World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The CIA proxy war in Syria and the pro-imperialist “left”

சிரியாவில் CIA இன் பினாமிப்போரும் ஏகாதிபத்திய சார்பு

Alex Lantier
3 August 2012

Back to screen version

அமெரிக்க உளவுத்துறை பிரிவு சிரியாவில் எழுச்சி இராணுவக்குழுக்களுக்கு மறைமுகமான உதவி வழங்கிவருவது பற்றிய அறிக்கைகள், அந்நாட்டை முழுமையாக கையேற்றுக்கொள்வதற்கான அமெரிக்க பிரச்சாரத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் சமீபத்திய கட்டத்தைக் குறிக்கிறது.

சிரிய எழுச்சியாளர்கள் அலெப்போவில் ஏராளாமான இராணுவத்தினரை கொலை செய்வதைக் காட்டும் ஒளிப்பதிவுகள் நேற்று வெளிப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்த ஆண்டு முன்னதாக அமெரிக்க உளவுத்துறைக்கு அசாத் எதிர்ப்பு சக்திகளுக்கு உதவுவதற்கு இசைவு கொடுத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. வாஷிங்டன் அதன் வலதுசாரி மத்திய கிழக்கு நட்பு நாடுகளான துருக்கி, சவுதி அரேபியா, மற்றும் கட்டார் ஆகியவை ஆயுதங்கள், நிதியையும் கிளர்ச்சியாளர்களுக்கு வழங்குவதற்கும் உதவுகிறது.

இச்சக்திகள் அரபு வசந்தம் என்பதின் ஒரு பகுதியாக ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு போர் நடத்தவில்லை. அரபு வசந்தம் என்பது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரிகளை துனிசியா மற்றும் எகிப்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தொழிலாள வர்க்க எழுச்சி அலை அகற்றிய நிகழ்வாகும். அது வாஷிங்டனையும் அதன் மத்திய கிழக்கு நட்பு நாடுகளையும் பீதிக்கு உட்படுத்தியது. இவர்கள் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அகற்றி அமெரிக்க சார்பு கைப்பாவை ஆட்சியை டமாஸ்கஸில் நிறுவுவதற்கு ஒரு பிற்போக்குத்தன போரை நடத்துகின்றன.


சிரிய எழுச்சிக்கு துருக்கியில் இன்சிர்லிக் விமானத் தளம் உள்ள அடானாவில் ஒரு முக்கிய மையத்தை வாஷிங்டன் நிறுவியுள்ளது. இது சிரிய எல்லைக்கு 60 மைல் தூரத்திற்குள் நிறுவப்பட்டுள்ள ஒரு முக்கிய அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை கட்டமைப்பாகும். தெற்குத் துருக்கியின் இப்பிராந்தியம் இப்பொழுது ஆயுதங்கள் மற்றும் அமெரிக்க சார்பு கிளர்ச்சியாளர்கள் சிரியாவிற்கு பயணிக்கும் முக்கிய போக்குவரத்துப் பகுதியாகும்.

சிரிய கிளர்ச்சியாளர்கள் வாஷிங்டனின் செயற்பாட்டு உத்தரவுகளின் பேரில்தான் பெரும்பாலும் நடந்து கொள்கின்றனர். அமெரிக்கப் படைகள் வாடிக்கையாக தங்கள் நட்பு நாடுகளுடன் சிரியாவில் உள்ள கிளர்ச்சி படைகள் மூலம் தொடர்பு கொள்ளுவதுடன், அவற்றிற்கு சிரிய துருப்புக்களின் நடமாட்டம் பற்றிய அறிக்கைகளை வழங்கி தளத்தில் வழிநடத்துகின்றது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்திய கிழக்கு முழுவதில் இருந்தும் சிரியாவில் போராடுவதற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் அமெரிக்க ஆக்கிரமிப்பில் உள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இஸ்லாமியவாத லிபியக் கைப்பாவை அரசாங்கம், மற்றும் அல்ஜீரியா, செஷேன்யா மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வருகின்றனர். முன்னாள் அமெரிக்க சிறப்புப் படை அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் அவர்களில் பலர் சிரியாவில் உள்ள அல் குவேடாவினரின் உதவியுடன் வருகின்றனர் எனக் கூறியுள்ளனர். அது பணத்திற்கு சண்டையிடுவோரை நம்பியுள்ளது. சிலர் கருத்தியல் ரீதியாகவும் கூட்டுசேர்ந்துள்ளனர், சிலர் பணத்தினால் உந்துதல் பெறுகின்றனர்.

ஓர்வெல்லியன் உலகத்திலுள்ள அமெரிக்க செய்தி ஊடகம், வாஷிங்டன் ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துவதற்குத்தான் ஆக்கிரமித்துள்ளது என்ற கூற்றயோ அல்லது அது அல் குவேடாவிற்கு எதிரானது என்னும் கூற்றை நடைமுறையில் சிரியாவில் அது அல் குவேடாவுடன் கொண்டுள்ள உடன்பாட்டினால் நிராகரிக்கப்படுவதை எடுத்துக்காட்ட எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

அமெரிக்கா அசாத் எதிர்ப்புப் படைகளுக்கு அதிக ஆபத்தில்லாத உதவியைத்தான் அளிப்பதாகக் கொடுக்கும் ஒபாமாவின் உத்தரவாதம் ஓர் இழிந்த பொய் ஆகும். அமெரிக்கா ஒரு பினாமி முறையில் மிருகத்தனமான போரை நடத்திவருகிறது. இது ஏற்கனவே பல்லாயிர மக்களின் உயிர்களைக் குடித்துள்ளதுடன், நூறாயிரக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்துவிட்டது.

இதன் நோக்கம் ஒரு அமெரிக்க கைப்பாவை ஆட்சியை டமாஸ்கஸில் நிறுவி, ஈரானுக்கு எதிரான போருக்கு தயாரிப்புக்கள் நடத்தி, இஸ்ரேலுக்கு விரோதியாகக்கூடிய அந்நாட்டை அகற்றி, மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த ஆதிக்கம் என்னும் முழு செயற்பட்டியலை முன்வைப்பதாகும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஒரு தசாப்த அமெரிக்கப் போர்களில் தொடரப்படும் இச்செயற்பட்டியல், வட ஆபிரிக்காவில் லிபியா, சிரியாவிற்கு எதிரான வெகுஜன எழுச்சிக்கள் ஏற்பட்ட பின் தீவிரமாகியுள்ளதுடன், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திடையே பெரும் இகழ்வினைத்தான் கொண்டுள்ளது.

வாஷிங்டன் சிரிய எழுச்சியாளர்களுக்கு இரகசிய ஆதரவு கொடுப்பது ஏகாதிபத்திய சார்பு போலி இடது குழுக்களான ISO எனப்படும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிச அமைப்பு, பிரித்தானியாவில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் பிரான்ஸில் உள்ள புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி (NPA)  ஆகியவற்றின் பங்கை அப்பட்டமாக காட்டுகிறது. அவர்களுடைய இடதுசாரித் தன்மை என்பது அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கு இடது நியாயப்படுத்தலை வழங்குவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

ISO ஒரு ஏகாதிபத்திய தலையீட்டிற்கு அதன் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கிறது. சோசலிஸ்ட் வேர்க்கர்  பதிப்பில் யூசுப் கலில் மற்றும் லீ சுஸ்டர் எழுதியுள்ள கட்டுரையில், ஆயுதப் போராட்டத்தின் அதிகரித்துள்ள பங்கு என்பது மேற்கில் இருந்து ஆயுதங்களையும் ஆதரவையும் ஏற்பதை என்ற பிரச்சினையை எழுப்பியுள்ளது.... சிரியப் புரட்சி இயக்கத்தில் பலரும் அமெரிக்கா மற்றும் மேலைத் தலையீட்டை எதிர்க்கையில், அவர்கள் எங்கிருந்து உதவி வந்தாலும் அதைப் பெற்றுக் கொள்வது என உள்ளனர். என எழுதியுள்ளது.

இத்தகைய வாதங்கள், அங்குள்ள சக்திகளை புரட்சிகரமானவை என்று குறிப்பிடுவதை பகுப்பாய்வதில்லை என்பது அதிர்ச்சி தரும் இழிசெயல் ஆகும். எப்பொழுது CIA, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் துருக்கிய இராணுவ மேல்தட்டு ஆகியவை சுதந்திரத்திற்கான சக்திகள் ஆயின? இப்படி எழுதுகையில், ISO அது இடது குட்டி முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய சார்பு பிரிவிற்காக பேசுவதைத் தெளிவாக்குகிறது.

தன்னை ஒரு இடதுசாரி அமைப்பு எனக் காட்டிக் கொள்ளும் இதன் முயற்சியும் அபத்தமானதாகப் போகிறது. அமெரிக்கா சிரியாவில் தலையீடு செய்வது குறித்து அது எழுப்பும் முக்கிய கவலை, அது புரட்சிகர சக்திகளை பிரிவிற்கு உட்படுத்தினாலும் அமெரிக்க ஆதரவு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, மற்றவர்களை ஒதுக்க நேரிடலாம், என்பதுதான்.

சுஸ்டர் எந்த புரட்சிகர சக்திகளைப் பற்றி பேசுகிறார்? அங்கு இருப்பவை இராணுவக்குழுக்களின் கூட்டமாகும். இதில் அவர்கள் அழைப்பதைப்போல் CIA க்கு ஆதரவானவர்களும் உள்ளனர். மற்றும் அச்சக்திகளுடன் இணைந்துள்ள சிரிய சமூகத்தில் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம்வரை தம்மை இணைத்துக் கொண்டுள்ள பல அல்குவேடா நடவடிக்கையாளர்களும் உள்ளன. இச்சக்திகளின் பிற்போக்குத்தனத் தன்மையை புரட்சி என்னும் பெயரில் மறைக்க முற்படுகையில், சுஸ்டர் வெளிவிவகாரத்துறையின் கூடுதலான இடது சார்பாக பேசும் செயலர்களில் ஒருவர்போல்தான் பேசுகிறார்.

ISO “ஒரு கொள்கைரீதியான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியினர், இவர்கள் ஒரே நேரத்தில் நடக்கவும் முடியும், சூயிங்கத்தையும் மெல்லுவதற்கு முடியும். அதாவது லிபியா மற்றும் சிரியாவில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான புரட்சிகளுக்கு ஆதரவைக் கொடுக்கமுடியும், அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளின் தலையீட்டை எதிர்க்கவும் முடியும். என்று சுஸ்டர் பாராட்டுகிறார்.

இத்தகைய முட்டாள்தனமான கருத்து ISOவினதும் முழுக் குட்டி முதலாளித்துவப் போலி இடதுகளின் அரசியலின் இதயத்தானத்திற்கு செல்கின்றன. சுஸ்டரைப் பொறுத்தவரை ISO “நடக்கவும் முடியும், சூயிங் கம் மெல்லவும் முடியும். ஏனெனில் அதற்கு எப்படி ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பதும் அதே நேரத்தில் இடது என்று காட்டிக் கொள்வது என்பதை பற்றியும் நன்கு அறியும்.

ஓர் அமைப்பின் வர்க்க சார்பு எப்பொழுதும் அதன் சர்வதேசக் கொள்கையில் மிகத் தெளிவான வெளிப்பாட்டைக் காணும். சிரியாவில், ISO மற்றும் அதன் சர்வதேச சக சிந்தனையாளர்கள் ஏகாதிபத்தியத்தின் அரசியல் கையாட்கள் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.