சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : ஐக்கிய அமெரிக்கா

Defense Secretary Panetta threatens Syria, Iran in Middle East tour

அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி பானெட்டா தன் மத்திய கிழக்குப் பயணத்தில் சிரியா, ஈரானை அச்சுறுத்துகிறார்.

By Alex Lantier
31 July 2012

use this version to print | Send feedback

நேற்று துனிஸில் தன் ஒரு வாரகால மத்தியக் கிழக்குப் பயணத்தை ஆரம்பித்த அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்புவிடுத்து, ஈரானுக்கு பொருளாதாரத் தடைகள் மற்றும் போர் ஆகிய அச்சுறுத்தல்களையும் கொடுத்தார்.

துனிசிய இஸ்லாமியவாத பிரதம மந்திரி ஹமதி ஜெபலி (என்னதா கட்சி). மற்றும் எகிப்தின் இஸ்லாமிய ஜனாதிபதி முகம்மத் முர்சி மற்றும் அமெரிக்க ஆதரவுடைய எகிப்தியை இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவரான பீல்ட் மார்ஷல் முகம்மத் ஹுசைன் தந்தவி ஆகியோரையும் பானெட்டா சந்திப்பார். அதன் பின் பானெட்டா தொடர்ந்து இஸ்ரேலுக்கும் அதன் பின் ஜோர்டானில் மன்னர் அப்துல்லாவையும் சந்திப்பார்.

பானெட்டாவின் பயணம், துனிசியாவிலும் எகிப்திலும் நடந்த பரந்த தொழிலாள வர்க்க எழுச்சிகளை அடுத்து அதிகாரத்திற்கு வந்துள்ள இஸ்லாமியவாதிகளுடைய ஆட்சிகளுடன் அமெரிக்க இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; அதே நேரத்தில் இப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்காவின் தீவிர இராணுவத் தலையீட்டை தொடரும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

துனிசியாவின் தலைநகரான துனிசில் பானெட்டா, மாலியில் அல்குவேடா தொடர்புடைய சக்திகளைக் கண்டுபிடிக்க முயலும் துனிசிய பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். கடந்த ஆண்டு லிபியாவின் கேர்னல் முயம்மர் கடாபியை ஆட்சியில் இருந்து நேட்டோ அகற்றியபின், லிபியாவில் இருந்து அண்டை மாலிக்கு சென்றுவிட்ட தௌரக் படைகள் இப்பொழுது மாலியின் வடக்குப் பகுதி பலவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளன; அவை பமகோவில் உள்ள மத்திய அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றன.

ஒபாமா நிர்வாகத்தின் வாடிக்கையான சொற்றொடரான போர் உட்பட அனைத்து விருப்புரிமைகளும் மேசை மீது உள்ளன என்பதை வலியுறுத்தி பானெட்டா ஈரானையும் அச்சுறுத்தியுள்ளார்.

வார இறுதியில், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டோர் டோனிலோனும்,  தெஹ்ரான் அதன் அணுச் சக்தித் திட்டத்தைக் கைவிடவில்லை என்றால் ஈரானின் அணுச்சக்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள், ஈரானுடனான போர் ஆகியவை குறித்த அமெரிக்க அவசரக்காலத் திட்டங்கள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளிடம் கலந்து பேசினார்.

ஆனால் தற்போதைய சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் ஈரானை வாஷிங்டனுக்கு ஏற்புடைத்த உடன்பாட்டை பேச்சுக்களின் மூலம் கட்டாயப்படுத்தி இணங்க வைக்கலாம் என்று பானெட்டா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் EU, ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளைக் கிட்டத்தட்ட 40% குறைத்துவிட்டன. ஈரானிய நாணயம் கிட்டத்தட்ட அதன் மதிப்பில் பாதியை டாலருக்கு எதிராக இழந்து விட்டது. இது ஈரானியத் தொழிலாளர்களை வறிய நிலையில் தள்ளி, உணவு உட்பட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளையும் உயர்த்திவிட்டது.

இப்பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கடுமையான பாதிப்பைக் கொண்டவை. இப்பொழுது அதன் விளைவுகள் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், பேச்சுக்கள் நடத்த அவர்கள் தயார் என்று கூறியுள்ளனர், ஒரு இராஜதந்திர தீர்வைக் காண விரும்புவதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை என்று பானெட்டா விளக்கினார்.

முன்னதாக இஸ்ரேல் 2012 ம் ஆண்டின் வசந்த காலத்தில் தாக்க ‘‘வாய்ப்புஉள்ளது என்ற அவருடைய மதிப்பீட்டில் இருந்து பின்வாங்கிய பானெட்டா, இஸ்ரேல் ஈரான் குறித்து எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்றார்.

முக்கிய ஈரானிய நட்பு நாடான சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தையும் பானெட்டா அச்சுறுத்தியுள்ளார்; அவருடைய ஆட்சி இப்பொழுது அமெரிக்க ஆதரவைக் கொண்ட சுன்னி எழுச்சியாளர்களை எதிர்கொள்கிறது; அவர்கள் சிரியாவை உள்நாட்டுப்போரில் இழுத்துள்ளனர்.

துனிசில் பானெட்டா பேச்சுக்களை நடத்துகையில், சிரியாவின் வடக்கே முக்கிய நகரான அலெப்போவில் போர் வெடித்தது. அங்கு இராணுவப் பிரிவுகள் அசாத் எதிர்ப்பு போராளிகளை தாக்கியது; அவையோ பல முக்கிய பகுதிகளைக் கைப்பற்றிச் சோதனைச் சாவடிகளையும் நிறுவியிருந்தனர். இராணுவப் பிரிவுகள் அண்டையில் இருக்கும் சலா அல்-தின், சகுர் பகுதிகளையும் தாக்கின. எழுச்சிப்படைகள் அனதன் என்னும் இடத்திலுள்ள சோதனைச்சாவடி ஒன்றை கைப்பற்றியதாக தகவல்கள் வந்துள்ளன; அது அவர்களுக்கு அலெப்போவில் இருந்து துருக்கி வரையிலான எல்லைக்குச் செல்லும் நேரடிப்பாதை மீது கட்டுப்பாட்டை கொடுக்கும்; துருக்கிதான் இவர்களுக்கு ஆயுதங்களை அளித்து ஆதரவையும் கொடுக்கிறது.

செஞ்சிலுவை/சிவப்புப் பிறைநிலா அதிகாரிகள் அலெப்போ மோதலை அடுத்து 200,000 மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர் என்று கூறியுள்ளன.

அசாத்தை வீழ்த்துவதற்குசர்வதேச முயற்சிகள் தேவை என அழைப்பு விடுத்த பானெட்டா, அலெப்போவில் தங்கள் மக்கள் மீதே இத்தகைய பெரும்  சோகத் தாக்குதலை அவர்கள் தொடர்கின்றனர் என்றால், அது இறுதியில் அசாத்தின் சொந்த சவப் பெட்டிக்கு கடைசி ஆணியை அடிக்கும் செயலாகும் என நான் நினைக்கிறேன்என்றார். தன்னுடைய மக்களுக்கு அசாத் செய்தது, அவர் சொந்த மக்களுக்கே தொடர்ந்து செய்துவருவது இந்த ஆட்சி முடிவை அடைந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. அது அறநெறியை முற்றிலும் இழந்துவிட்டது. அவரது ஆட்சி முடிவுக்கு வருமா என்பது கேள்வி அல்ல, எப்பொழுது முடிவுக்கு வரும் என்பதுதான் கேள்வி. என்றார்.

கடந்த ஆண்டு கடாபியை அகற்றி அவரைப் பின்னர் கொன்றதை மேற்பார்வையிட்ட அரசாங்கத்திடம் இருந்து அசாத்தின் சவப்பெட்டி பற்றிய பானெட்டாவின் குறிப்பு, படுகொலை அச்சுறுத்தல் என்பதை திட்டமிட்டே கூறும் நோக்கத்தைத்தான் காட்டுகிறது.

அதே நேரத்தில், இதுவரை எழுச்சியாளர்களுக்குத் தான் ஆயுதங்களைக் கொடுக்கவில்லை என புனைகதை கூறிய வாஷிங்டன், சௌதி அரேபியா, கட்டார் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளால் வழங்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய வாஷிங்டன் இப்பொழுது ஞாயிறன்று வெளிப்படையாக அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் நெருக்கம் அடைகிறது. ஒரு இரகசிய ஜனாதிபதி உத்தரவு அல்லது கண்டறிதல் வகையில் சிரிய எழுச்சியாளர்களுக்கு கூடுதல் இரகசிய உதவி அளிக்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதை ராய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது.

பிரெஞ்சு அரசாங்கமும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டம் இந்த வாரம் தேவை என வேண்டுகோள் விடுக்க இருப்பதாகத் தெரிகிறது; அக்கூட்டத்தில் அசாத் ஆட்சி வெளியேறுவதற்கு அழுத்தம் குறித்தும் சிரியா பற்றியும் விவாதிக்கப்படலாம்.

பானெட்டாவின் பயணம் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைக் காக்கவும், அதன் மத்திய கிழக்கு செயற்பாடுகளை மறு கட்டமைக்க இருப்பதையும்தான் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு பரந்த தொழிலாள வர்க்க எழுச்சிக்கள் அமெரிக்க ஆதரவுடைய மதச்சார்பற்ற சர்வாதிகார ஆட்சிகளை துனிசியா, எகிப்தில் அகற்றியபின் பதவிக்கு வந்துள்ள வலதுசாரி இஸ்லாமியக் கட்சிகளுடன் அது உறவுகளைத் தீவிரப்படுத்திக் கொள்ள முற்படுகிறது. அதே நேரத்தில் அது சிரியா அல்லது ஈரான் போன்று அமெரிக்க பிராந்திய நலன்களில் குறுக்கே இருக்கும் எந்த ஆட்சியையும் கட்டாயப்படுத்தி அகற்றுவதற்குத் தலையீடும் செய்கிறது.

பானெட்டாவின் வாதங்களான அமெரிக்கா அல்குவேடாவை எதிர்த்துப் போரிடுகிறது, அசாத் தன் மக்களையே கொல்லும் செயல்களைத் தடுக்க முற்படுகிறது என்னும் கூற்றுக்கள் இழிந்ததும் பொய்யானதுமாகும். உண்மையில், சுன்னி இஸ்லாமிய ஆட்சிகளான சௌதி, கட்டார் முடியாட்சிகளுடன் அதன் ஒத்துழைப்பின் பாகமாக, அமெரிக்க பெருமளவில் அல் குவேடா சக்திகளைத்தான், வெளிநாட்டு இஸ்லாமியச் சக்திகள் சிரியாவில் ஊடுருவி சிரிய இராணுவத்தைத் தாக்க திரட்டுவதற்கு தங்கியுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் முன்னாள் அமெரிக்கச் சிறப்புப் படைகளின் கட்டுப்பாட்டு ஆலோசகராக இருந்த சேத் ஜோன்ஸ் எழுதியுள்ளார்: சிரியாவில் உள்ள அல் குவேடா (பல நேரமும் லெவன்ட் மக்களின் அல் நுஸ்ரா முன்னணிஎனச் செயல்படுவது) பணத்திற்காகச் செயல்படும் போராளிக் குழுக்களை சில சிந்தனைப் போக்கில் உடன்படுபவை, சில பணத்தினால் உந்துதல் பெறுபவைபயன்படுத்தி துருக்கி, ஈரான் மூலம் வெளிநாட்டு வீரர்களுக்கு பாதை காண முயல்கிறது; இவர்களில் பெரும்பாலனவர்கள் மத்தியக் கிழக்கு, வட ஆபிரிக்காவில் இருந்து வருபவர்கள். பேர்சிய வளைகுடா, லெவன்ட்டில் இருந்து பல நன்கொடையாளர்கள் நிதிய ஆதரவிற்குப் பணம் அனுப்புகின்றனர் என்று அமெரிக்கக் கருவூல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈராக்கில் உள்ள அல் குவேடாவின் செயலர்கள் ரைபிள்கள், இலேசான இயந்திரத் துப்பாக்கிள், ராக்கெட்டினால் இயக்கப்படும் கையெறிகுண்டுகள் ஆகியவற்றையும் குண்டுதயாரிப்பதில் தீவிரப் பயிற்சியையும் சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவுப் படைகளுக்கு அளிக்கின்றனர்.

அசாத் ஆட்சியை அகற்ற முற்படும் அமெரிக்கச் செயற்பாடு பிராந்தியம் முழுவதிலும் உறுதிப்பாட்டைக் குலைத்துள்ளது. துருக்கியை தளமாகக் கொண்ட முக்கிய அசாத் எதிர்ப்பு படையான FSA எனப்படும் சுதந்திர சிரிய இராணுவம் கார்டியனிடம் தம்முடன் பிணைந்திராத குறைந்தப்பட்சம் நான்கு பிரிவுகள், சிரியாவிற்குள் செயல்பட்டு வருகின்றன என்றும் இவற்றுள் ஒன்று ஒரு லிபிய கெரில்லாப் பிரிவு ஆகும் என்றும் கூறியுள்ளது. மேலும், சிரியாவில் இருக்கும் அசாத்திற்கு எதிராகச் செயல்படும் சுதந்திரமான வெளிநாட்டுப் படைகள் ஒருவேளை இன்னமும் அதிகமாகக் கூட இருக்கலாம் எனக் கூறியது.

 

குர்டிஷ் பிரிவினைவாதப் போராளிகள் சிரியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றி அண்டையில் இருக்கும் துருக்கிய குர்டிஷ் பெரும்பான்மை பகுதியில் ஊடுருவலாம் என்று துருக்கிய அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். துருக்கிய அதிகாரிகள் நேற்று நியூ யோர்க் டைம்ஸ் இடம்  குர்டிஷ் குழுக்கள் சிரியப் பகுதியில் இருந்து துருக்கியை தாக்கினால், சிரியாவை தாக்கத் தயங்க மாட்டோம் எனக் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

துருக்கி துருப்புக்கள், கவச வாகனங்கள், ஏவுகணை மின்கலங்கள் ஆகியவற்றை சிரியாவுடனான தன் எல்லைப் பகுதிகள் முழுவதிற்கும் அனுப்பி வைத்துள்ளது.

ஜோர்டானிய அதிகாரிகள் ஜோர்டானில் இருந்து சிரியாவிற்குள் சிறப்புப் படைகளை அனுப்பி நிலைநிறுத்தல் குறித்து பரிசீலிக்கின்றனர் என்றும் அது இரசாயன, உயிரியல் ஆயுதக் கிடங்குகளை கைப்பற்றும் நோக்கம் கொண்டதென வெளிப்படையாக கூறப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.