சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: unions help tea companies to increase workload

இலங்கை: தொழிற்சங்கங்கள் வேலைச் சுமையை அதிகரிக்க தேயிலைக் கம்பனிகளுக்கு உதவுகின்றன

By M. Vasanthan and W.A. Sunil
3
February 2012

use this version to print | Send feedback

இலங்கையில் வட்டவலை, பொகவந்தலாவை ஆகிய இரு பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களின் உதவியுடன் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் மீது சுமத்திய புதிய வேலைச் சுமையை குறைக்க மறுத்துள்ளன. கம்பனிகள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ள உற்பத்தி இலக்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது சம்பள வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

தொழில் அமைச்சர், அவரது அதிகாரிகள் மற்றும் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த விவகாரத்தை தீர்ப்பதாக வாக்குறுதியளித்து தொழிற்சங்கங்கள் புதிய இலக்குகளுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை இடை நிறுத்தின. ஆயினும், பெருந்தோட்டக் கம்பனிகள் பின்வாங்குவதற்கு மறுத்துவிட்டன. வேலை இலக்குகளை அதிகரிப்பதானது சகல தோட்டங்களிலும் உற்பத்தியை அதிகரிக்க கம்பனிகள் எடுக்கும் முயற்சியின் பாகமாகும்.

கடந்த மாதம் பொகவந்தலாவை பெருந்தோட்டத்தின் ஐந்து தோட்டங்களிலும் வட்டவளை பெருந்தோட்டத்தின் வெலிஓயா தோட்டத்திலும் நாளொன்றுக்கு பறிக்கவேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவு 3 கிலோகிராம்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னைய இலக்குகளின் படி தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலை செய்த போது, கம்பனிகள் தொழிலாளர்களின் டிசம்பர் மாத சம்பளத்தை புதிய இலக்குகளுக்கு ஏற்ப தயாரித்துவிட்டன. இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு அந்த மாதம் கிடைக்க வேண்டிய ஊதியத்தில் 500 முதல் 1000 ரூபா வரை வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சம்பள வெட்டை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். பொகவந்தலாவை தோட்டத்தில் சுமார் 4000 தொழிலாளர்கள் ஜனவரி 10 அன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அந்த போராட்டம் ஏனைய தோட்டங்களுக்கும் பரவும் என பீதியடைந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கவிழ்ப்பதற்கு தலையிட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  (.தொ.கா.) கம்பனிகளுக்கு வெளிப்படையாக ஒத்துழைத்தது. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மலையக மக்கள் முன்னணி (...) தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா) உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள், ஜனவரி 12 மற்றும்  13ம் திகதிகளில் பொகவந்தலாவை கம்பனி மற்றும் தொழில் அமைச்சர் காமினி லொகுகேயுடன் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த சந்திப்பின் பின்னர், முழு சம்பளம் மற்றும் புதிய வேலைச் சுமை பற்றிய பிரச்சினைகள் எதிர்கால கலந்துரையாடல்களில் தீர்க்கப்படும் என வாக்குறுதியளித்த தொழிற்சங்கங்கள் குறைக்கப்பட்ட சம்பளத்தை ஒரு முற்பணமாக ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு கூறின.

எவ்வாறெனினும், பொகவந்தலாவை கம்பனி, ஜனவரி 23 அன்று தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் உதவித் தொழில் ஆணையாளருடன் ஹட்டனில் நடக்கவிருந்த கூட்டத்தை பகிஷ்கரித்தது. ஜனவரி 25 நடந்த இதே போன்ற ஒரு கலந்துரையாடலுக்கு வட்டவலை பெருந்தோட்டம் ஒரு பிரதிநிதியை அனுப்பிய போதிலும், அதிகரிக்கப்பட்ட வேலைச் சுமையை மாற்றுவதற்கு கம்பனி தயாரில்லை என அறிவித்தது. தொழிலாளர்கள் வேலைச் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் சம்பள வெட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த தாக்குதலுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு இன்னொரு பொறியைத் தயார் செய்கின்றனர். தொழிற்சங்கங்கள் என்ன செய்யப் போகின்றன என உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் LJEWU தலைவர் ஆர். யோகராஜனிடம் கேட்ட போது, “கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், வேலைச் சுமையை அதிகரிக்கும் போது தொழிற்சங்கத் தலைவர்களுடன் தோட்ட நிர்வாகம் கலந்துரையாட வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யாது ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். நாங்கள் கம்பனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளருக்கு வேண்டுகோள் விடுப்போம், என்றார்.

உண்மையில், கம்பனிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த கூட்டு ஒப்பந்தத்தை பயன்படுத்துகின்றன. தொழிலாளர்களின் அனுமதியின்றி LJEWU மற்றும் .தொ.கா. தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. ஏனைய தொழிற்சங்கங்களும் அதை ஆதரித்தன. அடிப்படையில், இலக்குகளை உயர்த்துவது சம்பந்தமாக தொழிற்சங்களுக்கு கம்பனிகளுடன் முரண்பாடு கிடையாது. தொழிற்சங்கங்கள் ஆற்றும் பாத்திரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெரும் வர்த்தகர்களதும் அரசினதும் கருவியாக செயற்படுவதோடு தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக முன்நிற்பதில்லை.

.தொ.கா. உட்பட தோட்டப்புறங்களில் உள்ள அநேக தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ளன. .தொ.கா. மற்றும் ஏனைய சங்கங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தின் யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் உதவுகின்றன. LJEWU வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த சங்கமாகும்.

தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரம் சம்பந்தமாக தொழிலாளர் மத்தியில் பரந்தளவில் சீற்றம் காணப்படுகின்றது. கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தெரிவித்ததாவது: “இந்த எல்லா தொழிற்சங்கங்களும் எமது போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டன. அவர்களைப் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) கூறியவை உண்மையாகும். தொழிற்சங்கத் தலைவர்கள் தமது நலன்களைப் பற்றியே அக்கறை காட்டுகின்றனர். நாங்கள் இந்த தொழிற்சங்கங்கள் சம்பந்தமாக சலிப்படைந்துவிட்டோம். (பார்க்க: வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிரான வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரி)

நட்டமடைந்துள்ளதாக கம்பனிகள் கூறுவதைப் பற்றி அவர் தெரிவித்ததாவது: “நான் அதை நம்பமாட்டேன். நான் தேயிலைத் தொழிற்சாலையிலேயே வேலை செய்கின்றேன். எனவே எனக்கு நன்கு தெரியும். ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு பறிக்கும் கொழுந்தில் சுமார் 6 கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்ய முடியும். அவர்கள் தேயிலைத் தூளை சந்தையில் உயர்ந்த விலையில் விற்கின்றார்கள். அவர்கள் கொடுப்பனவுகள் உள்ளடங்களாக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 515 ரூபா மட்டுமே நாளொன்றுக்கு கொடுக்கின்றார்கள்.  

தாம் அனுபவிக்கின்ற சிரமமான வேலை நிலைமைகளைப் பற்றி ஒரு பெண் தொழிலாளி விளக்கினார். “நாம் வேலைத் தளத்தில் காலை 8 மணிக்கே நிற்கவேண்டும். நங்கள் 10 நிமிடம் தாமதமாக சென்றாலும் அவர்கள் வேலை கொடுக்க மாட்டார்கள். நாங்கள் பறிக்கும் கொழுந்து நாளொன்றுக்கு மூன்று முறை நிறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அவர்கள் கொமிஷன் என்று கூறி (ஈரமான இலைகளுக்காக) 3 கிலோவை வெட்டிக்கொள்கின்றனர். கடந்த அக்டோபரில் இருந்து எங்களை மேலும் 3 கிலோகிராம் அதிகமாக எடுக்கச் சொல்லி நெருக்கி வருகின்றார்கள்.

அந்தப் பெண் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவைப் பற்றியும் பேசினார்: “அரசாங்கம் அன்றாடம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கூட்டுகின்றது. எங்களுக்கு கிடைக்கும் சம்பளம் மூன்று வேளை சாப்பாட்டுக்குக் கூட போதாது. அதனால் சாப்பாட்டைக் குறைத்தே சாப்பிடத் தள்ளப்பட்டுள்ளோம்.”

கடந்த ஆண்டு இலங்கை தேயிலை தொழிற்துறை கனிசமான இலாபத்தைப் பெற்றிருந்தது. ஆயினும், மத்திய வங்கியும் தேயிலை ஏற்றுமதியாளர்களும் இந்த ஆண்டு கடினமான நிலைமையை முன்னறிவிக்கின்றனர்.

அண்மைய மத்திய வங்கி அறிக்கையொன்று, “சம்பள அதிகரிப்பினாலும், .நா. ஈரான் மீது விதித்த தடைகளால் ஏற்றுமதி நடவடிக்கைகளை பூர்த்தி செய்துகொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்களால் தேயிலை ஏற்றுமதிக்கு பணம் வந்து சேருவதில் உள்ள சிரமமும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியங்களில் இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் பிரதான நாடுகளுக்கான கப்பல் செலவு அதிகரித்துவருவதாலும் தேயிலை தொழிற்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது, எனக் கூறுகின்றது.

சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த ஹெலதிவ குழுமத்தின் (தேயிலை கம்பனி) தலைவர் ரொஹான் பெர்ணன்டோ, “மத்திய கிழக்கு நெருக்கடியாலும் ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியாலும் தேயிலை ஏற்றுமதித் துறைக்கு 2012 மிகவும் சவாலான ஆண்டாக இருக்கும், என்றார். “உற்பத்தியோடு இணைக்காமல் பெருமளவு சம்பளம் கொடுப்பதில் இருந்தே தேயிலைத் தோட்டத் துறையில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் பெர்ணான்டோ மேலும் கூறினார்.

உற்பத்தி அதிகரிப்போடு சேர்த்து, கம்பனிகள் சர்வதேச போட்டியைப் பற்றி புலம்பிக்கொண்டே தொழில் வெட்டுக்கும் திட்டமிடுகின்றன. அவர்கள் இலாபத்தை அதிகரிப்பதற்காக சுமையை அதிகமாக தொழிலாளர்கள் மீது சுமத்துவர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த கம்பனிகளின் பக்கமே நிற்கின்றது. நாங்கள் ஏற்கனவே கண்டுள்ளது போல் தொழிற்சங்கங்கள் கம்பனிகளின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கின்றன.

தொழிலாளர்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்காக இத்தகைய தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தமது உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சோசலிச கொள்கையின் அடிப்படையிலும் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் அடிப்படையிலும் வேலை நிறுத்தங்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்களின் பொதுவான தொழிற்துறை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.