சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Stop the war mongers! Defend Günter Grass!

போர் வெறியர்களை நிறுத்துக! குந்தர் கிராஸைப் பாதுகாக்க!

Wolfgang Weber
11 April 2012

use this version to print | Send feedback

ஒரே நேரத்தில் பல ஐரோப்பிய, சர்வதேசச் செய்தித்தாட்களில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இஸ்ரேலின் போர்க் கொள்கைக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்த 84 வயது எழுத்தாளர் குந்தர் கிராஸின் அரசியல் கவிதை, செய்தி ஊடகம் மற்றும் முக்கிய அரசியல் நபர்களுடைய முன்னோடியில்லாத ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளது.

இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவரும் இன்னும் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ள உலகின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவருமான இவருக்கு எதிரான இத்தகைய அவதூறுப் பிரச்சாரம், ஜேர்மனிய ஆளும் வர்க்கம் மற்றும் வாஷிங்டன், டெல் அவிவில் உள்ள ஆளும் வர்க்கம் ஆகியவை ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்களை விமர்சிக்கும் தைரியம் உடையவர்களை அச்சுறுத்தி மௌனமாக்குவதில் தீவிரமாக உள்ளன என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது.

Die Zeit பத்திரிகையின் இணை ஆசிரியர் ஜோஸப் ஜோவ்வ கிராஸை ஒரு யூத எதிர்ப்பாளர், 16 வயதில் நாஜிகளின் SS ல் (கட்சியின் இராணுவம்) உறுப்பினராக இருந்தபோது அவருக்கிருந்த யூத எதிர்ப்பை இன்னும் விட்டுவிடவில்லை என்று விவரித்துள்ளார்.

இடது கட்சியின் ஜேர்மனிய தலைவர் பதவிக்கான சமீபத்திய வேட்பாளரும், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு ஆதரவளாருமான பெயார்ட்ட கிலாரஸ்பெல்ட்,  கிராஸை ஹிட்லருடன் ஒப்பிடும் அளவிற்குச் சென்றுள்ளார். கிராஸ் தன்னுடைய யூத எதிர்ப்புப் போராட்டத்திற்கு இஸ்ரேல்என்ற சொல்லைப் பயன்படுத்துகையில், ஹிட்லர் சர்வதேச யூத நிதியம் என்று குறிப்பிட்டார், இதுதான் வேறுபாடு என்று இந்த அம்மையார் தெரிவிக்கிறார்.

Axel Springer செய்தி ஊடகக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியான மத்தியாஸ் ரொப்னர் வெங்காயத்தின் அடித்தளம் பழுப்பு என்ற கட்டுரையில் எழுத்தாளரைத் தாக்கியுள்ளார்; இது கிராஸ் கடைசியாக எழுதியுள்ள நாவல் ஒன்றைப் பற்றிய குறிப்பு ஆகும்.

Waffen-SS ல் இளவயதில் குறுகிய காலம் கிராஸ் இருந்தது, ஒரு சூழ்ச்சியாக பயன்படுத்தி,  எழுத்தாளரின் சரியான, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர்வெறிக்குக் காட்டும் கொள்கைரீதியான எதிர்ப்பை, முற்றிலும் ஆதாரமற்ற, அவதூறுக் குற்றமான யூத எதிர்ப்பு என்று காட்டப்படுகிறது. இத்தகைய குணநலன்களை அழிக்கும் செயற்பாடு கிராஸின் மீதான அரசியல் தாக்குதலுடன் முற்றிலும் இயைந்துதான் உள்ளது. அதாவது இது எண்ணெய் வளம் உடைய பாரசீக நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு, ஆத்திரமூட்டல் ஆகியவற்றைப் பிற்போக்குத்தனமாக பாதுகாத்தல் என்றே பொருள்படுகின்றது.

இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு சற்று முன்னதாக கிராஸ் 16 வயதில் இராணுவச் சேவைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். இது ஒன்றும் அவராக விரும்பிச் சேர்ந்தது அல்ல. SS  ல் உறுப்பினராக அவர் இருந்த சில வாரங்களில் அவர் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை, ஒரு குண்டு கூடச் சுடவும் இல்லை. போருக்குப் பின் அவர் தன் முழு இலக்கியப் படைப்பையும் கடந்த காலத்தை எதிர்கொள்தல் நாஜிசம், போர், படுகொலை முகாம்களை எதிர்த்தல், அத்தகைய தீமைகள் மீண்டும் வராமல் போராடுதல் என்று ஒரே நோக்கத்திற்குத்தான் செலவழித்தார்.

ஜேர்மனியின் அனைத்து முக்கிய செய்தித் துறைகளின் அவதூறு, ஆக்கிரமிப்புப் பிரச்சாரத்தின் வெட்கம் கெட்டதனம், முதல் உலகப் போரின் போது செய்திஊடகம் நடந்து கொண்டவிதத்தைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. அப்பொழுதும் தேசியவாதிகளும் பாஸிஸ்ட்டுக்களும் அமைதிவாத பிரிவினர் மற்றும் எழுத்தாளர்களான எரிக் மரியா றிமார்க், குர்ட் ருஸொல்ஸ்கி, கார்ல் வொன் ஒஸிட்ஸ்கி, எர்வின் பிஸ்காரோர்  போன்றோருக்கு எதிரான வன்முறைத் தூண்டுதல்களை மேற்கொண்டிருந்தன.

இத்தகைய சக்திகளுக்கு எந்தப் பொய்யும் மிகப் பெரிது அல்ல, எந்த அவதூறும் மிக இழிந்ததும் அல்ல.

தன்னுடைய கவிதையில் கிராஸ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போர்த்திட்டங்கள் குறித்து பல உண்மைகளைக் கூறியுள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம், அணுவாயுதத்தைத் தயாரிப்பதாகக் கருதப்படும், ஆனால் அது நிரூபிக்கப்படாத நாட்டிற்கு எதிரான ஒரு முன்கூட்டிய தாக்குதலைநடத்தும் உரிமை உடையதாகத் தன்னை நினைத்துக் கொள்ளுகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலிடத்தில் பெருகிய அணுவாயுதத் திறன் உள்ளது, அதை அது இரகசியமாக வைத்துள்ளது, இது எத்தைகைய ஆய்விற்கும் உட்படாததால் கட்டுப்பாட்டை மீறி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனிய அரசாங்கத்தின் இழிந்த அரசியலையும் கிராஸ் குறைகூறியுள்ளார்: இந்த அரசாங்கம் மற்றொரு நீர்மூழ்கி கப்பலைஇஸ்ரேலுக்குக் கொடுத்துள்ளது; அதன் தாக்கும் திறன் பேராபத்து விளைவிக்கும் ஒவ்வொரு போர் ஆயுதத்தையும் கொண்டது ஆகும். இவ்வாறு இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுத்துள்ளதை இழிந்த முறையில் அரசாங்கம், கடந்த காலத்தில் ஜேர்மனி இழைத்த குற்றங்களுக்கான பரிகாரம் போன்றது என முன்வைக்க  முற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பலமிழந்துள்ள நிலையில் இருக்கும் உலக சமாதானத்தை இஸ்ரேலின் அணுச்சக்தி இன்னும் ஆபத்திற்கு உட்படுத்துகிறதுஎன்று கிராஸ் அப்பட்டமாகக் கூறியுள்ளார். ஜேர்மனியின் கடந்த காலம் பற்றிக் கூறுகையில், ஒப்புமை இல்லாத குற்றத்தைச் செய்துள்ள ஒரு நாடுஎன்று அவர் கூறியுள்ளார். தன்னுடைய குறைகூறல் இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதுதானே ஒழிய இஸ்ரேலிய நாட்டின்மீது அல்ல என்று அவர் வலியுறுத்தியுள்ளார்—“அந்நாட்டுடன் நான் பிணைப்புக் கொண்டிருக்கிறேன், பிணைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பேன். என்றார்.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவின் இஸ்ரேலிய அரசாங்கம் கிராஸை ஏற்கத்தக்க மனிதர் அல்ல என்று அவர் அந்நாட்டிற்கு வருவதைத் தடையும் செய்து உடனடியாக தனது ஆக்கிரோஷம் மற்றும் ஜனநாயகமற்ற தன்மையையும் உறுதிபடுத்தியுள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஜனநாயக-விரோதச் செயல்களோ அல்லது செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஆளும்வர்க்கதத்தின் ஆத்திரமூட்டல் செயல்களோ கிராஸின் உறுதிப்பாடுகளில் உள்ள உண்மையை மாற்ற முடியாது. இஸ்ரேல் அணுவாயுதப் பரவா உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை; சட்டவிரோதமாக பல தசாப்தங்களாக அணுவாயுதக் கிடங்கைக் கொண்டுள்ளது. இந்தக் குற்றம் சார்ந்த கொள்கைக்கு ஜேர்மனிய அரசாங்கமும் ஆதரவு கொடுத்துள்ளது. மிகச் சமீபத்தில் அணுவாயுதங்களை செலுத்தும் திறன் உடைய ஆறு நீர்மூழ்கிக்கப்பல்களை கொடுத்துள்ளது.

முற்றிலும் மாறாக, ஈரான் அணுவாயுதம் பரவா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது, சர்வதேச அணுச்சக்தி அமைப்பை அதன் அணு ஆராய்ச்சித் திட்டம், அணு நிலையங்கள் ஆகியவற்றை முறைப்படி ஆய்வு செய்ய அனுமதித்துள்ளது. ஈரான் அதன் அணுச் சக்தி நிலையங்களை இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறது என்பது குறித்த எத்தகைய சான்றும் இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், அது இவ்வாறு அனுமதித்துள்ளது.

இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களைத் தவிர, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல ஆண்டுகளாக இரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. அவற்றுள் ஈரானுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களும் அடங்கும். ஐந்து ஈரானிய அணுச்சக்தி விஞ்ஞானிகள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். உளவு பார்க்கும் ட்ரோன்கள் ஈரான்மீது வாடிக்கையாகப் பறக்கின்றன, வெடிமருந்துகள் மற்றும் சைபர் தாக்குதல்களும் நாட்டிலுள்ள தொழில்துறை நிலையங்களை சேதப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த உண்மைகள் எதுவும் ஜேர்மனியச் செய்தித் தாள்களில் குறிப்பிடப்படுவதில்லை. மாறாக, அவை அனைத்தும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய, இஸ்ரேலின் பிரச்சாரமான ஈரான் மிக விரைவில் அணுவாயுதங்களைத் தயாரிக்கும், இஸ்ரேலுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தும்என்ற கருத்தைக் கிளிப்பிள்ளை போல் கூறுகின்றனஇத்தகைய ஒருமித்த கோஷத்தைத்தான் கிராஸ் மிகவும் சரியாக சர்வாதிகாரத்தில் காணப்படும் செய்தி ஊடகத்திடம் எதிர்பார்க்க முடியும் என்று முத்திரையிட்டுள்ளார்.

எல்லா அவதூறுகளையும் போலவே, கிராஸின் யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுக்கள் எதையும் நிரூபிக்கும் தீவிர முயற்சி ஏதும் இல்லை. மாறாக, இஸ்ரேலியக் கொள்கை பற்றிய குறைகூறல், மக்களைத் திருப்தி செய்யும் வகையில் யூதர்கள் எதிர்ப்பு என்று கூறப்படுகிறது. இவ்வாறு குற்றம்சாட்டுபவர்கள் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் ஈரான் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை எதிர்க்கின்றனர் என்னும் உண்மையைப் புறக்கணிக்கின்றனர்.

கிராஸின் மீது இச்சேற்றைத் தெளிக்கும் பிரச்சாரம் போர்த் தயாரிப்புக்களின் உண்மைக் காரணங்களை மூடிமறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவை ஒன்றும் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்பற்றவை. இவ்வாறுதான் ஈராக் மீது படையடுப்பதற்கு முன் உந்துதலாக அந்நாட்டில் இருந்ததாகக் கூறப்பட்ட பேரழிவுதரும் ஆயுதங்கள் பற்றியும் அல்குவேடாவுடனான உறவுகள் பற்றியும் கூறப்பட்டன. அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்கு நட்பு நாடான இஸ்ரேலும் மூலோபாயப் பிராந்தியம், அதன் பரந்த எரிசக்தி வழங்கள் ஆகியவற்றின்மீது இராணுவ மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் உந்துதலை மறைப்பதற்காக மீண்டும் இப்பொழுது பொய்கள் கூறப்படுகின்றன.

கிராஸிற்கு எதிரான தீய, ஒருங்கிணைந்த ஆத்திரமூட்டும் செயல்களின் தன்மை ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுக்க முடிவு எடுத்துவிட்டதைத்தான் குறிப்புக் காட்டுகிறது. இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தின் வாய்ப்புக்குறித்து பேர்லினில் கவலைகள் இருப்பது உறுதிதான். இது ஜேர்மனியின் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரின் தொடக்கத்தில் இருந்த தயக்கங்களில் பிரதிபலித்தது. ஆனால் ஜேர்மனிய ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கின் மீதுள்ள அமெரிக்க அல்லது ஜேர்மனியின் முக்கிய போட்டி நாடுகளான பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை என்பதால் அதுவும் ஈரான் சீரழிக்கப்படுவதில் சேரவேண்டும் என்று உணர்கிறது.

ஜேர்மனிய வெளியுறவுமந்திரி கீடோ வெஸ்டர்வெல்லேயின் கிராஸிற்கு எதிரான சொற்கள், ஜேர்மனிய அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே ஈரானுக்கு எதிரான அடுத்த ஏகாதிபத்திய சக்திகளின் போருக்குத் தயாராக உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. சிரியாவிற்கு எதிரான ஆக்கிரோஷம் அதிகரிப்பதை பேர்லின் இன்னும் பெரிய செயற்பாடுகள் வரவிருப்பதற்கு முன்னோடி என வரவேற்கிறது.

ஜேர்மனிய அரசியல் ஆளும்தட்டின் அனைத்துக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும்கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், சுதந்திர ஜனநாயகக் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக்கட்சி, இடது கட்சியைச் சேர்ந்தவர்கள்கிராஸிற்கு எதிரான கூக்குரலில் சேர்ந்துள்ளனர். இது பெயரளவிற்கு இடது உட்பட முழு உத்தியோகபூர்வ அரசியல் பிரிவினரும் ஒரு புதிய ஏகாதிபத்தியப் போருக்கு ஆதரவை அளிக்கின்றன என்பதைத்தான் நிரூபிக்கிறது.

போருக்கான இப்பிரச்சாரம்தான் ஈரானிய மக்களுக்கும், இஸ்ரேலில் உள்ள யூத மக்களுக்கும் உண்மையான ஆபத்தை தருகிறதே தவிர குந்தர் கிராஸ் அல்ல.

மத்திய கிழக்கில் போரை எதிர்க்கும் அனைவரும், ஒரு புதிய உலகப் போருக்கான பெருகும் அச்சுறுத்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும், குந்தர் கிராஸிற்கு ஆதரவு கொடுத்து, பேர்லின், வாஷிங்டன், டெல் அவிவ் இல் உள்ள போர் வெறியர்கள் மற்றும் செய்தி ஊடகத்தில் உள்ள அவர்களுக்கு வக்காலத்துவாங்குபவர்களையும் எதிர்க்க வேண்டும்.