World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Political issues in the French presidential election

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Alex Lantier
25 April 2012
Back to screen version

ஞாயிறன்று நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமான அரசியல் நெருக்கடியையும் அத்துடன் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் தீவிரமான அபாயங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளது. நான்காண்டு கால உலகளாவிய பொருளாதார நெருக்கடி, மத்திய கிழக்கிலான ஏகாதிபத்தியப் போர் மற்றும் தகர்ந்துபோகும் அரசு நிதிநிலைகள் ஆகியவற்றின் மூலம் முக்கியமாய் அரசியல் ஆதாயம் அடைந்திருப்பது யாரென்றால் நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) மரின் லு பென் தான் முன்னால் வந்து நிற்கிறார்.

FN 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதுவரையான தேர்தல்களில் இக்கட்சி பெற்றிருக்கும் அதிகப்பட்ச வாக்குவீதமாகும் இது. மே 6 அன்று நடைபெறவிருக்கும் அடுத்த சுற்றுத் தேர்தலுக்கு முன்னேறியிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகிய இரண்டு வேட்பாளர்களுக்கும் அடுத்த மூன்றாவது இடத்தை முதல் சுற்றில் FN பெற்றது.

சார்க்கோசியின் மக்கள் இயக்கத்திற்கான ஒன்றிய (UMP) அரசாங்கம் நடத்திய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் மீது மக்களிடம் எழுந்திருக்கக் கூடிய பிரம்மாண்ட அதிருப்தியை தேர்தல் வெளிப்படுத்தியது. ஆயினும் இந்த அதிருப்தியானது எந்த முற்போக்கான வெளிப்பாட்டையும் காண முடியவில்லை. ஏனென்றால் முக்கிய முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டப்பட்ட நிலையில் இருந்து கொண்டு புரட்சிகர சொல்லாடல்களைக் கக்கக் கூடிய சோசலிஸ்ட் கட்சி (PS), தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகள் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான, இடதுதிசையிலான இயக்கத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு விடுகின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், அரசியல் ஸ்தாபகத்தின் (political establishment) மிகப் பிற்போக்கான சக்திகள் தங்களைஸ்தாபக-விரோதமற்றும்சிக்கன நடவடிக்கை-விரோதகட்சியாய் காட்டிக் கொள்வதற்கும் அத்துடன் வெகுஜனக் கோபத்தை புலம் பெயர் விரோத மற்றும் முஸ்லீம் விரோத இனவாதத்திற்குப் பின்னாலும் பிரெஞ்சு தேசிய வெறிக்குப் பின்னாலும் திசைதிருப்பி விடுவதற்கும் இயலுகிறது. உத்தியோகபூர்வஇடதும் மற்றும் அதன்அதி இடதுஎன்று சொல்லக் கூடிய கூட்டாளிகளும் மெல்ல மெல்ல வலதின் பக்கம் நகர்வு கண்டது தான் இந்த நெருக்கடியில் தேசிய முன்னணி (FN) வலிமை பெற்று எழுந்து வருவதற்கு வழிவகை அமைத்துத் தந்திருக்கிறது.

PS மற்றும் UMP இடையிலான இரண்டாம் சுற்றுத் தேர்தல் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குவது எதுவுமில்லை. 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னதாய் சார்ல்ஸ் டு கோல் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகியது முதல் 43 வருடங்களாக PSம் UMP இல் இருக்கும் பல்வேறு வலது சாரி போக்குகளும் தான்  ஜனாதிபதிப் பதவியையும் பிரதமர் பதவியையும் கைமாற்றிக் கொண்டு வந்திருக்கின்றன. அடுத்து வரும் ஜனாதிபதிக்கு, அது சார்க்கோசியோ ஹாலண்டோ, எதிராகவும் ஐரோப்பிய முதலாளித்துவத்துக்கு எதிராகவும் ஒரு அரசியல் சுயாதீனமான இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே பிரான்சில் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கின்ற அதிமுக்கிய பணியாகும்.

சோசலிஸ்ட் கட்சியின் விடயத்தில், கட்சியின் பெயரில் தவிர சோசலிசம் சம்பந்தப்பட்டது எதுவும் கிடையாது. 1969 இல் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின் முன்னாள் விஷ்சி ஒத்துழைப்புவாத அரசியல்வாதியான பிரான்சுவா மித்திரோனுக்கு தேர்தல் வாகனமாக மாற்றியமைக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி, முதலாளித்துவ நிர்வாகிகளின் ஒரு அடுக்கினை குட்டி முதலாளித்துவஇடதுகட்சிகளது ஆட்களுடன் ஒன்றிணைத்தது. இவர்களில் முன்னாள் ட்ரொட்ஸ்கிச அமைப்பான சர்வதேசியவாத கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) உறுப்பினராக இருந்தவரும் பின் 1997 முதல் 2002 வரை பிரதமராகப் பதவி வகித்தவருமான லியோனல் ஜோஸ்பன் போன்ற மனிதர்களும் இருந்தார்கள்.

1981 இல் தொழிலாள வர்க்கம் தீவிரமயப்பட்டுக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) கூட்டணி சேர்ந்ததன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மித்திரோன் வெகுவிரைவிலேயே பெருகி வந்த வர்த்தகப் பற்றாக்குறைகளும் வங்கிகள் பொறியமைவு செய்த மூலதனச் சண்டைகளும் அளித்த நெருக்குதலின் கீழ் தனது சீர்திருத்த வேலைத்திட்டத்தைக் கைவிட்டார். பின் அவர் தனதுசிக்கன நடவடிக்கைத் திருப்பம்என்று கூறப்பட்ட போட்டித் திறன் குறைந்த தொழிற்சாலைகளை அகற்றுவதற்கான ஈவிரக்கமற்ற முன்னெடுப்பில் இறங்கினார். 1970களில் தொழிலாள வர்க்கத் தீவிரமயத்தின் மையங்களாய் இருந்த இரும்பு மற்றும் நிலக்கரித் தொழிற்சாலைகள் போன்றவை அழிக்கப்பட்டன.

எழுச்சி கண்டு வந்த வலது சாரி வாக்குகளைப் பிரிக்கும் நோக்கத்துடன், மித்திரோன் FN இன் ஊடக பிம்பத்தை ஊதிப் பெருக்க உதவினார். தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவஇடதுநடத்திய தாக்குதல்களில் இருந்தும், தொழிற்சங்க அதிகாரத்துவம், அதன் குட்டி முதலாளித்துவஇடதுகூட்டாளிகளது உதவியுடன் தொழிலாள வர்க்கப் போராட்டங்களைத் தொடர்ந்து விலைபேசியதில் இருந்தும் ஆதாயம் பெற்று இந்த நவ பாசிசக் கட்சி எங்கிருந்தது என்பதே தெரியாமலிருந்ததில் இருந்து எழுந்து வந்தது.

1995 இல் ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான ரயில்பாதை வேலைநிறுத்தம் அலென் ஜுப்பேயின் வலது சாரி அரசாங்கத்தைக் கீழிறக்கிய பின்னர் 1997-2002 ஜோஸ்பன் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. சமூக வேலைத்திட்டங்கள் மீதும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீதும் ஜோஸ்பன் நடத்திய தாக்குதல்கள் தான் சென்ற ஞாயிறன்றான வாக்கெடுப்புகளுக்கு முன்பு வரை FN இன் பெரும் ஜனாதிபதி வேட்புநிலை வாக்குகளுக்கான அடித்தளத்தை அமைத்தளித்திருந்தது. தற்போதைய தேர்தலில் ஹாலண்ட், சோசலிஸ்ட் கட்சி சோசலிசம் தொடர்பாய் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வங்கிகளுக்கு உறுதியளித்த சமயத்தில், ஜோஸ்பனின் தனியார்மயமாக்கக் கொள்கைகளையே சூசகம் செய்தார். “பிரான்சில் இன்று கம்யூனிஸ்டுகள் என்று ஒருவரும் இருக்கவில்லை”. “இடது, பொருளாதாரத்தை தாராளமயமாக்கியதோடு சந்தைகளை நிதிக்கும் தனியார்மயமாக்கத்திற்குமாய் திறந்து விட்டது. பயப்படுவதற்கு எதுவுமில்லைஎன்றார் அவர்.

2002 இன் ஜனாதிபதித் தேர்தல் முதல் சுற்றில், FN ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மரி லு பென் அவப்பெயரைச் சம்பாதித்திருந்த ஜோஸ்பனை நூலிழை வித்தியாசத்தில் முந்தி அதிகாரத்தில் இருந்த வலது சாரி கோலிச ஜனாதிபதியான ஜாக் சிராக்குக்கு எதிரான அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். LCR (புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முன்னோடி), LO (தொழிலாளர் போராட்டம்), மற்றும் PT (OCI இன் வாரிசு அமைப்பு) ஆகிய குட்டி முதலாளித்துவஇடதுகுழுக்கள் தங்களை தீவிரமயப்பட்ட சோசலிஸ்ட் கட்சிகளாய் காட்டிக் கொண்டு மில்லியன் கணக்கில் வாக்குகளைப் பெற்று மொத்தமாய் 11 சதவீத வாக்குகளை வென்றன என்கின்ற போதிலும் பரவலாய் முறையற்றதாகக் கருதப்பட்ட ஒரு தேர்தலுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு இவை எந்த முயற்சியும் செய்யவில்லை. பதிலாக முதலாளித்துவத்திற்கு நெருக்குதல் குழுக்களாய் மட்டும் செயல்பட அவை தீர்மானித்ததால் லு பென்னுக்கு எதிராய் பிரெஞ்சு முதலாளித்துவக் குடியரசைப் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுத்து சிராக்குக்குப் பின்னால் அவை அணிதிரட்டின.

சிராக் நடத்தவிருக்கும் சமூக வெட்டுகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்குத் தயாரிப்பு செய்வதற்கான ஒரு வழிமுறையாக ஜனாதிபதித் தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்க வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுத்தது. குட்டி முதலாளித்துவஇடதுகுழுக்கள் மூன்றுமே ICFI இன் அழைப்பை நிராகரித்தன. ICFI எச்சரித்திருந்ததைப் போல, பிரதான முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஒட்டுவாலாய் ஒட்டிக் கொள்வதென்னும் இவற்றின் சரணாகதிக் கொள்கையானது, FN ஐ தடுத்து நிறுத்துவதற்கு அல்லாமல், அதனை வலுப்படுத்தவே செய்தது, ஒரே எதிரணிப் போக்காக தம்மைக் காட்டிக் கொள்வதற்கு நவ-பாசிசவாதிகளை அனுமதித்தது

குட்டி முதலாளித்துவஇடதுகளிடம் இருந்து இந்த ஆதரவைப் பெற்றதால் ஆயுதபாணியாகிய சிராக்கும் அவருக்குப் பின் சார்க்கோசியும் சிக்கன நடவடிக்கைகளை முன் தள்ளினர். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் தொடர்ந்து குழிபறித்தது. இவர்களது நம்பிக்கைத் துரோகத்தை போலி-இடது அமைப்புகள் மறைத்தன, வழியமைத்துத் தந்தன. இதே குழுக்கள் தான் (அல்லது இவற்றின் வாரிசு அமைப்புகள்) புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை (முக்காடு மற்றும் பர்தா போன்றவற்றுக்குத் தடை விதிப்பது போன்றவை ) ஆதரித்தன. சென்ற ஆண்டில் லிபியா மீது பிரான்ஸ் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலை ஆதரித்த இவை இப்போது சிரியாவுக்கு எதிரான பிரான்சின் ஏகாதிபத்தியத் தலையீட்டை ஆதரிக்கின்றன

ஒரு திக்கற்ற சமூக நெருக்கடியால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற இந்தத் தேர்தலில், இடது முன்னணி வேட்பாளரான ஜோன் லூக் மெலன்சோனின் வீராவேசத்தைத் தவிர்த்து குட்டி முதலாளித்துவஇடதுகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதனையும் வழங்கவில்லை. அவரதுகுடிமக்களது புரட்சி”- இது தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களில்வேர்கொண்டிருப்பது”, ஆனால்சீறிப் பாய்ந்து வாக்குப் பெட்டியில் நடைபெறுவது”, அத்துடன் தேசத்தின்பொதுவான நலனைபிரதிபலிப்பது என்று அவர் வரையறை செய்கிறார் - தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்காக நடத்துகின்ற ஒரு புரட்சிகரப் போராட்டத்தை நோக்கிய குரோதத்தை பிற்போக்குத்தனமான பிரெஞ்சு தேசியவாதத்துடன் ஒன்று சேர்க்கிறது. ஜேர்மனிக்கு எதிரான நோக்கத்துடன் பெல்ஜியத்திலான ஒரு பிரெஞ்சு விரிவாக்க வேலைத்திட்டத்திற்கு தனது எழுத்துகளில் வழிமொழிகின்ற அளவுக்கு அவர் இதனை முன்னே தள்ளிக் கொண்டு சென்றார்.

இவ்வாறாக குட்டி முதலாளித்துவஇடது” (அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உள்பட தொழிலாள வர்க்கத்திற்கு குரோதமான சலுகைபெற்ற தட்டுகளில் இருந்து தான் பெருமளவில் கொண்டுசேர்க்கப்படுகிறது) சோசலிசத்துக்கும் வலது சாரிக்கும், இன்னும் சொன்னால் பாசிசப் போக்குகளுக்கும், இடையிலான கோடுகளை மங்கச் செய்வதற்கு வேலை செய்கிறது. இப்போது சார்க்கோசியா ஹாலண்டா என்று தெரிவு இருக்கும் நிலையில், இவர்கள் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரை வழிமொழிகின்றனர். அத்துடன் எதிர்க்கட்சிப் பொறுப்பையும், நிலவும் அமைப்பின் விமர்சகராக காட்டிக் கொள்பவரும், வெற்று வாக்கிற்கு அழைப்பு விடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுபவருமான லு பென்னிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழல் தொழிலாள வர்க்கத்திற்கு தீவிரமான அபாயங்களை முன்நிறுத்துகிறது. வங்கிகளால் குறிவைக்கப்படும் கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிற நாடுகளில் போல பிரான்சிலும் தொழிலாள வர்க்கம் வரலாற்றுத் தாக்குதல்களுக்கு முகம் கொடுப்பதோடு இருக்கின்ற அரசியல் அமைப்புகளின் ஊடாக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எந்த வழியும் அற்றதாக இருக்கிறது. ஒரு புரட்சிகரக் கட்சியை, அதாவது நான்காம் அகிலத்தின் பிரிவாக ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியை, கட்டுவது தான் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா முழுமைக்கும் அதிமுக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அது இல்லாத வரை, சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குட்டி-முதலாளித்துவஇடதுகளின் பிற்போக்குத்தனமான கொள்கைகள், தொழிலாள வர்க்கத்திற்கு புதிய தோல்விகளுக்கும் ஒரு நவ பாசிச இயக்கத்தின் மேலதிக வளர்ச்சிக்கும் மட்டுமே அழைத்துச் செல்லும்

வலதினைத் தோற்கடிக்க ஹாலண்டுக்கு வாக்களிப்பது அவசியம் என்பதான வாதத்தை ICFI ஒதுக்கித் தள்ளி நிராகரிக்கிறது. ஹாலண்ட் அதிகாரத்திற்கு வந்தால் பிரான்சின் நவ பாசிசவாதிகளுக்கு மேலதிகமான அரசியல் வெடிமருந்தினையே அளிப்பார் என்பதை ஒருவர் தைரியமாகக் கணித்துக் கூற முடியும்.