சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain’s Trade Unionist and Socialist Coalition offers to do Labour Party’s dirty work

பிரித்தானியாவின் தொழிற்சங்க மற்றும் சோசலிஸ்ட் கூட்டணி தொழிற் கட்சியின் இழிந்த செயலைச் செய்யத் தயார் என்று கூறுகின்றன

By Julie Hyland
21 April 2012
use this version to print | Send feedback

தொழிற்சங்கவாத மற்றும் சோசலிஸ்ட் கூட்டணி (TUSC) மற்றும் Southampton இல் தொழிற் கட்சி இரண்டிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களைப் பற்றி சோசலிஸ்ட் கட்சி சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மார்ச் இறுதியில் நடந்த இக்கூட்டம், மே 3ம் திகதி நடக்க இருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களில் டோரி நகரவைச் செலவு வெட்டுக்களுக்கு எதிரானவற்றை விவாதிப்பதற்கு என்ற பெயரில் கூட்டப்பட்டது.

Southampton கன்சர்வேடிவ் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் ஓர் உள்ளூராட்சி ஆகும். கடந்த ஆண்டு டோரி-லிபரல் டெமக்ராட் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ஒட்டி 5.5% ஊதியக் குறைப்புக்கள் மற்றும் 4,600 பேர் உள்ள ஊழியர்கள் மீது தடையின்றி பணியில் எடுக்கவும் நீக்கவும் அதிகாரம் கொண்டிருந்த ஒப்பந்தங்களை சுமத்திய பல நகரவைகளில் இதுவும் ஒன்று ஆகும்.

இத்தாக்குதல்களை எதிர்த்துப் பரந்த எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, SP, நகரவையை வெல்தில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அது நடந்துகொண்டு வரும் முறை உரிய சிறப்பைக் கொண்டிருக்கவில்லை என்ற தகவலைக் கொடுத்துள்ளது.

தன்னுடைய தேர்தல் வாய்ப்புக்கள் குறித்து தொழிற் கட்சி கொண்டிருக்கும் தளர்ச்சியை ஒட்டி, அது TUSC  ஐ அது போட்டியிடும் சில உட்தொகுதிகளில் இருந்து தன் வேட்பாளர்களைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டது. தொழிற் கட்சியின் திட்டம் குறித்து காரசாரமான விமர்சனங்களை வைத்தாலும் கூட வெட்டுக்களுக்கு எதிராக முன்வைத்த திட்டங்கள் எதையும் TUSC நிராகரிக்கவில்லை என்று SP கூறியுள்ளது.

மாறாக அது தொழிற்சங்கங்கள், சமூகம் மற்றும் கட்சிச் செயலர்களுடன் ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும், அதில் வெட்டுக்களுக்கு எதிராக எப்படிப் போராடுவது என விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. இந்த அடிப்படையில், நாம் எவ்வகையில் வேட்பாளர்கள் சிறந்த முறையில் நிறுத்தப்படலாம் என்பதைப் பின்னர் முடிவு செய்யலாம்.

TUSC ஐப் பொறுத்தவரை துரதிருஷ்டம் என்னும் வகையில் தொழிற் கட்சி சில தொகுதிகளில் மற்ற வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் தன் வேட்பாளர்களை நியமிக்கக் கூடாது என்னும் ஆலோசனை உடனடியாக நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று SP தகவல் கொடுத்துள்ளது.

TUSC ஒரு தேர்தல் முகாமிற்காக கொடுத்த திட்டம் தொழிற் கட்சியின் பிடிவாதத்தினால் மட்டும் செயலற்றுப் போகவில்லை. அத்தகைய உடன்பாடு அளிக்க முன்வந்தது என்பதே TUSC  மற்றும் அது தொழிற் கட்சிக்கு சோசலிச மாற்றீடாகக் கொண்டுவரும் போலி இடது குழுக்களுடைய போலித்தனங்களை அம்பலப்படுத்துகிறது.

சோசலிஸ்ட் கட்சி, சோசலிச தொழிலாளர் கட்சி, பல போலி இடதுகள் மற்றும் வெட்டுக்களை எதிர்க்கும் பிரச்சாரகர்கள் ஆகியோரை அடக்கிய நிலையில், TUSC இரயில், கப்பல் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தின் தேசிய நிர்வாகக்குழு மற்றும் தீயணைப்புப் படைத் தொழிற்சங்கத்தின் லண்டன் நிர்வாகம் மற்றும் தேசிய, உள்ளூர் அளவில் இருக்கும் பிற தொழிற்சங்க அதிகாரிகளுடைய ஆதரவிற்கு உட்பட்டுள்ளது.

தொழிற்சங்க ஆதரவு என்பதின் பொருள் TUSC தேசிய அளவில் உள்ளூராட்சித் தேர்தல்களில் 132 வேட்பாளர்களை நிறுத்த முடியும், மற்றும் லண்டன் பெருநகர மன்றத்திற்கு 17 வேட்பாளர்களை நிறுத்த முடியும் மற்றும் லிவிர்பூலில் மேயர் பதவிக்கான தேர்தலுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த முடியும் என்பதாகும்.

வெட்டுக்கள் கூடாதுஎன்னும் அதன் செயற்பட்டியலில் அவர்கள் கையெழுத்திட்டால், “சிக்கன நடவடிக்கைக்கு எதிரான சீற்றம் என்னும் கோஷத்தின்கீழ் எவரும் ஒரு TUSC வேட்பாளராக நிற்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தகைய ஈடுபாடு எந்த அளவிற்கு ஏமாற்றுத்தனம் நிறைந்தது என்பது Southampton இல் தெளிவாகிறது; அங்கு TUSC தொழிற் கட்சியுடன் பேச்சுக்களை நடத்துகிறது, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றிலும் உடன்பட்டுக் கையெழுத்திடுகிறது. கடந்த ஆண்டு நகரவை வரவு-செலவுத் திட்டம் கன்சர்வேடிவ் மற்றும் தொழிற் கட்சியால் கிட்டத்தட்ட ஒருமாதிராயன வெட்டுக்களை14 மில்லியன் பவுண்டுக்கள், 13 மில்லியன் பவுண்டுகள் முறையே என அளித்தன. நகரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது 34 மில்லியன் பவுண்டுகளை வெட்ட இருப்பதாக தொழிற் கட்சி தெரிவித்துள்ளது.

இச்சூழ்நிலையில்தான் TUSC தன்னுடைய வேட்பாளர்கள் சிலரை மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வது குறித்தும் அதையொட்டி தொழிற் கட்சி இதற்கு ஒரு எலும்புத் துண்டை அளித்து அதிகாரத்தைப் பெறுவதற்கு உதவ விவாதிக்கத் தயாராக இருக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல், “TUSC சோசலிஸ்ட் அல்ல, எந்தப் பயனுடைய கருதுதலிலும் ஒரு எதிர்த்தரப்புப் போக்கு கொண்ட அமைப்பும் அல்ல. தொழிற்சங்கக் கருவியின் சார்பில் ஒரு அரசியல் பொலிஸ் சக்தியாகச் செயல்படுகிறது; அது நிராகரிப்பதாகக் கூறும் அதே கட்சியின் இணைப்பு போல் செயல்படுகிறது.

இதன் மூலங்கள் ஒரு முந்தைய தேர்தல் கூட்டணியான No.2EU என்று SP, பிரித்தானியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPB) Morning Star ஐ வெளியிடும் ஸ்ராலினிசக் குழு ஆகியவற்றிற்கு இடையில் இருந்ததில் இருந்தன. CPB அந்தநேரத்தில் தொழிற் கட்சிக்கு எதிராக நிற்பதை எதிர்ப்பதால் TUSC யில் பங்கு பெறுவதற்கு இல்லை என்று மறுத்த நிலையில், SP இக்கூட்டைப் பயன்படுத்தி தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் உறவுகளைக் கட்டமைக்க பயன்படுத்துகிறது; இவைதான் ஒரு புதிய தொழிலாளர் கட்சி கட்டமைக்கப்படுவதற்கு ஒரே தளம் என்று அது கூறுகிறது.

இவ்வகையில் TUSC தொழிற்சங்க அதிகாரத்துவங்கள்அவை பல போலி இடது குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளன, அல்லது பிளவுற்ற முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள்தொழிற் கட்சியின் வலதுசாரித்தன, பெருவணிகச் செயற்பட்டியலுக்கு குறைகூறுபவர்கள் என்று காட்டிக் கொண்டு, அதே நேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான விரோதப் போக்கை அதன் இடது பற்றிப் பேசும் பிரதிநிதிகளிடம் விட்டுவிடும் வகையில் திசைதிருப்ப முற்படும்.

RMT உத்தியோகபூர்வ ஆதரவை, பாராளுமன்றக் குழுவில் தொழிற்கட்சி உறுப்பினர்களுக்கு கொடுக்கிறது; தொழிற் கட்சி எம்.பி.க்களின் பிரச்சாரக் குழுவின் ஒரு டஜன் உறுப்பினர்களுக்கு தலைவரான ஜோன் மக்டோனல் TUSC நிகழ்வுகளைப் பற்றி வாடிக்கையாப் பேசுபவர் ஆவார்.

TUSC இன் பிரச்சாரத்தின் முக்கிய கூறுபாடு தங்களுக்கு எதிராக நிகழ்வுகள் செல்கின்றன என்றவுடன் கப்பலை விட்டுக் குதித்துவிட்ட முன்னாள் தொழிற் கட்சி சார்பாளர்களை இனம் பிரித்து எடுப்பது என்பதாகும்.

TUSC எப்படி தொழிலாள வர்க்கத்தை தொழிற் கட்சி அதிகாரத்துவத்திற்கு தாழ்த்துவதற்காகச் செயல்படுகிறது என்பதற்கு முக்கியமான உதாரணம், தொழிற் கட்சியின் கென் லெவிங்ஸ்டனுக்கு எதிராக மே 3 ல் நடக்க இருக்கும் லண்டனின் மேயர் தேர்தல்களில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று எடுத்துள்ள அதன் முடிவாகும்.

 

TUCS இன் ஜனவரி மாத தேசிய மாநாடு இந்நிலையை ஏற்றுள்ளது என சோசலிஸ்ட் வேர்க்கர் குறிப்பிடுகிறது; ஏனெனில் RMT, FBU இரண்டுமே இது சிறந்த மூலோபாயமாக இருக்காது என்று உணர்ந்ததால்தான்.

RMT  தலைவர் பாப் க்ரோ லெவிங்ஸ்டனுடைய வேட்புத்தன்மையைப் பற்றிப் பெரிதும் பாராட்டிப் பேசியுள்ளார்; இந்த மூத்த தொழிற் கட்சி சந்தர்ப்பவாதி பலமுறையும் லண்டன் நிலத்தடி இரயில் தொழிலாளர்களும் மற்றவர்களும் வேலைகள், பணிநிலைகளக் காப்பதற்கு வேலைநிறுத்தங்கள் நடத்தியபோது அவற்றை இவர் கண்டிருத்தபோதிலும்கூட.

 “கென்னிடம் இருந்து நான் தொலைவில் சென்றதே இல்லை. என்னுடைய சகோதர, சகோதரியுடன் வேறுபாடுகள் வருவது போல் எங்களுக்குள் வேறுபாடுக்ள் உண்டு; ஆனால் மொத்தத்தில் கென் நல்லவர். என்று கூறிய க்ரோ லிவிங்ஸ்டனுக்கு RMT யின் நிதிய ஆதரவைக் கொடுத்துள்ளார்.

லெவிங்ஸ்டனுக்காக TUSC போட்டியில் இறங்குவதில்லை என்று SP கூறுவது தன்னுடைய பிரச்சாரத்திற்கு ஆதரவு என உட்குறிப்பாக ஆகாது என்றாலும், SWP அத்தகைய போலித்தனம் எதையும் கொள்ளவில்லை.  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடந்த இதன் தேசிய மாநாடு கூறியது: நாங்கள் தொழிற் கட்சி கென் லிவிங்ஸ்டனுடைய லண்டன் மேயர் பதவிக்கான வேட்பிற்கு ஆதரவு கொடுப்போம்.

SP  இன் இரட்டைக் கணக்குகள் இருந்தபோதிலும்கூட, Southampton பேச்சுக்களைப் பற்றி அது கூற முடிவெடுத்தள்ளது, எந்த வகையில் அது அதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளது என்பது தொழிற் கட்சியுடன் அதன் உறவுகளை ஒருங்கிணைக்கும் வழிவகையாகத்தான் விளக்கப்படமுடியும்.

SP மார்ச் மாத இறுதி கூட்டத்தில் என்ன நடைபெற்றது என்பதைத் துல்லியமாகக் கூறவில்லைஅதாவது ஏப்ரல் 4 வரையிலான காலம் வரை. இந்த நேரத்தில்தான் தொழிற் கட்சி மார்ச் 29 ல் நடைபெற்ற பிராட்போர்ட் மேற்கு இடைத்தேர்தலில் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்ததை அறிந்தது. பாதுகாப்பான தொகுதி என்று கருதப்பட்டதில், தொழிற் கட்சியின் வாக்குகள் பெற்ற பங்கு 20% சரிந்தது; தொகுதியில் முன்னாள் எம்.பி.யும் தற்பொழுது ரெஸ்பெக்ட் கட்சியின் தலைவரான ஜோர்ஜ் காலோவே வெட்டுக்கள்-எதிர்ப்பு, போர்-எதிர்ப்பை வலியுறுத்திய வேட்புத்தன்மையில் வெற்றிபெற்றார்.

தேசியத் தேர்தல்கள் தவிர்க்க முடியாமல் வரவிருக்கையில், இந்தத் தேர்தல் முடிவு தொழிற் கட்சி முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கொடுத்து, அதன் Southampton கிளை TUSC க்கு இனியும் தோல்வியை தவிர்ப்பதற்கு உதவிக்கு வரமுடியுமா என்று கேட்க வைத்திருக்க வேண்டும்;

இதன் கவலைகள் TUSC இன் முக்கிய பிரமுகர்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மார்ச் 31ம் திகதி CPB இன் சிறப்பு மாநாடு லண்டனில் இன்னும் உறுதியாகத், திட்டமிட்டு, ஒருங்கிணைந்த வகையில் கொள்கைகளை மாற்றவும், தேவையானால் தொழிற் கட்சியின் தலைமையை மாற்றவும் என்பதை விவாதிப்பதற்குக் கூட்டப்பட்டது.

மாநாட்டில் தன்னுடைய உரையில் முன்னாள் CPB உறுப்பினரான க்ரோ, பிராட்போர்ட் வெஸ்ட்டில் தொழிற் கட்சியின் தோல்வி பிரித்தானியாவில் 100 முறைகள் மீண்டும் வரும்..... ஏனெனில் இளைஞர்கள் மூன்று முக்கிய கட்சிகளையும் நம்புவது போதும் என்கின்றனர் என்று எச்சரித்தார்.

 “தன்னுடைய சட்டைக் கைகளை மடித்து விட்டுக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டால் ஒழிய, தொழிற் கட்சி இனி ஒருபோதும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாது என்றார் அவர்.

மிகக் குறைந்த மாறுதல்களைச் செய்யக்கூட தொழிற் கட்சி விருப்பமின்றி உள்ளது. Southampton தொழிற் கட்சிக்கும் TUSC க்கும் இடையேயான பேச்சுக்களுக்குச் சில நாட்களுக்குப் பின், தொழிற் கட்சி தலைவர் எட் மிலி பாண்ட் Southampton க்கு சென்றுபகிர்ந்து கொள்ளப்படும் தியாகம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை பற்றிய முரசை முழக்கினார்.

போலி இடதுகளைப் பொறுத்தவரை, தொழிற் கட்சியின் நெருக்கடி, அதிகாரத்துவத்திற்குத் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பு என்று காணப்படுகிறது. Southampton பேச்சுக்கள் பற்றிய விவரங்களை வெளியிடுகையில், SP தொழிற் கட்சிக்கு தேசிய அளவில் தான் ஒத்துழைக்கத்தயார் என்னும் தெளிவான செய்தியை கூறியுள்ளது.