சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

At least seven dead in shooting at Sikh temple in Wisconsin

விஸ்கான்சின் சீக்கியர் கோயிலில் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தப்பட்சம் 7 பேர் மரணம்

By Niles Williamson
6 August 2012

use this version to print | Send feedback

ஞாயிறன்று விஸ்கான்சினில் மில்வோக்கி புறநகர்ப்பகுதியான ஓக் க்ரீக்கில் ஒரு சீக்கியர் கோவிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தப்பட்சம் 7 பேர் கொல்லப்பட்டனர்.

உதவுவதற்காக  சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற அதிகாரியும் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றார்; அந்நிகழ்வில் துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டார். மூவர் ஆபத்தான நிலைமையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நேரில் பார்த்தவர்கள் சாட்சியப்படி துப்பாக்கிதாரி 30 வயதையுடைய வெள்ளை ஆண் என்றனர்.

துப்பாக்கிதாரியின் நோக்கங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த கோயில் உறுப்பினர் ஒருவரான கன்வர்தீப் சிங் கலேகா, துப்பாக்கிதாரி 9/11 பச்சை குத்தியிருந்தார், அந்நிகழ்வுகளைப் பற்றி ஏதேனும் வெறுப்புணர்வு கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை என்றார்.

பாதிக்கப்பட்டவர்கள், கொலையுண்டது, பாதிக்கப்பட்டது என்பது கிட்டத்தட்ட 10 ஆக இருக்கையில், இப்பொழுது சரியான எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை.

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 10 ஆக இருக்கும் என கூறப்படுகையிலும், சரியான எண்ணிக்கை இந்த நேரத்தில் இன்னமும் அறியப்படவில்லை.

அருகிலுள்ள குடகி என்ற மில்வோக்கி புறநகர் பகுதியில்  ஞாயிறன்று வெளியேற்றம் நடத்தப்பட்டு சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியின் வீட்டை பொலிசார் சோதனையிட்டனர்

கோயில் குழுவின் தலைவரான முதுகில் சுடப்பட்ட சத்வந்த் கலேகா, இறந்தவர்களில் ஒருவராவார். செய்தி ஊடகத்திற்கு கொடுத்த அறிக்கை ஒன்றில் கோயில்குழு உறுப்பினர் வென் பொப்பா ரி இத்துப்பாக்கிச் சூட்டை ஒரு வெறுப்பில் விளைந்த குற்றம் என அழைத்து சீக்கிய சமூகத்திற்கு வெளியேயிருந்து ஒருவர் இதைச் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஓக் க்ரீக் பொலிசார் இந்நிகழ்வை உள்நாட்டுப் பயங்கரவாதம் என வகைப்படுத்தியுள்ளனர். FBI குற்ற விசாரணையை முன்னெடுக்கும்.

ஓக் க்ரீக் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்ளும் வகையில், மிலுவோக்கி புறநகரான அருகில் இருக்கும் ப்ரூக்பீல்ட்டில் உள்ள சீக்கியர் கோயிலில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நியூ யோர்க் நகரம் மற்றும் சிக்காகோவில், சீக்கிய கோயில்களில் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது; அவை இலக்குகள் என்ற குறிப்பான அடையாளங்கள் இல்லாவிடினும்கூட.

ஓக் க்ரீக் ஆலையம் 2007ல் மிலுவோக்கி பெருநகர்ப்பகுதியின் சீக்கிய சமூகத்திற்குப் பயன்படுவதற்காக திறக்கப்பட்டது. இக்கோயில் இப்பொழுது 400 உறுப்பினர்கள் வாடிக்கையாக வரும் இடமாக உள்ளது. தெற்கிழக்கு விஸ்கான்சினில் கிட்டத்தட்ட 3,000 சீக்கியக் குடும்பங்கள் உள்ளன.

சீக்கிய மதம் இந்தியாவில் பஞ்சாப் பகுதியில் 15ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கடவுளை வழிபடும் மதம் ஆகும். தற்பொழுது உலகில் இது ஐந்தாவது பெரிய மதமாம் ஆகும், 30 மில்லியன் மக்கள் இச்சமயத்தை பின்பற்றுகின்றனர்.

இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்றாலும், அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் பல நேரமும் அவர்கள் தலைமறைப்பு, நீண்ட தாடிகள் ஆகியவற்றினால் முஸ்லிமக்கள் எனத் தவறாக நினைக்கப்படுகின்றனர். இதையொட்டி 9/11க்கு பிந்தைய முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுக்காலத்தில் அவர்கள் கணிசமான எதிர்ப்புணர்வை பெற்றுள்ளனர்.

செப்டம்பர் 11, 2001ல் இருந்து நாடு முழுவதும் சீக்கியர்கள் அச்சுறுத்தப்படல், தாக்கப்படுதல் அல்லது கொலை செய்யப்படுதல் என்னும் நிகழ்ச்சிக்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. செப்டம்பர் 11ஐ தொடர்ந்த வாரங்களில் மிலுவோக்கியில் சீக்கியர்களுக்கு சொந்தமான இரு டாக்சிகள் சேதப்படுத்தப்பட்டன, இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு இரு சீக்கியர்கள், சுரிந்தர் சிங், குர்மெஜ் அத்வால் இருவரும் கலிபோர்னியாவில் எக் குரோவில் துப்பாக்கித் தாக்குதலுக்கு உட்பட்டனர். 2003ல் கலிபோர்னியா மேற்கு சாக்ரமென்டோவில் அஞ்சல் துறை உதவியாளரான தல்வீர் சிங் தபாலைக் கொடுக்கும்போது அதி சக்தி வாய்ந்த ஏர் ரைபிளினால் சுடப்பட்டார். செப்டம்பர் 11, 2001 க்கு நான்கு நாட்களுக்குப்பின் பல்பிர் சோதிர் அரிசோனாவில் அவருடைய மெசா பெட்ரோல் நிலையத்திற்கு முன்பு மலர்களை நட்டுக் கொண்டிருக்கையில் கொலை செய்யப்பட்டார்.

கொலரடோவில் அரோரா திரையரங்கில் 12 பேர் கொலை செய்யப்பட்டு சற்றே 14 நாட்களுக்குப்பின் ஓக் க்ரீக்கின் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இத்தாக்குதல் 2004ல் இருந்து விஸ்கான்சினில் ஐந்தாவது வெகுஜனக் கொலையாகும். 2004ல் மின்னிசோடாவில் இருந்து ஒரு வாகன சாரதியான சாய் சௌவா வாங், வடக்கு விஸ்கான்சினில் மான் வேட்டையாடல்போது எட்டு பேரைக் கொன்றார். டெரி மைக்கேல் ரட்ஸ்மன் ஏழு பேரைக் கொன்றபின் மிலுவாக்கிப் புறநகரான ப்ரூக்பீல்டில் ஒரு திருச்சபையில் பிரார்த்தனை நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். 2007ம் ஆண்டு காட்டுப்பகுதி ஷெரிப் அலுவலகத்தில் இருந்த துணைவர் டைலர் ஜேம்ஸ் பீட்டர்சன் 6 பேரைக் கொன்றுவிட்டு, விஸ்கான்சின் வடகிழக்கில் இருக்கும் நகரமான கிரான்டனில் தற்கொலையும் செய்து கொண்டார்; அதே ஆண்டு அம்ப்ரோசியோ அனால்கோ டெலிவன் என்ற இடத்தில் ஐந்து பேரைக் கொன்றுவிட்டுப் பின் தானும் தற்கொலை செய்து கொண்டார்.