சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US gunman alleged to have killed six at Sikh temple was a neo-Nazi

ஆறு பேரைச் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டும் அமெரிக்க துப்பாக்கிதாரி ஒரு நவ நாஜி

By Barry Grey
7 August 2012

use this version to print | Send feedback

ஞாயிறன்று ஒரு விஸ்கான்சின் சீக்கிய கோயிலில், துப்பாக்கிதாரி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, மூன்று பேர் தீவிரமாகக் காயமுற்றது என்னும் விவகாரத்தில் பலவும் தெளிவற்றதாக உள்ளன. ஆனால் ஒன்று தெளிவு: கூறப்படும் துப்பாக்கிதாரி நீண்ட காலமாக ஆழ்ந்த தொடர்பை வெள்ளை இனவாத, நவ நாஜிச வட்டங்களில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதே அது.

வேட் மிசேல் பேஜ் (Wade Michael Page) பாசிசப் பரிவுணர்வுகள் குறித்த ஏராளமான தகவல்கள் குறித்து செய்தி ஊடகம் மற்றும் அமெரிக்க அதிகாரிகளால் அதிகம் பேசப்படவில்லை; பொதுவாக செய்தி ஊடகம் கூறும் கருத்து, உந்துதலுக்குக் காரணத்தை கண்டுபிடித்தல் முக்கியம் என்பதுதான். ஆனால் கிடைத்துள்ள சான்றுகளோ பேஜ் இன் இனவழி இந்தியர்களுக்கு எதிரான கொலைவெறி இனவாத, பாசிச அரசியல் செயற்பட்டியலின் உந்துதலைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன; இது அவருடைய குற்றத்தை வலதுசாரி உள்நாட்டுப் பயங்கரவாதம் என வரையறுக்கிறது.

40 வயதான இராணுவத்தில் வேலைபார்த்திருந்த துப்பாக்கிதாரி ஒரு 9 மில்லிமீட்டர் தானியங்கிக் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி, விஸ்கான்சின் மிலுவாக்கிப் புறநகரான ஓக் க்ரீக் இல் உள்ள சீக்கியர் கோயிலில் 6 பக்தர்களைக் கொன்றதுடன், மற்றும் இருவரை, ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட, தீவிரமாகக் காயப்படுத்தி அவர்கள் மருத்துவமனையில் உயிரோடு போராடும் அளவிற்கு அனுமதிக்கப்படவும் சுட்டுள்ளார். இதன்பின் பொலிசுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டுப் பறிமாற்றத்தில் பேஜ் கொலையுண்டார்.

39 வயதில் இருந்து 84 வரை வரை இருந்த இறந்துவிட்ட சீக்கியர்களில் ஐந்து ஆடவரும் ஒரு மகளிரும் உண்டு; இவர்கள் சீதா சிங் (41), ரஞ்சித் சிங்(49), சத்வந்த் சிங் கலேகா (65), பரம்ஜிட் கௌர் (41) மற்றும் சுவேக் சிங் (84) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிசும் FBI உம் ஒரே ஒரு துப்பாக்கிதாரிதான் இதில் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் நிகழ்வுகளைப் பற்றிய இச்செய்தி சற்று அவநம்பிக்கையுடன்தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியும் என்பதற்குக் காரணங்கள் உள்ளன. ஞாயிறு காலை வெளிவந்த ஆரம்பத் தகவல்கள், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள், பல துப்பாக்கிதாரிகள் இருந்தனர் எனத் தெரிவிக்கின்றன. ஒரு சாட்சி, நான்கு வெள்ளை நிற ஆடவர்கள் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கினர் என்று கூறுகிறார். மற்றவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரிகள் இருந்தனர் எனக் கூறுகின்றனர்.

கோயில் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டதாகவும், சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புக்களை நிகழ்விற்கு சில நாட்கள் முன்பு பெற்றதாகவும் தகவல் கொடுத்துள்ளனர். கோயில்குழுவின் தலைவர் சந்தேகத்திற்குரிய பல நபர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு முந்தைய தினம், அதாவது சனிக்கிழமை கோயிலில் காணப்பட்டனர் என்று கூறினார்.

திங்கள் காலை ஓக் க்ரீக்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த மற்றொரு நபரை, தாங்கள் அடையாளம் காண முற்படும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்; அவரை அவர்கள் கவனிக்கப்பட வேண்டிய நபர் என்று விவரித்தனர். மிலுவாக்கி Journal Sentinel உடைய நிருபர்கள் அதிகாரிகள் காட்டிய புகைப்படத்துடன் ஒத்திருந்த ஒரு நபர் ஞாயிறன்று கோயிலில் காணப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

ஆயினும் மாலைச் செய்தி நிகழ்ச்சிகளில், மூன்று முக்கிய தொலைக்காட்சி இணையங்கள் மற்றும் பொதுத் தொலைக்காட்சி நிகழ்வு ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய நபர் பற்றிய குறிப்பு எதையும் கூறாமல் விட்டுவிட்டன.

ஜனாதிபதி ஒபாமா ஞாயிறன்றும் மீண்டும் திங்களன்றும் சுருக்கமான, வாடிக்கையான இரங்கற் செய்திகளை பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கு வெளியிட்டார்; இதில் சமீபத்திய வெகுஜனக் கொலைகளின் சமூக வேர்கள் பற்றி ஆராய்தல் பற்றிய விருப்பம் காணப்படவில்லை; இதுவோ 12 பேரைக் கொன்று 59பேரைக் காயப்படுத்திய கோலரோடோ திரையரங்கு அதிர்ச்சி நிகழ்வு நடந்து இரண்டே வாரங்களில் வந்துள்ளது. ஒபாமாவை எதிர்த்து நிற்கும் குடியரசுக் கட்சியின் மிற் ரோம்னே நன்கு கூறப்படும் மந்திரமான அறிவற்ற வன்முறைச் செயல் என்பதை மீண்டும் கூறினார்.

1971ல் கொலரோடோவில் பிறந்த பேஜ், இராணுவத்தில் 1992ல் சேர்ந்து, 1998ல் பொதுவாக பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இவருக்குக் கௌரவமான விடுவிப்பு கொடுக்கப்படவில்லை. உண்மையில் கடமையில் பல நேரமும் குடிபோதையில் இருந்த நிகழ்வுகளையொட்டி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதிகாரிகள் கருத்துப்படி, டெக்சாஸ் போர்ட் பிளிஸுக்கு அனுப்பப்படுமுன் பேஜ் ஒக்லஹோமா போர்ட் சில்லில் அடிப்படைப் பயிற்சியை பெற்றிருந்தார். இறுதியில் வட கரோலினாவில் போர்ட் பிராக்கில் பணியாற்றினார். ஒரு பாரச்சூட் வீரனாகவும் இருந்த இவர் ஒரு பாராட்டுப் பதக்கத்தையும், ஐந்து சாதனைகள் பதக்கங்களையும், இரண்டு நன்னடத்தைப் பதக்கங்களையும், தேசிய பாதுகாப்பு பணிப் பதக்கத்தையும், ஒரு மனிதாபிமான பணிப் பதக்கத்தையும் பெற்றிருந்தார்.

இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டபின், பேஜ் சிறிதுகாலம் வட கரோலினா லபயேவில் வசித்து வந்தார். 2006ல் இருந்து 2010 வரை Barr-Nunn போக்குவரத்து நிறுவனத்தில் வாகன சாரதியாகப் பணி புரிந்து வந்ததாக நம்பப்படுகிறது. கட்டாயப்படுத்தித்தான் பணிநீக்கம் நடந்துள்ளது என்று அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். சில காலம் அவர் விஸ்கான்சினில் தெற்கு மிலுவாக்கியில் வசித்த வந்தார்; கடந்த மாதம்தான் ஓக் க்ரீக்கிற்கு அருகே குடாகியில் வசிக்கத் தொடங்கினார்; அங்கு உதிரிபாகங்கள் தயார் செய்யும் நிறுவனத்தில் இரவு நேரங்களில் பணி புரிந்து வந்தார்.

நான்கு மாநிலங்களில் கைது செய்யப்பட்ட நிலைமையும் இவருக்கு உண்டு; இதில் போதையில் வாகனம் ஓட்டியது, செல்லாத காசோலை ஒன்றை அனுப்பியது ஆகியவை அடங்கும்; இதையொட்டி டெக்சாஸ் மற்றும் கொலரோடோவில் 60 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

தென்புல வறுமைச் சட்ட  மையம் (The Southern Poverty Law Center -SPLC) என்னும் தீவிர வலதுகள், இனவெறியாளர்கள், மற்றும் பாசிச குழுக்களைப் பற்றித் தகவல் சேகரித்துள்ள அமைப்பு திங்களன்று 2000த்தில் இருந்து பேஜைத் தாம் கண்காணித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் அவர், The Turner Diaries என்னும் நூலின் ஆசிரியரான வில்லியிம் பியர்சின் தலைமையில் உள்ள நவ நாஜிசக் குழுவான National Alliance இடம் இருந்து பொருட்களை வாங்க முற்பட்டார்.

இந்நூல், அமெரிக்க அரசாங்கம் ஒரு இனப் போரை அடுத்து பாசிஸ்ட்டுக்களால் தூக்கியெறியப்படுவது குறித்துக் கூறுகிறது; இது வெள்ளை இன ஆதிக்கவாதிகளுக்கு விவிலியம் போன்றதாகும். புத்தகத்தின் சில பகுதிகள் வளைகுடாப்போரில் மூத்தவீரராகவும் வலதுசாரிப் போராளி உறுப்பினராகவும் இருந்த டிமோதி மக்வேயின் தப்பியோடும் காரில் கண்டு எடுக்கப்பட்டன. அந்நபர் 1995ல் ஒக்லஹோமா நகரவைக் கட்டிடத்தைக் குண்டு வைத்து தகர்த்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.

Label 56 என்னும் வலதுசாரி ஒலிப்பதிவு நிறுவனத்திற்கு 2010ல் பேஜ் கொடுத்த பேட்டியொன்றில் தான் ஜோர்ஜியாவில் இருக்கும் Hammerfest ற்கு 2000 ம் ஆண்டில் சென்றதாகவும் அங்கு வெள்ளையின ஆதிக்க இசைக்குழுவான Youngland ல் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். 2005ல் அவர் தன்னுடைய சொந்த இசைக்குழுவான End Apathy என்பதை நிறுவினார்.

திங்களன்று, Responsible for Equality and Liberty என்னும் மனித உரிமைக்குழு, மிலுவாக்கியில் எவரோ “End Apathy” என்னும் பெயரைப் பயன்படுத்தி வெள்ளை இன மேலாதிக்க வலைத் தளமான Stormfront ல் 2008 தொடக்கத்தில் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கினர் என்று கூறியுள்ளது. இந்த வலைத் தளம் பேஜின் இசைக்குழு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்தது; மேலும் வெள்ளை இன மேலாதிக்க குழு ஒன்றின் கூட்டம் கடந்த மார்ச் மாதம் வேர்ஜீனியாவில் உள்ள ரிச்மாண்டில் நடைபெற்றதற்கும் விளம்பரம் அளித்தது.

அரசாங்கமும் செய்தி ஊடகமும் பேஜின் பாசிசப் பிணைப்புக்களை ஆராய விரும்பவில்லை; ஏனெனில் இது அமெரிக்காவில் சமூக மற்றும் அரசியல் இழிசரிவைப் பற்றிய பரந்த வினாக்களை எழுப்புகிறது. இதில் உத்தியோகபூர்வ இராணுவவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதின் ஒரு பாகமாக குறிப்பாக சமூகத்தில் பிற்பட்டுள்ள அடக்குகளில் முஸ்லிம் எதிர்ப்பு, இனவெறி உணர்வை தூண்டுதல் என்பதும் அடங்கியிருக்கிறது.

9/11ல் இருந்தே அமெரிக்காவில் வாழும் 350,000 பேர் கொண்ட சீக்கிய மக்கள்மீது 700க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. சீக்கியர்கள் பொதுவாக தங்கள் முடியையும், தாடியையும் நீளமாக வளர்ப்பவர்கள், டர்பன் அணிபவர்கள், பொதுவாக முஸ்லிம்கள் என்று தவறாக அடையாளம் காணப்படுபவர்கள்; இதையொட்டி அவர்கள் மீது  வலதுசாரிக் கூறுகளின் தாக்குதல்கள் வந்துள்ளது ஒரு காரணம் ஆகும்.

சீக்கியர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் கடந்த ஏப்ரல் மாதம் உயர்ந்த அளவினால், நியூ யோர்க்கின் பிரதிநிதி Joseph Crowldy, இணைத் தலைவரும், இந்தியர்கள், இந்திய அமெரிக்கர்கள் ஆகியோருக்காக காங்கிரசில் உள்ள செல்வாக்குக் குழு உறுப்பினர், தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஹோல்டருக்கு ஒரு கடிதம் எழுத நேர்ந்தது; அதில் அவர் FBI சீக்கிய அமெரிக்கர்களுக்கு எதிரான வெறுப்பில் விளையும் குற்றங்கள் பற்றித் தகவல்களை சேகரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இக்கடிதம், கடந்த ஆண்டு மட்டும் சாக்கரமன்டோவில் இரு சீக்கிய ஆண்கள் கொல்லப்பட்டனர், மிச்சிகனில் ஒரு சீக்கியக் கோயில் சூறையாடப்பட்டது, நியூ யோர்க்கில் ஒரு சீக்கியர் தாக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளது.

இராணுவத்தின் உளவியல் நடவடிக்கை பிரிவுகளில் பேஜ் கழித்த ஆண்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்பிற்காக இலக்கு வைக்கும் எந்த மக்களுக்கு எதிராகவும் வெகுஜனக் கொலைகளை நடத்தத் தயாராக இருக்கும் உளரீதியான ஈடுபாட்டைக் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுடைய ஒத்துழைப்பையும் நாடியுள்ளது குறித்து விளக்குகின்றன.