சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The euro bailouts and the crisis of democracy in Europe

யூரோ பிணையெடுப்புகளும் ஐரோப்பாவில் ஜனநாயகத்தின் நெருக்கடியும்

Peter Schwarz
7 August 2012

use this version to print | Send feedback

அரசாங்கங்கள் நாடாளுமன்றங்களின் முடிவுகளால் முழுமையாகக் கட்டுண்ட நிலை இருக்குமாயின்ஐரோப்பா துண்டு துண்டாகச் சிதறும் என்று இத்தாலிய பிரதமர் மரியோ மொண்டி திங்களன்று கூறினார். ஒவ்வொரு அரசாங்கத்திற்கும்நாடாளுமன்றத்திற்கு கற்பிக்கும் கடமை உண்டுஎன Der Spiegel செய்தியிதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் மேலும் கூறினார்.

2008 நிதிப் பொறிவுக்குப் பிந்தைய காலத்தில் யூரோவை மீட்க ஒழுங்கமைக்கப்பட்ட எண்ணற்ற வங்கிப் பிணையெடுப்புகளும், அத்துடன் அவற்றுக்குத் தொழிலாள வர்க்கம் விலை செலுத்தச் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்களும் ஐரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒரு முறிவுப் புள்ளி வரை சேதப்படுத்தியிருக்கிறது என்பதை மொண்டியின் கூற்று ஒப்புக் கொள்வதாக உள்ளது. மொண்டி கேள்விக்குட்படுத்தும் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டிருப்பதும் அரசாங்கத்தின் மீதான நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு அடிப்படையான கோட்பாடாக இருக்கிறது.

மொண்டி நாடாளுமன்றத்தைத் தாக்கினாலும் கூட, அவரது உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமாகும். மக்களின் பெரும்பான்மையினருக்கு, வாக்குப் பெட்டிகள் மூலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்துவதென்பது ஏற்கனவே இயலாத விடயமாகிவிட்டிருக்கிறது. முக்கியமான அரசியல் முடிவுகள் நிதிச் சந்தைகளாலும் புரூசெல்ஸ், பேர்லின் மற்றும் பிற ஐரோப்பியத் தலைநகரங்களில் இருக்கும் அவற்றின் அரசியல் ஆதரவாளர்களாலும் தான் செய்யப்படுகின்றன.

கிரீஸிலும் பிரான்சிலும் சமீபத்தில் நடந்த தேர்தல்களில், மிருகத்தனமான சமூக வெட்டுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, அல்லது குறைந்தபட்சம் அதனை மாற்றியமைப்பதற்கேனும், வாக்குறுதியளிப்பதாகத் தோன்றிய கட்சிகள் பரந்த மக்கள் ஆதரவைப் பெற்றன. பிரான்சில் 1998க்குப் பின் முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. கிரீஸில் தீவிர இடது கூட்டணி (SYRIZA) இரண்டாவது மிகப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும் எதுவும் மாற்றமடையவில்லை.

புதிய பிரெஞ்சு ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்ட் அவருக்கு முன்பிருந்த நிக்கோலோ சார்க்கோசியின் அதே தொழிலாள வர்க்க-விரோதக் கொள்கைகளையே தொடர்ந்து கொண்டிருப்பதுடன், வாகன உற்பத்தித் துறையில் பெரும் வேலையிழப்புகளுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டுவதில்லை. கிரீஸிலோ, SYRIZA விசுவாசமான எதிர்க்கட்சியின் பாத்திரத்தை ஏற்று அமர்ந்திருக்க, பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சி, சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடதின் கூட்டணி அரசாங்கம் முன்னினும் அதிகமான சிக்கன நடவடிக்கைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள-விரோத சிக்கன நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட ஒரு வார காலத்திற்குப் பின் தான் மொண்டி தனது நேர்காணலை அளித்துள்ளார். கிரேக்க அரசாங்கம் மேலதிக 11.5 பில்லியன் யூரோ வெட்டுகளுக்கு முடிவு செய்திருக்கிறது, இது ஏற்கனவே பெரும் நாசத்தைச் சந்தித்திருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம்பெறுவோரின் துயரத்தை மேலும் ஆழப்படுத்தும். ஸ்பெயின் அரசாங்கம் அதன் முந்தைய நிதிப் பற்றாக்குறை குறைப்புக்கான இலக்கை மேலும் 60 சதவீதம் வரை அதிகரித்து தற்போதைய வரவு-செலவுத் திட்டத்தில் 102 பில்லியன் யூரோ அளவுக்கான ஒரு பாரிய தொகையை வெட்டுவதற்கு நோக்கம் கொண்டிருக்கிறது. இது பிராங்கோ சகாப்த வறுமைக்கு மீண்டும் நாட்டைத் தள்ளும்.

ஐரோப்பிய அவசர உதவி நிதிக்கென முன்னதாக விண்ணப்பம் செய்துள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு கீழ்ப்படியக் கூடிய நாடுகளை மட்டுமே ஆதரிப்பதற்கு (அந்நாடுகளின் அரசாங்கப் பத்திரங்களை வாங்குவதன் மூலமாக) ஐரோப்பிய மத்திய வங்கியானது முடிவு செய்திருக்கிறது.

இது பரவலான எதிர்ப்புக்கு தூண்டுதலளித்துக் கொண்டிருக்கிறது. ஸ்பெயினில் நூறாயிரக்கணக்கிலானோர் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வீதிகளில் இறங்கினர். இந்த கோபத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு தொழிற்சங்கங்கள் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்பெயினிலோ அல்லது கிரீஸிலோ அல்லது வேறு எந்த பிற ஐரோப்பிய நாட்டிலோ, தொழிலாளர்கள் அவர்களின் அத்தனை நலன்களும் அழிக்கப்படுவதை எந்தவிதப் போராட்டமும் இல்லாமல் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை

இந்த சூழ்நிலைகளின் கீழ் தான், மொண்டி கூறியிருக்கும் கருத்து ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அடிப்படையான வர்க்கத் திட்டநிரலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: தேர்தல் முடிவுகள் என்னவாயிருந்தாலும் சரி அல்லது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வீதிப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் அளவு எத்தனை பெரிதாயினும் சரி, அதைப் பொருட்படுத்தாமல் வங்கிகளின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதே அதன் நோக்கமாகும்.  

சர்வதேச நிதிச் சந்தைகள் கோருகின்ற சமூக எதிர்ப்புரட்சி நடவடிக்கை என்பது ஜனநாயக வழிமுறைகளுக்கு இணக்கமில்லாதது என்பது மொண்டிக்கு நன்கு தெரியும். ஜனநாயக அங்கீகாரம் அற்ற தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு அரசாங்கத்திற்கே அவர் தலைமை தாங்குகிறார். ஒரு பொருளாதாரப் பேராசிரியரும், கோல்ட்மேன் சாக்ஸின் (Goldman Sachs) ஆலோசகரும் அத்துடன் பல்வேறு பழமைவாத சிந்தனைக் குழாம்களின் (Bruegel, Bilderberg Conference, Trilateral Commission) உறுப்பினருமான மொண்டி சர்வதேச நிதி மூலதனத்தின் ஒரு நம்பிக்கைக்குரிய பிரதிநிதி ஆவார். அதன் உத்தரவின் பேரில், சென்ற நவம்பரில், பெர்லுஸ்கோனி நிதிநிலையில் வெட்டுகளை போதுமான அளவு துரிதமாகவும் ஆழமாகவும் அமல்படுத்தத் தவறிய காரணத்தால் தேர்தல் நடத்தாமலேயே இவரது அரசாங்கம் பெர்லுஸ்கோனி அரசாங்கத்தை இடம்பெயர்த்தது.

அப்போது முதலாகவே, மொண்டி அரசாங்கமானது, இரண்டாம் உலகப் போரின் முடிவில் முசோலினியின் பாசிச சர்வாதிகாரம் வீழ்ந்தது முதலாக, இத்தாலிய தொழிலாளர்கள் வென்றிருந்த சமூக தேட்டங்கள் மற்றும் உரிமைகளை திட்டமிட்டவகையில் தாக்கியது. ஓய்வூதியங்களைக் குறைத்திருக்கிறது, நுகர்வு வரிகளை அதிகப்படுத்தியிருக்கிறது அத்துடன் பணிநீக்கத்திற்கு எதிரான சட்டப் பாதுகாப்புகளையும் மற்றும் பிற சமூக உரிமைகளையும் அகற்றியிருக்கிறது

அரசாங்கங்கள் ஜனநாயக நடைமுறைகளை மறுதலித்தால் மட்டுமே ஐரோப்பா உடைவதைத் தடுக்க முடியும் என்ற மொண்டியின் கூற்றில் இருந்து அரசியல் முடிவுகள் எடுக்கப்படவேண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான கட்டமைப்புக்குள்ளாக தொழிலாள வர்க்கம் தனது உரிமைகள் மற்றும் சமூக வெற்றிகளைப் பாதுகாக்க முடியாது.

ஐரோப்பிய நிதிக் கொள்கை விடயத்தில் மொண்டியின் உடனடி எதிர்ப்பாளர்களின் - அதாவது அவரது கருத்துகளை, ஜேர்மன் வெளியுறவுத் துறை அமைச்சரான கீடோ வெஸ்டர்வெல்லவின் வார்த்தைகளில் கூறுவதானால், “ஜனநாயக அங்கீகாரத்தை பலவீனப்படுத்துவதற்கானஒரு முயற்சி என விமர்சனம் செய்திருக்கும் ஜேர்மன் அரசியல்வாதிகளின்  - கண்ணோட்டமும் அதே அளவுக்கு கபடவேடம் தரித்ததாகவும் பிற்போக்குத்தனமாகவும் உள்ளது. ஜேர்மனியானது, கிரீஸிலும் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலுமான மக்கள் கருத்திற்கு முற்றிலும் எதிரான விதமாய், நாசகரமான வெட்டுகளை, குறிப்பாக கிரேக்க அரசாங்கத்தின் மீது, சுமத்துவதற்கு தொடர்ந்து முனைந்து வந்திருக்கிறது. தவிரவும், இது யூரோ மண்டல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளின் மீது ஒரு எழுதப்படாத ஐரோப்பிய ஒன்றிய சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான பிரச்சாரத்திற்கு தலைமையேற்று வந்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் என்பது நிதி மூலதனத்தின் போட்டிக் குழுக்களின் சர்வாதிகாரத்திற்கு ஐரோப்பாவை உட்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவே இருக்கிறது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆர்ப்பாட்டங்கள் அல்லது பேச்சுவார்த்தைகளின் மூலமாக இதனை சீர்திருத்தி விடவோ அல்லது பாதையை மாற்றிக் கொள்வதற்கு நெருக்குதலளித்து விடவோ முடியாது.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்ற முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே இந்தத் தாக்குதல்களை நிறுத்த முடியும். உலக சோசலிச வலைத் தளம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் ஸ்தாபனங்களைத் இல்லாதொழிக்க அழைப்பதோடு, இந்தக் கோரிக்கையை ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கிறது.

நாங்கள் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறோம். இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரிட்டனில் இருக்கும் தொழிலாளர்கள் மொண்டி, மேர்கேல், ஹாலண்ட், ரஜோய் மற்றும் கேமரூன் ஆட்சிகளைத் தூக்கியெறிந்து விட்டு, பெரும் பணக்காரர்கள், வங்கிகள் மற்றும் பெரு வணிகங்களின் செல்வங்களைப் பறிமுதல் செய்து நிதிப் பிரபுத்துவத்தின் இலாப நலன்களுக்காய் அல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவை செய்கின்ற வகையில் பொருளாதாரத்தை மறுஒழுங்கமைக்கின்ற தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும்.