சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold May Day meeting

இலங்கை சோசலிச சமத்துவ கட்சியின் மே தினக் கூட்டம்

By the Socialist Equality Party
21 April 2012

இலங்கையில் சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 அன்று கொழும்பில் ஒரு பொது கூட்டத்தை நடத்தவுள்ளன.

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்களின் முதுகின் மீது சுமத்துகின்ற நிலையில், தொழிலாளர்கள் தொழில், ஊதியம், வாழ்க்கை நிலைமை, தொழில் நிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உக்கிரமடைந்துவரும் தாக்குதல்கள் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை காக்க போராடுகின்ற நிலையில், இது உலகம் முழுவதும் வர்க்க போராட்டத்தை தீவிரமடையச் செய்துள்ளது.

உலகப் பொருளாதார பொறிவு ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான பகைமைகளுக்கு எண்ணெய் வார்க்கின்றது. லிபியாவில் ஒரு பொம்மை ஆட்சி நிறுவப்பட்ட பின்னர், அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய சக்திகளும் இதே போன்ற ஆட்சி மாற்றத்தை சிரியாவிலும் திணிக்க முயல்வதுடன் ஈரானுக்கு எதிராக இராணுவ ஆக்கிரமிப்புக்கும் தயார் செய்துகொண்டிருக்கின்றது.

தெற்காசியா நேரடியாக இந்த உலக நகர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான அமெரிக்கவின் தீவிரமான மோதலில் இந்தியாவும் இலங்கையும் மேலும் மேலும் சிக்கிக்கொள்வதோடு, உலகப் பொருளாதார மந்தநிலையாலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், உழைக்கும் மக்கள் மீது தனது தாக்குதலை உக்கிரமாக்கிய இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, மேலும் செலவு வெட்டுக்களை முன்னறிவித்துள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னோக்கிச் செல்ல ஒரே வழி, ஏகாதிபத்திய போரின் தோற்றுவாயான, தமது உரிமைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுக்கும் முதலாளித்துவ முறைமையை தூக்கிவீசிவதே ஆகும். அதற்கு உலக சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட அரசியல் இயக்கம் ஒன்று அவசியமாகும். சோசலிச சமத்துவ கட்சி மட்டுமே, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதனது சகோதர கட்சிகளுடன் இந்த முன்நோக்குக்காக போராடி வருகின்றது. எமது கூட்டத்துக்கு வருகை தந்து, அங்கு நடக்கும் அத்தியாவசியமான கலந்துரையாடலிலும் பங்குபற்றுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

பிரதான உரை: சோசலிச சமத்துவ கட்சியின் பொது செயலாளர் விஜே டயஸ்

இடம்: புதிய நகர மண்டபம், கிரீன் பாத், கொழும்பு 7

திகதியும் நேரமும்: மே 1, மாலை 3 மணி