சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Mars landing

செவ்வாயில் விண்கலத் தரையிறக்கம்

Patrick Martin
10 August 2012

use this version to print | Send feedback

ரோவர் கியூராஸிட்டி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கியிருப்பது பரந்துபட்ட மக்களின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டியிருக்கிறது. நாசா விண்வெளி ஆய்வு முகமையின் சேர்வர்களே முடங்கும் அளவுக்கு, புதிய விவரங்களைப் பெறுவதற்கும் தரையிறக்கத்தையும் மற்றும் செவ்வாய் கிரகத் தோற்றத்தையும் காட்டும் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்யவும் ஏராளமானோர் நாசா வலைத் தளங்களுக்கு வருகை தந்தனர்

மனிதன் ஆராய்வதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான அடுத்த கட்டமாக மனித சிந்தனையை வெகு காலம் ஆக்கிரமித்து வந்திருக்கக் கூடிய இந்த கிரகத்தை கியூரியாசிட்டியில் இருக்கும் பத்து மிக நவீன சாதனங்கள் மணிக்கு மணி, நாளுக்கு நாள் ஆய்வு செய்யும். மனித குலத்தின் விஞ்ஞான அறிவிலான இந்த பிரம்மாண்டமான விரிவு மதரீதியில் அறிவுக்குத் திரையிடுதலுக்கு எதிராய் மட்டுமல்லாமல் பின் நவீனத்துவம் போன்ற கருத்துவாத நீரோட்டங்களால் பரப்பப்படுகின்ற பிற்போக்குத்தனமான ஐயுறவுவாதத்திற்கு எதிராகவும் விழுந்த பலமான அடியாகும்.

விஞ்ஞானரீதியான அறிவை அதிகப்படுத்தும் பொருட்டே (வாழ்க்கை வடிவங்கள் அபிவிருத்தி காண்பதற்கான நிலைமைகள் செவ்வாயில் எப்போதாவது நிலவியிருந்ததா என்பதைக் கண்டறிவதில் குறிப்பானதொரு கவனத்துடன்)செவ்வாய் விஞ்ஞான ஆய்வகம்(இவ்வாறு தான் கியூரியாசிட்டி முறைப்படி அறியப்படுகிறது)உருவாக்கப்பட்டது, கட்டப்பட்டது, செலுத்தப்பட்டது, அக்கிரகத்தில் இறங்கியது. (Gale Crater இல் தரையிறங்கும் இடம் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணம் பல்தரப்பட்ட பாறை அடுக்குகளும் படிவுகளும் இக்கிரகத்தின் வரலாற்றைக் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிக்கும் என்பதால் தான்.)  

முந்தைய விண்வெளிப் பயணங்களில், குறிப்பாக முந்தைய இரண்டினை அனுப்பியிருந்ததில்(அவை மிகச் சிறிய ரோவர்கள் என்றாலும் கூட)இருந்து திரட்டப்பட்ட அறிவின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்த சாதனையானது ஏற்கனவே நவீன விஞ்ஞானம் மற்றும் பொறியியலுக்கான ஒரு வெற்றியே. மார்ஸ் ஒடிஸி மற்றும் மார்ஸ் ரிகனாய்சன்ஸ் ஆர்பிடர் ஆகிய செவ்வாயின் சுற்றுப்பாதையில் இப்போதிருக்கும் இரண்டு நாசா விண்வெளி ஓடங்கள் விலைமதிப்பற்ற பாத்திரத்தை ஆற்றின. பூமியில் இருந்தான தகவல் பரிவர்த்தனைகளை வழங்கிய இவை கியூரியாசிட்டிக்கு செவ்வாய் கிரகத்தின் தரையில் இறங்கிய அதன் இறுதி ஏழு நிமிடங்களில் உதவி செய்தன, அத்துடன் தரையிறக்கத்தை படமெடுப்பதிலும் உதவின.

அந்த அர்த்தத்தில் பார்த்தால், இந்த சமீபத்திய செவ்வாய் திட்ட வெற்றியானது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களது ஒரு உயர் திறம்படைத்த படையின் கூட்டுழைப்பின் நீட்சியையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவர்களது முந்தைய உழைப்பே சென்ற ஞாயிறு இரவின் வெற்றியைச் சாத்தியமாக்கின. இந்தச் சாதனை தனிநபர் அபாரத் திறமையின் விளைபொருளாக இருக்கவில்லை, மாறாக கூட்டாகச் செய்த குழுப்பணியின் விளைபொருளாக இருந்தது. (அல்லது கூட்டு அபாரத் திறம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் கியூரியாசிட்டியில் ஒன்றாய் வேலைபார்ப்போர் குறிப்பிடத்தக்க புத்திசாலிகள் மற்றும் திறமைசாலிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.)

இந்த திட்டத்தில் இடப்பட்ட திட்டமிடலின் மட்டம் அதன் மிகக் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். விண்கலமும் அதன் பாகங்களும் இயக்கக் கூடிய வகையிலான ஆயிரக்கணக்கான செயல்பாடுகள் முன்கூட்டியே நிரலாக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையிலான மிக அதிக தூரத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் (வானொலி சமிக்கைகள் ஒரு திசையில் சென்று சேர்வதற்கே ஏழு நிமிடங்களாகும்)பூமியிலிருந்து பொறியாளர்கள் செவ்வாய் கிரகத்திலான நடவடிக்கைகளை உடனடி நேரத்தில் செலுத்துவதென்பது சாத்தியமில்லாததாய் இருந்தது. அவசியமான கட்டளைகளை வழங்குவதற்கென மென்பொருள் வரிகள் நூறாயிரக்கணக்கில் எழுதப்பட்டன.

விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கிய பின் ஒபாமாவின் வெள்ளை மாளிகை, இந்த சாதனையை தேசியவாதப் பொருளில் வழங்குகின்ற ஒரு சுருக்கமான அறிக்கையை ஜனாதிபதியின் பெயரில் வெளியிட்டது. இன்று செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா வரலாறு படைத்திருக்கிறது என்று தொடங்கும் அந்த அறிக்கை இந்தச் சாதனையானது வருங்காலத்தில் வெகு காலத்திற்கு தேசியப் பெருமிதத்தின் ஒரு அடையாளமாக நிலைத்து நிற்கும் என்றும் நமது தனித்துவம் மற்றும் விடாமுயற்சியின் பிரத்யேகக் கலவையை இது விளங்கப்படுத்தி நிற்பதாகவும் சேர்த்துக் கொண்டது

ஒபாமாவின் விஞ்ஞான ஆலோசகரான ஜான் பி.ஹோல்ட்ரனும் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இதேபோன்றதொரு தொனியையே வெளிப்படுத்தினார். ஒரு டன் அளவுக்கு ஒரு வாகனத்தின் அளவிலான அமெரிக்க தனித்துவத்தின் துண்டு ஒன்று இப்போது செவ்வாயில் அமர்ந்து கொண்டிருக்கிறது.பல செவ்வாய் பயணங்களுடன், அமெரிக்கா மட்டுமே, இன்னொரு கிரகத்தில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய ஒரே நாடு என்று பெருமையடித்துக் கொள்ளவும் அவர் சென்றார். வீனஸில் சோவியத் விண்கலங்கள் தரையிறங்கியதை (பத்து வெனிரா (Venera)உணர்கருவிகள் பத்திரமாகத் தரையிறங்கியதோடு 1970 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரையான காலத்தில் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தன)அவர் வசதியாய் மறந்து விட்டார்.

இதனை அமெரிக்க விழுமியங்களுக்குக் கிடைத்த வெற்றியாகச் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்ற போதிலும் கூட, செவ்வாயில் விண்கலம் வெற்றிகரமாய்த் தரையிறக்கப்பட்டதென்பது, வோல் ஸ்ட்ரீட்டும் மற்றும், வாஷிங்டன் மற்றும் ஊடங்களில் இருக்கக் கூடிய அதன் அரசியல் சேவகர்களும் நவீன சமூகத்தினை ஒழுங்கமைப்பதற்கான ஒரே சாத்தியமான கோட்பாடாக தவறாமல் காட்டுகின்ற வேட்டையாடும் தனிநபர்வாதத்திற்கு நேரெதிரானதாகும். இன்னொரு கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மிகப் பெரியதும் மிக முன்னேறியதுமான ஒரு ரோபாட் ஆய்வு எந்திரத்தை அனுப்புவதிலும் செவ்வாயில் தரையிறங்கச் செய்ததிலும் சந்தையோ அல்லது இலாப நோக்கோ சொல்லிக் கொள்ளும்படியான எந்த பாத்திரத்தையும் ஆற்றவில்லை.   

ஜெட் செலுத்த ஆய்வகத்தில் (இது கலிபோர்னியா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஒரு பகுதி) நாசா விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் மற்றும் அவர்களது சகாக்களும் செய்திருக்கும் உழைப்பு சமூகக் கூட்டு முயற்சி மற்றும் அறிவியல் திட்டமிடலின் வலிமைக்கு வாழும் உதாரணமாய் விளங்குகிறது. பசி, நோய், வேலைவாய்ப்பின்மை, வறுமை, சூழல் பேரழிவு, போர் ஆகிய இங்கே பூமியில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இந்த வழிமுறைகள் ஏன் இதே அளவுக்கு வெற்றிகரமாய் அமல்படுத்தப்பட முடியாது என்கிற கேள்வியை இது தவிர்க்கவியலாமல் முன்வைக்கிறது.    

செவ்வாயில் தடம்பதிப்பதைப் பாராட்டுவதில் இருந்து விண்வெளித் திட்டத்தை தனியார்மயமாக்கும் ஒபாமாவின் முயற்சிகளைப் பாராட்டுவதற்காய் வெள்ளை மாளிகையின் அறிக்கை திசைமாறியது. அமெரிக்க விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு அமெரிக்க நிறுவனங்களுடன் ஒரு புதிய கூட்டிற்கான ஒரு இலட்சிய நோக்கமாக அந்த முயற்சிகள் வருணிக்கப்பட்டனஇங்கே பிற்போக்குத்தனமான தேசியவாதம் என்பது சந்தையை அற்பத்தனமாய்த் தொழுவதுடன் கைகோர்த்துக் கொள்கிறது

அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் போலவே, விண்வெளித் திட்டமும் நிதிப் பிரபுத்துவத்தின் சர்வாதிகாரத்தினால் திரிக்கப்படுகிறது, கறைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இப்போது வரை விளைவு மறைமுகமாக மட்டுமே இருந்திருக்கிறது. நாசாவிலோ அல்லது JPL இலிலோ அந்தப் பெரும் ஸ்தாபனத்தின் நலன்களைப் பலியிட்டு தனது பைகளை நிரப்பிக் கொள்கிற மல்டிமில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரி யாரும் கிடையாது. செவ்வாய் திட்டத்தில் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவு மேற்கொள்வோர் அனைவருமே ஒரு விஞ்ஞான அல்லது விண்வெளித் திட்ட பின்னணி கொண்ட விஞ்ஞானிகள் அல்லது நிர்வாகிகள். அவர்களில் ஒரு வங்கியாளரோ அல்லது பெருநிறுவனத் திடீர்பிரவேசிகளோ யாருமில்லை.

அமெரிக்காவில் சராசரியானதொரு தொழிலாளியுடன் ஒப்பிட்டால் இந்தத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பவர்கள் கணிசமான ஊதியம் பெறுபவர்களாய் இருக்கிறார்கள் தான், ஆயினும் அவர்கள் நிச்சயமாக பணத்திற்காய் அதில் இருப்பவர்கள் இல்லைஎன்பது தெளிவு. அவர்கள் மிகப் பெருமளவில் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டிருந்தவர்களாய் இருந்தனர் என்பதை விண்கலம் வெற்றிகரமாய்த் தரையிறங்கியதன் பின் அவர்கள் குதூகலித்த காட்சிகள் எடுத்துக் காட்டின.

மிகப்பெரும் விண்வெளி நிறுவனங்களில் சில நாசா ஒப்பந்தப் பணிகளைப் பெறுவதை மிகப் பெரும் இலாப வாய்ப்பாகக் கண்டன என்கிற அதே சமயத்தில், விண்வெளித் திட்டத்தின் வரலாறானது அமெரிக்க முதலாளித்துவத்தின் விரிந்த மூலோபாய அக்கறைகளுடன் மிகமிக நெருக்கமாய்ப் பிணைந்திருந்தது. ஆரம்ப நாட்களில் சோவியத் ஒன்றியத்துடன் விண்வெளிப் போட்டியில் ஈடுபட்டது, மற்றும் 1960களின் முடிவுக்குள்ளாக சந்திரனில் ஒரு மனிதனை காலடி எடுத்து வைக்கச் செய்வதற்கு கென்னடி எடுத்துக் கொண்ட பிரபலமான சபதம் ஆகியவை வரை இது பின்னோக்கிச் செல்கிறது.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஓரளவுக்கு இந்த சிந்தனைகள் எல்லாம் மங்கத் தொடங்கின, இது குறைந்தபட்சம் நாசாவிற்கு ஒரு பகுதி ஆதரவு குறைந்ததில் கணக்கிற்கு வந்தது. ஆனால் அமெரிக்க ஆளும் உயரடுக்கு இந்த சிந்தனைகளை மீண்டும் மேல்கொண்டுவரத் தொடங்கியிருக்கிறது, இந்த முறை சீனாவை முன்வைத்து. செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தைப் பகிர்வது தொடர்பான கட்டுப்பாடுகள் முதன்முதலாய் 1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. சென்ற ஆண்டில், குறிப்பான அனுமதி இல்லாமல் சீனாவுடன் இணைந்து எந்த திட்டத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு நாசா நிதி பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு தடையைக் கொண்டுவந்தது.

ஒட்டுமொத்த பூமிப்பந்திலுமான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இடையிலான உண்மையான உலகளாவிய ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அடித்தளத்தின் மீது மட்டுமே அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் மகத்தான விஞ்ஞான சாதனைகளும், மற்றும் ரஷ்யாவிலும், சீனாவிலும் மற்றும் பிறவெங்கிலுமான இதேபோன்ற சாதனைகளும் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட முடியும். முதலாளித்துவ போட்டி தேசிய-அரசுகள் என்ற, அத்துடன் சமூகத்தின் அத்தனை ஆதார வளங்களையும் தனியார் இலாப அதிகரிப்புக்காய் அர்ப்பணிக்கக் கோருகின்ற ஒரு ஆளும் உயரடுக்கின் தணிக்கவியலாத இலாபவேட்கைகள் என்ற, தளையில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியையும், மற்றும் பிற ஒவ்வொரு மனித முயற்சியையும் விடுவிப்பது என்பதே இதன் பொருளாகும்.