சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama and Al Qaeda

ஒபாமாவும் அல்குவேடாவும்

By Bill Van Auken
5 December 2012

use this version to print | Send feedback

செவ்வாயன்று பிரஸ்ஸல்ஸில் கூடிய நேட்டோ வெளியுறவு மந்திரிகள் சிரியுவுடனான அதன் எல்லையில் பாட்ரியட் ஏவுகணைக் கலங்களும் நூற்றுக்கணக்கான அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டுத் துருப்புக்களும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்னும் துருக்கியின் வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளித்தனர். இந்த தயார்ப்படுத்தல் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க ஆதரவுப் போரின் தரத்தையொட்டிய விரிவாக்கத்தைக் குறிப்பதோடு, கடந்த ஆண்டு லிபியாவில் நடந்ததைப்போல், ஒரு நேரடி அமெரிக்க நேட்டோ தலையீட்டிற்கு வழிவகுக்கும்.

ஆயுதங்கள், நிதி, வெளிநாட்டுப் போராளிகள் மற்றும் போக்குவரத்து உதவிகளை ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை அகற்ற முற்படும் "எழுச்சியாளர்கள்" என்று கூறப்படுபவர்களுக்குத் திருப்புவதில் முக்கிய பங்கு கொண்டுள்ள துருக்கி, தன் வேண்டுகோளை நியாப்படுத்தும் வகையில் சிரிய ஆட்சியின் தரைக்குத்தரை ஏவுகணைகள் இராசயன ஆயுதங்களைக் கொண்டு அதைத் தாக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்று கூறுகிறது.

தெளிவாக ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரத்தில் துருக்கியின் ஆதாரமற்ற கூற்றான சிரியாவிடம் இருந்து இரசாயன ஆயுத அச்சுறுத்தல் என்பது அமெரிக்க அரசாங்கம் மற்றும் முக்கிய அமெரிக்க செய்தி ஊடக வெளியீடுகளின் பெரும் குற்றச்சாட்டுக்களாலும் விரிவாக்கம் அடைந்தது. பெயர் குறிப்பிடாத "உளவுத்துறை" ஆதாரங்களை நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் CNN மேற்கோளிட்டு சிரிய இரசாயன ஆயுத கூறுபாடுகளின் நகர்வுகள் பற்றிக் கூறியுள்ளன. இத்துடன் ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டனுடைய அச்சுறுத்தல்களும் இணைந்துள்ளன; அவர்கள் சிரியா ஒரு "சிவப்புக் கோட்டை" (red line) அணுகுவதாகவும் அது நேரடி அமெரிக்கத் தலையீட்டை விளைவிக்கும் என்றும் கூறினர்.

அமெரிக்க மக்கள் அமைதியற்ற "முன்னரே இதைக் கண்டிருக்கிறோமே" என்ற உணர்வை அனுபவித்தால், அது நல்ல காரணத்தையொட்டித்தான் இருக்கும். ஒரு தசாப்தத்தில் இரண்டாம் முறையாக வாஷிங்டன் மத்திய கிழக்கில் ஆத்திரமூட்டும் தன்மையற்ற போர் ஒன்றை, போலியான "உளவுத்துறை"அறிக்கைகள் "பேரழிவு ஆயுதங்கள்" என்பதை ஒட்டி தொடக்க அச்சுறுத்தியுள்ளது.

ஆனால் இத்தகைய கதை ஒபாமா நிர்வாகத்தால் கூறப்படுகிறது என்பதற்கும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷினால் எப்படி அளிக்கப்பட்டது என்பதற்கும் இடையே ஒரு மிக முக்கியமான வேறுபாடு உள்ளது. ஈராக்கிற்கு எதிரான போரை நியாயப்படுத்தப் பயன்பட்ட பொய்களில் ஈராக்கில் இல்லாத பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய குறிப்பு மட்டும் இல்லாமல், இந்த ஆயுதங்கள் அல் குவேடா பயங்கரவாதிகளின் கைகளில் சேரலாம் என்ற அச்சுறுத்தலும் சேர்ந்திருந்தது; அந்த அமைப்புத்தான் 9/11 தாக்குதல்களின் புதிய தரத்தைத் தோற்றுவித்தது. ஒபாமா நிர்வாகம் அத்தகைய அல் குவேடா அச்சுறுத்தலைப் பற்றிய குறிப்பைக் கொடுக்கவில்லை.

இதை மிகவும் அசாதாரணமாக்குவது எதுவெனில், ஈராக்கில் அல் குவேடா இருந்தது என்னும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தயாரிக்கப்பட்டவை என்ற நிலையில், அல் குவேடா தொடர்புடைய குழுக்களும் வெளிநாட்டுப் போராளிகளும் சிரிய நிகழ்வுகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர் என்பது மிகவும் தெளிவாகியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்டின் வெளியுறவுக் கொள்கை கட்டுரையாளர் டேவிட் இக்நேஷியஸ், திங்களன்று அல்குவேடாவுடன் தொடர்புகளை கொண்ட இஸ்லாமிய போராளிகள் அமைப்பான ஜபத் அல்-நுஸ்ரா இப்பொழுது சிரியாவில் நிலப்பகுதியில் 10,000 போராளிகளைக் கொண்டுள்ளது, அது "எதிர்த்தரப்பின் மிக ஆக்கிரோஷம் நிறைந்த, வெற்றிகரமான கையாகச் செயல்படுகிறது" என்று எழுதியுள்ளார்.

இதேபோல் McClatchy செய்தித்தாட்களின் டேவிட் என்டெர்ஸ், சிரியாவில் இருந்து எழுதுகையில், ஜபத் அல்-நுஸ்ரா "அசாத்தை கவிழ்ப்பதற்கு போராடும் எழுச்சியாளர்களின் முன்னணிச் செயற்பாடுகளுக்கு முக்கியமானதாக போய்விட்டது" என்று எழுதியுள்ளார்.

"இக்குழு, இன்னும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொல்கிறது என்பது மட்டுமின்றி, குழுவினர் எழுச்சியாளர்களின் இராணுவ முன்னேற்றத்திற்கு முக்கியமானவர்கள் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளனர்" என்று என்டெர்ஸ் தொடர்ந்து எழுதுகிறார். "நாடெங்கிலும் நடக்கும் ஒவ்வொரு போரிலும் நுஸ்ரா மற்றும் அதேபோன்ற குழுக்கள் மிக அதிகமான முறையில் முன்னணியில் போராடுகின்றனர்."

இந்த அல்குவேடா தொடர்புடைய சக்திகள் சமீபத்திய வாரங்களில் சிரிய இராணுவத் தளங்களைக் கைப்பற்றி ஆயுதமற்ற புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சிரிய சிப்பாய்களை கொல்லுவதுடன் சிறைபிடிக்கவும் செய்துள்ளனர். இவர்கள் இரசாயன ஆயுதங்களை அணுக முடியும் என்ற ஆபத்துத்தான் மிகவும் உண்மையாக உள்ளது.

ஒபாமா நிர்வாகம் இதைப் பொறுத்தவரை மௌனமாக உள்ளது; ஏனெனில் அல் குவேடா சக்திகள் சிரியாவிற்குள் ஆட்சி மாற்றத்திற்கான போரில் அமெரிக்காவின் பினாமிகளாக செயல்படுகின்றன. CIA மற்றும் வாஷிங்டனின் அரபு நட்புநாடுகள், குறிப்பாக கட்டார், சௌதி அரேபியாவினால் இவை மிக அதிக ஆயுதங்களைப் பெற்றுள்ளன. இவை ஒரு மிருகத்தன உள்நாட்டுப்போரைக் கட்டவிழ்த்துள்ளன; அது நாட்டை அழித்து அமெரிக்க கைப்பாவை ஆட்சி ஒன்றைச் சுமத்துவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது.

இன்னும் பரந்த அளவில், வாஷிங்டன் பிராந்தியத்தில் இருக்கும் சுன்னி இஸ்லாமிய சக்திகள் அனைத்தையும் தூண்டிவிட்ட ஒரு குறுங்குழுவாத மோதலுக்கு வகை செய்கிறது; இது ஷியாப் பெரும்பான்மை உடைய ஈரானின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது, 76 மில்லியன் மக்களைக் கொண்ட எண்ணெய் வளமுடைய இந்நாட்டிற்கு எதிரான போருக்குத் தயாரிப்புக்கள் நடக்கின்றன.

சிரியாவில் வாஷிங்டனுக்கும் அல் குவேடாவிற்கும் இடையே உள்ள உடன்பாடு முன்னதாக இதேபோன்ற உறவை கடந்த ஆண்டு அமெரிக்க-நேட்டோப் போர் லிபியாவில் கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சியை தூக்கியெறியும் நோக்கத்தைக் கொண்டதில் நிறுவப்பட்டது. அதில் பழைய அல் குவேடா தொடர்புடைய லிபிய இஸ்லாமிய போராளிக்குழு நேட்டவின் தரைப்படை போல் செயல்பட்டது. லிபிய இஸ்லாமியவாதிகள் இப்பொழுது செயல்படும் வெளிநாட்டுப் போராளிகளில் முக்கிய கூறுபாட்டைக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் லிபியாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதக் குவியல்கள் அசாத் ஆட்சிக்கு எதிராகப் பிணைந்துள்ள அல்குவேடா தொடர்புடைய போராளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இத்தகைய சக்திகள் மீதான நம்பிக்கை என்பது "பதிலடி" ஆபத்துக்களைக் கொள்ளாமல் இல்லை என்பது கடந்த செப்டர்பர் மாதம் அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் CIA நிலையத்தின் மீதும் பெங்காசியில் நடந்த தாக்குதலில் நிரூபிக்கப்பட்டது. சிரியாவிலும் வாஷிங்டன் இதேபோன்ற அச்சுறுத்தலை உணர்கிறது என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால் சிரியாவில் குருதியைக் கொட்டி அசாத்தை அகற்றியபின் அவை தங்கள் நோக்கத்தை நிறைவேற்றியபின் இந்த இஸ்லாமியப் போராளிகளை சமாளிக்கலாம் என்று நம்புகிறது.

முன்னால் நடந்த லிபியப் போரைப் போலவே, சிரிய நிகழ்வுகளும் அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது ஒரு முழு மோசடி என்பதை அம்பலப்படுத்த உதவியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அல் குவேடாவிற்குக் கொடுக்கும் ஆதரவில் முழு வட்டத்தில் நிற்கிறது. இந்த இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பு ஆரம்பத்தில் அமெரிக்காவினால் 1980கள் போரில் சோவியத் சார்பு ஆப்கானிஸ்தான் ஆட்சியை அகற்ற வளர்க்கப்பட்டது; அப்பொழுது CIA உடன் ஒசாமா பின் லேடன் நெருக்கமாக ஒத்துழைத்தார். பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதாகக் கூறுகையில், வாஷிங்டன் சிரியாவில் ஒரு பயங்கரவாதப் போருக்கு ஆதரவைக் கொடுக்கிறது. இதில் ஏராளமான தற்கொலைப் படையினர், கார் குண்டுத் தாக்குதல்கள் குடிமக்கள் பகுதிகளில் வீசப்படுவது மற்றும் குறுங்குழுவாத கொலைப்படைகளும் உள்ளன.

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நடைபெற்ற போர்கள் அல்குவேடாவை அகற்றுவதற்காக நடத்தப்பட்டவை என்ற முந்தைய கூற்றுக்களே பொய்கள்தான். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட அல்குவேடா நிலைப்பாடு இல்லை என்பதை உடனே ஒப்புக் கொள்ளுகின்றனர்; ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கடுமையான பகை ஆட்சியான ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை அகற்றுவதற்கு தலையிட்டது.

இரு நாடுகளிலும் நடந்த போர்கள், சமீபத்திய லிபியா, சிரியாவில் இராணுவத் தலையீடுகளைப் போல், மத்திய ஆசியா மற்றும பாரசீக வளைகுடாவின் மூலோபாய முக்கிய பிராந்தியங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுதல், அப்பகுதிகளின் பரந்த எரிசக்தி இருப்புக்களைக் கட்டுப்படுத்துல் ஆகிய நோக்கத்துடன் செய்யப்படுகின்றன.

அமெரிக்கா ஒரு முடிவிலாப் போரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஈடுபட்டுள்ளது என ஓர் அடிமைத்தனம் நிறைந்த செய்தி ஊடகத்தால் உதவப்பட்டு ஊக்கம் பெறும் அமெரிக்க ஆளும் அமைப்புமுறை, வாஷிங்டனுக்கும் அதன் இராணுவ உளவுத்துறைக் கருவிக்கும் இராணுவ ஆக்கிரமிப்பை அயல்நாடுகளிலும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலை நடத்துவதற்கும் உரிமத்தை அளிக்கிறது.

சிரியாவில் தலையீடு செய்வதின் மூலம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்கக் கொள்கையில் முக்கிய பங்கை கொண்டிருந்த இந்த கருத்தியல் போலிக்காரணம் சுக்கு நூறாகச் சிதற உள்ளது.