரும் செல்வந்தர்களிடம் மிகவும் அதிர்ச்சியூட்டுமளவுக்கு குவிந்துள்ள தொகைகளிலிருந்து மிகக் கொஞ்சமாக எடுக்கும் ஒரு வரித் திருத்தத்தை அல்ல நாங்கள் கேட்பது, மாறாக முதலாளிமார்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நோக்கிய மற்றும் பொருளாதார வாழ்க்கையை சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பதை நோக்கிய ஒரு படியாக, வரிவிகிதங்களில் ஒரு தீவிர மாற்றத்தைக் கோருகிறோம். அதற்கு முதல்படியாக, $500,000க்கு மேல் பெறும் வருமானத்திற்கு குறைந்தபட்சம் 90 சதவீத விகிதத்திலான வரிவிதிப்பும், அதனுடன் சொத்து வரியும் சேர்த்து வசூலிப்பதும் கொண்ட ஒரு உண்மையான முற்போக்கு வரிவிதிப்பை மீட்சி செய்வதும் அத்துடன் புதிய தொழிலாளர்களை பணியமர்த்த மறுக்கும் வானளாவிய பெருநிறுவனங்கள் கொண்டிருக்கும் 2 டிரில்லியன் டாலர் பண மூட்டையைப் பறிமுதல் செய்வதும் இருக்கும். இத்தகைய நடவடிக்கைகள் வேலையின்றி இருப்போருக்கு வேலை அளிக்கிற மற்றும் அமெரிக்காவின் நொறுங்கி வரும் சமூக உள்கட்டமைப்பை மறுகட்டுமானம் செய்கிற ஒரு மிகப்பெரும் வேலைத்திட்டத்திற்கு நிதியாதாரத்தை வழங்கும்.     

உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் இருகட்சி அமைப்புமுறையில் இருந்து முறித்துக் கொள்வதும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பரந்த சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதும் இதற்கு அனைத்திலும் மேலான தேவையாக உள்ளது.